மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 05
Appearance
< மனோன்மணீயம் | அங்கம் 04
மனோன்மணீயம்
[தொகு]அங்கம் நான்கு
[தொகு]ஐந்தாம் களம்
[தொகு]- இடம்: அரண்மனையில் ஒருசார்.
- காலம்: மாலை.
(சீவகனும் சுந்தரமுனிவரும் மந்திராலோசனை.)
நேரிசை ஆசிரியப்பா-01
அருஞ்சொற்பொருள்
மயிலை.சீனி.வேங்கடசாமி
|
அடிகள்:01-52
[தொகு]- கிளையுடன் கெடுமே கிளர்காற் றதனில்!
- களைகுவர், களைகிலர் காழ்பெறும் தருக்கள்.
- சேணுயர் தேக்கு திசையெறி சூறையில், (5)
- ஆணிவே ருடனெழுந் ததிர்ந்தசைந் திறினும்
- பேணுவர் அதனைப் பெரியோர்! யாரே
- காணுவர் காழறு நாணமில் நாணலை?
- ஓருயிர்ப் பேனும் உண்டேல், அடிகாள்!
- போரிடைப் போக்குவன்; புகழெனக் கதுவே! (10)
- அரியது செய்வதே ஆண்மையும் புகழும்!
- அரிதுயிர் தரித்தலோ மரித்தலோ அறைதி!
- வேட்டையா ரோட்டிட வெருவு தீக்குருவி
- நீட்டிய தன்சிர நீள்மணற் புதைத்துத் (15)
- தனதுகண் காணாத் தன்மையாற் பிறரும்
- தனதுடல் காணார் எனநினை வதுபோல்
- என்னையிம் மயக்கம் மன்னவ! உனக்கும்!
- சிறுபசி தாங்காச் சிறுமியர் பற்பலர்;
- அறவழி இதுவென அறியாக் கயவர்; (20)
- பிறர்பொருள் வௌவியும் பிறவுயிர் கவர்ந்தும்
- அலையும் தீமையர் அநேகர், அகப்படின்
- மலைவற மரணமும் வெருவார் மான,
- கலக்கமொன் றின்றிக் கழுவே றிடுதல்
- புலப்படக் கண்டுளாய் இலக்கமின் முறையே, (25)
- துரத்திடும் துயர்க்கணம் வருத்திடும் காலை
- மரித்தலோ அவையெலாம் சகித்தலோ தகுதி?
- தன்னுயிர் ஈவர் தக்கோர் சார்ந்த
- மன்னுயிர் காத்திடு மார்க்கமற் றஃதேல்.
- வார்கடல் முகட்டில், மாநிதி வழிஞர் (30)
- ஆர்கலன் அலையெறி புயல்கால் ஆதியாற்
- சேர்திசை திரிந்து தயங்குமேல், மீகான்
- களமும் காலமும் கருதி தனக்குறு
- தளர்வுபா ராட்டுதல் தவிர்த்து, சாய்ந்து,மற்
- றெதிருறு காற்றிற் கிசைவுற வதிந்து (35)
- தன்றிசை செல்லத் தக்ககால் வரும்வரை
- சென்றொரு கரைசேர்ந் தொன்றுவ னல்லால்,
- உவப்புறு நிதிகெட உழையுளார் களும்பரி
- தவித்திட மரக்கலம் துறப்பனோ சாற்றாய்.
- தக்கோர் செயலெலாம் தமக்கா அலவே! (40)
- முக்கியம் புகழோ, தக்கவுன் கடமையோ?
- அதனால் சீவக! அகற்றந் நினைப்பு
- மதிகுலம் வந்த மதிவலோர் பலரும்
- செலாவழி நின்திமில் செலுத்தினை; தீங்காய்
- உலாவிய சுழல்காற் றோடொரு சுழியிடைப் (45)
- பட்டனை, நம்பிய பாய்மரம் பழுது.
