உள்ளடக்கத்துக்குச் செல்

புது வெளிச்சம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

புது வெளிச்சம்
(தன்னைத் தானறிய)




கவிஞர் வெள்ளியங்காட்டான்




யதிவெளியிடு
அரசமர வீதி, ஆவராம்பாளையம், கோவை - 6.



♦ புது வெளிச்சம் (தன்னைத் தானறிய)
♦ முதற்பதிப்பு: டிசம்பர் 2006
♦ ஆசிரியர்: கவிஞர் வெள்ளியங்காட்டான்
♦ உரிமை: வெ. இரா. நளினி

♦ வெளியீடு: என். மகேந்திரன்

யதி வெளியீடு, அரசமர வீதி,
ஆவராம்பாளையம், கோவை - 641 006.
தொலைபேசி: 0422–2561015

♦ நூலின் அளவு: டெம்மி 1/8
♦ தாள்: 18.6 Puff
♦ பக்கங்கள்: x + 126 + 4 = 140

♦ அச்சும் அமைப்பும்:

திலகா ஆப்செட் பிரஸ்
169-ஏ. 6வது வீதி நீட்சி, காந்திபுரம்,
கோவை-12, போன்: 252 3205; 252 6005
e-mail: nandhinipathippagam@yahoo.co.in

♦ விலை : ரூ.60/-









சமர்ப்பணம்
என் தந்தையின் எழுத்திற்கு
துணையாய், தூணாய்
தோழியாய், துனைவியாய் நின்ற

என் அருமைத் தாய்க்கு...

மெயப்பொருள் விளக்கம்


  • கவிஞர் புவியரசு

புரட்சிக் கவிஞராய்ப் புறப்பட்ட வெள்ளியங்காட்டான் அவர்களின் இன்னொரு பரிமாணம் இந்த நூல். மதப் போர்வை போர்த்துக் கொண்டு உலவும் பல புராதனச்சொற்களுக்கு மதச் சார்பற்ற, கடவுள் சார்பற்ற, புதிய விளக்கங்களை, உண்மையான தத்துவ விளக்கங்களை, கவிஞர் தமது வடமொழிச் சாத்திரப் புலமை கொண்டு இந்நூலில் விளக்கியிருக்கிறார்.

இதுவரை சமயச்சார்பாகவே பார்த்து உணர்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு இப்புதிய மெய்விளக்கம் அதிர்ச்சி தருவதாகச் கூடத் தோன்றலாம். ஆனால், கவிஞர் உயர்த்திப் பிடிக்கும் மெய்விளக்கின் முன்னே, பல்லாயிரம் ஆண்டின் பொய்மை இருள் பறந்தோடிப் போய்விடுகின்றது.

'ஒம் தத் சத்’ என்பது நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒன்றுதான். எதையறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ, அல்லது எல்லா நூல்களிலிருந்தும் எதுவொன்றே அறியத் தகுந்ததாகுமோ அதுவே ஒம் தத் சத்' என்று பூச்சுகளற்ற மெய்ப்பொருளை உணர்த்துகிறார் கவிஞர்.

'உள்ளத்துக்குப் புறம்பாக எந்தவொரு தெய்வமும் இல்லை', என்பது ஆசிரியரின் தெளிவு. மனிதரும், விலங்குகளும், பறவைகளும், புழுப் பூச்சிகளும், தாவர வர்க்கமும் சும்மா அழிந்து போவதில்லை. தம்மைப் போல் சிலவற்றைப் படைத்துவிட்டே மாய்ந்து போகின்றன. இதுவே ‘புனர்சென்மம்' வழக்கமாகச் சொல்லப்படும் பொருள் முழுப் பொய்’ என்கிறார் ஆசிரியர்.

எங்கும் பரவலாகப் பேசப்படுகிற 'பிரார்த்தனை' பற்றிக் கூறும்போது, 'பிரார்த்தனை செய்து காரியம் சாதித்துக் கொள்வதற்கேற்ற உணர்வுடைய ஒரு தெய்வம் பிரபஞ்சத்தில் இருப்பதாக நினைப்பது ஒருவித பிரமை. அதாவது அறியாமை. உபநிசத்துக்கள் இந்த மாதிரியான ஒரு தெய்வமிருப்பதை ஒத்துக் கொள்வதில்லை', என்கிறார்.

பலப்பல சமயத் தொடர்களுக்கு மெய்விளக்கம் தருவதற்கு, ஏராளமான உபநிடதங்களையும், சமய சாத்திரங்களையும் தமிழ்நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு மேற்கோள் காட்டுகிறார். 'சோதிடம் சுதந்திர மக்களுக்கு மாட்டப்பட்ட விலங்கு' என்பது கவிஞரின் தெளிவான முடிவு.

