அட்டவணை பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
நூலில் இங்கு இப்போது பக்கங்கள் சேர்ப்பு & நீக்கல் சார்ப்பு

//அச்சு நூலின் அமைப்பு வடிவம் வந்தவழி கண்டுகொள்க.// நூல் பக்கங்களின் உரையாடல் பகுதியில் தொடர்ச்சியான விளக்கங்களைச் சேர்த்தல் சரியா?. நூலின் பக்கங்களுக்கு கூடுதல் விளக்கம், உரை, திரைவடிவக் குறிப்புகள் ஆகியவற்றை விக்கி துணைத்திட்டப் பக்கங்களில் உருவாக்குதல் நலம் பயக்கும். விக்கிமூலப் பகுதியான இதில், நூலினை பல்வேறு மாற்று ஊடக வடிவ அமைப்பில் வழங்கும்பொருட்டு, மெய்ப்பு பார்த்து வழங்க அனைத்து விக்கி பயனரும் முயற்சித்து வருகிறோம். எனவே நோக்கம் சிதையாதவாறு அச்சுப்பக்க உரையாடல் பகுதியில் / துணைப் பக்க உருவாக்கங்களைத் தவிர்க்க வேண்டுகிறோம்.
பக்க வடிவமைப்பில் உள்ள மாற்ற இயலா கருத்து/ முரண்/ திருத்தங்களைக் குறிப்பிடுவது போதுமானது.
கட்டுரை, இன்னபிற விளக்கக் குறிப்பினைச் சேர்த்து உருவாக்குவது நூலாசிரியருக்கு, அச்சு நூலுக்கு ஏற்புடையதல்ல. அதனை தனி நூலாக உருவாக்கலாம்.

--TVA ARUN (பேச்சு) 05:42, 18 பெப்ரவரி 2023 (UTC)



மின்வருடா பக்கங்கள்[தொகு]

அச்சு பக்க எண் 297 298 மின்வருடப்படவில்லை. -- Balajijagadesh (பேச்சு) 13:27, 26 செப்டம்பர் 2019 (UTC)

தீர்வு இரு பக்கங்களும் படியெடுத்து, துப்புரவு செய்யப்பட்டு, பொதுவகத்தில் அணியமாக உள்ளது. காண்க--தகவலுழவன் (பேச்சு). 15:00, 6 மே 2022 (UTC)[பதிலளி]

மேலடியில் பக்க எண் பிழை[தொகு]

பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/315 இந்த பக்கத்தில் இருந்து மேலடி இடப்பட வேண்டும். இதற்கு முன் இருக்கும் பக்கங்களில் மேலடி சரியாக உள்ளது. ஆனால் சில பக்கங்களுக்கு மேலடி நீக்க வேண்டும். மேற்கூறிய இணைப்பு பக்கத்திற்கு பிறகுள்ள பக்கங்களில் மேலடி எண்ணில் இரண்டினை குறைக்க வேண்டும். தகவலுழவன் (பேச்சு). 15:38, 5 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

மெய்ப்பு[தொகு]

நூல் அச்சுப் பக்க எண்.774 முதல் 802 வரை மெய்ப்பு மற்றும் வடிவமைப்பு தனியே நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. எனவே இப்பக்கங்களை மட்டும் (மனித உழைப்பை மிச்சப்படுத்தும் வகையில்) பிறர் மெய்ப்பு பார்க்க வேண்டாம்.--TVA ARUN (பேச்சு) 06:46, 8 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

new page text[தொகு]

from 346 (இரண்டு பக்க இணைப்பிற்கு பிறகு - பக்க எண்கள் மாறியதால் பழைய பக்கத் தரவுகளை மாற்றி புதிய தரவுகள் இடல் நலம்.)--TVA ARUN (பேச்சு) 07:36, 16 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

408 முதல் 789 வரையிலான பக்கங்கள்-தா.எ.உ---TVA ARUN (பேச்சு) 07:41, 16 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
அனைத்துப் பக்கங்களும் சரி செய்யப்பட்டன. 560ம் பக்கம் பக்கம் விடுபட்டுள்ளது. அதற்குப் பகரமாக 561ம் பக்கம் இரு முறை வருடப் பட்டுள்ளது. சரி செய்யவும்.
மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 18:10, 2 சனவரி 2023 (UTC)[பதிலளி]

இந்நூல் குறித்த என் சிந்தனைகள்[தொகு]

இந்நூல் குறித்த மிகுந்த சுவாரசியமான ஒரு கட்டுரையை இங்கு காணலாம்.

