உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள்

விக்கிமூலம் இலிருந்து
PAWS தொடக்கம்

பொதுவாக பைத்தான் நிரல்களை இயல்பிருப்பாக லினக்சு வகைக் கணினிகளில் இயக்கலாம். ஆனால் வின்டோசு போன்ற இயக்குதளங்களில் பைத்தான் பொதிகளை நிறுவ வேண்டும். ஆனால் விக்கி வழங்கியிலேயே இருக்கும் வசதியை, உலாவியிலேயே பயன்படுத்தி நிரல்களை இயக்குதல் என்பது எளிமை.அதற்கு வலப்பக்கம் தந்திருக்கும் நிகழ்பட திரைப்பதிவினைக் காணவும்.

இணைப்புகள்

[தொகு]
  1. சீனி அளித்த 'ஓசியார்ஃபார்விக்கிசோர்சு(OCR4wikisource)'
  2. உலாவி வழியே செயற்படுத்தும் போது, 'பைவிக்கிபாட்' என்ற பைத்தான் நூற்கட்டகத்தின் ஒருங்குறிய வழுக்கள் பெருமளவு தவிரக்கப்படுகின்றன. அது ஒப்பிட்டளவில் யாவருக்கும் எளிமையானது. எனவே இது யூவி பான்டே என்ற புனைப்பெயரை உடைய சென்னைத் தமிழரால் தோற்றுவிக்கிப்பட்டது.
  3. பொதுவகத்தில் இருந்து நூற்குறிப்புகளை எடுத்து, அவற்றை இங்குள்ள அட்டவணைகளில் நிரப்பிய பைத்தான் நிரல்
  4. w:விக்கிப்பீடியா:பைவிக்கிதானியங்கி என்பது பல விக்கித்திட்டங்களுக்கு உதவும் பெரும் நிரற்தொகுப்பாகும். இது பல ஆண்டுகள் பலரால் பைத்தான்2 எழுதப்பட்டுள்ளது. சிலவற்றை தற்பொழுது பைத்தான்3 மாற்றியுள்ளனர். இந்த பைத்தான் நூற்கட்டக்த்தினை பின்புலத்தில் வைத்து, தமிழ் விக்கிமூலத்திற்கு என தமிழ்வழி இயக்கும் பைத்தான் நூற்கட்டகத்தினை(Library & wrappers) உருவாக்க இயலும். அத்துடன் இந்த பைவிக்கிமூல நூற்கட்டகமும் உதவும். பிற: விக்கிப்பீடியா, விக்கித்தரவு,
  5. b:பைத்தான் என்ற விக்கிநூல்கள் பக்கத்தில் உங்களின் வினாக்களை எழுதி எனக்கு(தகவலுழவன்) அறியத்தாருங்கள். விக்கியில் பைத்தான் பயன்பாடுகள் குறித்த வழிகாட்டல்களை நாம் சேர்ந்து உருவாக்குவோம். இந்த கூட்டு அறிவாயுதம், வெற்றிகளையும், நமது இலக்குகளையும் எளிதில் அடையலாம்.
  6. எம்மொழியினையும், முனையத்தில் தெளிவாகப் படிக்க நீங்கள் பயன்படுத்தும் இயக்குத்தளம், முனையம் முக்கியம். எனது அனுபவத்தில், டெபியன்10, கன்சோல் சிறப்பு. பதிப்புகள் மாறினாலும், அனைத்து மொழிகளும் தெளிவாகத் தெரியும்.
  7. அலைப்பேசி வடிவ தொழினுட்பத்தினை அறிக

எடுத்துக்காட்டு

[தொகு]
#!/usr/bin/python2
import pywikibot
aPage = 'page:அங்கும் இங்கும்.pdf/9'
site = pywikibot.Site('ta', 'wikisource')
page = pywikibot.Page(site, aPage)
print "page"
Output:ta:page:அங்கும் இங்கும்.pdf/9


#!/usr/bin/python3
import பைவிக்கிமூலம்
எடுக்கும்பக்கம் = 'பக்கம்:அங்கும் இங்கும்.pdf/9'
உரலி = பைவிக்கிமூலம்.உரலியிடு(எடுக்கும்பக்கம்)
விளைவிடு(உரலி)
விளைவு : ta:பக்கம்:அங்கும் இங்கும்.pdf/9

அணித்தரவுக்கோப்பினைப் படித்தல்

[தொகு]
பிரிகுறியை (delimiter) மாற்றுதல் மிக முக்கியமானது: கண்டு கற்பீர்.
  • அணித்தரவுக்கோப்பு - விரிதாளில் பல வகைகள் உள்ளன. வின்டோசு இயக்குதளத்தில் பயன்படுத்தவல்ல சிறந்த கட்டற்ற விரிதாள்கள் இருப்பினும், (லிப்ரே ஆபிசு, ஓபன் ஆபிசு பொதிகள்) பெரும்பாலும் அதன் தேவையை பிறர் உணர்வதில்லை. இந்த விரிதாள் வகைகளுக்கு ஒப்ப, நாம் பைத்தான்நூற்கட்டகங்களைத் தேர்ந்தெடுத்து (விரிதாள் வகைகள், pandas) பயன்படுத்த வேண்டும். ஆனால், யாவருக்கும், எந்த கணிமைச்சூழ்நிலையிலும் எளிமையானது, இந்த அணித்தரவுக்கோப்பு ஆகும். ஏனெனில், அணித்தரவுக்கோப்பினை கையாளுதல், உருவாக்குதல் எளிது. எனினும், அதன் இயல்பிருப்பான, பிரிகுறியை மாற்றியமைத்தல் மிக மிக முக்கியமானது.
  • பொதுவாக அணித்தரவுக்கோப்பின் பிரிகுறியானது, காற்புள்ளியாகவே இருக்கும். இதனைப் பயன்படுத்தும் போது, சில நேரங்களில் நிரலாக்க வழு வரும் அதனைத் தவிர்க்க, அலைக்குறியை (tilde) பயன்படுத்துங்கள்.
  • விக்கிமூலம்:பைத்தானில் அணித்தரவுக்கோப்பு