- விட்டிடிக் கோட்டையாம் வெளிக்கட லோட்டம்
- மண்டிய பெருங்காற் றடங்கும் வரையும்
- அண்டையில் உளதோர் கைவழி அதனில்
- ஒண்டிநீ ஒதுங்கி உன்தொல் நகராம் (50)
- துவாத சாந்தத் துறைபோய்
- நிவாதமா நிலைபெற லேநெறி முறையே! (பா-1)
அடிகள்:53-100
[தொகு]நேரிசை ஆசிரியப்பா-02
- நன்கே. உன்றன் நயப்பிற் கென்செய!
- கழுமரக் கதையதைக் கண்டேன் இன்றே. (55)
- பழுதுபாய் மரமெனப் பகர்ந்ததும் உண்மை!
- வழுவெனக் கண்டது மாற்றினன் அநேக
- வந்தனம் வந்தனம்! ஆயினும் ஒருசொல்
- சிந்தையிற் சேர்த்தெனைத் தெருட்டிட வேண்டும்.
- வேற்றுமை உருவாய் விளங்கிய காலம் (60)
அருஞ்சொற்பொருள்
மயிலை.சீனி.வேங்கடசாமி
|
- காற்றினும் கடுகிய கடுநடை உடைய
- தன்றோ? அதிலகப் பட்டார் முந்திச்
- சென்றால் நின்றார்! சிறிதுசிந் தித்து
- நிற்பரேற் பெரிதும் பிற்பட் டொழிவர்.
- ஆதலால், அடிகாள்! பூதலத் துயர்ந்த (65)
- மேதையின் மிகுந்த மானிடர்க் கரசாய்
- வந்தவர் தந்தமக் குற்ற மதித்திறம்
- எட்டிய மட்டும் குற்றம் விடுத்துக்
- கால கதிக்கநு கூலமாய் நவீனச்
- சீர்பல திருத்தி ஓரியல் புதிதா (70)
- நாட்டித் தமது நாட்டுளோர் சுகம்பா
- ராட்டில ரேல்அவ ராண்ட நாட்கெல்லை
- காட்டுமோ கொடிய காலக் கரப்பே!
- இவ்வழி தனக்கெனத் துணிந்ததோர் இயல்பே
- அவ்வர சனுக்காம் யாக்கை. அஃதின் (75)
- அழிவே யவன தொழிவாம். அதனால்
- எல்லாம் அறிந்த இறைவ!இவ் விடத்தியான்
- பல்லா யிரநாட் பரிவுடன் உழைத்தே
- அமைத்தவிப் புரியும் சமைத்தவிவ் வரணும்
- நன்றே ஆயினும் ஆகுக, அன்றிப் (80)
- பொன்றினும் பொன்றுக. பொறித்தவென் அரசியல்
- மற்றவை தம்மொடு மாண்டிடும். மாண்டபின்
- அற்றதோர் கவந்தம் அமர்க்களத் தாடும்
- பெற்றிபோல் மூச்செறி பிணமா யானும்
- நடித்தலோ உன்திரு வடித்தா மரையைப் (85)
- பிடித்ததற் கழகாம் பேசாய் விடுத்தே!
- சுந்தரமுனிவர்
- எடுத்ததன் முயற்சி யாதே யாகுக
- முடித்திடு முன்ன ரடுத்ததன் மதியால்
- தீங்கெனத் தேர்ந்திடின் ஆங்கவற் றுட்பின்
- வாங்கலே யார்க்கும் ஆம்பணி யென்ப. (90)
- தீமைகை விடற்கு வேளைசிந் திப்போர்
- சேய்மை உனிமனை திரும்பார் ஒப்பர்.
- ஆதலால், சீவக! தீதென வருதற்
- கியாதோர் ஐயமும் இலைநீ தொடரியல்
- எனவின் றெய்தி யவற்றால் உனது
- மனத்திடை மயக்கற மதித்துளை ஆயின்,
- ஒழுங்கா விவையெலாம் ஒழித்தியான் குறித்த
- மருங்கே அணைந்து வாழலே கருமம்.
- வேறிலை தேறு மார்க்கம்
- கூறுதி அதனால் உன்மனக் கோளே. (100) (பா-2)
அடிகள்:101-163
[தொகு]நேரிசை ஆசிரியப்பா- 03. (101-123)
- ஐய!யான் உரைப்பதென்? அடுத்தவை இவையெலாம்
- கைவிடில் என்னுயிர் கழியும், அதனில்
- இன்றியான் பட்ட இகழ்ச்சி முழுதும்
- பொன்றிடப் பொருதுபின் பொன்றுதல் அன்றோ
- சிறப்பது செப்புதி! சிறியேன் ஒருசொல் (105)
- மறுத்தது பொறுத்தருள் மாதவக் கொழுந்தே!
