நமக்கு நாமே உதவி

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

நமக்கு நாமே
உதவி





தேசிய விருது பெற்ற பேராசிரியர்
பல்கலைப் பேரறிஞர்
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

M.A., M.P.Ed., Ph.D., D.Litt., D.Ed., FUWAI




ராஜ்மோகன் பதிப்பகம்
‘லில்லி பவனம்’
8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,
தி. நகர், சென்னை-600 017.
தொலைபேசி: 24342232

நூல் விபர அட்டவணை
நூலின் பெயர் : நமக்கு நாமே உதவி
மொழி : தமிழ்
பொருள் : சுய முன்னேற்றம்
ஆசிரியர் : டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
(1937 – 2001)
பதிப்பு : முதல் பதிப்பு அக்டோபர் 2002
நூலின் அளவு : கிரவுன்
படிகள் : 1200
அச்சு : 12 புள்ளி
தாள் : வெள்ளை
பக்கங்கள் : 96
நூல் கட்டுமானம் : பேப்பர் அட்டைக்கட்டு

விலை  : ரூ. 20-00


உரிமை : ஆசிரியருக்கு
வெளியிட்டோர் : ராஜ்மோகன் பதிப்பகம்
8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,
தி.நகர், சென்னை -600 017
தொலைப்பேசி: 4332696
அச்சிட்டோர் : எவரெடி பிரிண்டர்ஸ்
தி.நகர், சென்னை - 600 017. தொலைப்பேசி: 8252271

பதிப்புரை

பல்கலைப் பேரறிஞர், டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகாலமாக விளையாட்டுத்துறை தமிழ் இலக்கியத்திற்காக வாழ்ந்தவர்.

திருமூலர், திருவள்ளுவர், வள்ளலார் போன்றவர்களுக்குப் பிறகு, தேகத்தின் தெய்வாம்சம் பற்றி மக்களிடையே, மகிமையை வளர்க்கும் பணியைக் கடந்த நாற்பது ஆண்டுகளாகச் செய்து வந்தார்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கையில் நம்பிக்கையுடைய இவர், எங்கும் முதல், எதிலும் முதல் என்பதுபோல, பல அரிய காரியங்களை நிறைவேற்றினார்.

சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன்றவை நடத்திய ஓடுகளப் போட்டிகளில் வெற்றி வீரராகத் திகழ்ந்திருக்கிறார்.

தான் பெற்ற வெற்றியும், புகழும் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்காக ‘விளையாட்டு இலக்கியத் துறை’ என்ற புதிய துறையை உருவாக்கினார்.

முதன் முதலாக விளையாட்டுத் துறை இலக்கிய நூலை 1964ம் ஆண்டில் எழுதிமுடித்த இவர், இதுவரை இருநூறு நூல்களைப் படைத்திருக்கிறார்.

இதற்காக, தான் வகித்து வந்த எல்லாப் பதவிகளையும் விட்டு விட்டு, முழுநேர எழுத்தாளராக வாழ்ந்தார்.

முதன் முதலாக 1987-ஆம் ஆண்டு உடற்பயிற்சி

செய்வதற்கென்று “விளையாட்டு இசைப்பாடல்கள்” என்ற ஒலி நாடாவை தயாரித்து வெளியிட்டுள்ளார்.

முதன் முதலாக, தெய்வத்தன்மையுள்ள தேகத்தைத் திறம்படக் காக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, 1994-ஆம் ஆண்டு “ஓட்டப் பந்தயம்” என்ற திரைப்படத்தை தயாரித்துத் திரையிட்டுள்ளார்.

முதன் முதலாக சென்னைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உடல் நலத்தின் மேன்மையை, கடந்த 30 ஆண்டுகளாக உலகுக்கு உணர்த்தி வந்தார்.

முதன் முதலாக அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளிலும் கடந்த முப்பது ஆண்டுகளாக தேகநலத்தின் தேவைகளை தெளிவுபடுத்தி வந்தார்.

விளையாட்டுத் துறைபற்றிய கருத்துக்களை கடந்த முப்பது ஆண்டுகளாக, நாளிதழ், வாரஇதழ், மாத இதழ்களில், கட்டுரை, கவிதைகளாக வெளியிட்டுள்ளார்.