அட்டவணை பக்கமொன்றின் மீடியாவிக்கி நிற/தரநிலைக் குறிப்புகள்

[தொகு]
பைத்தான்3 கொண்டு, நூற்பக்கமொன்றின் நிறநிலைகளை அறிவிக்கும் முனையத்திரை
  • ஒரு நூற்பக்கத்தினை நாம் நிரல்வழியாக நோக்கும் பொழுது அதன் தரநிலையை அறிய பின்வரும் குறிப்புகள் உதவும். நீங்கள் எத்தகைய கணியமொழிகளைக் கொண்டு ஆய்ந்தாலும், கீழ்தரப்பட்டுள்ள மீடியாவிக்கி மொழியின் குறிப்புகள் உங்களுக்கு உதவும். பின்னர், நிறத்திற்கு ஒப்ப நாம் வேண்டிய நிரல்களை எழுதி செயற்படுத்தலாம்.
  • பக்கநிறசாம்பல் = '<pagequality level="0" user='
  • பக்கநிறசிவப்பு = '<noinclude><pagequality level="1" user='
  • பக்கநிறஊதா = '<noinclude><pagequality level="2" user='
  • பக்கநிறமஞ்சள் = '<noinclude><pagequality level="3" user='
  • பக்கநிறப்பச்சை = '<noinclude><pagequality level="4" user='

பக்கமொன்று தவறாகவோ அல்லது இல்லையென்றாலோ AttributeError தோன்றும். இதனைத் தவிர்க்க, try, except வசதிகளைப் பயன்படுத்துக.

  • இதற்குரிய பைத்தான்3 நிரலாக்கம் வளரும்....

மேலடி நிரற்தொகுப்புகள்

[தொகு]

பைத்தான்2 வகைகள்

[தொகு]
  1. [[ ]]
  2. [[ ]]

பைத்தான்3 வகைகள்

[தொகு]
  1. உள்ளமைச் செயல்குறிகள்(built in functions):எ-கா:
print, with open, str, int, len, try, except, if, else, elif, or, in, and, for, as, for, type, True, False, enumerate, sum, filter, None, break, .replace ('',''), 'a', 'w', 'r', '.csv', ==, !=, <, >,
  1. பயனர்ச் செயல்குறிகள் (user defined functions):
 def, return

பயன்படுத்தி நாமே உருவாக்கலாம். எ-கா: விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள்/பைவிக்கிமூலம்

  • எதுவாகினும்
import

என்று தொடங்க வேண்டும்.

நிரற்தொகுப்புகள்

[தொகு]
தமிழ் மொழியை நன்கு கையாள பைத்தானின் இந்நூற்கட்டகம் உதவும்.
  • அனைவருக்குமான நிரல்கள் - அனைத்துப் பக்கங்களுக்கு மட்டும்
  1. விக்கிமூலம்:பைத்தானில் அணித்தரவுக்கோப்பு
  2. விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள்/பைவிக்கிமூலம்
  3. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/பகுப்புப்பக்கங்களைஎடுத்தல் - பகுப்பு
  4. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/பக்கயெண்ணிக்கைப் பகுப்பிடல் - பகுப்பு
  5. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/அட்டவணை நிரப்பி தொகுதி - அட்டவணை
  6. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/அட்டவணை நிரப்பி பக்கங்கள் - அட்டவணை (stackoverflow)
  7. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/முழுப்பக்கத்துப்புரவு
  8. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/மேலடி நடுவில் எண் மட்டும்
  9. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/கீழடி நடுவில் எண் மட்டும்
  10. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/நடுப்பகுதி மட்டும்
  11. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/அகரமுதலிச்சொற்கள்தடிமனாக்கம்
  12. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/இருபக்கங்களில் பிரிந்த சொல்லிணைப்பு
    • அனைவருக்குமான நிரல்கள் - குறிப்பிட்ட பக்கங்களுக்கு மட்டும்
  13. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/பொருளடக்கத்துப்புரவு
  14. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/பகுதிக்குறியீடுகள்
  15. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/நூற்த்துணைப்பக்க உருவாக்கல்
  16. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/அட்டவணையின் பகுப்புகள்
  17. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/anchor வார்ப்புரு இடல்
    • உயர் அணுக்க நிரல்கள் - குறிப்பிட்ட பங்களிப்பாளர்கள் மட்டும் (sysop)
  18. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/தலைப்பைநகர்த்தல்
  19. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/தலைப்பைநகர்த்தலின் பக்கங்கள்
    • அனைவருக்குமான API நிரல்கள் - குறிப்பிட்டப் பக்கங்களுக்கு மட்டும்
      • API கொண்டு நமக்குத்தேவையான இலக்கினை முடித்தல் எளிது. ஆனால், அதற்கு json குறித்த கற்றல் அவசியம். கற்றல் வளம்
  20. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/API/பகுப்புப் பக்கங்களை எடுத்தல் - பகுப்பு
    • நூற்தொகுப்பு உதவி நிரல்கள் - வரிசையெண்களைக் கொடுத்து, நூற்தொகுப்பின் துணைப்பக்கங்களை உருவாக்குதல் எளிது.
  21. விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/பொருளடக்கமில்லா நூலின் துணைபக்கங்களை உருவாக்குதல்