உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

மூலநூல் இல்லா எழுத்தாக்கங்கள்

[தொகு]

வணக்கம் தகவல் உழவன் மூல நூல் பக்கங்கள் இல்லாமல் காபி பேஸ்ட் செய்யப்பட்டு விக்கி மூலத்தில் உருவாக்கபட்டுள்ள நூல்களான கல்கியின் பொன்னியின் செல்வன், அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், சோலைமலை இளவரசி, தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, மகுடபதி, மோகினித் தீவு போன்ற நூல்களும், உ.வேசா.வின் என் சரித்திரம் போன்ற பல ஆசிரியர்களின் நூல்கள் முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்டன. இவை மூல நூல்களைக் கொண்டவையாக இல்லாமல் இருப்பதால் ஒருவகையில் குறைபாடுகள் கொண்ட பக்கங்களாக இருக்கின்றன. எனவே இதுபோன்று மூல நூல்கள் அற்ற மூல மின்நூல்களை தமிழ் இணையக் கல்விக் கழகம், நூலகம் திட்டம் போன்றவற்றால் இருந்து தரவிறக்கி விக்கிமூலத்தில் ஏற்றி ஏற்கனவே காப்பி பேஸ்ட் செய்யப்பட்டு உருவாக்கபட்ட பக்கங்களைக் கொண்டு மிக எளிதாக அந்த நூல்களை மூல நுல்களைக் கொண்டவையாக மாற்றி உருவாக்குவது மிகவும் அவசியமான பணியாகும். அது தமிழ் விக்கிமூலத்தின் தரத்தை மேம்படுத்துவதாக அமையும். எனவே அவ்வாறான நூல்களையும் பட்டியலிட்டு அந்த நூல்களின் மூலப் பக்கங்களை தேடி எடுத்து விக்கி மூலத்தில் ஏற்றுவதையும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கொள்ளலாம் நன்றி.--கு. அருளரசன் (பேச்சு) 09:05, 2 அக்டோபர் 2023 (UTC)Reply

வணக்கம். அருளரசன். இது குறித்து மூன்று ஆண்டுகளுக்கு முன் நினைத்தேன். தற்போது மாற்றியமைக்கப்பட்ட இக்கருவியில் கூட நாம் இந்திய மொழியில் பின்னணியில் இருக்கிறோம். அதற்கு நீங்கள் கூறியதே காரணம். ஆனால் உரிய நூலினை இணையத்தில் தேடவேண்டும். பின்பு அதனைத் தானியக்கமாக இணைக்க முடியமென நம்புகிறேன். எனவே இணையத்தில் கிடைக்கும் ஏதேனும் நூலினை பரிந்துரை செய்யுங்கள். பிறரையும் நாடுவோம்.--தகவலுழவன் (பேச்சு). 01:41, 3 அக்டோபர் 2023 (UTC)Reply

படிப்படியாக மூல நூல்கள் இல்லாத பக்கங்களில் மூல நூல் அட்டவணைகளைச் சேர்க்கவேண்டும். அப்போதே தமிழ் விக்கி மூலத்தின் தரம் பிற சமூகங்களின் மத்தியில் உயரும். ஏதேனும் ஒரு நூலை பரிந்துரை செய்யக் கேட்டதால் என் சரித்திரம் நூலை முதலில் பரிந்திரைக்கிறேன். தமிழிணையக் கல்விக் கழகத்தி உள்ள அதன் உரலி --கு. அருளரசன் (பேச்சு) 05:59, 3 அக்டோபர் 2023 (UTC)Reply

நன்றி. நம்மிடம் உள்ள தரவோடு ஒப்பிட்டு பார்க்கலாமா? பொருத்தமாக இருந்தால் தொடர்ந்து நூலினையும், தரவினையும் நாம் இணைக்கத் தொடங்கலாம். தகவலுழவன் (பேச்சு). 00:53, 4 அக்டோபர் 2023 (UTC)Reply
@அருளரசன், @Info-farmer - கல்கியின் நூல்கள் நாட்டுடைமை நூல்கள் பொன்னியின் செல்வன், அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், சோலைமலை இளவரசி, தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, மகுடபதி, மோகினித் தீவு வரிசையிலானவை. எனவே இதில் சிக்கல்கள் ஏதுமில்லை. விரைவாக அடுத்தகட்டப் பணியினைத் தொடரலாம்.--TVA ARUN (பேச்சு) 09:12, 10 அக்டோபர் 2023 (UTC)Reply
நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 13:21, 10 அக்டோபர் 2023 (UTC)Reply
checkY நீங்கள் (கு. அருளரசன் ) தொடங்கிய இதனின் திட்டப்பக்கம்: விக்கிமூலம்:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள் மேம்படுத்தும் திட்டம் Info-farmer (பேச்சு) 02:58, 23 மே 2024 (UTC)Reply

திட்ட தேதி மாற்றம்

[தொகு]

