சூடாமணி நிகண்டு/17-19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
சூடாமணி நிகண்டு ஆசிரியர்: மண்டல புருடர் (மூலபக்கம்= மதுரை மின்நூல் திட்டம்)
சூடாமணி நிகண்டு என்னும் நூல், கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள், வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில், இந்நூல் பதிக்கப்பட்டு, பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகளுடன் உள்ளன கருதப்படுகிறது.


257 (1)
குளம் நுதல் கரும்பின் கட்டி குட்டமுமிட்ட நாமம்
களம மர்க்களமே கண்டங் களா விடங் கறுப்பே யில்லாள்
வளமை மாட்சிமை கொழுப்பாம் வாருணங் கடலு மேற்கும்
விளவென்ப கமர் விளாவாம் விம்ம லேங்குத லொலித்தல்.

258 (2)
முளரியே விறகு செந்தீ முண்டகஞ் சிறுமை காடாம்
விளரெண்ப திளமைதானே வெளுப்பொடு கொழுப்புமாகும்
களபமே யானைக்கன்று கமழ்சாந்து கலவை முப்பேர்
உளர்தலே சிதறலாகுந் தடவலு முரைக்கற் பாற்றே.

259 (3)
குளிர் மழு நண் டிருத்தல் குளிர் கவண் முழா மீன்றாரை
நளிர் குளிர் பெருமை ஞெண்டு நாட்டிய செறிவு நாற்பேர்
ஒளி வட்டந்தான் கண்ணாடி சக்கர மிருபே ரோதும்
இளி யிசை யிசித்த லெல்லே யிணங்குத லுரித்தற்கும் பேர்.

260 (4)
பளிதமென்பது கர்ப்பூரம் பல்லமென்கணக்கு மாகும்
வௌி லணில் வேழத்தம்பம் வெண்டயிர்கடைதறிப் பேர்
களிறென்பது ளத்தநாளே கறையடி சுறவு பன்றி
ஒளி யிருசுடரே தீயே யொளிப்பிடம் புகழுமாமே.

261 (5)
பாளிதஞ் சோறு கண்டசருக்கரை குழம்பு பட்டாம்
ஒளியே யானைக்கூட மொழுங்கென்றும் வழங்கும் நூலே
கோளி தொன்மரமே யத்தி கொள்வோனுங் கொழிஞ்சியும் பேர்
மீளி திண்ணியன் வலிப் பேர் மேன்மகன் பெருமைக்கும் பேர்.

262 (6)
அளை தயிர் முழை புற்றாகும் அசனியே யுருமு வச்சிரம்
உளை பரிமீதுகட்டுமயிர் பிறமயிறும் ஓதும்
கிளை யென்ப தோர்பண் முங்கில் கேளொடு கிளைத்தலும் பேர்
இளை புய லிளமை வேலி தலைக்காவ லிவை நாற்பேரே.

263 (7)
உள்ளலே நினை வுள்ளான் பேர் உழப்பென்ப வலி யுற்சாகம்
ஞெல்லலே பள்ளம் மேன்மை நீண்ட வீதியு முப்பேரே
எள்ளலே நகை யிழிப்பாம் யாமந் தெற் கிரவு சாமம்
ஞொள்கல் சோம் பிளைத்த லச்சக்குறிப்பென்று நுவலற்பாலாம்.

264 (8)
வள்ளென்ப காது கூர்மை வலி வளம் வாளே வாராம்
வெள்ளையே முசலி சங்கு வௌிறு வெள்ளாடு வெண்பா
கள்வனே முசு ஞெண்டி யானை கருநிறத்தவனே சோரன்
பள்ளி யூர் சிற்றூர் கோயில் பாயல் கண்படை நீத்தோரூர்.

265 (9)
விளக் கொளி சோதிநாளாம் வேள்வியே மகநாள் ஈதல்
அளக்கரே புடவி சே றுப்பளங் கடல் கார்த்திகைப் பேர்
திளைத்தலே யனுபவித்தல் செறிதலே நிறை தன் முப்பேர்
இளைத்தலே யிளைப் பிரங்க லென்றூழே யிரவி வெய்யில்.

