உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம் பேச்சு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து
இந்திய அளவிலான இரண்டாம் விக்கிமூல மெய்ப்புப்போட்டி ஆகத்து 2021

இப்போட்டி நடுவர்கள் உரையாடல்கள்

[தொகு]
வேண்டுகோள் போட்டியில் நடுவர்களாக இருப்பவர் மட்டும் இங்கே எழுதுக.
  1. பங்கேற்பாளர் இணைக்கக் கோரும் அனைத்து நாட்டுடைமை நூல்களையும் இணைக்கலாமா?--தகவலுழவன் (பேச்சு). 05:17, 15 ஆகத்து 2021 (UTC)Reply
  2. பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/80 என்ற பக்கத்தில் நடுப்பகுதியில் வரும் எண்கள் தனியே இடப்புறம் உள்ளன. அதற்குரிய உரைகள் முழுமையாகத் தள்ளி வலப்புறம் உள்ளன. அதாவது, அச்சுப்பக்கம் போல இல்லை. இதற்கு மதிப்பெண் தரலாமா? அல்லது மாற்றச் சொல்லலாமா?--தகவலுழவன் (பேச்சு). 06:43, 19 ஆகத்து 2021 (UTC)Reply
  3. சில போட்டி நூல்களுக்கு மேலடி இடுதல் எளிது. மாணவிகளுக்கு நான் மேலடிகளை என் தானியங்கி கணக்கு வழியே பைதானில் இட்டு தரலாமா? --தகவலுழவன் (பேச்சு). 07:00, 19 ஆகத்து 2021 (UTC)Reply
  4. தவறாக இடும் மேற்கோள் குறியீடுகள் : பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/397 என்ற பக்கத்தில் உள்ள மேற்கோள் குறியீடுகளும், பாடற்குறியீடுகளிலும் (- ---> —) மாற்றம் தேவை. எப்படி வழிகாட்டலாம்?--தகவலுழவன் (பேச்சு). 00:44, 22 ஆகத்து 2021 (UTC)Reply
  5. பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69 பக்க வடிவமைப்பு குறித்து வழிகாட்டலை, ஒத்தாசைப்பக்கத்தில் [1] கேட்கப்பட்டுள்ளது.--தகவலுழவன் (பேச்சு). 00:47, 22 ஆகத்து 2021 (UTC)Reply
  6. மேற்கோள் குறிகளைத் தவிர்த்தல் சிறப்பன்று. ஒரு பத்தியின் பொருண்மையை அது முழுமையைத் தராது. எ-கா பக்கம்:ஈச்சம்பாய்.pdf/8 அதனைத் தவிர்ப்போருக்கு வழிகாட்டவும்.--தகவலுழவன் (பேச்சு). 12:21, 22 ஆகத்து 2021 (UTC)Reply
  7. இப்பயனரின் பங்களிப்புகள் கருவியில் ஏன் இணையவில்லை--தகவலுழவன் (பேச்சு). 01:11, 24 ஆகத்து 2021 (UTC)Reply
  8. சிக்கலான பக்கமாக மாற்ற வேண்டியன: பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/15 என்ற பக்கத்தில் எழுத்துப்பிழை மட்டும் நீக்கப்பட்டுள்ளன. இது போன்ற பக்கங்களில் நூற்த்தொகுப்பு வார்ப்புருக்கள் வர வேண்டும் எனவே, இதனை சிக்கலான பக்கமாக மாற்ற உள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு). 01:29, 24 ஆகத்து 2021 (UTC)Reply
  9. நூல்களுக்கான துணைப்பக்கத்தில், கருவியினை விட, நூல்களின் எண்ணிக்கை அதிகமாகக் காட்டியது. எனவே, கருவியோடு ஒப்பிட்டுப் பார்த்து திருத்தியுள்ளேன். கருவியில் நூல்களை இணைக்க அணுக்கம் பெற்றவர் மட்டும் தொகுக்கும் வகையில், போட்டிநூற்பட்டியல் இருக்கும் பக்கத்தினைப் பூட்டி வைத்துள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு). 01:56, 25 ஆகத்து 2021 (UTC)Reply

பங்கேற்பாளர்கள் கேட்கும் மிக முக்கியமான நூல்களை இணைக்கலாம். குறிப்பாக அதிகம் பேர் கூகுளில் தேடும் தொல்காப்பியம் சங்க இலக்கியம் போன்ற நூல்களை இணையுங்கள். ரா.கார்த்திக் 13:22, 27 ஆகத்து 2021 (UTC)

தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் மற்றும் பொருளதிகாரம் இளம்பூரணர் உரை ஆகிய இரண்டு நூல்களை இணையுங்கள் ரா.கார்த்திக் 13:23, 27 ஆகத்து 2021 (UTC)

புதிய பயனர்களுக்கு தடை விதிப்பதைத் தவிருங்கள் நிர்வாகிகளே. பாலாஜி என்பவர் எங்கள் குழுவில் உள்ள ஒருவருக்கு ஒரு நாள் தடை விதித்துள்ளார். இது சரியல்ல. ரா.கார்த்திக் 13:25, 27 ஆகத்து 2021 (UTC)

