1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சீவகசிந்தாமணிக் காப்பியம்[தொகு]

1. நாமகள் இலம்பகம்- பாடல்: 151-175.[தொகு]

(இவ்வுருவு)[தொகு]

இவ்வுருவு நெஞ்சென்னுங் கிழியின்மே லிருந்திலக்கித்இவ் உருவு நெஞ்சு என்னும் கிழியின் மேல் இருந்து இலக்கித்து
தவ்வுருவு நினைப்பென்னுந் துகிலிகையால் வருத்தித்துக்அவ் உருவு நினைப்பு என்னும் துகிலிகையால் வருத்தித்துக்
கவ்வியத னோக்கினாற் கண்விடுத்துக் காதனீர்கவ்வியதன் நோக்கினால் கண்விடுத்துக் காதல் நீர்
செவ்விதிற் றெளித்தானாக் காமப்பூச் சிதறினான். (151)செவ்விதின் தெளித்து ஆனாக் காமப்பூச் சிதறினான். (151) ( )

(மெய்பெறா)[தொகு]

மெய்பெறா வெழுத்துயிர்க்கு மழலைவா யின்முறுவற்மெய் பெறா எழுத்து உயிர்க்கும் மழலை வாய் இன் முறுவல்
றையலா ணெடுந்தடங்கண் வலைப்பட்டுச் சச்சந்ததையலாள் நெடும் தடம் கண் வலைப்பட்டுச் சச்சந்தன்
னையுறா னணங்கெனவே யகத்தடக்கிச் செல்கின்றான்ஐயுறான் அணங்கு எனவே அகத்து அடக்கிச் செல்கின்றான்
மொய்யறாக் களியானை முழங்கித்தே னிமிர்தாரான். (152)மொய் அறாக் களி யானை முழங்கித் தேன் இமிர் தாரான். (152)

(வேறு)


(வண்டின)[தொகு]

வண்டின முகபடா மணிந்து வார்மதவண்டு இனம் முகபடாம் அணிந்து வார் மதம்
முண்டுகுத் திடுகளிற் றுழவன் றன்மகள்உண்டு உகுத்திடு களிற்று உழவன் தன் மகள்
பெண்டிர்தம் பெருநலங் கடந்து பெற்றபேர்பெண்டிர் தம் பெரு நலம் கடந்து பெற்ற பேர்
விண்டலர் கோதைக்கு விசயை யென்பவே. (153) விண்டு அலர் கோதைக்கு விசயை என்பவே. (153)

(அருமணி)[தொகு]

அருமணி மரகதத் தங்க ணாறியஅரு மணி மரகதத்து அங்கண் நாறிய
வெரிநிறப் பொன்னித ழேந்து தாமரைத்எரி நிறப் பொன் இதழ் ஏந்து தாமரைத்
திருமக ளிவளெனத் திலக வெண்குடைப்திருமகள் இவள் எனத் திலக வெண் குடை
பெருமகன் கோயிலுட் பேதை வைகுமே. (154)பெருமகன் கோயிலுள் பேதை வைகுமே. (154) ( )

(கலம்புரி)[தொகு]

கலம்புரி யகலல்குற் றாயர் தவ்வையர்கலம் புரி அகல் அல்குல் தாயர் தவ்வையர்
சிலம்புரி திருந்தடி பரவச் செல்பவள்சிலம்பு புரி திருந்து அடி பரவச் செல்பவள்
வலம்புரி சலஞ்சலம் வளைஇய தொத்தனள்வலம்புரி சலஞ்சலம் வளைஇயது ஒத்தனள்
குலம்புரிந் தனையதோர் கொடியி னீர்மையாள். (155) குலம் புரிந்து அனையது ஓர் கொடியின் நீர்மையாள். (155)

(இன்னகிற்)[தொகு]

இன்னகிற் கொழும்புகை யுயிர்க்கு மீர்ங்குழல் இன் அகில் கொழும் புகை உயிர்க்கும் ஈர்ங் குழல்
மென்மலர்க் கோதைதன் முலைகள் வீங்கலின் மென் மலர்க் கோதை தன் முலைகள் வீங்கலின்
மின்னுருக் குறுமிடை மெலிய மெல்லவேமின் உருக்கு உறும் இடை மெலிய மெல்லவே
கன்னிதன் திருநலங் கனிந்த தென்பவே. (156)கன்னி தன் திரு நலம் கனிந்தது என்பவே. (156)

(முந்துநாங்)[தொகு]

முந்துநாங் கூறிய மூரித் தானையக்முந்து நாம் கூறிய மூரித் தானை அக்
கந்துகொல் கடாக்களி யானை மன்னவன்கந்து கொல் கடாக் களி யானை மன்னவன்
பைந்தொடிப் பாசிழைப் பரவை யேந்தல்குற்பைந் தொடிப் பாசிழைப் பரவை ஏந்து அல்குல்
றந்தைமாட் டிசைத்தனன் றனது மாற்றமே. (157)தந்தை மாட்டு இசைத்தனன் தனது மாற்றமே. (157)

