மீடியாவிக்கி பேச்சு:Sidebar

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • @Balajijagadesh:விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்|நாட்டுடைமை நூல்கள் என்பதை,

விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்/அந்நூல்களின் விவரப்பட்டியல்|நாட்டுடைமை நூல்கள் என்று மாற்றக்கோருகிறேன். -- உழவன் (உரை) 05:10, 28 ஆகத்து 2016 (UTC)

Yes check.svgY ஆயிற்று -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:14, 28 ஆகத்து 2016 (UTC)
  • @Balajijagadesh: இந்த வசதியை மீளமைக்கக்கோருகிறேன். ஏனெனில், எந்த ஒரு விக்கிமூலப்பக்கத்தில் இருந்தும், பிற திட்டங்களுக்கு போகும் வசதியைத் தடுக்கிறது. @Arularasan. G:, நான் போன்றவர்கள் இங்குள்ள பக்கமொன்றின் தரவை அவ்வப்போது, பிற தமிழ் திட்டங்களுக்கு ஊட்டம் செய்வதை எளிமை யாக்கும். இல்லையெனில்,ஒவ்வொரு முறையும் முதற்பக்கம் சென்று பிறகு, அங்கு இருந்து உரிய தமிழ் திட்டங்களுக்குசெல்வது அலுப்பாக இருக்கிறது.மற்றொன்று விக்கிப்பீடியாவில் சமூக ஒப்புதலுக்கு பிறகே,இங்கும் பிற தமிழ் விக்கித்திட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டது. எனவே,மீளமைக்கவும்.-- உழவன் (உரை) 04:54, 22 சூன் 2019 (UTC)
@Info-farmer:அதனைச் செய்தால் முதல் பக்கத்தில் இரண்டு முறை பிற திட்டங்களுக்கான இணைப்பு வருகிறது. ஒரே மாதிரி வருவதற்கு எப்படி செய்வது? -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 07:35, 22 சூன் 2019 (UTC)
விக்கிமீடியாவின் பிறத் திடங்களான, விக்னசரி, விக்கி மேற்கோள் போன்றவற்றில் இந்த வசதி உள்ளது. ஆனால் விக்கிமூலத்தில் மட்டும் இந்த வசதி இல்லாதது குறிப்பாக இணைய இணைப்பு மெதுவாக உள்ளபோது இவ்வாறு செய்ய நீண்ட காலதாமதம் ஏற்படுகிறது. விக்கிமூலத்தில் உள்ள நூல்களை அடிப்படையாக கொண்டு விக்கிபீடியா, விக்கிமேற்கோள் ஆகிய திட்டங்களில் பங்களிக்கும்போது இது மிகுந்த சிரமத்தை உண்டாக்குகிறது.--அருளரசன் (பேச்சு) 11:38, 22 சூன் 2019 (UTC)
விக்கிமீடியாவின் பிறத் திடங்களான, விக்னசரி, விக்கி மேற்கோள் போன்றவற்றில் இந்த வசதி உள்ளது. ஆனால் விக்கிமூலத்தில் மட்டும் இந்த வசதி இல்லாதது குறிப்பாக இணைய இணைப்பு மெதுவாக உள்ளபோது இவ்வாறு செய்ய நீண்ட காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இணைப்பு தரும்போது எளிமையாக இருக்குமெனக் கருதுகிறேன். --அருண்குமார் முனுசாமி (பேச்சு) 06:58, 15 சூலை 2019 (UTC)
Yes check.svgY ஆயிற்று. ஆனாலும் //முதல் பக்கத்தில் இரண்டு முறை பிற திட்டங்களுக்கான இணைப்பு வருகிறது.// இந்த பிரச்சனை இன்னும் தீரவில்லை. இதனால் முதல் பக்கத்தில் இரண்டு முறை வருவதால் குழப்பம் ஏற்படுகிறது. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 07:18, 15 சூலை 2019

(UTC)

இந்த மாற்றங்களைப் பாருங்கள். விக்கிமூலத்தில் நாம் நூல்களைப் படிக்கும் போது, அதில் மட்டுமே வேகம் இருக்கும். உரிய மாற்றத்தை பிற தமிழ் திட்டங்களில் ஏற்படுத்த அந்த வசதி மிகவும் உறுதுணையாக இருக்கும். முதற்பக்கத்தில் இருமுறை வந்தமை எனக்கும் உறுத்தலாகத்தான் இருந்தது. ஆனால் மற்ற பக்கங்களில் ஒருமுறை கூட முன்பு இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு விக்கிமுதற்பக்கத்திலும் அடிப்பக்கத்தில் பிற திட்டங்களுக்கான இணைப்பு உள்ளது. எனினும், இதனை ஏன் இடப்பக்கம் மேல் விக்கியர் இணைத்தர் என்று புரியவில்லை. இருப்பினும் இதனை களைய நீச்சல்காரன், செயபிராகசிடம் கேட்டுப் பார்க்கிறேன். மற்றொன்று அனைத்து தமிழ் விக்கியரிடமும் இதனை கொண்டு செல்லலாம். பிறரின் கருத்தறிந்து மாற்ற முயற்சி எடுக்கிறேன்.-- உழவன் (உரை) 14:56, 15 சூலை 2019 (UTC)

அண்மையில் இடப்பக்கப் பட்டையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து.[தொகு]

அண்மையில் இடப்பக்கப் பட்டையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ளது.

