சூடாமணி நிகண்டு/6-19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
சூடாமணி நிகண்டு ஆசிரியர்: மண்டல புருடர் (மூலபக்கம்= மதுரை மின்நூல் திட்டம்)
சூடாமணி நிகண்டு என்னும் நூல், கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள், வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில், இந்நூல் பதிக்கப்பட்டு, பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகளுடன் உள்ளன கருதப்படுகிறது.


43 (1)
நடலை வஞ்சனை பொய் யென்ப நடுங்கிய நுடக்க முப்பேர்
மடல் பனையேடு போல்வ மலரித ழோர் நூற்கும் பேர்
படர் நடை நினைப்பு நோவாம் பகர்ந்திடில் வீரர்கும் பேர்
குட நகர் பசு வோர் கூத்துக் கும்பமே கரும்பின் கட்டி.

44 (2)
மாடமே உழுந்தோ டில்லாம் மழையென்ப குளிர்ச்சி மேகம்
கூடமின் மறைவு கொல்லன் சம்மட்டி குவட்டி னுச்சி
சேட னோர்சாதி பாங்கன் செகந்தாங்கு மனந்தனென்ப
கேடகம் பரிசை வேறோர் கேடிலுர் பலகை முப்பேர்.

45 (3)
இடங்கரே முதலை தூர்த்தர் குடங்கரின் முப்பேரென்ப
முடங்கலே மடங்கல் கைதை முங்கில் நோய் ஓலை யைம்பேர்
படங்கு மேற்கட்டியென்ப பகர் பெருங்கொடி யுமாகும்
விடங்க மேர் கொடி கொடுங்கை மிதவையே தெப்பஞ் சோறாம்.

46 (4)
குடிஞை புட்பொதுவும் யாறும் கூகையு யாகுமென்ப
தடி வய லுலக்கை வில்லு தண்டுமின் தசை யுடும்பாம்
தொடி வளை யொருபலப்பேர் சூழ்ந்த கங்கணமு மாகும்
மடி யடங்குதலே சோம்பு வயிறு நோய் புடைவை தாழை.

47 (5)
படிவமே வடிவ நோன்பாம் பந்தமே கிளையுங் கட்டும்
வெடியச்சம் பரிமளிக்கு மென்புகை வௌியிம் முப்பேர்
துடியெலம்பறை காலப்பேர் தூத் தூய்தூன் பற்றுக்கோடாம்
கொடிறு பூசங் கதுப்பாங் குரவையே கட லோர்கூத்து

48 (6)
கடிகை நாழிகையே துண்டங் கதவிடு தாழே முப்பேர்
படிறு பொய் கிள விரண்டாம் பகர்தலே விற்றல் பேசல்
சுடிகையே மடகு முச்ச சுட்டியு மிட்டபேரே
இடி யிடிப்பேரே நென்மா வேற்றிடு முறுதிச் சொல்லே.

49 (7)
நாடி நாழிகை நரம்பாம் நந்தல் கேடுடனே யாக்கம்
பாடியே நகர நாடு பாசறை யாயரூர்ப் பேர்
கோடிகந் துகில் பூந்தட்டாங் குடம்பையே முட்டை கூடு
கோடி யெண் புதுமை தூசாங் குடிமியே வெற்றி யுச்சி.

50 (8)
உடு விண்மீன் கிடங்கு நாவாயோட்டுங்கோ லம்பி லீர்க்காம்
கடு விட முள்ளுத்தானே யரிதகி கசப்பு நாற்பேர்
படு மரக்குலையே கள்ளுப் பரவு நீர்நிலை நன்மைப் பேர்
படுதலே யொலி யின்றாதல் பகரி லுண்டாதல் பூத்தல்.

51 (9)
மாடுபொன் பக்கஞ் செல்வம் வைகல் வைகறை நாடங்கல்
சேடென்ப பெருமை நன்மை திரட்சியே யழகு நாற்பேர்
பா டிடம் பெருமை யோசை பட்டே பட்டாடை சிற்றூர்
ஈடென்ப குழைவே யொப்பே வலியொடு பெருமையும் பேர்.