(மருமகன்)[தொகு]

மருமகன் வலந்தது மங்கை யாக்கமு மருமகன் வலந்தது மங்கை ஆக்கமும்
மருமதிச் சூழ்ச்சியி னமைச்ச ரெண்ணியஅரு மதிச் சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய
கருமமுங் கண்டவர் கலத்தற் பான்மையிற்கருமமும் கண்டு அவர் கலத்தல் பான்மையின்
பெருமகற் சேர்த்தினார் பிணைய னாளையே. (158)பெருமகன் சேர்த்தினார் பிணை அனாளையே. (158)

(வேறு)

(பொனங்கொடி)[தொகு]

பொனங்கொடி யமிர்த னாளும் பொன்னெடுங் குன்ற னானுபொனம் கொடி அமிர்து அனாளும் பொன் நெடும் குன்று அனானும்
மனங்கனுக் கிலக்க மாகி யம்புகொண் டழுத்த விள்ளார்அனங்கனுக்கு இலக்கம் ஆகி அம்பு கொண்டு அழுத்த விள்ளார்
ரினந்தமக் கெங்கு மில்லா ரியைந்தன ரென்ப முக்கட்இனம் தமக்கு எங்கும் இல்லார் இயைந்தனர் என்ப முக்கண்
சினந்திகழ் விடையி னானுஞ் செல்வியுஞ் சேர்ந்த தொத்தே. (159)சினம் திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்தது ஒத்தே. (15( ( )

(காதலாற்)[தொகு]

காதலாற் காம பூமிக் கதிரொளி யவரு மொத்தார்காதலால் காம பூமிக் கதிர் ஒளி அவரும் ஒத்தார்
மாதருங் களிற னானு மாசுண மகிழ்ச்சி மன்றல் மாதரும் களிறு அனானும் மாசுணம் மகிழ்ச்சி மன்றல்
லாதரம் பெருகு கின்ற வன்பினா லன்ன மொத்துந்ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தார்
தீதிலார் திளைப்பி னாமான் செல்வமே பெரிது மொத்தார். (160)தீது இலார் திளைப்பின் ஆமான் செல்வமே பெரிதும் ஒத்தார். (160) ( )

(தன்னமர்)[தொகு]

தன்னமர் காத லானுந் தையலு மணந்த போழ்திற்தன் அமர் காதலானும் தையலும் மணந்த போழ்தில்
பொன்னனா ளமிர்த மாகப் புகழ்வெய்யோன் பருகி யிட்டான்பொன் அனாள் அமிர்தம் ஆகப் புகழ் வெய்யோன் பருகி இட்டான்
மின்னவிர் பூணி னானை வேற்கணார்க் கியற்றப் பட்டமின் அவிர் பூணினானை வேல் கணார்க்கு இயற்றப் பட்ட
மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகி யிட்டாள். (161)மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகி இட்டாள். (161)

(பவழவாய்)[தொகு]

பவழவாய் பரவை யல்கு லென்றிவை பருகும் வேலான்பவழ வாய் பரவை அல்குல் என்று இவை பருகும் வேலான்
கவழமார் களிறு போன்றான் காதலி கரும்பை யொத்தாகவழம் ஆர் களிறு போன்றான் காதலி கரும்பை ஒத்தாள்
டவழ்மதுக் கோதை மாதர் தாமரைப் பூவ தாகதவழ் மதுக் கோதை மாதர் தாமரைப் பூவது ஆக
வுமிழ்நகை வேலி னானு மொண்சிறை மணிவண் டொத்தான். (162)உமிழ் நகை வேலினானும் ஒள் சிறை மணி வண்டு ஒத்தான். (162)

(பளிக்கறை)[தொகு]

பளிக்கறைப் பவழப் பாவை பரிசெனத் திகழுஞ் சாயற்பளிக்கு அறைப் பவழப் பாவை பரிசு எனத் திகழும் சாயல்
களிக்கயற் பொருவ போன்று கடைசிவந் தகன்ற கண்ணாகளிக் கயல் பொருவ போன்று கடை சிவந்து அகன்ற கண்ணாள்
ளொளிக்கவின் கொண்ட காமத் தூழுறு கனியை யொத்தாஒளிக் கவின் கொண்ட காமத்து ஊழ் உறு கனியை ஒத்தாள்
ளளித்தயில் கின்ற வேந்த னஞ்சிறைப் பறவை யொத்தான். (163)அளித்து அயில்கின்ற வேந்தன் அம் சிறைப் பறவை ஒத்தான். (163)


(வேறு)