இந்நூலை மெய்ப்புப் பார்க்கும்போது எனக்குள் எழுந்த சிந்தனைகளை இங்கு பகிர்கின்றேன். இச்சிந்தனை மேலும் தொடரலாம். As I go along, I may add further thoughts on this book.

திறம்பட ஆய்வு செய்து எழுதப் பட்ட நூல். எனினும் அச்சு வடிவில் போதிய கவனம் செலுத்தப் படவில்லை. இம்மாதிரியான ஆய்வு நூற்களில், தலைப்புகளின் கீழ் தரப்படும் செய்திகள் ஒரே ஒழுங்கில் வடிவுறுத்தப்பட வேண்டும். The matter presented under each heading should maintain uniformity.

உதாரணத்திற்கு, தாவரங்கள் குறித்த அட்டவணை பொதுவாக அனைத்துத் தலைப்புகளிலும் கீழ்க்கண்டவற்றைக் கொண்டுள்ளது.

சங்க இலக்கியப் பெயர் {இதுதான் முக்கிய வகைப்பாடு. இந்த "சங்க இலக்கியப் பெயர்" தாவரங்கள் குறித்த அனைத்துத் தலைப்புகளின் கீழ் வரும் தகவல்களுக்கும் அடி நாதமாக இழையோடுவது. அனைத்துத் தாவரங்களிலும் வர வேண்டியது. ஆனால், பக்கம் 159ல் எந்த வகையான வகைப்பாடும் இடம் பெறவில்லை.}.
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்.
பிற்கால இலக்கியப் பெயர்.
உலக வழக்குப் பெயர்.
ஆங்கிலப் பெயர்.
மேற்கண்ட நான்கும் சில தலைப்புகளில் மட்டுமே காணப் பெறுகின்றன. .
தாவரப் பெயர் {இந்த வகைப்பாடு பொதுவாக அனைத்துத் தலைப்புகளிலும் வந்தாலும், பக்கம் 169ல் தாவரவியற் பெயர் என உரு மாறியுள்ளது.
தாவரக் குடும்பம் இந்த வகைப்பாடு பக்கம் 159 போன்ற சில பக்கங்களில் மட்டுமே காணக் கிடைக்கின்றது..

மேற்கோள் செய்யுள்களை அளித்துள்ள விதத்திலும் சீரான தன்மை [uniformity] காணப்படவில்லை. பல இடங்களில் தடித்த எழுத்துகளிலும், சில இடங்களில் பனுவலுக்கு நடுவே தடித்த எழுத்துகளிலும், சில இடங்களில் செய்யுள்களில் வரும் தலைப்புக்குரிய வார்த்தை மட்டும் தடித்த எழுத்திலும், சில இடங்களில் செய்யுளே சாதாரண வார்த்தைகளிலும் காட்சி அளிக்கின்றன.

தலைப்பு

இலக்கியம்

என அமைத்துள்ளனர். பெரும்பாலான இடங்களில் இதற்கு அடிக் கோடு இடப்படவில்லை. சில இடங்களில் அடிக்கோடு இடப்பட்டுள்ளது.

"தாவரங்களின் அட்டவணை"யில் செவ்வல்லி என்ற தலைப்பு விடுபட்டுள்ளது. இந்தத் தாவரம் ஆம்பல் என்ற தலைப்புக்கும் குவளை-செங்கழுநீர் என்ற தலைப்புக்கும் இடையில் வர வேண்டியது.

தாவரம் குறித்த கட்டுரையின் தலைப்பாக தாவரத்தின் சங்க காலப் பெயர், அதன் தாவர இயல் பெயர் தமிழிலும் ஆங்கிலத்திலும் என மூன்று குறிப்புகள் தரப்படுகின்றன. இவை சில கட்டுரைகளில் மூன்று வரிகளிலும், சிலவற்றில் இரண்டு வரிகளிலும் தரப் பட்டுள்ளன. இதிலும் ஒரே சீரான தன்மை காணப்படவில்லை. இது ஏன் என்று புலனாகவில்லை.