52 (10)
மடையென்ப மதகு சோறு மணிப்பணிக் கடைப்பூட்டும் பேர்
படைபடைக்கலம் கலப்பை படுக்கை பல்லணமே தானை
இடை நடு வென்ப மற்று மிடப்பெயர் நுசுப்புமாமே
மட மறியாமை சத்திர மன்னிய முனிவாசப் பேர்.

53 (11)
வாடை யென்பதுதான் வீதி வடக்காற்றுந் தானுமாமே
ஆடு மேழகம் வெற்றிப்பேர் அல்கல்நாள் சுருங்கல் வைகல்
கோடை மேல்காற்றினொடு குதிரை வெண்காந்த ளேன்ப
ஓடை நீர்நிலை கிடங்கே யொரு மரம்வல்லி பட்டம்.

54 (12)
அடுப் பென்ப பரணி நாளே யச்சமே சுல்லி முப்பேர்
வடுச்செம்பு தழும்பு வண்டாம் மத்தக நெச்சி சென்னி
இடக்கடரே மறைத்த வார்த்தை கும்பமு மென்ப நூலோர்
கடைப்பிடி மறப்பிலாமை கருதிய தேற்றமாமே.

55 (13)
பட்டமே ஓடை தூசு பதவி வாள் கவரிமா வாம்
புட்டமே காகமாகும் புடைவையு நிறைவு முப்பேர்
குட்டமே தொழுநோய் ஆழங் குளமெனப் பெயர் முப்பாற்றே
வட்டமே பரிசை நீர்ச்சால் வலயங் கைம் மணி தூ சூர் கோள்.

56 (14)
திட்டையே யுரலு மேடுந் திண்ணையு நண்ணு முப்பேர்
தட்டை வேய்த் தினைத்தாள் கிள்ளைதனைக் கடிகோலே முண்டம்
கிட்டியே தலையீற்றாவாங் கிருட்டியாந் தாள முப்பேர்
கட்டளை நிறைகல் லொப்பே யிட்டிகை யியற்ற லாணி.

57 (15)
நாட்டங் கண்ணோர்பண் வாளாம் நாகு சங் கிளமை நத்தை
ஓட்ட மேலுதடே தோல்வி யுயிரென்ப காற்றறே சீவன்
கோட்டங் கோண் படப்பை நாடு கோயி லவ்விய மான் கொட்டில்
தோட்டியங்கு சங்க பாடந் துணையென்பதளவும் ஒப்பும்.

58 (16)
தடமலை பெருமை கோணஞ் சரிகரை அகலம் வாவி
அடல் கொலை வலிபோராகும் அருத்தமே பொருள் பொன் பாதி
உடல் பொரு ளாகமென்ப வோங்கல் வெற் புயர மூங்கில்
விடமே யிடபராசி விடை மரக்கொம்பு முப்பேர்.

59 (17)
கடகமே சேனை வட்டங் கைவளை மதி னாற்பேரே
வடகந் தோல் அத்தவாளம் வலமென்ப திடமே வெற்றி
படுவி கள் விற்பாள் குண்டம் பரமென்ப கவச மெய்யாம்
நொடி பிதிர் கிளவியாகு நூ னநிச்சயமே குன்றல்.

60 (18)
கடங் கயிறு வாக் கதுப்புக் கான் சுர முடம்பு நீதி
குடங் கடா மீமம் யானைக் குழாங் கடன் முழவைந் தேழாம்
மடங்கலே சனி சீய மறலி நோ யுக மூழித்தீ
படங் கரிமுகபடா நற்றுகில் பாம்பின்பட முப்பேரே.

61 (19)
ஆடலே பெண்ணான் கூடல் வார்த்தைக் கூத்தாடல் வென்றி
பாடலஞ் சிவப்பினோடு பாதிரி குதிரை முப்பேர்
கோடரங் குரங்கு சோலை கொம்பொடு குதிரையாகும்
ஆடவர் புருடர் நாமம் ஆ மிளையவர்க்கும் பேரே.

62 (20)
கடிமணம் விரைவு கூர்மை காலம் பேய் விளக்கங் காப்பு
வடி வச்சம் வாச மையம் வரைவு விம்மித மேழாறாம்
வடுகே யிந்தளராகப்பேர் மருதயாழ் திறனுமாமே
வடவையே குதிரைப் பெட்டை யுவாப்பிடி வடவைத் தீயாம்.

