விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இணையத்தில் தமிழார்வம் கொண்ட தன்னார்வலர்கள் பலர் சேர்ந்து தமிழ் அகராதிகளைத் தொகுத்து மின்னுருவாக்கம் செய்யும் நிகண்டியம் என்ற ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பொருட்டு, பொதுவகத்திலுள்ள தமிழ் அகராதிகளை மெய்ப்புப் பார்த்து, மின்னூலாக்கம் செய்ய முதற்திட்டமாக முடிவுசெய்யப்பட்டுள்ளது. வள்ளுவர் வள்ளலார் வட்டம் நிகண்டியம் பணியை கையில் எடுக்கும் முன் தமிழ் விக்சனரியில் இருக்கும் தமிழின் சொற்களின் எண்ணிக்கை 3,49,474. அயல்மொழி விக்சனரிகளின் சொற்களின் எண்ணிக்கையில் ஒப்பீட்டுப் பட்டியலில் தமிழ் 19 ஆவது இடம். ஆங்கிலம், மலகாஸி, பிரஞ்சு, ரஷியன், செர்போ-குரோசியம், ஸ்பானிஷ், சீன, ஜெர்மன், குர்திஷ், டச்சு, ஸ்வீடிஷ், போலிஷ், லிதுவேனியன், கிரேக்கம், இத்தாலிய, காடலான், பின்னிஷ், ஹங்கேரியன் மொழிகள் சொற்களின் எண்ணிக்கை நமக்கு முன் இருக்கிறது.

முன்னுரை[தொகு]

ஆங்கில சொற்களுக்கு தமிழ் சொற்களை பலர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள், நூலாக வெளியிட்டு உள்ளார்கள், புத்தகமாக வெளியிட்டாலோ அல்லது இணையத்தில் அகராதியாக வெளியிட்டாலோ கணினி அதனை கற்றுக் கொள்ளாது. அதை (Artificial Intelligence) செயற்கை நுண்ணறிவுக்கு கற்றுத்தர வேண்டுமென்ற முனைப்பில் கணினிக்கு கற்பிப்போம் தமிழை என்ற முழக்கத்தை முன்வைத்து சிறிய முன்னெடுப்புகளை எடுத்து வந்தோம். அவை அனைத்தும் நீண்டகால செயல்பாடுகள் என்ற குழப்பத்திலிருந்தபோது, முனைவர் தமிழ்ப்பரிதி மாரி எங்களுக்கு 40 லட்சம் தமிழ் சொற்களை கணினி மயமாகும் திட்டம் இருப்பதாகக் கூறினார். அதனை முதன்மைப்படுத்தி செய்தால் நமது இலக்கை அடைந்துவிடலாம் என்ற நோக்கத்தில் அவருடன் இந்த பணியை சேர்ந்து செய்ய நாங்கள் முன்வந்துள்ளோம். முதல்கட்டமாக படைப்பாக்கப் பொதும உரிமையின்கீழ் அறிவிக்கப்பட்டிருக்கும் (சிறிய அளவில் காப்புரிமை உள்ள) அகராதிகளை தேடுபொறி வசதியுடன் மின்னாக்கம் செய்து அதனை பொதும உரிமையின்கீழ் அறிவித்து அனைத்துத் தமிழர்களுக்கும் பொதுவுடமையாக்குதல். அடுத்த திட்டமாகக் கணினி நுண்ணறிவைப் பயன்படுத்தும் விக்கி, கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் தமிழைக் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஒருங்கிணைப்பு[தொகு]

இந்த முன்னெடுப்பை வள்ளுவர் வள்ளலார் வாசகர் வட்டம் என்ற குழுவினர் செய்துவருகின்றனர். குறிப்பாக, இத்திட்டம் தொடர்பான பரப்புரைகளும், வழிகாட்டல்களும் செய்து புதியவர்களையும் ஊக்குவிக்கிறார்கள். பயனர் இங்கர்சால், நார்வே உடன் தமிழ் விக்கிமீடியப் பங்களிப்பாளர்களான முனைவர் தமிழ்ப்பரிதி மாரி மற்றும் நீச்சல்காரன் போன்றோர் ஒருங்கிணைக்கிறார்கள்.

தமிழ் பல்கலைக்கழகத்தின் கலைச்சொல் நூல்கள்[தொகு]

தமிழ்ப்பல்கலைக்கழகம் பின்வரும் கலைச்சொல் நூல்களை வெளியிட்டுள்ளது. அவை, இயந்திரவியல் இயந்திரப் பொறியியல் கலைச்சொற்கள், இயற்பியல், வேதியியல், கணிதவியல் கலைச்சொற்கள் இரும்புத் தொழில் கலைச்சொல்லகராதி, உயிரியல் கலைச்சொல் விளக்க அகராதி, சமூகவியல் மற்றும் மானிடவியல் கலைச்சொல்லகராதி, தொழில் கலைச்சொல் அகராதி, பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள், மருத்துவக் கலைச்சொற்கள், மின்னணு-மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி, மின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச்சொற்கள், வேளாண்மையியல் மண்ணியல் கலைச்சொற்கள் என்னும் இந்த நூல்கள் எதுவும் இன்னமும் இணையத்தில் தேடுபொறி வசதியுடன் மின்னாக்கம் செய்யப்பெறாமல் அச்சு நூல் வடிவத்தில் மட்டுமே உள்ளன. இந்த நூல்களில் காணப்பெறும் தமிழின் வேர்ச்சொல் அடிப்படையிலான சொல்லாக்கங்கள் இணையத்தில் தரவேற்றம் செய்யப்பெற வேண்டும்.

