சங்ககால ஆக்கங்கள்
பண்டைத் தமிழகத்தில் முதல், இடை, கடை என மூன்று சங்கங்கள் வைத்துத் தமிழ் ஆய்ந்ததாகச் சில இலக்கியங்கள் கூறுகின்றன. எனினும் இதனை மறுத்து அவ்வாறு சங்கம் எதுவும் இருந்ததில்லையென வாதிடுவோரும் உள்ளனர். எவ்வாறெனினும் முதல் மற்றும் இடைச் சங்கத்தைச் சேர்ந்தனவாகச் சொல்லக்கூடிய தமிழ் நூலெதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இன்று கிடைக்கப் பெறுகின்ற நூல்களுள் மிகப் பழமையானவை கடைச் சங்க காலத்தைச் சேர்ந்தவையெனக் கூறப்படுகின்றன. இன்று நமக்குக் கிடைக்கின்ற தொன்மையான நூலான தொல்காப்பியம் என்னும் தமிழ் இலக்கண நூலின் காலம் பற்றிய சரியான எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கணிப்புக்கள் கிடையாது எனினும் இதன் காலம் கி.மு 500 க்கும், கி. மு 200 க்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இக்காலத்தையும் உள்ளடக்கிக் கடைச் சங்ககாலம் கி.பி 200 ஆண்டுகள் வரை நீடித்ததாகக் கூறுவர்.
சங்ககாலத் தமிழ் நூல்கள்
[தொகு]- எட்டுத்தொகை நூல்கள்