உள்ளடக்கத்துக்குச் செல்

சூடாமணி நிகண்டு/11-19

விக்கிமூலம் இலிருந்து
சூடாமணி நிகண்டு ஆசிரியர்: மண்டல புருடர் (மூலபக்கம்= மதுரை மின்நூல் திட்டம்)
சூடாமணி நிகண்டு என்னும் நூல், கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள், வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில், இந்நூல் பதிக்கப்பட்டு, பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகளுடன் உள்ளன கருதப்படுகிறது.


135 (1)
சமன்யமன் நடுவுமாகுஞ் சலமென்ப வயிர நீர் பொய்
கமல நீர் வனசமும்பேர் கலாஞ் சினங் கொடுமையாகும்
குமரி கற்றாழை கன்னி கொற்றவை காளிக்கும் பேர்
ஞமலி நாய் மயில் கள்ளென்ப நனை கள்ளு மலர்மொட்டும் பேர்.

136 (2)
சாம மோர்வேதம் பச்சை சாமமே கருமை நாற்பேர்
வாமமே குற ளிடப்பால் வனப்பொடு தொடையுமாமே
பூ மலர் வனப்புக் கூர்மை பொலிவொடு பிறப்புப் பூமி
ஏமமே சேமங் காவல் இன்பம் பொன் னிரவே மையல்.

137 (3)
உம்பரே தேவராகும் உயர்நிலமுடன் மேலும் பேர்
வம்மென்ப புதுமை கச்சு மண நிலையின்மை நாற்பேர்
கும்பமே குட மிராசி கும்பி மத்தகமுமாகும்
கும்பென்ப சிம்பு தோடாஞ் சுகமென்ப கிளியே யின்பம்.

138 (4)
ஆம்பல் வேய் கள்ளுக் கவ்வை யல்லி வங்கியமே யானை
சாம்பல் கூம்புதல் பழம்பூத் தமிழென்ப தினிமை நீர்மை
தாம்பென்ப கயிறுதானே தாமணி தனக்கும் பேராம்
காம்பு வேய் மலர்த்தாள் பட்டே கடிமலர்க் கொம்பு நாற்பேர்.

139 (5)
அம்மையே வரு பிறப்பும் அழகுமாந் தாயுமாகும்
சும்மையென்பதுவே நெற்போர் நா டொலி சுமையுஞ் சொல்லும்
செம்மை செவ்வையுஞ் சிவப்புந் திரிதலே யுலாவல் கேடாம்
கொம்மையே யிளமை வட்டங் கொங்கை கைகுவித்துக்கொட்டல்.

140 (6)
அம் அழகு அசைச்சொல் நீராம் அழனந் தீ பிணமு மாகும்
கம்மென்ப தலை ஆகாயங் கனங் கானீர் விதி வெளுப்புச்
செம்மலே பழம்பூ ஈசன் சினேந்திரன் சிறந்தோன் மைந்தன்
கம்மியர் கைவினைப்பேர் கண்ணாளர் தாமுமாமே.

141 (7)
வாமனங் குறள் புராண மாதிரக்கயத்தி லொன்றாம்
காமரம் அத்தநாளோ டடுப் பிசைப்பொதுவுங் காட்டும்
நேமி சக்கரம் பார் வட்டம் நேமி புட் கட லையைம்பேரே
தேமென்ப திடந் தித்திப்புத் தேன் நாற்றந் திசை தேசப்பேர்.

142 (8)
தாமம் வெற் பொழுங்கு கொன்றைச் சாந் தொளி நகரந் தாம்பு
பூ மணிக்கோவை மாலை பொருகளங் கரி யீராறாம்
சோம னோர்வள்ளல் லிந்து சுரும்பென்ப மலையும் வண்டும்
சாமியே முதல்வன் செவ்வேள் தலைவி ஆசான் வெறுக்கை.

143 (9)
குமுதமே யடுப் போர்திக்கின்குஞ்சர மொலி வெண்ணெய்தல்
சிமயமே மலை வெற்புச்சி தீத் தீயே நரகு தீங்காம்
அமறலே பொலிவு துன்னல் அரிறூறு பிணக்கம் மாசு
சிமிலியே குடுமி சிக்கஞ் சிள்வீடு தானுமாமே.

144 (10)
சம்புவே இரவி நாவல் சங்கரன் அயன் மா லோரி
தும்பியே களிறு வண்டாந் துன்னலே செறிதல் சேர்தல்
கம்புளே சங்கு சம்பங்கோழி யென்றிருபேர் காட்டும்
அம்பரங் கடல் விண்தூசாம் அண்ணலே தலைவன் பீடு.

145 (11)
கிம்புரி முடி தந்தப்பூண் கேட்டைதான் முகடி யோர்நாள்
கும்பி சே றானை பூதி குலைதான் செய்கரை காய்க்கொத்தாம்
உம்ப லாண்விலங்கு வேழம் உயர்குல மெழுச்சிக்கும் பேர்
அம்பலே பழிச்சொல் சில்லோர் அறிந்தலர் தூற்றலாமே.

146 (12)
கம்பலை அச்சம் ஓசை கம்பிதந் துன்பம் நாற்பேர்
செம்புலம் பாலைசேருந்திணை செருக்கள மிரண்டாம்
தம்பபே கவசந் தூணாஞ் சமழ்தலே வருத்த நாணம்
கம்பமே நடுக்கந் தம்பங் கந்தனே அருகன் செவ்வேள்.

147 (13)
அமரரே விபுதர் தெவ்வர் அவந்தி தாம் கிள யோரூராம்
அமுது பால் தேவருண்டியாகு மின்சுவையு முப்பேர்
அமலையே ஆரவாரம் அயினியோ டுமையுமுப்பேர்
தம மிருள் ராகுவின்பேர் சாரங்கம் விற்பொது மால் வில்லாம்.

148 (14)
ஆம்பிரம் புளிமா தேமாவாம் புளிப்பினுக்கு மப்பேர்
சாம்பு பொன் பறையாமென்ப தாண்டவங் கூத்தே தாவல்
பாம்பென்ப கரை மராளம் பை யராப்படமே பச்சை
ஆம்பியே யொலி காளானாம் அயிராணி யுமை யிந்திராணி.

149 (15)
காமனே வாசவன் வேள் கழுதுந் திப்பிலியு மாகும்
காமமே விரகம் ஆசை கணிச்சிதான் மழுவே தோட்டி
பூமனே பிரமன் செவ்வாய் புரையோரே கீழோர் மேலோர்
சேமமே காவ லின்ப தெக்கிணம் வலந் தெற்காகும்.

150 (16)
காமுகன் விடன் வேண் மாலாங் காதென்ப கொலையுங் காதும்
கோமளம் பசுவனப்புக் கூறிய இளமைக்கும் பேர்
நாமமாங் கலித்தல் மிக்கு நற்பொலி வெழுச்சி யோசை
மாமையே நிறம்வனப்பாம் மலயசஞ் சந்தந் தென்றல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சூடாமணி_நிகண்டு/11-19&oldid=29073" இலிருந்து மீள்விக்கப்பட்டது