  1. ஆங்கில விக்கிப்பீடியாவில் random page என்று உள்ளதை தமிழ் விக்கிப்பீடியாவில் 'ஏதாவது ஒரு பக்கம்' என்று இருக்கும். அதுவே தமிழ் விக்கிமூலத்தில் 'ஏதாவது ஒரு படைப்பு' என்று இருக்கும். அது 'ஒரு படைப்பு காட்டு' என்று மாற்றப்பட்டுள்ளது. இது சரியாக பெயர்ப்பு இல்லை என்று தோன்றுகிறது.
  2. ஏதாவது ஒரு அட்டவணைக்கு செல்லும் இணைப்பை 'அட்டவணைக்குச் செல்' என்று மாற்றப்பட்டுள்ளது சரியான மாற்றமாகத் தெரியவில்லை. ஏதாவது ஒரு என்பது போன்று இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
  3. wikidata விற்கு தமிழில் அனைத்து விக்கி இடங்களிலும் விக்கித்தரவு என்று குறிப்பிடும் பொழுது இங்கு மட்டும் 'விக்கித்தரவுகள்' என்று மாற்றுவது சரியாகத் தெரியவில்லை. இம்மாற்றத்திற்கு விரிவான தமிழ்ச் சழூக ஒப்புதல் தேவைப்படும்.
  4. கணியம் அறக்கட்டளையின் கணியம் திட்டம், வள்ளுவர் வள்ளலார் வட்டதின் நிகண்டியம் திட்டம், (நாட்டுமை நூல்கள் கூட) போன்ற திட்டப் பக்கங்களை இடப்பக்க கருவிப்பட்டையில் இணைப்பது சரியான வழிமுறை என்று தோன்றவில்லை. இவ்வாறு ஒவ்வொரு விக்கிமீடிய அறக்கட்டளைக்கு தொடர்பில்லாத அறக்கட்டளை அல்லது குழுக்களின் திட்டப்பணிகளை இடப்பக்கதில் இணைப்பது சரியாது அல்ல என்று தோன்றுகிறது. சில பலருக்கு இந்த இணைப்பு உபயோகமாக இருந்தாலும் இதனால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் வரும். வணிக நோக்கு இல்லாத (பெயர், புகழ் அல்லது வேறு காரணங்களுக்காக), வணிக நோக்கு இருக்கும் குழுக்களும் தங்களது திட்டப்பக்கங்களை இடப்பக்கக் கருவிப்பட்டையில் இணைக்கக் கோரலாம். அதனால் விக்கிமீடிய அறக்கட்டளைக்கு தொடர்பில்லாத குழுக்களின் திட்டத்திற்கு இணைப்பு தருவது சரியான நடைமுறை ஆகாது. அதனால் இந்த இணைப்புகளைப் பயன்படுத்துவோர் தங்களது உலவியில் நூல்குறி செய்து பயன்படுத்துவது சரியாக முறையாக இருக்கும் என்று கருதுகிறேன். அதனால் இந்த மாற்றங்கள் திருத்தப்பட வேண்டும் என்று கருதுகிறேன். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 16:32, 24 சூன் 2020 (UTC)
இவ்வுரையாடலைத் தொடங்கியமைக்கு நன்றி. எனக்கும் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ளது. பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உங்களது முன்மொழிவுகளை, மாற்றம்-1, மாற்றம்-2 என வரிசையாகத் தாருங்கள் ஒவ்வொன்றாக, இச்சமூகத்தினர் எண்ணங்களைப் பெறலாம். --Info-farmer (பேச்சு) 07:49, 26 சூன் 2020 (UTC)


விக்கியின் பொது வடிவத்தை பேணுதலே நல்லது. அதில் மாற்றங்கள் தேவையெனில் ஆலமரத்தடியில் உரையாடி முடிவெடுத்து, பின் மாற்றங்கள் செய்ய வேண்டும். சமீபத்திய மாற்றங்களில், மாற்றுக் கருத்துகள் உள்ளதால், பழைய வடிவையே முதலில் மீட்டெடுக்க வேண்டுகிறேன். புது மாற்றங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆலமரத்தடியில் எழுதி, விக்கிமூ சமூக கருத்துகளைப் பெற்று பின் அதற்கேற்ப மாறுதல்கள் செய்ய வேண்டுகிறேன். Tshrinivasan (பேச்சு) 14:29, 28 சூன் 2020 (UTC)