உள்ளடக்கத்துக்குச் செல்

சூடாமணி நிகண்டு/14-19

விக்கிமூலம் இலிருந்து
சூடாமணி நிகண்டு ஆசிரியர்: மண்டல புருடர் (மூலபக்கம்= மதுரை மின்நூல் திட்டம்)
சூடாமணி நிகண்டு என்னும் நூல், கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள், வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில், இந்நூல் பதிக்கப்பட்டு, பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகளுடன் உள்ளன கருதப்படுகிறது.


206 (1)
புலவர் பாடுநரே கூத்தர் புத னும்பர் கவிகள் ஓவர்
வலவனே வெற்றியாளன் மருவுந் தேர்ப்பாகன் மாயோன்
அலகு நெற்கதிரே யாதி பலகரை நுளம்பு எண் ஏதி
அலரி கண்வரி யருக்கன் அழ கொருமரம் பூவாமே.

207 (2)
ஆலமே வடவிருக்க மடுநஞ்சோ டலர்பூ நீராம்
மூலம் வேர் முதலே யேது முதிர்வுறுகிழங் கோர்நாளாம்
சீலமே குணந் தண்டித்தல் திகழ்சரித்திர முப்பேரே
சாலமே வலை சாலே கமராமரஞ் சபை மதிற் பேர்.

208 (3)
காலம் வைகறை காலப்பேர் கல மலம் யாழ் பூ ணாவாய்
சாலகங் காலதர்ப்பேர் தானே பூமொட்டாகும்
தால முண்கலமே நாவே தராதரமே பனையே நாற்பேர்
ஆல லாடுதலொலிப்பேர் அறுவை சித்திரைநா ளாடை.

209 (4)
இலம்பக மத்தியாய நுதற்சுட்டென் றிருபேராமே
இலஞ்சி மா வாவி கொப்பூழ் எயில் குண மகிழே யேரி
பலங் கனி பயன் காய் சேனை பலங் கிழங் கறுபேராகும்
அலங்க லென்பது பூமாலை அசைவொடு தளி ரிலங்கல்.

210 (5)
ஒலி யென்ப திடியே காற்றே யோசை யென்றாகு முப்பேர்
ஒலியலே யாறுந் தோலும் உடுத்தவாடையும் பைந்தாரும்
கலுழியே கான்யாறென்ப கலங்கிய நீருமாமே
கலை மதிப்பங்கு தூசு கல்வி நூல் இரலை காஞ்சி.

211 (6)
பீலயே யாலவட்டம் பெருவரை கலாபி தோகை
பாலிகை யுதடு வட்டம் படைவாளின்முட்டியும்பேர்
வேலி யூர் மதில் காவற்பேர் மெத்தை மெல்லணையே சட்டை
தோ லிபம் வனப்பு வார்த்தை துருத்தி தோற்பலகை யைம்பேர்.

212 (7)
பாலை யொர் மர நிலம் மந்நிலத்தினிலோர பாடலும்பேர்
வேலையே கடலதற்குமேவிய கரையே காலம்
மாலையே யிரவோடந்தி மாலிகை யொழுங்கு நாற்பேர்
சாலையே குதிரைப்பந்தி யறப்புறந் தானுமாமே.

213 (8)
அல்லி வெள்ளாம்பல் காயா யகவித ழாகமுப்பேர்
அல் லிரா யிருளே யென்ப ஆக மார்பு டலுமாமே
சில்லியே வட்டங் கீரை தேருருள் சிள்வீடென்ப
வல்லி யாய்ப்பாடி வல்லி வரைவொடு நிகளமாமே.

214 (9)
இல் லிள்ளாள் இல்லையென்றல் இராசி சா விடம் வீ டாறே
மல் வளம் வலியினோடு மாயவனாடல் முப்பேர்
சில்லை யென்பது பிரண்டை சிள்வீடு தூர்த்தைக்கும் பேர்
ஒல்லையே விரைவு தொல்லை கடுப்புடன் சிறுபோதாமே.

215 (10)
வில்லென்ப மூலநாளாம் வெஞ்சிலை யொளியு மப்பேர்
வல் வலி விரைவு சூதா மலர்தலே யெதிர்தல் தோன்றல்
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை யனுஷநாளாம்
கொல்லென்ப தசைச்சொல் ஐயங் கொலையேவல் வருத்த நாற்பேர்.

216(11)
மால் புதன் பெருமை மேக மாயவன் மயக்கங் காற்றே
ஆலோ ட லிரண்டு சொல்லும் ஆமென்ப தல்லவும்பேர்
வால் வெண்மை மிகுதி தூய்மை வசந்தனே தென்றல் காமன்
சால்பு மாட்சிமை சான்றாண்மை சாற்றிய இருபேர்தானே.