அருஞ்சொற்பொருள்மயிலை.சீனி.வேங்கடசாமி
|
- சங்கரா! சற்றோ தாதான் மியபலம்!
- வெங்கரா பிடித்தவை விடினும் விடுமோ!
- நல்லது சீவக! நண்டெனும் புல்லிய
- அற்பமாம் சிற்றுயிர் அரியதன் உடலையும் (110)
- பிற்கிளைக் கிரையென வீந்தவை பேணல்
- கண்டும் புகழிற் கொண்டனை பிராந்தி
- இவ்வுயி ரியலுல கியற்கையென் றெண்ணினேன்.
- செவ்விதின் நின்னிலை தேர்ந்தபின் ஐயம்
- வருவது அதனால், மதிகுலம் வந்த (115)
- ஒருமலர் நின்னுழை உள்ளது, தமிழர்
- ஆவோர் யார்க்கும் அஃதுரித் தாம்நீ
- காவா யாகிற் காப்பதெம் கடனே.
- உதவி தமியேற் குளதுயர் இதுவே! (120)
- கண்மணி தனையெணிப் புண்படும் உள்ளம்.
- அருளுதி காக்கும் உபாயம்,
- இருணிறை இடுக்கணுக் கியைந்திடு மருந்தே. (பா-3)
நேரிசை ஆசிரியப்பா-04 (124-358)
- விட்டான் முதலையும், விரும்பிய திலகப் (125)
- பட்டாற் களிறும் பலமில ஆகி
- விடுமென அறிந்த கெடுவினை யாளர்
- தொடர்பினால், அவரிடு தூண்டிலிற் சிக்கி
- இடமது பெயர்ந்துழி, எடுத்தவெவ் வினைக்கும்
- கேடுமுன் கருதிக் கோடலே முறையெனும், (130)
- அறிவோர் மொழிய்யர்ந் திறுமாப் பகத்துட்
- கொண்டுநீ நின்றதைக் கண்டிக் கடிபுரி
- தொட்டென் உறையுள் மட்டுமோர் சுருங்கை
- அதிரக சியமாய் அமைத்துளேன். அவ்வழி,
- சதமென நம்புமிச் சாலி புரமும் (135)
- அதன்புறம் ஊன்றிய அடர்புலப் படையும்
- அறிந்திடா வகையவை கடந்துசென் றுன்னை
- மறந்திடா மாபதி அடைந்திடச் செயுமே.
- றாவதும் உளதோ? ஆஆ! அடிகாள்! (140)
- வழுதியர் பலர்பலர் வழிவழி காக்கும்
- முழுமதித் தொழுகுலத் தெய்வநீ போலும்.
- பழுதற நீயிவண் பகர்ந்ததோர் வழியிது
- திருத்திட எடுத்த வருத்தமெத் தகைத்தே!
- சொல்லிய சுருங்கை உனக்குமிவ் விடுக்கணில்
- உதவுமோ அன்றோ, உரைக்குதி விரைந்தே.
- கடிபுரி விடிலுயிர் நொடியுமிங் கிராது.
- பாண்டியர் குலமெனும் பாற்கடல் உதித்த (150)
- காண்டகு கன்னியை இவ்வழி உன்திரு
- உளப்படி கொடுபோய் அளித்தரு ளுதியேல்,
- இந்துவின் குலமெனும் முந்திய பெயர்போய்ச்
- சுந்தரன் குலமெனச் சந்ததம் வழங்கும்
- நீங்கா திதுகா றென்னுளம் நிறைந்த (155)
- தாங்காப் பெருஞ்சுமை தவிர்தலால், யானும்
- ஒருமனம் உடையனாய் மறலியும் வெருவ
- ஆற்றுவன் அரும்போர். அதனியை யமபுரம்
- ஏற்றுவன், எங்குலம் தூற்றிய சேரனை!