மேற்கோள் நூல்களைக் குறிப்பிடும் விதத்திலும் ஓர் ஒழுங்கின்மை தென்படுகிறது. பெரும்பாலான இடங்களில் செய்யுளின் முடிவில் "-" இடப்பட்டு, அதே வரியில் தரப்படுகிறது. சில இடங்களில் செய்யுள் முடிந்தபின், அடுத்த வரியில், "-" இடப்பட்டு, தரப்படுகிறது. சில இடங்களில் அடைப்புக் குறிக்குள் தரப்படுகிறது.

ஓர் ஆய்வு நூலை அச்சில் இடும்போது காட்டப்பட வேண்டிய அக்கறை, மெய்ப்புப் பார்த்தலில் கவனம் ஆகியவை போதிய முறையில் இல்லையோ என்றே ஐயுற வேண்டியுள்ளது.

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 20:00, 2 சனவரி 2023 (UTC)

  • மிக விரிவான, ஆழ்ந்த, மேன்மை மிகு, மறுஆக்கத்திற்கான எண்ணங்களை வெளியிட்டமைக்கு நன்றி. இதழியல் துறை ஆய்வு மாணவர்களுக்கு நீங்கள் கூறிய நுணுக்கங்கள் மிகவும் உதவும். ஆனால், இலக்கியம் சார்ந்து படிப்பவர்களுக்கு, நீங்கள் கூறுவது போல சிறப்பாக உருவாக்கப்பட்டால் மிக எளிமையாக அமைந்து, ஆழ்ந்த புலமையை படிப்பவர் மனதில் உருவாக்கும். இந்நூல் மட்டுமல்ல பல நூல்களை நான் வாசிக்கும் போது, இத்தகைய எண்ணங்களை என் மனதில் தோன்றும். பொதுவாக நான் எண்ணுவது என்னவென்றால், படைப்பு என்பதும், படைப்பாளர் வாழ்வும் ஒரு முழுமையை நோக்கிய பயணம்.. ஆனால் அது பலவித மனஅழுத்தங்களுக்கு இடையேதான் (பொருளாதார, பிறரின் இடராலும், ஊக்கத்தாலும்) உருவாக்கப்படுகிறது என்றே எண்ணுகிறேன். எனவே, அதன் தாக்கம் எந்நூலிலும் தெரிகிறது. விக்கிமூலத்தில் உள்ளதை காப்போம். விக்கிநூல்கள் திட்டத்தினை உங்களது உயரிய எண்ணங்களைக் கொண்டு, உருவாக்க முயற்சிப்போம் என்பதே எனது வேண்டுகோள். பொதுவாக ஒரு நூலினை வாசிக்கும் போது, விக்கிக்கு வெளியும் நான் தேடுவதுண்டு. நூறாண்டுக்கு முன் ஒரு நூல், தமிழில் தடைசெய்யப்பட்டது என அறிந்தேன். தமிழில் முதன்முதலாக தடைசெய்யப்பட்ட மொழிபெயர்ப்பு இது எனக் கருதப்படுகிறது. ஏன் தடைசெய்தார்கள்? என்பதை அறிய அந்நூலினை மறுஉருவாக்கம் பிறர் உதவியால் செய்துள்ளேன். காண்க:அட்டவணை பேச்சு:நான் நாத்திகன் ஏன்?.pdf எனவே, நீங்கள் கூறிய படி இந்நூலினை மறு ஆக்கம் செய்வோம். பொதுவகத்தில் இருக்கும் படங்களோடு இதனை உருவாக்கினால் இன்னும் சிறப்பாக இருக்குமென்றே எண்ணுகிறேன். முதலில் இங்கு உள்ளதை உருவாக்கி முடிப்போம். அது பின்னாளில், நீங்கள் கூறிய படி மேம்பட்ட படைப்பினை விக்கிநூல்கள் திட்டத்தில் உருவாக்க அடித்தளமாக அமையும். இதனை முடித்து அதனை தொடங்க விரும்புகிறேன். நானும் அந்த ஆக்கத்தில் உங்களுக்கு உதவ விரும்புகிறேன். --தகவலுழவன் (பேச்சு). 01:51, 3 சனவரி 2023 (UTC)[பதிலளி]
நான் குறிப்பிட்டுள்ள மிகுந்த சுவாரசியமான கட்டுரையில் இருந்தும், மற்றும் இணையத்தில் கிடைத்த பல குறிப்புகளில் இருந்தும் இது மிக அரிதான நூல் என்றும், இதன் அச்சுப் பதிப்பு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் [பதிப்பாளர்கள்] கூடக் கிடைப்பதில்லை என்றும் தெரிகிறது. இதன் ஆக்கம் குறித்த கருத்து எதுவும் நான் கூறவில்லை. என் ஆதங்கம் எல்லாம் இத்தகைய அரிய நூலை அச்சிட்டவர்கள் (சென்னை பாஷைப்படி) சொதப்பி இருக்கிறார்கள் என்பதே.
மெய்ப்புப் பார்த்தவர்களும், இந்நூலின் தனித்துவத்தைக் கருத்தில் கொண்டு முனைப்புடன் செயல் பட்டிருக்க வேண்டும்.
இலக்கிய நோக்கில் கூட மேற்கோள்கள் காட்டும் போது, ஒருமித்த வடிவில் இருந்தால்தான் [uniformity] சிறக்கும். மேற்கோளாகக் காட்டும் ஒரே நூலையே அதே பக்கத்திலேயே வெவ்வேறு விதமாகக் குறித்தலை எவ்வாறு ஏற்றுக் கொள்ள இயலும்? எடுத்துக்காட்டாக:
கபிலர், “பகன்றை பலாசம் பல்பூம்பிண்டி” (குறி. 88)
என்று பக்கத்தின் ஆரம்பத்திலும்
“பகன்றை பலாசம் பல்பூம்பிண்டி” -குறிஞ். 88
என்று பக்கத்தின் இறுதியிலும், குறிஞ்சிப்பாட்டின் குறுக்கமாக குறி. என்றும் குறிஞ். என்றும் வெவ்வேறு விதமாகக் குறிப்பிடுவது இலக்கிய ஆர்வலர்களிடமும் அயர்வையே ஏற்படுத்தும். TI Buhari (பேச்சு) 07:20, 5 சனவரி 2023 (UTC)[பதிலளி]

