விக்கிமூலம் பேச்சு:ஒலிநூல்கள் திட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

சமய பாடல் ஒலிநூல் ஆக உருவக்கலாமா?[தொகு]

@Info-farmer @Sridhar G நான் திருப்பல்லாண்டு என்னும் வைணவ பாடல் ஒலிநூல் ஆக உருவக்கலாமா? மேலும் தொல்காப்பியம் போல தமிழ் இலக்கியத்திற்கான ஒலிநூல்களை உருவாக்கலாமா? ஏனெனில் தமிழ் விக்கிமூலத்தில் உதாரணங்கள் இல்லை. நன்றி Sriveenkat (பேச்சு) 02:49, 28 மார்ச் 2023 (UTC)

இல்லாத வளங்கள் ஏராளம். அதனை ஒவ்வொரு தமிழரும் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். புதுப்புனலில் வரும் கழிவுகளை ஏற்பவருள் நானும் ஒருஙன். தெளிந்த நீர் பின்னர் தோன்றும் என்றே எண்ணுகிறேன். சிறப்பாக செய்யுங்கள். தமிழ் வளங்களை வளர்க்க உங்கள் திறனை பயன்படுத்துங்கள். முடிந்தால் பிறரை ஈடுபடுத்துங்கள். ஏப்ரல் 8, 2023 அன்று கல்லூரி ஆசிரியர்களுக்கு ஒரு விக்கிகூடல் நடைபெறுகிறது. அதற்குள் செய்தளித்தால் உங்களைப் பற்றி அவர்களிடம் கூற ஏதுவாக இருக்கும். தமிழக அளவில் இரண்டு நிகழ்வுகளிலும், இந்திய அளவில் ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ள இருப்பதால் சற்று கற்கும்நேரம் அதிகம் தேவைப்படுகிறது. பிறகு தொடர்வோம். தகவலுழவன் (பேச்சு). 03:22, 28 மார்ச் 2023 (UTC)
@Info-farmer திருப்பல்லாண்டுக்கான ஒலிநூல் விரைவில் உருவாக்குகிறேன், நன்றி Sriveenkat (பேச்சு) 03:32, 28 மார்ச் 2023 (UTC)
@Info-farmer நான் ஏற்கனவே விக்கிபீடியா பேச்சு கட்டுரை திட்டத்தில் செய்துள்ளேன்
Sriveenkat (பேச்சு) 04:24, 28 மார்ச் 2023 (UTC)
@Info-farmer திருப்பல்லாண்டுக்கான ஒலிநூலின் பக்கம் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/திருப்பல்லாண்டு/ஒலிநூல் Sriveenkat (பேச்சு) 18:20, 28 மார்ச் 2023 (UTC)
இல்லாத வளங்கள் ஏராளம். அதனை ஒவ்வொரு தமிழரும் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். புதுப்புனலில் வரும் கழிவுகளை ஏற்பவருள் நானும் ஒருஙன். தெளிந்த நீர் பின்னர் தோன்றும் என்றே எண்ணுகிறேன். சிறப்பாக செய்யுங்கள். தமிழ் வளங்களை வளர்க்க உங்கள் திறனை பயன்படுத்துங்கள். முடிந்தால் பிறரை ஈடுபடுத்துங்கள். ஏப்ரல் 8, 2023 அன்று கல்லூரி ஆசிரியர்களுக்கு ஒரு விக்கிகூடல் நடைபெறுகிறது. அதற்குள் செய்தளித்தால் உங்களைப் பற்றி அவர்களிடம் கூற ஏதுவாக இருக்கும். தமிழக அளவில் இரண்டு நிகழ்வுகளிலும், இந்திய அளவில் ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ள இருப்பதால் சற்று கற்கும்நேரம் அதிகம் தேவைப்படுகிறது. பிறகு தொடர்வோம். தகவலுழவன் (பேச்சு). 03:24, 28 மார்ச் 2023 (UTC)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/திருப்பல்லாண்டு/ஒலிநூல் கேட்டேன். காட்சியகத்தில் மூலஉரையை இணைக்கவும். எடுத்துக்காட்டாக, அப்பம் தின்ற முயல்/ஒலிநூல் என்பதைக் காணவும். மேலும், மூலஉரையின் அச்சுநூல் தங்களிடம் உள்ளதெனின் காப்புரிமை இல்லாதவற்றை பதிவேற்ற காட்டுக. வழிமுறை சொல்லித்தருகிறேன். மூலநூலில் இல்லாத உரைகளை, ஒலிக்கோப்பில் இணைக்கக்கூடாது. அவ்வாறு இணைத்தால் அந்நூலினை இத்திட்டத்தில் இணைக்க இயலாது. தமிழ் மொழி மட்டுமே ஒலிநூலில் வர வேண்டும். ஒவ்வொரு மொழிக்குமான திட்டத்தில் அவற்றை இணைக்கலாம். இருமொழி கலப்பு என்பது பன்னாட்டு விக்கிமூல கொள்கைகளால் தமிழ் விக்கிமூலத்தில் ஏற்கபடாது என்பதால் மூலநூலின் உரையை மட்டும் உருவாக்கவும். --தகவலுழவன் (பேச்சு). 01:53, 29 மார்ச் 2023 (UTC)