கவிஞர் தமது கவிதைகளில் காட்டிய கோபம் இந்த ஆய்வு நூலிலும் புலப்படுகின்றது. பழைய பொய்மைச் சித்தாந்தங்களின்மீது தமது கனலை உமிழும் கவிஞர், அவற்றையெல்லாம் தூக்கிக் குப்பைக் கூடையில் வீசி எறியுங்கள் என்கிறார். அறிவியல் பார்வையும், விசாலமான சமய நூலறிவும், உண்மையை உரக்கச் சொல்லும் துணிவும், காலத்திற்கேற்ற சிந்தனையும் கொண்டு படைத்துள்ள இந்த ‘புது வெளிச்சம்' என்ற ஆய்வு நூல், நம் சிந்தைக் குழப்பத்தைத் தெளிவுபடுத்தும் அரிய படைப்பு.

‘கவியைக் கெடுத்தது காசுப் பாட்டு. செவியைக் கெடுத்தது சினிமாப் பாட்டு. புவியைக் கெடுத்தது புரோகிதன் பாட்டு’ என்ற கவிஞரின் சாட்டையடி போலவே சூடாக இருக்கிறது நூல்.

பநிசத்துக்கள், இதிகாசங்கள், சங்க இலக்கியங்கள் போன்ற இன்னும் பலப்பல இனியன, இன்னாதன என மூத்தோர்கள் கோர்த்த முத்துக்கள் அனைத்தும் மானிட வர்க்க்த்தை உய்விக்கவே.

இன்றைய இளைய தலைமுறைக்கு, 'பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப அவைகளை எல்லாம் கண்டுகொள்ள விருப்பமற்றுப் போய்விட்ட காலகட்டத்தில், மீண்டும் உபநிசக் கருத்துக்களைப் புதிய தலைப்புகளில் ஒரு புதிய கண்ணோட்டத்தோடு இன்னும் சொல்லப் போனால் இதுவரை தமிழில் யாரும் எழுதாத முறையில் மக்களின் விழிப்புணர்வுக்காகவே பொட்டில் அறைவது போன்றதொரு விளக்கங்களோடு, ‘புது வெளிச்சம்’ என்ற தலைப்பில் என் தந்தை நூலாக்கித் தந்திருக்கிறார்.

இதை மூத்த அறிஞர்களில் சிலர் மட்டுமே பார்க்கக்கூடும், விவாதிக்கக்கூடும். பிறகு அந்நூல்கள் ஏதோ ஒரு மூலையில் உறங்கிவிடவும் கூடும். மற்ற நல்ல நூல்களைப் போலவே !

ஆயினும், ஒரு அசுர நம்பிக்கை... ! அணுகுண்டால் முற்றிலும் அழிவுற்ற ஜப்பானை, இறந்துபட்ட ஆத்மாக்களின் நினைவுகளோடு, பேரெழுச்சியோடு, உறுதியோடுகூடிய, ஒன்றுபட்ட அயராத உழைப்போடு, இனி என் நாட்டின் மீது எவரும் கைவைக்கமுடியாது என்ற பெருமிதத்தோடு மக்கள் செப்பனிட்டது போன்றதொரு அதிசயம் நம் நாட்டிலும் நிகழக் கூடுமல்லவா?

மேற்கத்திய நாகரிக மோகத்தில், பண்பாட்டுச் சிதைவில் ஒழுக்கம் நலிவுற்று, உடல் மெலிவுற்று வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் நம் இளைய தலைமுறைக்கு, வானை வளைக்கும் விஞ்ஞானம், வளரும் பொருளாதாரம், பணத்தை சம்பாதிக்க மட்டும் கற்கும் கல்வி என இவைகளின் பயன்தான் என்ன?

எந்தவொரு மகத்தான வளர்ச்சியும் மனிதகுல மேம்பாட்டுக்காக எனில், இவைகளினால் உண்மையான அமைதியும், ஆனந்தமும் இன்று மனித குலத்திற்குக் கிடைத்திருக்கிறதா?

மேல்தட்டு, நடுத்தர, கீழ்த்தட்டு என்றும், மதம், இனம், மொழி என்றும் பாகுபாடின்றி சமதர்மமாக, நம்மை வளைத்துக் கொண்டிருக்கும் அருவருக்கத்தக்க பல கொடுமையான நோய்களின் புகலிடமாக, முதலிடமாக திகழும் நம் நாடு, அழிவின் எல்லைக்குச் சென்று கொண்டிருப்பதை நாம் அறிவோமா? அறிந்திருந்தால் அதுவும் ஒரு - பேரழிவிற்குப் பிறகு, எழுச்சியோடு பிறக்கும் புதிய யுகத்தில், புதிய உதயத்தில் நம் பண்பாடுகளும், ஒழுக்கங்களும் உயிர்பெற்று எழும். அன்று, தெளிந்த ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் நடைமுறை வாழ்விற்கு ஏற்புடையதாகவும் இருக்கும்.

அன்று நல்ல இலக்கியங்கள் துாசு தட்டி எடுக்கப்படும். மனித குலம் அதை இதயத்தில் பதித்து புதிய பாரதத்தை உருவாக்கும்.

சத்தியம் என்றும் அழிவதில்லை
உண்மைக்கு என்றும் தோல்வியில்லை.