63 (21)
கோடு சங்கூது கொம்பு மரக்கொம்பு விலங்கின் கொம்பு
நீடு செய் வரம்பு குன்றின் முகடு நீர்க்கரை யேழ்பேராம்
மோடு மேடு தரமாகும் முறுவலே நகைத்தல் பல்லாம்
ஆடி யே யோர்மாதங் கண்ணாடி யுத்தராடமாமே.

64 ( 22)
தட்டுத்தேர் நடுவு குற்றந் தட்டொடு பரிசை முட்டாம்
செட்டி வாணிகன் செவ்வேளாஞ் செப்புரை கரண்டகப் பேர்
மட்டென்ப தெல்லை கள்ளாம் மார்கமே சமயம் வீதி
பட்டிகை யென்ப கச்சுப் பகட்டுட னிரதமாமே.

65 ( 23)
கடைமுடி விடம் வாயிற்பேர் களே வரம்பிண முடம்பாம்
உடை துகில் செல்வமென்ப வுடுக்கை தண்ணுமை துகிற்பேர்
அடை யிலை கனமே யப்ப மடுத்தல் செல்வழி ஐம்பேராம்
நடைவழி ஒழுக்கஞ் செல்வம் நாரென்ப கயி றன்பாமே.

66 (24)
விடையெதிர்மொழியு மேறும் விடுத்தலும் விளம்பு முப்பேர்
கிடை சடை யுவமை நெட்டி கீதமே யிசையும் வண்டும்
படியங்கவடி சோபனம் பகை குண முவமை பாராம்
குடி குலம் புருவ மூராங் கொடி வல்லி துவசங் காக்கை.

67 (25)
நட்டமே நடனங் கேடா நகரென்ப மனையு மூரும்
தொட்டலென்பதுவே யுண்டல் தோண்டல் கைதீண்டல் முப்பேர்
தட்டலே தடை கிட்டற்பேர் தையெரு மாதம் பூசம்
கட்டலென்பது தடுத்தல் களைதல் பந்தித்தல் கள்ளல்.

68 (26)
புட்கர நிறைவு பாண்டமுகந் தீர்த்தம் புனல் வான் சேனம்
கட்கம் பங்கயமே யானைக்கைநுனி குரு கீ ரைந்தாம்
வெட்சி யென்பதுவே செச்சை மிகு நிரைகவர்த லென்ப
பெட் பென்ப பெருமை யன்பாம் பிரசந் தேன் மது வண்டாமே.

69 (27)
அடுதலே அட்ட லென்ப அடர்தலு கொலையு முப்பேர்
சடிலமே நெருங்கலோடு சடை குதிரை முப்பேரே
படலையே படர்தன் மாலை பதலையே வாசிக்கோவை
கிடுகு தேர் மரச்சுற்றின் பேர் பரிசைக்குங் கிளத்தலாமே.

70 (28)
படலிகை பீர்க்கு வட்டம் பரந்த கைம்மணி பூந்தட்டாம்
கொடியனே கொடியன் கேதாங்குண்டாழந்தாழ்வாண்மாவே
தொடுவென்ப மருதப்பூமி தோட்டங்கைதவ முப்பேரே
முடிமயிர் முடியே சென்னி மகுடமுமொழியலாமே.

71 (29)
ஆடகந்துவரை பொன்னாம்அஞரறிவிலரே துக்கம்
கோடகமுடியருப்புங்குதிரையும்புதுமையும்பேர்
பீடிகையாவணம் பூந்தட்டொடுபீடமுப்பேர்
தோடு பூவிதழே பெண்ணை மடல் போல்வ தொகுதிக்கும்பேர்.

72 (30)
அடரென்பநெருங்குதற்பேரைம்மையுவடிவுமாகும்
விடர்முனியிருப்புத்தூர்த்தர்கமர் வெற்பின் முழைகாடைம்பேர்
விடலையே தலைவன் பேரும் விறலொன்றன்பேருமாகும்
அடிசெண்டு வெளி தாளாதி கவிதையின்பாதமாமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=சூடாமணி_நிகண்டு/6-19&oldid=29068" இருந்து மீள்விக்கப்பட்டது