- வென்றிடின் மீளுவன், அன்றெனிற் பண்டே(160)
- அனையிலாத் தனையளுக் கம்மையும் அப்பனும்
- தயாநிதி! நின்றிருச் சரணமே என்ன
- வியாகுல மறவே விடுவனென் உயிரே.
அடிகள்: 164-229
[தொகு]- நடுநிசி நாமினி வருகுதும். கொடிய (165)
- கடிபுரிக் கனலிடைக் காய்ந்திடும் உன்றன்
- சிறுகொடி மறுவிடம் பெயர்த்துதும், சிறந்த
- அந்தமில் செழியரைத் தந்திட உரித்தே. (எழுந்து)
- கண்டிட ஆசையொன் றுண்டடி யேற்கு. (170)
- ஒருவர் ஒருபொருள் அறியில் இரகசியம்;
- இருவர் அறிந்திடிற் பரசியம் என்ப.
- கைக்கெட் டியதுதன் வாய்க்கெட் டுதற்குள்
- வந்துறும் அந்தமில் பிரதிபந் தங்களே. (175)
அருஞ்சொற்பொருள்மயிலை.சீனி.வேங்கடசாமி
|
- என்னே என்னே! இந்நாள் இயன்றவை!
- கொன்னே கழிந்தன் றோரிமை கொட்டும்.
- குகுநாள் மழையொடு மிகுகாற் றெறிந்த
- பரவையின் பாடெலாம் பட்டதென் உளமே. (180)
- இரவினில் வருபவை எவையெலாம் கொல்லோ?
- தாயே தாயே சார்வன சற்றும்
- ஆயேன், எங்ஙனம் பிரிந்துயிர் ஆற்றுவேன்?
- விடுக்குமா றெவனென் விளக்கே? உன்னைக்
- கெடுக்குமா றெவனிக் கிளர்ப்போ ரிடை?அது (185)
- தடுக்குமா றெவனினி? சமழ்ப்பற் றுடலம்
- பொறுக்குமா றெவன்?இப் பொல்லா வல்லுயிர்
- துறக்குமா றெவனுனைத் துணையற விடுத்தே?
- அந்தோ அந்தோ! என்றன் தலைவிதி!
- நாற்புற நெருப்புறின் நளியும் தனது (190)
- வாற்புற நஞ்சால் மாய்ந்திடும் என்ப.
- நரனலன் நரேந்திரன், நானது போற்சுதந்
- தரனலன் எனிலென் தலைவிதி கொடிதே!
- பிரிவென என்னுளம் கருதிடு முனமே
- பிரையுறு பாலென உறைவதென் உதிரம். (195)
- நாணா துன்முகம் காணுவ தெவ்விதம்?
- நடுநிசிப் பொழுது தொடுகற் படைவழி
- முனிவரன் பிறகுனைத் தனிவழி விடுத்திவண்
- தங்குவன் யானும்! தங்குவை நீயும்!
- இங்கதற் கிசையேன் இறக்கினும் நன்றே! (200)
- கற்படை இதுதான், எப்புறத் ததுவோ!
- உரைத்திலர் முனிவர் ஒளித்தனர், இஃதும்
- உளதோ? இலதோ? உணர்பவர் யாவர்?
- களவழி இதுமுனி கட்டற் பாற்றோ
- முனமே முனிவன் மொழிமணம் அன்றோ? (205)
- இனையவிப் போர்க்கெலாம் ஏதுவாய் நின்றது!
- கூடிய தன்றது! ஏஏ! குடிலனை
- ஓடியிங் கழையாய்! (சேவகன் வர)(சேவகன் போக)
- .... .... உண்மையெப் படியென
- நாடுமுன் வாடி நலிதல் என்பயன்?
- நம்புதல் எல்லாம் துன்பமே தருவது. (210)
- நம்பினோம் நாரா யணனை, அதற்கா
- வம்பே செய்தான் மாபா தகனவன்
- நட்பே நமக்கிங் குட்பகை யானது!
- முனிவரோ முதுநகர் விடுத்தநாள் முதலா
- மனத்திடைக் களங்கம் வைத்துளர், அஃதவர் (215)
- விளம்பிய மொழியே விளக்கிடும், நன்றாய்
- ஆரா யாமுனம் அனுப்புதல் தவறே.