விடுபட்ட பக்கம்[தொகு]

பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/574 இந்த பக்கத்தினை அடுத்து ஒரு பக்கம் விடுபட்டுள்ளதாகத் தெரிகிறது மீண்டும் ஒருமுறை நூலகத்தில் சரிபார்க்க வேண்டும். அது 4 மாதங்களுக்கு முன் நூலகத்தில், வெற்று பக்கம் என, கண்டறிந்ததாகவே எண்ணுகிறேன. தகவலுழவன் (பேச்சு). 11:46, 4 சனவரி 2023 (UTC)[பதிலளி]

தாங்கள் பக்கம்:சங்க_இலக்கியத்_தாவரங்கள்.pdf/574 குறிப்பிட்டுள்ள பக்கத்தின் முடிவில் வாக்கியம் முழுமை பெறவில்லை (பக்க முடிவில் வாக்கியம்: பன்றியைக் கொன்றதனாலுள்ள ஆரவாரம் ஒருபால், வேங்கை). வாக்கியம் முற்றுப் பெற்றதற்கான முற்றுப் புள்ளியும் இல்லை. எனவே வாக்கியம் அடுத்த பக்கமான பக்கம்:சங்க_இலக்கியத்_தாவரங்கள்.pdf/575ல் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் அடுத்த பக்கத்தில் தாவரத்தின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. எனவே, அதற்கும் அடுத்த பக்கமான பக்கம்:சங்க_இலக்கியத்_தாவரங்கள்.pdf/576ல் வாக்கியம் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால், அப்பக்கத்தில் [இது தவறான பக்கம். 560க்குப் பதிலாக 561ம் பக்கம் இருமுறை இடம் பெற்றுள்ளது.] அடுத்த பத்தி ஆரம்பம் ஆகிறது [பத்தி ஆரம்பம்: குறிஞ்சியின் தண்டு கருமை. வலிமையுமாம்]. எனவே 560ம் பக்கம் வெற்றுப் பக்கமாக இருக்க முடியாது. TI Buhari (பேச்சு) 07:31, 5 சனவரி 2023 (UTC)[பதிலளி]
ஆம். அச்சுப்பக்கயெண் 560 இல்லை--தகவலுழவன் (பேச்சு). 12:05, 27 சனவரி 2023 (UTC)[பதிலளி]
@Balajijagadesh, TI Buhari, TVA ARUN, Info-farmer: அச்சுப் புத்தகத்தின் பக்க எண்கள் 525 மற்றும் 560 ஆகியவற்றைப் பொதுவகத்தில் ஏற்றியுள்ளேன்.-இரா. பாலாபேச்சு 04:10, 31 சனவரி 2023 (UTC)[பதிலளி]
சிரமம் எடுத்து, இப்பக்கங்களைப் பதிவேற்றியமைக்கு நன்றி. மேலும், டாக்டர் ந. சஞ்சீவி அவர்களின் உணர்வின் எல்லை என்ற நூலில் இப்பக்கத்தில் அச்சு சரியாகப் பதியவில்லை. சரியான முறையில் அச்சான இப்பக்கம் கிடைத்தால் நூல் முழுமையடையும். TI Buhari (பேச்சு) 09:34, 31 சனவரி 2023 (UTC)[பதிலளி]