266 (10)
பிள்ளையே வடுகன் காக்கை பெட்டல் தான் விரும்பல் வேண்டல்
மள்ளரே மள்ளர் வீரர் மறவர்க்குங் குறவர்க்கும் பேர்
உள்ளமே முயற்சி நெஞ்சா முஞற் றிழுக்கொடு தாளாண்மை
வள்ளியே வல்லி செங்கைவளை புனையிழை முப்பேரே.

267 (11)
காளமே யூதுகொம்பு கழு நஞ்சு கருமை நாற்பேர்
வே ளறுமுகன் காமன் பேர் விபூதி யூன் கொடுமை செல்வம்
கோ ளிடையூ றொன்பான் கொலை குணம் வலி பொய் கொள்கை
ஞாளியே சுணங்கன் கள்ளாம் நான்மு கனருகன் வேதா.

268 (12)
களரென்ப மிடறு கோட்டி களர் நிலங் கருமை நாற்பேர்
தளமிலை படையே சாந்து தாழி பூவிதழே மேடை
அளகமே மாதரோதி யறன் மயிற்குழற்சி முப்பேர்
தளை விலங்கொடு தொடர்ச்சி தாட்சிலம் பாண்மயிர்ப் பேர்.

269 (13)
புள்ளு வண் டவிட்டம் புட்பேர் புளகந் தர்ப்பணம் குமிழ்ப்பாம்
கள்ளென்ப களவு கள்ளாங் கனலி தீ யிரவி பன்றி
அள் ளுரஞ் செறிவு காதோ டயிலும் பற்றிரும்பு மாகும்
வெள்ள மெண் மிகுதி முந்நீர் வேணுவே மூங்கில் வில் வாள்.

270 (14)
வாளென்ப தொளி கட்கப் பேர் வல்லரி தளிர் பைங்காயம்
கூளி பேய் தம ரேறு மாசு குறள் படைத்தலைவன் கூட்டம்
தோளென்ப புயங் கை யாகுஞ் சுந்தரி யுமையே சுண்டன்
தேளென்ப தனுடநாளே விருச்சிகந் தெறுக்காலும் பேர்.

271 (15)
அளியென்ப நறவும் வண்டும் அன்பொடு கொடையு நாற்பேர்
அளவையே எல்லை நாளாம் ஆசாரந் துகில் தூ மாரி
விளரியே யிளமை யாழிலோர்நரம்பி யாழ் நீள்வேட்கை
வளமென்ப பதவியும் பல்பண்டமும் வனப்பு மாகும்.

272 (16)
வள்ளமே மரக்கால் வட்டில் கடிகைவட்டிற்கு மப்பேர்
வள்ளுரம் பசுவிரைச்சி வரைந்த வூன்பொதுவு மாகும்
அள்ளலே நரகஞ் சேறா மம்பு நீர் புயல் வே யேவாம்
வெள்ளிலே விளாப் பாடைப் பேர் வேலன் வேள் வெறியாட்டாளன்.

273 (17)
காளையே எருது பாலைக்கதிபன் இளமையோன் பேர்
கூளியர் நண்பர் பூதகணவீரர் கொலைத்திறத்தோர்
கோளகை வட்டமோடு மண்டலிப்பாம்புங் கூறும்
கேள்வியே செவி கல்விப்பேர் கிடங் ககழ் வாவியாமே.

274 (18)
இளமையே தண்மை காம மிளமையின்பருவ முப்பேர்
அளறென்ப நரகஞ் சேறாம் அக்காரம் புடைவை வெல்லம்
கிளரென்ப கிரணத்தோடு கிளர்கோட்டுமலர்பூந்தாதாம்
களரி போர்க்களங் காடென்ப கருமஞ்செய்யிடமு மாமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=சூடாமணி_நிகண்டு/17-19&oldid=29079" இருந்து மீள்விக்கப்பட்டது