- வாராய் குடில! மந்திரி உனக்கு
- நேர்தான் ஆரே! நிகழ்ந்தவை அறிவைகொல்?
- சுந்தர முனிவரோர் சுருங்கைதொட் டுளராம்; (220)
- நந்தமை அழைத்தனர் ஒளித்திட அவ்வழி;
- மறுத்திட, மனோன்மணி யேனுமங் கனுப்பென
- ஒறுத்தவர் வேண்டினர், உரியநம் குலமுனி
- ஆதலின் ஆமென இசைந்தோம்; அவ்வழி
- யாதென வினாயதற் கோதா தேகினர்; (225)
- பாதிரா வருவராம். பகர்ந்தவிக் கற்படை
- மெய்யோ பொய்யோ? மெய்யினில் எவ்வயின்
- உளதென உணர்தியோ? ஒழுங்குகொல், நமது
- இளவர சியையங் கனுப்புதல்?
அடிகள்: 229-280
[தொகு]- முன்னர்நாம் ஒருநாள் இன்னகர் காண (230)
- அழைத்தோம்! அந்நாள் யாதோ பூசை
- இழைத்திட வோரறை இரந்தனர்.
அருஞ்சொற்பொருள்மயிலை.சீனி.வேங்கடசாமி
|
- செவ்வே வடக்குத் தேம்பொழிற் கிப்புறம்
- மறுமுறி மணவறை. (235)
(தனதுள்)
- உறுவதங் கென்னென உணர்ந்தனை?
- செயத்தகு வினையல ஆதலில் திருவுளம்
- உணர்த்திலேன் முனிவர் ஓதிய திதுவே.
- இவ்வரண் முற்றும் இயற்றிய நமக்குச் (240)
- செவ்விதில் இதுவோ செய்தற் கரியது?
- சுந்தரர் நமையெலாம் புந்தியற் றவரென
- நொந்துதாம் உழைத்ததை நோக்கிடின் நகைப்பே!
- பண்டே கண்டுளோம். பாங்கோ அனுப்புதல்? (245)
- மல்லுயுத் தஞ்செய வல்லவர் யாரே?
- அனையினை ஒருபாற் சேமமாய் அனுப்பிய
- பினையிலை கவலையும் பீதியும் பிறவும்.
- உட்பகை வெளிப்பகை எப்பகை யாயினென்? (250)
- கவலையொன் றிலதேல் எவருனை வெல்வர்?
- ஆதலால் முனிவர் ஓதிய படியே
- அனுப்புதல் அவசியம் குணப்பிர தம்மே.
- ஆனால், அறியா அரசகன் னியர்கள்
- தேனார் தெரியல் சூடுமுன் இரவில் (255)
- தனிவழி யநியர்பால் தங்குதல்....?
- பைத்தியம் பழித்திடும், சத்தியம் உணராது.
- மனத்துள கவலை மாறுமோ? கவலை
- முன்னிலும் பன்னிரு பங்காய் முதிரும்.
- வதுவைக் கிதுவோ தருணம்?
- அடியேன் அறிவிப் பதுவுமிங் கதுவே! (265)
- கொடிதே நம்நிலை. குற்றமெப் புறமும்.
- அடிகள் அறைந்தவா றனுப்பா திருக்கில்
- உட்பகைச் சதியால் ஒருகால் வெற்றி
- தப்பிடின் நங்குலம் எப்படி ஆமோ?
- வைப்பிடம் எங்குபின்? எய்ப்பிடம் எங்கே? (270)
- திருமா முனிவரோ கருநா உடையர்,
- நம்பிய தலைவரோ வம்பினர், துரோகர்.
- இத்தனை பொழுதுமங் கெத்தனை கூச்சல்!
- எத்தனை கூட்டம்! எத்தனை குழப்பம்!
- முருகனும் நாரா யணனும் மொழிந்த (275)
- அருவருப் புரையிங் கறையேன். அவர்தாம்
- சேவகர் குழாங்களைத் திரட்டி யென்மேல்
- ஏவினர்; அதற்கவர் இசைந்திலர், பிழைத்தேன்!
