உள்ளடக்கத்துக்குச் செல்

நூலக ஆட்சி

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


நூலக ஆட்சி



ஆசிரியர் :

அ. திருமலை முத்துசுவாமி

நூலகத்துறைத் தலைவர்

தியாகராசர் கல்லூரி

மதுரை.


பதிப்பாளர் :

திண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ்

திண்டுக்கல்

மதுரை : சென்னை-1



பதிப்புரிமை ] 1957 [விலை : ரூ. 1-8-0




முதற் பதிப்பு-1952









இந்தியாவில் அச்சு இயற்றப்பட்டது
மதுரைக் கூட்டுறவு அச்சகம், 77, வடக்காவணிமூலவீதி, மதுரை.

தமிழ்ச் செல்வர்

உயர் திரு கருமுத்து தி. மாணிக்கவாசகம் செட்டியார், பி.ஏ.,

அவர்களுக்கு இந்நூலை உரிமையாக்குகின்றேன்.

‘புதியதொரு முயற்சி’

பழம் தமிழகத்தில் “எண்ணும் எழுத்தும் மாந்தர்க்குக் கண்ணெனத் தகும்” என்னும் கொள்கை நன்கு நிலைபெற்றிருந்தது. கலைக் களஞ்சியங்களாகிய நூல் நிலையங்களைப் போற்றும் புலவர்களும், பொருளறிந்து தேற்றும் புலவர்களும் அந்நாளில் சிறந்து விளங்கினர் என்பது நாலடியாரால் அறியப்படுகின்றது. “நல்ல நூல்களின் தொகுதியே உண்மையான பல்கலைக் கழகம்” என்று கார்லைல் என்னும் ஆங்கில நாட்டு அறிஞரும் கூறிப்போந்தார். இக்காலத்தில் நூலகத் துறை வளர்ச்சியில் அறிஞரும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர். அன்னாரது ஊக்கம் மேன்மேலும் வளர்ந்து ஓங்க வேண்டுமாயின் நூலகக் கலையின் நுணுக்கங்களை அவர்கள் நன்கு தெரிந்து கொள்ளுதல் வேண்டும். இக்கலையைப் பற்றிய நூல்கள் ஆங்கிலத்தில் பலவுண்டு. நம் தாய் மொழியாகிய தமிழிலும் இக்கலையைப் பற்றிய நூல்கள் வெளிவரல் வேண்டும் என்பது என் ஆசை. அந்த முறையில் இப்போது வெளிவந்துள்ள “நூலக ஆட்சி” என்னும் இந்நூலை ஆர்வத்தோடு வரவேற்கிறேன்.

இந்நூலாசிரியரை எனக்கு இளமையிலிருந்தே நன்கு தெரியும். ஆங்கிலம், தமிழ் என்னும் இருமொழிகளையும் கற்றுத்தேர்ந்து, ஆசிரியப் பயிற்சியும், நூலகப் பயிற்சியும் பெற்று நூல் நிலையத்திலேயே பணியாற்றுகின்றார். நல்ல தமிழார்வமிக்க இவரால் எழுதப்பட்ட இந்நூல் புதியதொரு முயற்சி; அரியதொரு படைப்பு. சென்னை, தில்லி பல்கலைக்கழகங்களில் நூலகப் பயிற்சி வகுப்புக்குரிய

நூலக ஆட்சிப்’ பாடத்திட்டத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளது இந்நூல்.

ஒன்பது தலைப்புக்களில் நூலக அலுவல்களைக் குறித்து ஆசிரியர் விளக்கமாக எழுதியுள்ளார். நூலகப் பணியில் ஈடுபட்டுள்ளோரது அன்றாடப்பணிகளும், அவர் தம் திறனும், ஊதிய வகையும் இன்ன பிறவும் முதலில் ஆசிரியரால் திறம்பட விளக்கப்பட்டுள்ளன. அடுத்து நூலகத்திற்குப் புதிய நூல்களை எவ்வாறு தேர்ந்தெடுத்தல் வேண்டும் என்பதும், அவ்வாறு தேர்ந்து எடுத்த நூல்களை விற்பனையாளர்களிடமிருந்து எவ்வாறு பெறுதல் வேண்டும் என்பதும், நூலகத்திற்கு வாங்கிய புதிய நூல்களைத் தொகைவகை விரி செய்து காண்போர் கருத்தைக்கவரும் வண்ணம், வருவோர் தம் உள்ளத்தை ஈர்க்கும் வகையில் தட்டுகளில் எவ்வாறு அழகுற அடுக்கிவைத்தல் வேண்டும் என்பதும் ஆராயப்பெற்றுள்ளன. பின்னர் நூல் வழங்கு முறை, நூலக விதிகள், நூலக ஆண்டறிக்கை போன்ற பல தலைப்புகளிலே நல்ல பல கருத்துக்களை ஆசிரியர் நயம்பட எழுதியுள்ளார். நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் நூலகச் சொற்பட்டியல் தமிழ் மக்களுக்குப் பெரிதும் பயன்படும் என்பது என் கருத்து.

தமிழ் நாட்டில் நூலகத் துறையில் ஈடுபட்டுள்ளோரை ஊக்கப்படுத்துவதோடு, பொது மக்களுக்கும் நூலகக் கலையினை விளக்கும் வகையில் அமைந்துள்ள இந்நூலைத் தமிழகம் படித்துப் பயனடையும் என்று நம்புகிறேன். நூலாசிரியர் நீடு வாழ்க!


