விக்கிமூலம் பேச்சு:பயிற்சிப்பட்டறை - 2019

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பயிற்சி பற்றிய கருத்துக்கள்[தொகு]

புதியவர்களுக்கு அனுமதியில்லையா? -Neechalkaran (பேச்சு) 13:11, 23 ஏப்ரல் 2019 (UTC)Reply[பதில் அளி]

@Neechalkaran://புதியவர்களுக்கு அனுமதியில்லையா?// அப்படி இன்னும் இறுதியாக முடிவு செய்யப்படவில்லை. இது குறித்து இன்னும் உரையாட வேண்டியுள்ளது. புதியவர்களை அனுமதிக்கலாமா? புதியவர்கள் என்றால் எந்த அடிப்படையில் சேர்த்துக்கொள்வது.? ஏதாவது சில விதிகளை நாம் ஏற்படுத்திக்கொள்ளலாம். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 04:03, 24 ஏப்ரல் 2019 (UTC)Reply[பதில் அளி]
ஏதேனும் ஒரு தமிழ் விக்கிமீடியா திட்டத்தில் 100 தொகுப்புகளாவது செய்திருப்பவர்களை வரவேற்கலாம். முற்றிலும் விக்கிச் சூழலுக்குப் புதியவர்களைப் பயிற்றுவித்தால் எந்த அளவு தக்க வைக்க முடியும் என்று ஐயம் உள்ளது. --இரவி (பேச்சு) 20:01, 25 ஏப்ரல் 2019 (UTC)Reply[பதில் அளி]

உதவி[தொகு]

நிகழ்வு சேலத்தில் நடப்பதாயின் தங்குமிட ஏற்பாடு, உணவு, பயனர்களுக்கான பிற தகவல் தொடர்பு உதவிகள் செய்ய அணியமாக உள்ளேன். --Parvathisri (பேச்சு) 16:47, 23 ஏப்ரல் 2019 (UTC)Reply[பதில் அளி]

@Parvathisri: மிக்க மகிழ்ச்சி. சேலத்தில் உள்ள தங்குமிடத்தில் வேகமான இணைய இணைப்பு கிடைக்க வாய்ப்புள்ளதா? நன்றி. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 04:03, 24 ஏப்ரல் 2019 (UTC)Reply[பதில் அளி]

நிகழ்ச்சிக்கு யோசனை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம் தொடர்பாக நிகழும் முதல் கூடல் இதுவாக இருக்கலாம். அவ்வாறு இருக்கையில் விக்கிமூலத்தில் பயனர்கள் எதிர்கொள்ளும் நுட்பச் சிக்கல்கள்/யோசனைகளைப் பட்டியல் இடலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு யோசனைகள் இருக்கலாம். அவற்றை ஆவணப்படுத்தினால் விக்கிமூலத்திற்கான நுட்பக்கருவிகளை மற்றவர்கள் உருவாக்கித் தரவும் உள்ளதைப் பயன்படுத்தவும் உதவலாம். --Neechalkaran (பேச்சு) 19:33, 29 ஏப்ரல் 2019 (UTC)Reply[பதில் அளி]
    1. தேவைகளைக் கூறுவேன்.-- உழவன் (உரை)
  2. ஏற்கனவே பல நிகழ்பட பாடங்களை, பாலாஜி உருவாக்கி உள்ளார். அவற்றின் படிகளை, வருவோருக்கு தரலாம். இன்னும் பல வழிகாட்டல்கள் உருவாக்கப்பட வேண்டும். அவற்றை அவர் உருவாக்கினால் நன்றாக இருக்கும். நேரப்பற்றாக்குறை அவருக்கு இருப்பின், அந்நிகழ்பட பாடங்களை, பாலாஜியின் ஆலோசனையுடன் என்னால் உருவாக்கத் தர இயலும். இதற்குரிய வினாக்களை பங்கு கொள்வோர் கேட்க ஒரு பகுதி இருப்பின், மிகவும் நன்றாக இருக்கும்-- உழவன் (உரை) 18:05, 30 ஏப்ரல் 2019 (UTC)Reply[பதில் அளி]

விண்ணப்பமிடுவதற்கான பகுதியும் இறுதிநாளும் இணைக்க[தொகு]

தற்போது உள்ள பலரது எண்ணப்படி, தமிழகத்தின் சேலத்தில் இப்பயிலரங்கு நடைபெற உள்ளதெனத் தெரிகிறது. இதில் கலந்து கொள்ள எப்பகுதியில் விண்ணப்பிக்க வேண்டும். பயிலரங்கு எந்த இடத்தில் நடைபெற வேண்டும்? என்ற எண்ணக் கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர், ஏறத்தாழ 25 நபர்கள் ஆவர். அதனையே விண்ணப்பமாக ஏற்றுக் கொள்ளலாமா? அல்லது தனியே விண்ணப்பிக்க வேண்டுமா? எந்நாள் வரை விண்ணப்பிக்கலாம்?-- உழவன் (உரை) 17:56, 30 ஏப்ரல் 2019 (UTC)Reply[பதில் அளி]

மின்னஞ்சல் குழுவில் அறிவித்தாகிவிட்டது. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 14:10, 1 மே 2019 (UTC)Reply[பதில் அளி]
மின்னஞ்சலைப் பார்த்தேன். பயிலுமிடம் சேலம் என அறிந்து மகிழ்ச்சி. விண்ணப்பித்தல் பற்றி இனிதான் அறிவிப்பீர்கள் என்று எண்ணுகிறேன். -- உழவன் (உரை) 15:54, 1 மே 2019 (UTC)Reply[பதில் அளி]

இடம் மற்றும் தேதி[தொகு]

தமிழ் விக்கிமூலம் பயிற்சி வகுப்பிற்கு ஏறக்குறைய அனைவரும் வாக்களித்துவிட்டதால் வாக்கெடுப்பை நிறைவு செய்யப்படுகிறது. வாக்கெடுப்பின் படி [1] பயிற்சிக்கான தேதி சூன் 8-9, 2019. இடம் சேலம். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 14:09, 1 மே 2019 (UTC)Reply[பதில் அளி]

மேல்விக்கியில் நிகழ்ச்சி பற்றி[தொகு]

மேல்விக்கியில் பயிற்சிப்பட்டறை பற்றிய விவரங்களை ஆங்கிலத்தில் காணலாம். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 14:14, 1 மே 2019 (UTC)Reply[பதில் அளி]

நிகழ்வு பற்றிய கருத்துகள்[தொகு]

இனிய நிகழ்வுக்கு மிக்க நன்றி. நிறைவான பயிற்சியாக இருந்தது. இடமும், பிற வசதிகளும் போதுமானதாக இருந்தன. பங்களித்தோர் அனைவருக்கும் நன்றிகள். Tshrinivasan (பேச்சு) 10:54, 10 சூன் 2019 (UTC)Reply[பதில் அளி]

etherpad/p/taws2019 குறிப்புகள்[தொகு]

சேலம், விக்கிமூலம் பயிற்சிப் பட்டறை நிகழ்வுகளை இங்கு காணலாம். அந்தந்த அமர்வுகளுக்கேற்ற புகைப்படங்கள் இணைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். --கி.மூர்த்தி (பேச்சு) 01:23, 12 சூன் 2019 (UTC)Reply[பதில் அளி]