பயனர்:Info-farmer/2021/contributionsAll/november

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2021 ஆம் ஆண்டில், எனது பங்களிப்புகள்: சனவரி - பெப்ரவரி - மார்ச்சு - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்

  • விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள் பல்வேறு மாதங்களில் சில ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தேன். அவற்றை மீண்டும் கண்டு, எளிமையாக்கலுக்கான மேம்பாடுகளை மறுசீராய்வு செய்து அனைவருக்கும் பயனாகும் படி, தமிழிலும், சில ஆங்கில எழுத்துக்களிலும் எழுதி முடித்தேன். மேலும், விருப்ப முயற்சியாக, விக்கிமூலம் என்ற பைத்தானின் நூற்கட்டகத்தை எழுத முனைந்தேன். இதற்கு 'யூடிப்பு' , கணியம் இதழில் வந்த சில கட்டுரைகள், பைத்தான் குறித்த இணைய தளங்கள் உதவின. சுய விருப்பமாக செய்தமையால், காலநேரம் எனக்கு கூடுதலாகத் தேவைப்பட்டது. இருப்பினும், முழுமையாக பிற மொழியினரும் பயன்படுத்த வழமையான ஆங்கில மொழியில் இவற்றை மாற்ற வேண்டும். செயபிராகசு என்ற இந்தி பயனர் எழுதிய விக்கிமூலத்திற்கான நூற்கட்டகத்தினை இன்னும் ஆயவில்லை. அதற்கு பிறர் உதவி தேவைப்படுகிறது.
  • ஒரு உரூபாய் அறிவியல் மன்றத்தினர் அவரது காப்புரிமை உள்ள தனிப்படைப்புகளில் விருப்பம் இருப்பினும், விக்கி குறித்த அவர்கள் ஆர்வத்தை மனிதில் கொண்டு, இம்மாதம் முழுவதும், அட்டவணை:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf என்ற நூலினைக் கொண்டு பயற்சியை ஒவ்வொரு நாளும் பாத்திமாவுடன், உடன் இணைந்த யசோசிறீயும் இணைந்து செய்து காட்டினோம். இதனால் கல்லூரி மாணவிகள் வருவர் என நம்புகிறோம்.
  • மேலும், ஒரு ஒலி வடிவ விக்கிமூல சிறுகதையும் பெறப்பட்டது. இச்சிறுகதை நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள் என்பதில் இருந்து எடுத்தாளப்பட்டது. அதனை விக்கிமூலத்தில் ஏற்ற வேண்டும். தொடர்ந்து தருவர் என நம்புகிறேன். ஒலி வடிவ நூலுக்கு தனிப்பயிற்சி தரவேண்டும்.