217(12)
வலம்புரி சங்கு நந்தியாவர்த்தம் ஓர்மர முப்பேரே
புலம் பொலி தனிமை யச்சம் பொய்யென்ப பொக்கம் பொந்தாம்
சலம் பொலி ஞெகிழி குன்றாஞ் செருந்தி பஞ்சரம் வாட்கோரை
விலங்கு காற்றளை குறுக்கு மிருகத்தின் பொதுவு மாமே.

218 (13)
உலகமே திசை வெண் பூமி உயரிகுணஞ் சன முயர்ந்தோர்
அலவனே ஞெண்டு பூஞை அம்புலி கடகராசி
இலயமே கூத்துங் கூத்தின்விகற்பமு மிருபேரென்ப
வலவை வஞ்சப்பெண் வல்லோன் வருடைதான் சிம்பு ளாடாம்.

219 (14)
கலாபமே மணிவடம் மேகலை மயிலிறகு முப்பேர்
சிலீமுகம் முலைக்கண் வண்டு சித்திரபுங்கந் தானாம்
சலாகை நன்மணி நாராசஞ் சவளமு மாகுமென்ப
விலோதம் பெண்மயிர் பதாகை விட மென்ப நஞ்சுந் தேளும்.

220 (15)
செல் லிடி யேவல் மேகஞ் சிதலை யாகுமென்ப
எல் லொளி பக லிகழ்ச்சி இரவுட னிரவி யைம்பேர்
சொல் லுரை கீர்த்தி நெல்லாந் தொடுத்தலே வளைத்தல் கட்டல்
கல் லொலி மலை கல்லென்ப கரண்ட நீர்காக்கை செப்பாம்.

221 (16)
கலி வஞ்ச மொலியே வாரி கடையுகம் வல யைம்பேரே
சிலை யொலி மலை கல் வில்லாஞ் செடியொளி செறிவு தீதாம்
தலமென்ப திலை புவிப்பேர் தலை யிடந் தலை விண் ணாதி
திலமே மஞ்சாடி யெள்ளாந் தலக மஞ்சாடி பொட்டாம்.

222 (17)
வல்லை கான் விரைவு மைந் தாம் வட மணிவட மா றாம்பு
பல்ல மோர் கணக்கு பாணம் பல்லங் கரடி நாற்பேர்
மல்லலே வலி வளப் பேர் வாயி லைம்புலன் கடைப் பேர்
முல்லை மல்லிகையே வென்றி முல்லைநன்னிலங் கற்பாமே.

223 (18)
கோலென்ப தீட்டி வாட்கோல் துகிலிகை துலாஞ் சம்மட்டி
சீலமன்னவன்றன்செங்கோல் திரட்சி யாழ்நரம்போ டம்பு
நீலவஞ்சனக்கோலோடு நீளிலந்தையும் பன்னோர்பேர்
காலிலி அருணன் பாம்பு காற்றொடு முப்பேராமே.

224 (19)
கூலமே பண்ணிகாரம் புனற்கரை கோ விலங்கின்
வாலோ டாவணமே பாகல் வரம்பொடு குரங் கெண்பேரே
கா லிட மரக்கால் பிள்ளை குறுந்தறி வனங் காம் பூற்றம்
காலங் குரங் கால் வாய்க்கால் காற்றுத் தேருருள் பன்மூன்றே.

225 (20)
கோலமே யழகு பன்றி பாக்கு நீர்க்கொழுந்து பீர்க்காம்
மாலியே யிரவி கள்ளாம் மாந்தலே மரித் துண்டல்
வே லயில் படைக்கலப்பேர் வேதண்டங் கைலை வெற்பாம்
சாலி நெற்பொதுவுங் கள்ளு மருந்ததி தானுமாமே.

226 (21)
உலவை கான் மரத்தின்கொம்பொடுறு தழை விலங்கின்கோடாம்
மலைதலே பொரல் சூடற்பேர் மந்திரி குபேரன் வெள்ளி
அலர் பழி விரிபூ நீராம் அவிர்தலே யொளி பீறற்பேர்
எலி பூரநா ளெலிப் பேர் இரணம் பொன் கடன் மாணிக்கம்.

227 (22)
ஆலயங் நகரங் கோயில் யானையின்கூட முப்பேர்
பாலமே மழு நெற்றிப்பேர் பவித்தரஞ் சுசி தருப்பை
நூலோர் மந்திரிகள் பார்ப்பார் நுவல்கவிப்புலவர்க்கும் பேர்
வேலாவலயந்தான் பூமி விரிகட லிருபேராமே.

228 ( 23)
சூலியே கருப்பப் பெண்ணுந் துர்க்கைஞ் சிவனு முப்பேர்
வாலியே அலாயுதன் கிட்கிந்தையின் மன்னன் பேராம்
பால் புடை யியல்பு திக்குப் பகுத்தல் பாலென்னு மைம்பேர்
ஏலமே மயிர்சாந்தோ டேலத்தின் பேருமாமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=சூடாமணி_நிகண்டு/14-19&oldid=29076" இலிருந்து மீள்விக்கப்பட்டது