நூலைப்பற்றி

நூலகம் - அறிவு மன்றமான இதுதான் நம்நாட்டு ஆயிரமாயிரம் மக்களின் ஆவலையும், அறிவு வேட்கையையும் தீர்த்து, மக்கட்குலம் உய்ய, உயர, பணிபுரிந்தாக வேண்டும். நேற்றைய சிறப்புக்களை ஆய்ந்து, இன்றைய தேவைகளை அறிந்து, நாளைய உயர்வுக்கு வழிகாட்டவேண்டும்.

அத்தகு நூலகம் சிற்றளவினதாயினும், பேரளவினதாயினும் பொது அமைப்பு முறையும் நிர்வாக முறையும் திறமையான வகையில் அமையவேண்டும். அப்பொழுதுதான் நூலகப் பணிக்காகச் செலவழியும் பணமும் பணியும் பயன் தருவனவாகும்.

வளர்ந்துவரும் தாய்மொழியில் - தமிழில் - புதிய துறையாம் நூலகவியல் விளக்கம் நல்ல இடம் பெறவேண்டும். அப்பணியில் ஒரு பகுதியாம் நூலக ஆட்சியை முறையே தொகுத்து, விரித்து, இனிமையாக, எளிமையாக, நல்ல தமிழில் முதன்முறையாகத் தந்திருக்கிறார் நண்பர் திருமலை முத்துசாமி அவர்கள்.

நல்ல தமிழ்ப் பற்றும், பயிற்சியும், ஆசிரியப் பயிற்சியும், நூலகப் பயிற்சியும் ஒருங்கமைந்து கல்லூரி நூலகத் தலைவராகப் பணியாற்றும் வாய்ப்புப்பெற்றுள்ள நண்பர் எழுதியுள்ள நூலக ஆட்சி நல்லதொரு நூலகப் பணியாகும்.

அப்பணியைத் தொடங்கியுள்ள நண்பர் மேலும் பல நூல்களைத் தர முன்வர வேண்டுமென விழைகிறேன்.

அண்ணாமலைப் பல்கலைக்            வே. தில்லைநாயகம்
        கழகம்  
   அண்ணாமலைநகர்                துணை நூலகத்துறைத் தலைவர். 

எனது நோக்கம்

‘நூலகங்கள் பண்டை உலகின் சின்னங்கள்; இக்கால உலகின் புகழ்க் கொடிகள்’ என்பர் லாங்பெவல்லோ. சுருங்கக் கூறின் நூலகங்கள் பொது மக்களின் அறிவை வளரச்செய்யும் திருக்கோயில்களாகும். எனவேதான் இன்று நூலக இயக்கம் நம் நாட்டில் தொடங்கப் பெற்றுள்ளது. அதுவளர்ந்து நாட்டுக்கும் மொழிக்கும் நலம் பயக்க வேண்டுமாகில், நூலக வளர்ச்சி, நூலக அமைப்பு முதலியன பற்றி மக்கள் நன்கு தெரிந்தாக வேண்டும். இத்துறை பற்றிய நூல்கள் பலவும் ஆங்கிலத்தில் தான் எழுதப்பட்டுள்ளன. தமிழில் ஓரிரு நூல்கள் தான் உள்ளன. எனவே நூலகத் துறை பற்றிய நூல்கள் சில எழுத நான் முற்பட்டேன். எனது முதல் நூலாகிய நூல் நிலையம் நூலகத்தின் தொடக்கம் முதல் இன்றைய வளர்ச்சி வரையில் முறையோடு கூறுகின்றது. இரண்டாவது நூலாகிய நூலக ஆட்சி நூலகத்தில் அன்றாடம் நடைபெறும் நூலக அலுவல்களை நூலகத் துறையிலுள்ளாரும், பொது மக்களும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்கின்றது. இதனைத் தமிழுலகம் நன்கு வரவேற்குமென எண்ணுகின்றேன்.

இந்நூலினை எழுதுவதற்கு நான் எடுத்தாண்ட மேற்கோள் நூல்கள் பின்வருவனவாகும்:

  1. Manual of Library Routine-Doubleday (W.E.)
  2. Manual of Library Economy - Brown (J. D.) and Sayers (W. C. B.)
  3. Library Administration - Ranganathan (S.R.)


இந்நூலை வெளியிட முன்வந்த திண்டுக்கல் பதிப்பகத்தாருக்கும், இதனை நல்லமுறையில் அச்சிட்டுத்தந்த மதுரைக் கூட்டுறவு அச்சகச் செயலாளர் திரு T.K. சுப்ரமணியம், L.P.T., அவர்களுக்கும், உடன் உழைத்த நண்பர்களுக்கும், அணிந்துரை நல்கியருளிய என்னருமைப் பேராசிரியர் அவர்களுக்கும், நண்பர் அவர்களுக்கும் என் உளம் நிறைந்த நன்றி உரித்தாகுக.

அ. தி.

பொருளடக்கம்




"https://ta.wikisource.org/w/index.php?title=நூலக_ஆட்சி&oldid=1515299" இலிருந்து மீள்விக்கப்பட்டது