(துறுமலர்ப்)[தொகு]

துறுமலர்ப் பிணையலுஞ் சூட்டுஞ் சுண்ணமுநறு மலர்ப் பிணையலும் சூட்டும் சுண்ணமும்
நறுமலர்க் கண்ணியு நாறு சாந்தமுநறு மலர்க் கண்ணியும் நாறு சாந்தமும்
மறுநிலத் தமிர்தமு மகிலு நாவியும்அறு நிலத்து அமிர்தமும் அகிலும் நாவியும்
பெறுநிலம் பிணித்திடப் பெரியர் வைகினார். (164)பெறுநிலம் பிணித்திடப் பெரியர் வைகினார். ( 164)

(துடித்தலை)[தொகு]

துடித்தலைக் கருங்குழற் சுரும்புண் கோதைததுடி தலைக் கரும் குழல் சுரும்பு உண் கோதை தன்
னடித்தலைச் சிலம்பினோ டரவ மேகலைஅடி தலைச் சிலம்பினோடு அரவம் மேகலை
வடித்தலைக் கண்மலர் வளர்த்த நோக்கமோவடித் தலைக் கண் மலர் வளர்த்த நோக்கமொடு
டடுத்துலப் பரிதவ ரூறி லின்பமே. (165)அடுத்து உலப்பு அரிது அவர் ஊறு இல் இன்பமே. (165)

(இழைகிள)[தொகு]

இழைகிள ரிளமுலை யெழுது நுண்ணிடைத்இழை கிளர் இள முலை எழுது நுண் இடைத்
தழைவளர் மதுமலர் தயங்கு பூஞ்சிகைக்தழை வளர் மது மலர் தயங்கு பூ சிகைக்
குழைமுகக் கொடியொடு குருதி வேலினான்குழை முகம் கொடியொடு குருதி வேலினான்
மழைமுகின் மாரியின் வைகு மென்பவே. (166) மழை முகில் மாரியின் வைகும் என்பவே. (166)

(படுதிரைப்)[தொகு]

படுதிரைப் பவழவா யமுத மாந்தியுங்படு திரைப் பவழம் வாய் அமுதம் மாந்தியும்
கொடிவளர் குவிமுலைத் தடத்துள் வைகியுகொடி வளர் குவி முலைத் தடத்துள் வைகியும்
மிடியினுங் கொடியினு மயங்கி யாவதுங்இடியினும் கொடியினும் மயங்கி யாவதும்
கடிமணக் கிழமையோர் கடலின் மிக்கதே. (167)கடி மணக் கிழமை ஓர் கடலின் மிக்கதே. (167)

(கப்புரப்)[தொகு]

கப்புரப் பசுந்திரை கதிர்செய் மாமணிச்கப்புரப் பசும் திரை கதிர் செய் மா மணிச்
செப்பொடு சிலதிய ரேந்தத் தீவியசெப்பொடு சிலதியர் ஏந்தத் தீவிய
துப்புமிழ்ந் தலமருங் காம வல்லியுதுப்பு உமிழ்ந்து அலமரும் காம வல்லியும்
மொப்பரும் பாவைபோன் றுறையு மென்பவே. (168)ஒப்பு அரும் பாவை போன்று உறையும் என்பவே. (168)

(மண்ணகங்)[தொகு]

மண்ணகங் காவலின் வழுக்கி மன்னவன்மண் அகம் காவலின் வழுக்கி மன்னவன்
பெண்ணருங் கலத்தொடு பிணைந்த பேரருள்பெண் அரும் கலத்தொடு பிணைந்த பேர் அருள்
விண்ணக மிருள்கொள விளங்கு வெண்மதிவிண் அகம் இருள் கொள விளங்கு வெண் மதி
யொண்ணிற வுரோணியோ டொளித்த தொத்ததே. (169)ஒள் நிற உரோணியோடு ஒளித்தது ஒத்ததே. (169)

(வேறு)

(குங்குமத்)[தொகு]

குங்குமத் தோளி னானுங் கொழுங்கயற் கண்ணி னாளுந்குங்குமத் தோளினானும் கொழும் கயல் கண்ணினாளும்
தங்கிய காதல் வெள்ளந் தணப்பறப் பருகு நாளுட்தங்கிய காதல் வெள்ளம் தணப்பு அறப் பருகு நாளுள்
டிங்கள்வெண் குடையி னாற்குத் திருவிழுக் குற்ற வண்ணம்திங்கள் வெண் குடையினாற்குத் திரு இழுக்கு உற்ற வண்ணம்
பைங்கதிர் மதியிற் றெள்ளிப் பகர்ந்தெடுத் துரைத்து மன்றே. (170)பைம் கதிர் மதியின் தெள்ளிப் பகர்ந்து எடுத்து உரைத்தும் அன்றே. (170)