முதன் முதலாக ‘உடற் கல்வி மாமன்றம்’ என்ற அமைப்பை 1996ம் ஆண்டுதொடங்கி, மாணவர்களுக்கு தேக நலத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகின்ற தேர்வுப் போட்டிகளை நடத்தி, பல ஆயிரம் ரூபாயைப் பரிசாக வழங்கி பணியாற்றி மகிழ்ந்தார்.

வள்ளுவர் தமது திருக்குறளில் உடல் ஒழுக்கம், உடல் நலம் - ஆன்மபலம் முதலியவற்றை வளர்க்கும் விதத்தை வலியுறுத்தி விளக்கியிருக்கிறார் என்பதை, முதன் முதலாக மாறுபட்டு ஆய்வுசெய்து ‘திருக்குறள் புதிய உரை’ என்னும் நூலில் (அறத்துப்பால் மட்டும்) திருக்குறள் ஓர் உடலியல் நூல் என விளக்குகிறார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்க்கை வாழ்ந்த ஒரு சாதனையாளரின் ‘நமக்கு நாமே உதவி’ என்ற நூலினை நாங்கள் வெளியிடுவதில் மகிழ்கிறோம்.

பதிப்பகத்தார்
முன்னுரை

‘நமக்கு நாமே துணை’

இந்த நினைவுதான் நமது வாழ்க்கைப் பயணத்திற்கு நிம்மதி தரும் பெருந்துணை.

மற்றவர்கள் உதவுவார்கள் என்று நம்பலாம். அந்த நம்பிக்கையுடனேயே நின்று விடுவது தான் பெருங் கொடுமையாகப் போய் விடுகிறது.

நமது உயர்வுக்கு நாம் உழைப்பதன் மூலம்தான் உதவிக் கொள்ள வேண்டும். அதாவது. நம் வயிற்றுப் பசிக்கு நாம் சாப்பிடுவதுபோல.

பிறர் சாப்பிட்டால் நம் பசி தீராது. அதுபோலத்தான், பிறர் உழைப்பும் நமது வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் பயன் கொடுக்காது.

பிறரை நம்பி எந்தக் காரியத்தையும் ஆரம்பிக்கும் சிலர். ஆரம்பத்திலேயே அழிந்துபோன கதை ஆயிரம் உண்டு.

பாதிதூரம் சென்று, பொருளையும் புகழையும் பறி கொடுத்துவிட்டு, பரிதவித்து நின்றவர்கள் அநேகம் பேர்கள்.

முடிவுக்கு வந்து விட்டாலும், முகம் நிமிர்த்திப் பார்க்க முடியாத அளவுக்குக் கடன்களை சுமந்து கொண்டு கலங்கியவர்கள் கணக்கில் அடங்க மாட்டார்கள்.

எனவே, எந்தக்காரியத்தைத் தொடங்குவதற்கு முன்னும் பலமுறை சொந்த சிந்தனைக்கு இடம் கொடுத்து, ஆராய்ந்திட வேண்டும்.

அனுபவப் பட்டவர்களிடம் அறிவுரை கேட்கலாம். அவற்றைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்ற அவசியமில்லை.

‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்’ அப்பொருள் சிறப்பினைத் தெரிந்து கொண்டு, சீர்துக்கிப் பார்த்து செயல்படுபவர் தான் செம்மையானவர்களாகிறார்கள்.

பிறரைப் பார்த்து, பிறர் அனுபவங்களை அறிந்து, உங்கள் திறமைகளை மதிப்பிட்டு, அதன்பின் நெறிமுறைகளை உருவாக்கி செயல்படுங்கள்.

அந்த முறைதான் உங்களுக்கு உதவும்.

இந்நூலில் எழுதப்பெற்றிருக்கும் கருத்துக்கள் யாவும், கற்பனைக் கலா மண்டபத்தில் அமர்ந்து கொண்டு, மந்திர தந்திரக் காட்சிகளை விவரிக்கும் தன்மை போல் எழுதப்பட்டவை அல்ல.