- வேண்டினர் பின்னையும், தூண்டினர் உன்னெதிர்.
அடிகள்:281- 358.
[தொகு]- ஆயினும் தலைவர் நிலைமை இஃதே!
- வெல்லுவ தெலாநம் வீரமே அல்லால்
- இல்லை அவர்துணை என்பது தெளிவே.
- அல்லொடு பகல்போல் அல்லல்செய் கவலையும் (285)
- வீரமும் எங்ஙனம் சேருமோ அறியேன்.
- கவலைதீர் உபாயம் கருதில், நுவல்தரு
- கல்லறை நன்றே கடிமண முடியின்...
- கடிமண மதற்கோ, முடிபுனை மன்னர்
- வேண்டுமன் றன்றோ ஆண்டகை நினைத்துளை? (290)
- வருடக் கணக்காய் வேண்டுமற் றதற்கே,
- ஒருநலம் காணின் ஒருநலம் காணேம்
- ஏற்ற குணமெலாம் இருப்பினும் இதுபோல்
- மாற்றல னாய்விடின் மனோன்மணி யென்படும்?
- பிரிதலே அரிதாம் பெற்றியீர்! பிரிந்தபின் (295)
- பொருதலே ஆய்விடிற் பொறுப்பளோ தனியள்!
- பூருவ புண்ணியம் அன்றோ, மன்றல்
- நேருமுன் இங்ஙனம் நெறியிலான் துர்க்குணம்
- வெளியா யினதும்? எளிதோ இறைவ!
- வேந்தராப் பிறந்தோர்க் குனைப்போற் சாந்தமும் (300)
- பிறர்துயர் பேணும் பெருமையும் ஒழியா
- அறம்நிறை அகமும் அறிவும் அமைதல்.
- பாண்டமேல் மாற்றலாம் கொண்டபின்! என்செய!
- ஆண்டுகள் பழகியும் அறிகிலம் சிலரை.
- ஐயோ! இனிநாம் அந்நிய ராயின் (305)
- நன்றாய் உசாவியே நடத்துதல் வேண்டும்.
- அன்றேற் பெரும்பிழை!
- ஏதமே தோன்றுவ தென்னே இந்நிலை?
- உன்றன் குலத்திற் கூன்றுகோல் போன்று
- முடிமன் னவர்பலர் அடிதொழ நினது
- தோழமை பூண்டுநல் ஊழியம் இயற்றும்
- வீரமும் மேதையும் தீரமும் திறமும்
- குலமும் நலமும் குணமும் கொள்கையும்
- நிரம்பிய நெஞ்சுடைப் பரம்பரை யாளராய்
- நிற்பவர் தமக்குமற் றொப்பெவ் வரசர்?
- அற்பமோ ஐய!நின் அடிச்சே வகமே?
- அன்னவட் கிச்சை உன்னுடன் யாண்டும்
- இருப்பதே என்பதற் கென்தடை? அதற்கு
- விருத்தமாய் நீகொள் கருத்தினைச் சிந்தையிற்
- பேணியே கலுழுநள் போலும். பிறர்பால்
- நாணியிங்(கு) ஓதாள். வாணியேல் நவில்வள்.
- பலதே வன்தன் நலமவள் கண்டுளாள்?
- ஆர்வமோ டஃதோ மார்பிடைப் பட்டபுண்
- ‘மனோன்மணி மனோன்மணி’, எனுமந் திரத்தால்
- ஆற்றுவான் போலவே அவ்வறை யிருந்தவன்
- சாற்றலும் சற்றுமுன் சாடையாய்க் கேட்டேன்.
- ஆயினும் அரச! பேயுல கென்குணம்
- அறியா ததனால் வறிதே பலவும்
- சாற்றும், தன்னயம் கருதல்போற் பிறர்க்குத்
- தோற்றும். அதனால் தூற்றுவர். அதுவும்
- மாற்றலே மந்திரத் தலைவர்தம் மாட்சி.
- ஆதலின், இறைவ! அவைக்களத் தநேக...
- தனையைக் குரியது தந்தையே உணருவன்,
- இனையதே என்மகட் கிந்நிலைக் கேற்பதும்
- அரசனா யாய்கினும் சரியிம் முடிபு.