பதிவேற்றப் பரிந்துரை

[தொகு]
  1. சுவடி_இயல்.pdf
  2. TVA_BOK_0039269-சுவடி_இயல்.pdf
  3. TVA_BOK_0018225_காகிதச்_சுவடி_ஆய்வுகள்.pdf
  4. TVA_BOK_0002868_சுவடிப்பதிப்பு_நெறிமுறைகள்.pdf இந்த நூல்கள் ஆய்வாளர்களுக்குத் தேவைப்படுகின்றன. இவற்றையும் பதிவேற்றுங்கள்.நேயக்கோ (பேச்சு) 04:18, 21 மே 2024 (UTC)Reply
    checkYபதிவேற்றியுள்ளேன். இங்கும் அட்டவணையின் அடித்தளங்களை ஏற்படுத்தியுள்ளேன். இணைந்து மேம்படுத்துவோம். கோப்பின் அளவு மிக அதிகமாக இருந்தத. மின்னூல் தர அளவுக்கு மாற்றி இங்கு ஏற்றியுள்ளேன். சுருக்கமாகச் சொன்னால், 1GB அளவிருந்த கோப்புகள், 300MB அளவாக மாற்றி பக்க ஓரங்களைச் செதுக்கி, சரிபார்த்து ஏற்றியுள்ளேன். பரிந்துரைத்தமைக்கு நன்றி. Info-farmer (பேச்சு) 03:02, 22 மே 2024 (UTC)Reply

இத்திட்டத்தில் கையாண்ட கட்டற்ற மென்பொருட்கள்

[தொகு]
  1. https://askubuntu.com/questions/124692/command-line-tool-to-crop-pdf-files
  2. https://www.baeldung.com/linux/pdf-metadata-terminal
  3. https://gcore.com/learning/how-to-get-directory-size-linux/
  4. https://github.com/tshrinivasan/tools-for-wiki
  5. https://tldp.org/HOWTO/Bash-Prompt-HOWTO/x700.html
  6. https://www.youtube.com/watch?v=OF1qgEEI2-4
  7. https://www.youtube.com/watch?v=otYm1NSIlEQ
  8. https://video2commons.toolforge.org/

Info-farmer (பேச்சு) 16:50, 17 சூலை 2024 (UTC)Reply

பின்னூட்டங்கள்

[தொகு]

பதிவேற்றிய நூல்கள் குறித்த பின்னூட்டங்களை, இத்தொடுப்பில் விரிவாகக் காணலாம். Info-farmer (பேச்சு) 01:50, 2 ஆகத்து 2024 (UTC)Reply

முன்மொழிவுகளில் எண்ணங்களைத் தருக

[தொகு]
  1. டெலிகிராமிலும், அலைப்பேசி தொடர்பு வழியாகவும், கல்லூரி ஆசிரியர் கூடலிலும் முன்மொழிந்த நூல்கள் முடிக்கப்பட்டுள்ளன. நீங்களும் முன்மொழியலாம், நான் செய்ய வேண்டும் எனில், விக்கிமூலத்தில் நீங்கள் குறிப்பிடத்தக்க பணிகளை செய்திருக்க வேண்டும், உரிமம் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஏற்கனவே உள்ள நூல்களில் மேம்பாடுகளை செய்து விண்ணப்பித்தலை உடன் ஏற்கின்றனர். அடுத்து கீழ்காணும் நூல்கள் மேம்படுத்தி ஏற்றப்படும். இங்கு மேம்பாடு என்பது யாதெனில்,
    1. நூல்களில் அனைத்துப் பதிப்புகளும் இணையத்தில் அல்லது நூலகத்தில் தேட வேண்டும். பின்பு அவற்றில் சிறந்ததைப் பதிவேற்ற அடுத்த கட்ட முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
    2. அனைத்துப் பக்கங்களும் உள்ளனவா என்று சரிபார்த்தே ஏற்ற வேண்டும்.
    3. பதிவேறும் நூலின் பக்க ஓரங்கள் செதுக்கப்பட்டு ஏற்றினால் மெய்ப்பு காணும் போது எழுத்துகள் பெரியதாகவும் தெளிவாகவும் தெரியும். எழுத்துணரியாக்கம் (OCR) நன்கு வரும்,
  2. இங்கு தோழர் சோடாபாட்டில் முன்மொழிவுகளைக் கொடுத்துள்ளார். அவற்றில் ஐந்து நூல்கள் மேம்படுத்தப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இறுதியதாக தம்பிக்கு அண்ணாவின் கடித்தொகுப்புகள் பணி நடைபெறுகிறது.
  3. திருமிகு புகாரி தனது முன்மொழிவுப் பட்டியல் கொடுத்துள்ளார். உங்களது எண்ணங்களைத் தருக. அவற்றை குவியப்படுத்திச் செயற்படுத்துவோம்.

Info-farmer (பேச்சு) 02:14, 4 செப்டெம்பர் 2024 (UTC)Reply