நான் என் வாழ்க்கையில் பட்ட பாடுகள், அடைந்த அனுபவங்கள். ஆட்பட்ட அல்லல்கள், பிறர் உதவியை நம்பி ஏமாந்த பேரிடர்கள். அவற்றால் தெரிந்து கொண்ட உண்மைகள்தான் இதில் அதிகமாக இடம் பெற்றிருக்கின்றன.

பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, கல்லூரிப் பேராசிரியராக உயர்ந்து, பலதொழில் நிறுவனங்களுக்கு விளையாட்டு அதிகாரியாகப் பதவி உயர்வுபெற்று, இன்று பல தொழில்களைப் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருக்கும் எனது வாழ்க்கை அனுபவங்களின் சாறுதான் இந்த நூலாகும்.

வாழ்க்கையில் தனித்தன்மையுடன் உயர்ந்திட வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டவே இந்த நூல் எழுதப் பெற்றிருக்கிறது. நீங்கள் படித்துப் பயன்பெற விரும்புகிறேன்.

அழகுற அச்சிட உதவிய ஆர். ஆடம் சாக்ரட்டீஸ் அவர்களுக்கும், அச்சிட்டு உதவிய அச்சகத்தாருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கள்.

லில்லி பவனம்

அன்பன்

சென்னை - 17

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஆசிரியரின் பிற நூல்கள்

01. விளையாட்டுக்களின் விதிகள்
02. விளையாட்டுக்களின் கதைகள்
03. விளையாட்டுக்களில் வினோதங்கள்
04. விளையாட்டு உலகில் வீரக் கதைகள்
05. விளையாட்டுக்களில் சொல்லும் பொருளும்
06. விளையாட்டுக்களில் வினாடி வினா-விடை
07. விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
08. விளையாட்டு விழா நடத்துவது எப்படி?
09. விளையாட்டுக்களுக்குப் பெயர் வந்தது எப்படி?
10. விளையாட்டுத் துறையில் கலைச் சொல் அகராதி
11. விளையாட்டுத் துறையில் ஆங்கிலம், தமிழ், அகராதி
12. நலமே நமது பலம்
13. உடற்கல்வி என்றால் என்ன?
14. உலக நாடுகளில் உடற்கல்வி
15. உடலழகுப் பயிற்சி முறைகள்
16. உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்
17. தேகத்தை தெரிந்து கொள்வோம்
18. பெண்களும் பேரழகு பெறலாம்
19. ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்
20. பேரின்பம் தரும் பிராணாயாமம்
21. பயன்தரும் யோகாசனப் பயிற்சிகள்
22. பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்
23. இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்
24. நீங்களும் உடலழகு பெறலாம்
25. நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்
26. நீங்களும் உயரமாக வளரலாம்
27. நீங்களும் வலிமையோடு வாழலாம்
28. நீங்களும் நோயில்லாமல் வாழலாம்
29. நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்
30. உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்
31. உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்
32. உடலழகுப் பயிற்சி முறைகள்
33. உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்
34. உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்
35. கிரிக்கெட் ஆட்டத்தின் கதை
36. கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி - பதில்
37. கேரம் விளையாடுவது எப்படி?
38. சதுரங்கம் விளையாடுவது எப்படி?
39. ஒலிம்பிக் பந்தயத்தின் கதை
40. அகில உலக ஓடுகளப் போட்டி விதிமுறைகள்
41. குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?
42. முக அழகைக் காப்பது எப்படி
43. தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்
44. பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்?
45. 1984ல் ஒலிம்பிக் பந்தயங்கள்
46. பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்
47. சியோல் ஒலிம்பிக் பந்தயங்கள்
48. இந்தியாவில் ஆசிய விளையாட்டுக்கள்
49. வெற்றி விளையாட்டு காட்டுகிறது (சிறுகதை)
50. அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்
51. தமிழ்நாட்டுச் சடுகுடுப் பாடல்களும் சடுகுடு விளையாட்டும்