நல்லவைக்கு என்றும் சாவில்லை

எனவே நல்ல இலக்கியங்களை உருவாக்கிக் காத்திருப்போம். புதிய பாரதத்தைக் காண...

வெ. இரா. நளினி



மொழியும் நூலும்


* கவிஞர் வெள்ளியங்காட்டான்

  • மொழியின் ஆக்க சக்தி, பேச்சிலோ கருத்துப் பரிமாற்றத்திலோ செய்தித்தாள்களின் அளவிலோ அடங்கி விடுவதல்ல. அகம் புறம் என அனைத்தையும் ஆய்ந்தறிந்த அழகும் ஆளுமையும் உள்ள நூல்களாக அமைந்து நம் எதிர்கால மக்களுக்கு வைப்புநிதியாக்கி வைப்பதில்தான் மொழியின் வளர்ச்சியும் வாழ்வும் உள்ளது.
  • நாம் நிலத்தைப் பயன்படுத்தி உரமிட்டு விதைத்து விளைந்த தானியம் நமக்கு உணவாவது போன்று நமது மொழியும் நூலும் நமக்குப் பயன்பட வேண்டும்.
  • எழுதி அச்சிட்டு வெளியிடப்படும் ஒவ்வொரு நூலும், உடலில் உடையில் உள்ள அழுக்கை நீக்கும் சோப்பைப் போல், உள்ளத்தின் எல்லா அழுக்கையும் நீக்குவதாக அமைதல் வேண்டும்.
  • காசைத் தேடுவதற்கான நூல்களுக்கு மட்டுமே ஒரு மொழி இடம் கொடுப்பதாயின், அம்மொழி மாசுபடிந்ததாகிவிட்டது என்று பொருள்.

நான் என் வாழ்வை மிகச் சரியானது எனப்படும் ஒரு நல்ல குறிக்கோளை நோக்கித்தான் இயக்கிக் கொண்டிருக்கிறேன். இதில் என் கவலை எல்லாம் அதைச் சென்று அடைய முடியவில்லையே என்பதல்ல. செல்லும் வழி எக்காரணத்தைக் கொண்டும் தவறிவிடக் கூடாதே என்பதுதான்.

நன்றியுரை


நீங்கள் நினைப்பதை இன்று சொல்லாவிட்டால் நீங்கள் நினைக்காததை நாளை சொல்லும்படியாகிவிடும்' என்ற அறிஞரின் வாக்குக்கேற்ப நல்ல சிந்தனைகளைக் காலத்தே மக்களிடம் கொண்டு சேர்க்காவிட்டால், பிற்போக்கான கருத்துக்களும் செயல்பாடுகளும் அவர்களிடம் வேரூன்றிவிடும் என்ற உண்மையை இன்றைய சமுதாயம் நமக்குச் செவ்வனே அறிவுறுத்திக் கொண்டுள்ள இந்த நேரத்திலும் நாம் சொல்லத் தாமதம் செய்வோமேயானால் அதன் முடிவு...?

என் தந்தை எழுத்தைத் தம் வாழ்வின் வேராகவும், தமது சுவாசமாகவும் கருதியவர். இலக்கியம் என்பது சமூகத்தின் மனசாட்சியாகவும், மனித குலத்தின் ஆன்மாவாகவும் இருக்கிறது என்ற கருத்தியலோடு வாழ்ந்தவரும்கூட.

அவரின் படைப்புகள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற அவரின் அவா, இறுதி மூச்சு வரை நிறைவேறாமல் போனது. அவரின் மறைவிற்குப் பின் வெளிவந்த 'வெள்ளியங்காட்டான் கவிதைகள்’, ‘கவியகம்’, ‘நீதிக்கதை'களைத் தொடர்ந்து யதி வெளியீடாக புது வெளிச்சம் வெளிவருகிறது.

எந்தவித எதிர்பார்ப்புமின்றி முதல் விதையை ஊன்றி ஊக்குவித்து உதவிய மதிப்பிற்குரிய கவிஞர் புவியரசு அவர்களையும், பாவலர் இரணியன் அவர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.

சற்று சிதிலமடைந்த இப்படைப்பை சிரமத்தின்பாற்பட்டும், மிகுந்த ஈடுபாட்டுடனும் உழைத்து அச்சிலேற்றிய அருமை மைந்தர்களுக்கும், இதைத்தமது சொந்த நூலாகக் கருதி அழகாக அச்சிட்டு வழங்கியதிலகா ஆப்செட்பிரஸ் வேனில் அவர்களுக்கும், சிறந்த கருத்துக்களைத் தந்து உதவிய கவிஞர் தங்க. முருகேசன் அவர்களுக்கும், மற்றும் என் அன்புப்புதல்வனும், புதல்வியுமாகிய 'ராதா மகேந்திரன்' அவர்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்.

அன்புடன்
வெ.இரா.நளினி

"https://ta.wikisource.org/w/index.php?title=புது_வெளிச்சம்&oldid=1637799" இலிருந்து மீள்விக்கப்பட்டது