@Info-farmerநாலாயிர திவ்ய பிரபந்தம் 7ம் நூற்றாண்டில் ஆழ்வார்களால் பாடப்பட்டது. மேலும் தனியன் என்றும் வடமொழி படல்லை நீக்கி மீண்டும் பதிவேற்றனுமா? மூலமாக இணையதளம் https://www.dravidaveda.org/?cat=503 Sriveenkat (பேச்சு) 02:43, 29 மார்ச் 2023 (UTC)
  • நீக்க வேண்டாம் இரு கோப்புகளாக உருவாக்குங்கள். அது சமசுகிருத மொழி என்று நினைக்கிறேன். அதனைத் தனிக்கோப்பாக உருவாக்கிய பின்பு அதற்குரிய உரையையும் அதன் கோப்பு விவரத்தில் இணைக்கவும். எனக்கு அம்மொழிக்குரிய விக்கி நண்பர்கள் தெரியும் அவர்களை அறிமுகம் செய்கிறேன். நீங்கள் அது குறித்து அவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்.
  • தமிழ்மொழிக்கு நான் வழிகாட்டுவேன். கொஞ்சம் பொறுங்கள். எனது பணப் பணி வேறு. இது இணையப்பணி. ஒன்று படுவோம். மொழி வளங்களை ஓங்கச் -செய்வோம். திரும்பவும் நானே உங்களை தொடர்பு கொள்வேன். எனக்கு கொஞ்சம் நாட்கள் தேவைப்படுகிறது. மீண்டும் சந்திப்போம். வணக்கம்.
தகவலுழவன் (பேச்சு). 02:07, 30 மார்ச் 2023 (UTC)
@Info-farmer தமிழ் தனியன் மற்றும் தமிழ் பாசுரங்கள் (பாடல்) மட்டும் நான் பக்கத்துடன் இணைத்துள்ளேன் Sriveenkat (பேச்சு) 05:59, 31 மார்ச் 2023 (UTC)
@Info-farmer@திவ்யப் பிரபந்தம் முதலாயிரம் என்னும் நூல் TVA இணையதளத்தில் உள்ளது நீங்கள் இதை விக்கி மூலத்தில் இணைத்து நினைத்து தாருங்கள் என்பது எனது வேண்டுகோள், ஏனெனில் எனக்கு விக்கி மூலத்தில் இணைக்க தெரியாது. மேலும் 4000 திவ்ய பிரபந்தம் மொத்தம் நான்கு தொகுதி ஆகும் வைணவத்திற்கான முதன்மை தூணாக இதுவே ஆகும். நான் உங்களுக்கு TVA இணையதளத்தில் இருந்து நூல்களை விரைவில் எடுத்துத் தருகிறேன், நன்றி Sriveenkat (பேச்சு) 19:52, 29 மார்ச் 2023 (UTC)
நான் உங்களுக்கு ஏற்றக் கற்றுத் தருகிறேன். அதுவரை மூலமின்னூலில் அனைத்துப் பக்கங்களும் சரியாக உள்ளனவா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் காலத்தினையும் கடந்து செல்லக்கூடிய இந்நூலினை சரிபார்த்தல் மிக மிக அவசியம். ஓவியம் வரைவது போல மிகப் பொறுமை வேண்டும். மீண்டும் தொடர்பு கொள்வேன். தகவலுழவன் (பேச்சு). 02:09, 30 மார்ச் 2023 (UTC)
@Info-farmer *மிக்க மகிழ்ச்சி, ஆம் அது சமஸ்கிருத பாடல் ஆகும் அதை தனியன் என்பர். தனியன்களில் தமிழும் உண்டு. தனியன் என்பது பாடிய ஆழ்வாரை பற்றி புகழ்ந்து பாடும் ஒரு பாடல் ஆகும் இந்தப் பாடல் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் முதலில் பாடப்படும். பிறகு அந்த ஆழ்வார் பாடிய பாடல்களை பாடுவார்கள். இது வைணவர்களின் பழக்கமாகும். மேலும் 108 வைணவ திருத்தலங்களிலும் மற்றும் வைணவ திருக்கோயில்களிலும் இதையே பின்பற்றுகிறார்கள்.
  • எனக்கு சமஸ்கிருதத்தை படிக்கவோ எழுதவோ தெரியாது. சில சமஸ்கிருத பாடல் தெரியும். எனக்கு ஹிந்தியும் தெரியாது. எனக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும். நன்றி.
  • நான் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் மின்நூலை சரி பார்க்கிறேன். மேலும் உங்களுடைய காணொளிகள் பார்த்தேன்.
  • விக்கி மூலத்திற்கு மின்னூல்களை ocr செய்ய வசதியாக எப்படி செய்வது போன்ற கிம்ப் காணொளியை பார்த்தேன். tamil linux community மூலம், மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.
Sriveenkat (பேச்சு) 03:08, 30 மார்ச் 2023 (UTC)