52. மறைந்து கிடக்கும் மனித சக்தி
53. குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்
54. விளையாட்டுத் துறையில் தமிழிலக்கிய வளர்ச்சி
55. குறளுக்குப் புதிய பொருள்
56. வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்
57. வள்ளுவர் வணங்கிய கடவுள்
58. திருக்குறள் புதிய உரை (அறத்துப்பால் மட்டும்)
59. மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
60. தெரிந்தால் சமயத்தில் உதவும்
61. வானொலியில் விளையாட்டுக்கள்
62. நமக்கு நாமே உதவி
63. விளையாட்டு ஆத்திச்சூடி
64. வாழ்க்கைப் பந்தயம்
65. சிந்தனைப் பந்தாட்டம்
66. அவமானமா? அஞ்சாதே!
67. அனுபவக் களஞ்சியம்
68. பாதுகாப்புக் கல்வி
69. சடுகுடு ஆட்டம்
70. மாணவர்க்கேற்ற மேடை நாடகங்கள்
71. வேஷங்கள் விளையாடுகின்றன (சிறுகதைகள்)
72. பண்புதரும் அன்புக் கதைகள்
73. நல்ல பாடல்கள்
74. நல்ல நாடகங்கள்
75. நவரச நாடகங்கள்
76. நவனின் நாடகங்கள்
77. சுவையான நாடகங்கள்
78. நல்ல நல்ல கதைப் பாடல்கள்
79. Quotations on Sports and Games
80. General Knowledge in Sports and Games
81. How to break ties in Sports and Games?
82. Physical Fitness and Health
83. நிமிர்ந்து நில் துணிந்து செல்
84. உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்
85. புதுப்புது சிந்தனைகள்
86. விளையாட்டுக்களின் வரலாறும் விளையாடும் முறைகளும்
87 உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாட நூல் (6ஆம் வகுப்பு)
88. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாடநூல் (7ஆம் வகுப்பு)
89. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாடநூல் (8ஆம் வகுப்பு)
90. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாடநூல் (9ஆம் வகுப்பு)
91. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாடநூல் (10ஆம் வகுப்பு)
92. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாடநூல் (11 ஆம் வகுப்பு)
93. உடல்நல உடற்கல்வி பயிற்சிப் பாடநூல் (12 ஆம் வகுப்பு)
94. Health and Physical Education Work Text Book (VI-Std)
95. Health and Physical Education Work Text Book (VII-Std)
96. Health and Physical Education Work Text Book (VIII-Std)
97. Healtll and Physical Education Work Text Book (IX-Std)
98. Health and Physical Education Work Text Book (X-Std)
99. Health and Physical Education Work Text Book (XI-Std)
100. Health and Physical Education Work Text Book (XII-Std)
101. வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்
102. விளையாட்டுத் துறையில் பொது அறிவு நூல்
103. நீங்களும் இளமையாக வாழலாம்
104. கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்
105. விளையாட்டு அமுதம்
106. விளையாட்டு உலகம்
107. விளையாட்டுச் சிந்தனைகள்.
108. விளையாட்டு விருந்து
109. சிந்தனைச் சுற்றுலா
110, கைப்பந்தாட்டம்
111. கால்பந்தாட்டம்
112. கூடைப்பந்தாட்டம்
113. பூப்பந்தாட்டம்
114. வளைகோல் பந்தாட்டம்
115. வளையப்பந்தாட்டம்
116. மென் பந்தாட்டம்
117. கோ கோ ஆட்டம்
118. நல்ல கதைகள் 1
119. தெய்வ மலர்
120. செங்கரும்பு (கவிதைத் தொகுப்பு)
121. கடவுள் கைவிட மாட்டார்
122. வேஷங்கள் விளையாடுகின்றன
123. மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
124. விளையாட்டுப் பொது அறிவுநூல்
125. General Knowledge for Competitive Exams.
126. சாந்தி தமிழ் வாசகம்
127. சாந்தி A, B, C Books
128. நன்நெறிக் கல்வி 9ம் வகுப்பு
129. நன்நெறிக் கல்வி 10ம் வகுப்பு
130. நவனார் உரை நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=நமக்கு_நாமே_உதவி&oldid=1520002" இலிருந்து மீள்விக்கப்பட்டது