────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────

(சான்று)தகவலுழவன் (பேச்சு). 02:56, 1 பெப்ரவரி 2023 (UTC) @Balurbala:! நன்றி, பாலா! எனது வேண்டுகோளை உடன் செய்து முடித்தமைக்கு நன்றி. இப்பக்கங்களை யாரிடம் இருந்து பெற்றுத் தந்தீர்கள் என அறிய விரும்புகிறேன். அப்படி நீங்கள் கூறும் போதே, இதற்கு ஆகும் காலத்தினை பிறர் அறிய முடியும். விடுபட்ட பக்கங்களை இணைப்பது மிக எளிமையான செயல் அல்ல. அதவும் ஒரு கூட்டுபணி என்பதனை பிறர் உணர்வர்.--தகவலுழவன் (பேச்சு). 02:56, 1 பெப்ரவரி 2023 (UTC)

@Info-farmer 12 வருடங்களுக்கு முன்னர் (2010 ஜூலை 7) எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இப்புத்தகத்தின் முக்கியத்துவத்தினையும் பற்றி எழுதியிருந்தார். அப்போது அவருடன் தொலைபேசியில் உரையாடியபோது இப்புத்தகத்தின் அச்சுப்பதிப்பு அவரிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். சமீபத்திய ஆனைக்கட்டி கூடுகையில் நீங்கள் இப்புத்தகத்தில் 525 ஆம் பக்கம் தெளிவில்லாமல் இருப்பதையும் 560 ஆம் பக்கம் மின்வருடாமல் இருப்பதையும் கூறியிருந்தீர்கள். எனவே திரு நாஞ்சில் நாடனைத் தொடர்பு கொண்டு விவரத்தினை விளக்கிக் கூறி ஆவன செய்ய வேண்டினேன். அதனடிப்படையில் இவ்விரு பக்கங்களும் கிடைத்தன. நிச்சயமாக இது ஒரு கூட்டுப்பணி என்பதில் ஐயமில்லை. உதவிய நாஞ்சில் நாடனுக்கும் நன்றிகள் பல.-இரா. பாலாபேச்சு 03:32, 1 பெப்ரவரி 2023 (UTC)
மேலுள்ள முயற்சிகளால் இந்த விடுபட்ட பக்கம் தனியே பொதுவகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. File:Sanga Ilakkiya Thavarangal 560.jpg பக்கம்:Sanga Ilakkiya Thavarangal 560.jpg என்பதனை மெயப்பு கண்டுர இந்நூலின் பக்க ஒருங்கிணைவு(transclusion) செய்யும் பொழுது மறவாமல் நுட்பமாக தொகுக்க வேண்டும் தகவலுழவன் (பேச்சு). 02:29, 2 பெப்ரவரி 2023 (UTC)
மேற்கூறிய 560 வது பக்கம், சிலவரிகள் எழுத்துணரியாக்கம் சரியாக வரவில்லை. எனினும், முழுமையாக எழுத்துப்பிழைகள் களையப்பட்டு, விக்கிமூல வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலுழவன் (பேச்சு). 03:03, 2 பெப்ரவரி 2023 (UTC)

தெளிவு அற்ற பக்கம்[தொகு]

தீர்வு File:Sanga Ilakkiya Thavarangal 525.jpg என்ற பக்கத்தினை துணைக்கொண்டு மேற்குறிப்பிட்ட பக்கத்தினை மேம்படுத்தியுள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு). 02:45, 1 பெப்ரவரி 2023 (UTC)