(களிறனா)[தொகு]

களிறனா னமைச்சர் தம்முட் கட்டியங் கார னென்பாகளிறு அனான் அமைச்சர் தம்முள் கட்டியங்காரன் என்பான்
னொளிறுவாட் டடக்கை யானுக் குயிரென வொழுகு நாளுட்ஒளிறு வாள் தடக்கையானுக்கு உயிர் என ஒழுகு நாளுள்
பிளிறுவார் முரசிற் சாற்றிப் பெருஞ்சிறப் பியற்றி வேந்தன்பிளிறு வார் முரசின் சாற்றிப் பெரும் சிறப்பு இயற்றி வேந்தன்
வெளிறிலாக் கேள்வி யானை வேறுகொண் டிருந்து சொன்னான். (171)வெளிறு இலாக் கேள்வியானை வேறு கொண்டு இருந்து சொன்னான். (171)

(அசைவிலாப்)[தொகு]

அசைவிலாப் புரவி வெள்ளத் தரிஞ்சயன் குலத்துட் டோன்றிஅசைவு இலாப் புரவி வெள்ளத்து அரிஞ்சயன் குலத்துள் தோன்றி
வசையிலாள் வரத்தின் வந்தாள் வான்சுவை யமிர்த மன்னாள்வசை இலாள் வரத்தின் வந்தாள் வான் சுவை அமிர்தம் அன்னாள்
விசையையைப் பிரித லாற்றேன் வேந்தனீ யாகி வையவிசையையைப் பிரிதல் ஆற்றென் வேந்தன் நீ ஆகி வையம்
மிசைபடக் காத்தல் வேண்டு மிலங்குபூண் மார்ப வென்றான். (172)இசைபடக் காத்தல் வேண்டும் இலங்கு பூண் மார்ப என்றான். (172)

(அண்ணறா)[தொகு]

அண்ணறா னுரைப்பக் கேட்டே யடுகளிற் றெருத்தி னிட்டஅண்ணல் தான் உரைப்பக் கேட்டே அடு களிற்று எருத்தின் இட்ட
வண்ணப்பூந் தவிசு தன்னை ஞமலிமே லிட்ட தொக்குங்வண்ணப் பூந் தவிசு தன்னை ஞமலி மேல் இட்டது ஒக்கும்
கண்ணகன் ஞாலங் காத்த லெனக்கெனக் கமழுங் கண்ணிகண் அகல் ஞாலம் காத்தல் எனக்கு எனக் கமழும் கண்ணி
மண்ணகம் வளருந் தோளான் மறுத்துநீ மொழிய லென்றான். (173)மண் அகம் வளரும் தோளான் மறுத்து நீ மொழியல் என்றான். (173)

(எழுதரு)[தொகு]

எழுதரு பருதி மார்ப னிற்றென விசைத்த லோடுந்எழுத அரு பருதி மார்பன் இற்று என இசைத்தலோடும்
தொழுதடி பணிந்து சொல்லுந் துன்னலர்த் தொலைத்த வேலோய்தொழுது அடி பணிந்து சொல்லும் துன்னலர்த் தொலைத்த வேலோய்
கழிபெருங் காத லாள்கட் கழிநலம் பெறுக வையம்கழி பெரும் காதலாள் கண் கழி நலம் பெறுக வையம்
பழிபடா வகையிற் காக்கும் படுநுகம் பூண்ப லென்றான். (174)பழி படா வகையில் காக்கும் படு நுகம் பூண்பல் என்றான். (174)

(வலம்புரி)[தொகு]

வலம்புரி பொறித்த வண்கை மதவலி விடுப்ப வேகிக்வலம்புரி பொறித்த வண் கை மதவலி விடுப்ப ஏகிக்
கலந்தனன் சேனை காவல் கட்டியங் கார னென்னகலந்தனன் சேனை காவல் கட்டியங்காரன் என்ன
வுலந்தரு தோளினாய்நீ யொருவன்மேற் கொற்றம் வைப்பிஉலம் தரு தோளினாய் நீ ஒருவன் மேல் கொற்றம் வைப்பின்
னிலந்திரு நீங்கு மென்றோர் நிமித்திக னெறியிற் சொன்னான். (175)நிலம் திரு நீங்கும் என்று ஓர் நிமித்திகன் நெறியின் சொன்னான். (175)பார்க்க[தொகு]

சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125
1. நாமகள் இலம்பகம்- பாடல் 126-150
1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175
1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200
1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225
1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250
1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275
1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300
1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325
1. நாமகள் இலம்பகம்- பாடல் 325-350
1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375
1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-400


1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225
1. நாமகள் இலம்பகம்- பாடல் 225-250
1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275
1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300
1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325
1. நாமகள் இலம்பகம்- பாடல் 325-350
1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375
1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-400