- மிகைதெரிந் தவற்றுள் மிக்கது கொளலெனும்
- தகைமையில் தகுவதும் இதுவே. அதனால், (345)
- குடிலா! மறுக்கலை.
- முன்னநாம் வைத்த முகூர்த்தம்?
- ஆவா எவ்வள வாறின தென்னுளம்! (350)
- ஓவா என்றுயர்க் குறுமருந் திதுவே!
- பிரிந்திடல் ஒன்றே பெருந்துயர்.
- இருந்திடல் எல்லாம் ஒருநாள். அதற்குள்
- வெல்லுதும் காண்டி! மீட்குதும் உடனே.
- ஒருமொழி மனோன்மணி உடன்கேட் டிஃதோ
- வருகுதும் அதற்குள் வதுவைக்
- கமைக்குதி அவ்வறை அமைச்ச ரேறே.
அடிகள் 359-385
[தொகு]ஆசிரியப்பா, 05.
- இப்படி நேருமென் றெண்ணினர் யாவர்? (360)
- முனிவரன் வந்ததும், நனிநலம் நமக்கே!
- மறுப்பளோ மனோன்மணி? சீசீ! மனதுள்
- வெறுப்புள ளேனும் விடுத்தவ ளொன்றும்
- மொழியாள். சம்மதக் குறியே மௌனம்.
- அழுவாள். அதுவும் பிரிவாற் றாமையே (365)
- ஆய்விடும். அரச னாய்விலா உளத்துள்
- நடுநிசி வருமுன் கடிமணம் இவண்நாம்
- முடிக்கின் முனிவன் தடுப்பதும் எவ்விதம்?
- ஏய்த்திட எண்ணினன் என்னையும்! பேய்ப்பயல்!
- வாய்த்ததிங் கெனக்கே மற்றவன் கற்படை. (370)
- ஊகம் சென்றவா றுரைத்தோம். உறுதி
- யாகமற் றதன்நிலை அறிவதார்? உளதல
- துரைப்பரோ முனிவர்? உளதெனின் உரைத்தவா
- றிருத்தலே இயல்பாம். எதற்குமீ துதவும்.
- சென்றுகண் டிடுவம். திறவுகோல் இரண்டு (375)
- செய்த தெதற்கெலாம் உய்வகை ஆனதே!
- எத்தனை திரவியம் எடுத்துளேம்! கொடுத்துளேம்!
- அத்தனை கொடுத்தும் அறிவிலாப் படைஞர்,
- நன்றியில் நாய்கள் இன்றஃ தொன்றும்
- உன்னா தென்னையே ஓட்டிடத் துணிந்தன. (380)
- என்னோ நாரணன் தனக்குமிங் கிவர்க்கும்?
- எளியனென் றெண்ணினேன். வழிபல தடுத்தான்!
- கெடுபயல் பாக்கியம், கடிமணம் இங்ஙனம்
- நடுவழி வந்ததும்! விடுகிலம்.
- கொடியனை இனிமேல் விடுகிலம் வறிதே. (பா-5)
- (கலித்துறை)
- அரிதா நினைத்ததன் அங்கங்கள் யாவும் அழிந்தபின்னும்
- புரியே பொருளெனப் போற்றிய சீவகன் புந்தியென்னே!
- பிரியாத சார்பு பெயர்ந்து விராகம் பிறந்திடினும்
- தெரியாது தன்னிலை ஆணவம் செய்யும் திறஞ்சிறிதே!
நான்காம் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று.
[தொகு]- ஆசிரியப்பா 12/க்கு அடி 1297
- வஞ்சிப்பா 1/க்கு அடி 14
- கலித்தாழிசை 3/க்கு அடி 12
- கலித்துறை 1/க்கு அடி 04
- ஆக அங்கம் 4/க்குப் பா. 17/க்கு அடி 1327.
பார்க்க:
[தொகு]மனோன்மணீயம்: நான்காம்அங்கம், ஐந்தாங்களத்தின் கதைச்சுருக்கம்
I
மனோன்மணீயம் மூலம்(முதல்அங்கம்-பாயிரம்)/