செயல்திட்டம்[தொகு]

விக்கிமூலத்தில் கீழ்க்கண்ட நூல்களை முதலில் மெய்ப்புப் பார்த்து முழுமையான நூலாக விக்கி மூலத்தில் உருவாக்குதல். அதனைக் கொண்டு அகராதிச் சொற்களைத் திரட்டி விக்சனரி மற்றும் இதர பயன்பாட்டிற்கு ஒத்திசைவான கோப்பாக வெளியிடுதல். போன்றவை இதன் செயல் திட்டங்களாகும்.

மெய்ப்புப்பணி முடிந்தது[தொகு]

மெய்ப்புப்பணி நடந்து கொண்டிருக்கிறது[தொகு]

மெய்ப்புப்பணி விரைவில் தொடங்கப்படும்[தொகு]

மாணவர்கள் தத்தெடுத்து இருக்கும் அகராதிகள்[தொகு]

கீழ்க்கண்ட மருத்துவ அகராதிகளை தாங்களே கணினி மயமாக்கி தருவதாக அரவிந்த் தலைமையில் ஒரு மாணவர் குழு உறுதியளித்துள்ளது.

1 - மருத்துவ களஞ்சியப் பேரகராதி, மணவை முஸ்தபா

2 - மருத்துவ கலைச்சொல் களஞ்சியம், மணவை முஸ்தபா

3 - தமிழ் மருத்துவ பேரகராதி, டி. வி. சாம்பசிவம் பிள்ளை

4 - Tamil - English Dictionary of Medicine, Chemistry, Botany and Allied Sciences : Vol.1, சாம்பசிவம் பிள்ளை

5 - Tamil - English Dictionary of Medicine, Chemistry, Botany and Allied Sciences : Vol.2, சாம்பசிவம் பிள்ளை

6 - Tamil - English Dictionary of Medicine, Chemistry, Botany and Allied Sciences : Vol.3, சாம்பசிவம் பிள்ளை

7 - Tamil - English Dictionary of Medicine, Chemistry, Botany and Allied Sciences : Vol.4, சாம்பசிவம் பிள்ளை

8 - Tamil - English Dictionary of Medicine, Chemistry, Botany and Allied Sciences : Vol.5, சாம்பசிவம் பிள்ளை

எழுத்துணரியாக்கம் OCR செய்யப்படாதவை[தொகு]

எழுத்துணரியாக்கம் செய்யப்படாத நூல்கள். எழுதாக்கம் (OCR) செய்து கொள்ள இந்தக் கருவியைப் பொருத்திக் கொண்டு செய்யலாம்.

பங்களிப்பவர்கள்[தொகு]

இத்திட்டத்தின் கீழ் தன்னார்வமாகப் பங்களிப்பவர்கள்

 1. இங்கர்சால், நார்வே
 2. முனைவர் தமிழ்ப்பரிதி மாரி, தமிழ்நாடு
 3. நீச்சல்காரன், தமிழகம்
 4. முகமது இக்பால், தமிழகம்
 5. சுதாகர் சாம்பமூர்த்தி ராவ்
 6. அமிர்தராஜ்‎
 7. கவின்கோ
 8. கிரேசு பிரதிபா
 9. கதிர்காமச்செல்வன் மனோகரன்
 10. சுப்பிரமணிய சிவா
 11. கலைசெந்தில்
 12. வினோத் தங்கவேல்
 13. வள்ளிமயில்
 14. கணபதீசுவரன், சென்னை
 15. பாண்டியன்
 16. பரணிதரன் சேகர்
 17. கருப்புமனோ
 18. ஜெயந்தி
 19. பூவேந்திரன்
 20. ராஜேஷ்
 21. இளவரசன்.த
 22. சித்தாட்ரீம்ஸ்
 23. ஜெ.ஆரோக்கியம்
 24. வேங்கடரமணன் ஸ்ரீனிவாசன்
 25. நடராஜ் திருநாவுக்கரசு
 26. பாலாஜி ஜெயபால்
 27. சேகர் கருப்பன்
 28. ஆராவமுதன், சென்னை
 29. சதீசு
 30. தினேஷ்குமார்.ஜெ
 31. வாசுதேவன்.வ
 32. ராஜா சின்னத்தம்பி
 33. சக்தி மகேஸ்
 34. ரம்யா
 35. கரிகால்வளவன்
 36. கா. இரா. கீதா, கோவை
 37. மகேந்திரன் தங்கவேல்
 38. சக்தி சரவணன்
 39. சங்கரி,கோவை
 40. ராம்கிசோர்,திருநெல்வேலி
 41. பேகன் பாலகிருஷ்ணன், பிரான்சு
 42. வைரமயில்.ச, சுவீடன்
 43. தஞ்சைத்தமிழன்
 44. பா.கண்ணன்
 45. மகேந்திரன் தங்கவேல், ஈரோடு
 46. சக்தி சரவணன், பெங்களூரு
 47. பாண்டி குமார்
 48. அறிவுச்செல்வன், ஜெர்சி சிட்டி
 49. பரிதி, தாரமங்கலம்
 50. சங்கரி, கோவை
 51. கன்னிமுத்து பூ, மைசூரு

தொடர்பிற்கு[தொகு]

இத்திட்டம் தொடர்பாகக் கூடுதல் தகவலுக்கும் குழுவில் இணைவதற்கும் Valluvar.Vallalar.Vattam@gmail.com, வாட்சப் +4796700193, https://valluvarvallalarvattam.com/ முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

செய்திகள்[தொகு]

https://m.dinamani.com/article/editorial-articles/an-opportunity-for-tamil-people/A2019-3285270

http://www.paasam.com/detail/95.html