தாவரங்கள் குறித்த இந்த அரிய நூலை மெய்ப்பு பார்ப்பவர்களின் மேலான கவனத்திற்கு[தொகு]

தாவரங்களின் அறிவியல் பெயரை ஆங்கிலத்தில் குறிப்பிட[தொகு]

தாவரங்களின் அறிவியல் பெயரை ஆங்கிலத்தில் குறிப்பிடும் போது இருசொல் பெயரிடல் முறையை உபயோகிப்பர். இந்த முழுப் பெயரையும் ஆங்கிலத்தில் சாய்வெழுத்திலேயே எழுத வேண்டும் என்பதும், முதற்பெயரின் ஆரம்ப எழுத்து Capital எழுத்திலும் அடுத்த வார்த்தையின் ஆரம்ப எழுத்து small எழுத்திலும் மட்டுமே எழுதப்படல் வேண்டும் என்பதும் உலகளாவிய விதி. என் குடும்பத்தில் Botanists இருப்பதால், இவ்விதி குறித்து நான் அறிவேன்.

கீழ் வருபவற்றையும் அவதானிக்கவும்:

The binomial name consists of a genus name and specific epithet. The scientific names of species are italicized. The genus name is always capitalized and is written first; the specific epithet follows the genus name and is not capitalized. There is no exception to this.

These codes are universal and are periodically updated by consensus. The protocol for naming species was invented in the 1700s by Swedish botanist Carl Linnaeus.

Plant names also follow binomial nomenclature (similar to animal names).

Example:

  • Royal grevillea (Grevillea victoriae) is found in New South Wales and Victoria.

காண்க: How to write Scientific names of Plants

Grevillea victoriae என்பதில் G என்பது Capital எழுத்திலும் v என்பது small எழுத்திலும் எழுதப்பட்டு இருப்பதையும், மொத்தப் பெயருமே சாய்வெழுத்தில் எழுதப்பட்டு இருப்பதையும் அவதானிக்கவும்.

இதே கருத்து இந்நூலிலும் வலியுறுத்தப் பட்டுள்ளதை இங்கு காணலாம்.

ஔ மற்றும் அது புணர்ந்த உயிர்மெய் எழுத்துகள்[தொகு]

தமிழில் ஔவையார் என்பதில் பயின்று வரும் என்பதை ஒரே எழுத்தாகவும் எழுதலாம். அல்லது ஒ மற்றும் ள வைச் சேர்த்தும் வை வடிவுறுத்தலாம். ஆனால் ஓரெழுத்துதான் சரியான முறை. மெய்ப்புப் பார்ப்பவர் இதைக் கவனத்தில் கொள்ளவும்.

ஓரெழுத்தாக உள்ளதா அல்லது ஈரெழுத்தாக உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது? தொகுக்கும் போது நிலைகாட்டியை அந்த எழுத்தின் வலப்புறம் இருந்து இடப்புறமாக நகர்த்தினால், ஓரெழுத்தாக இருந்தால் ஒருமுறையும், ஈரெழுத்தாக இருந்தால் இருமுறையும் நகரும். இந்த ஔவையார் என்ற வார்த்தை தவிர இந்நூலில் கௌசிகனார், மௌவல் போன்ற பல வார்த்தைகள் பரவலாக வருகின்றன.

கௌ, மௌ போன்றவை ஓரெழுத்து. இவற்றை கெ, ள அல்லது மெ, ள ஆகிய ஈரெழுத்துகளால் அமைத்தல் கூடாது.

TI Buhari (பேச்சு) 08:37, 5 சனவரி 2023 (UTC)[பதிலளி]

நன்றி. பிறருக்கும் அறியப்படுத்துகிறேன். தகவலுழவன் (பேச்சு). 09:59, 5 சனவரி 2023 (UTC)[பதிலளி]

சில எழுத்துகளின் மாற்று உரு[தொகு]

கீழ்க் கண்ட எழுத்துகளில் கவனம் தேவை.

“றுா னுா துா” ஆகியவற்றின் சரியான உரு “றூ னூ தூ” ஆகும். மெய்ப்புப் பார்க்கும் பயனர்கள் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 13:35, 22 பிப்ரவரி 2023 (UTC)