போட்டியில் இறுதி முடிவுக்கு முன்னர்

[தொகு]
  • @S.PREMAMURUGAN: அவர்கள் மெய்ப்பு செய்த பல பக்கங்களில் அதே பக்கத்தில் பத்தி முடிந்தாலும் {{nop}} வார்ப்புரு இடவில்லை. அவரது பேச்சு பக்கத்திலும் மூன்று முறை தெரிவிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் இது வரை அவர் nop இடாமல் உள்ளார். அவரது பரிசை நிறுத்தி வைக்கலாமா? இல்லை வேறு என்ன செய்யலாம். --Balajijagadesh (பேச்சு) 05:52, 5 செப்டம்பர் 2021 (UTC)

சரிபார்த்தலுக்கான/பச்சையாக்குவதற்கான புள்ளிகள்

[தொகு]

வங்காள மொழியில் சரிபார்த்தலுக்கு புள்ளிகள் தரப்படுவதில்லை. ஏனென்றால் பலரும் கவனமாக பார்க்காமல் புள்ளிகள் பெறுவதற்காக சரிபார்க்கப்பட்டது என்று குறிப்பிட்டு தொகுப்பு செய்துவிடுகின்றனர். இதனால் விக்கிமூலத்தின் தரவு பாதிக்கப்படுகிறது. சென்ற முறையும் பல பக்கங்களில் தொடர்புடைய இருபயனர்களில் ஒரு மெய்ப்பு பார்த்த பக்கத்தை கவனிக்காமலே மற்றொருவர் தானியக்கம் மாதிரி சரிபார்க்கப்பட்டது என்று குறித்தனர். போட்டி முடிந்த பின் சரிசெய்வோம் என்று வாக்களித்து பின் சரி செய்ய எந்த விதமான முயற்சிகளையும் செய்யவில்லை. இது போன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்கு நாமும் தமிழில் சரிபார்ப்புக்கும் மதிப்பெண்களைத் தருவதைத் தவிர்க்கலாம்.--Balajijagadesh (பேச்சு) 17:12, 9 ஆகத்து 2021 (UTC)Reply

தீர்வு ஆம். சென்ற இந்திய அளவிலான இரண்டாவது போட்டியின் போதே இதனை அறிந்தேன். மேலும், பழைய நூல்களில் எழுத்துருக்கள் வேறுபடும் குறிப்பாக னை+ லை போன்ற உயிர்மெய் எழுத்துக்கள். அவைகளை உருவாக்கும் வசதி நம்மிடம் இல்லையென்பதால், அத்தகைய நூல்களை பச்சையாக்காமல் இருப்பதே சிறந்த முடிவு. பொதுவாக நீங்கள் சில வருடங்களுக்கு முன்பு குறிப்பிட்டது போல, மஞ்சள் நிலைகளிலே கவனம் செலுத்தினால் அதிக நூல்களை முடிக்கலாம். நான் கணியம் அறக்கட்டளையினர் பங்களிப்பு செய்யும் நூல்களில் கூட சில பக்கங்களை பச்சையாக்குவதைத் தவிர்க்கிறேன். எடுத்துக்காட்டு--தகவலுழவன் (பேச்சு). 23:57, 9 ஆகத்து 2021 (UTC)Reply

👍 ஆதரவு இது தொடர்பாக போட்டிக்கு முன்பாக ஒரு முடிவு எடுத்து போட்டிப் பக்கத்தில் கூறலாம். Sridhar G (பேச்சு) 11:47, 11 ஆகத்து 2021 (UTC)Reply

👍 ஆதரவு பச்சையாக்காமல் விடுவதே நல்லது. Fathima (பேச்சு) 14:28, 11 ஆகத்து 2021 (UTC)Reply

👍 ஆதரவு பச்சையாக்குவதற்க்கு எந்த புள்ளியும் தரக்கூடாது.--அருளரசன் (பேச்சு) 15:22, 11 ஆகத்து 2021 (UTC)Reply

கருந்துக்கள் தெரிவித்தவர்களுக்கு நன்றி!. சரிபார்த்தலுக்கு புள்ளிகள் தர வேண்டாம் என்னும் முடிவினை இங்கு தெரிவித்துவிட்டேன். -- Balajijagadesh (பேச்சு) 08:34, 13 ஆகத்து 2021 (UTC)Reply

மெய்ப்புப் பார்க்கப்பட்டவை/மஞ்சள் ஆக்குவதற்கு விதிகள்

[தொகு]

இதுவரை ஒரு பக்கத்தினை முழுமையாக மஞ்சளாக்குவதற்கான விதிகள் சமூக ஒப்புதலோடு உருவாக்கப்படவில்லை. சமூக ஒப்புதல் பெற்ற விதிகள் இல்லாமல், போட்டிகள் நடத்துவது பொருத்தமன்று. அதனை கூட்டாக உருவாக்க விருப்பம் உங்கள் முன்மொழிவுகளைத் தாருங்கள். ஏற்கனவே, சென்ற முறை போட்டி நடந்த மேல்விக்கியில் பக்கத்தில் முன்மொழிந்தவைகளை தவிர்த்தல் முறையன்று.

  • எனது முன்மொழிவுகள்
  1. மேலடி - தவறாக இருப்பின் ஏற்புடையது அன்று. சிலர் ஒரு பக்கம் மட்டும் தானியங்கி கொண்டு போட்டுள்ளனர். தானியங்கிப் பிழைகள் களையப் பட வேண்டும்.
  2. பிரிந்த சொற்களை கணியநுட்பத்தால் முழுமையாக நீக்க முடியாது. இங்கு உருவாக்கப்படும் தரவுகள், தமிழ் கணிமை ஆய்வுகளுக்கு பயன்படுவதால், ஒவ்வொரு சொல்லானது பிரிந்து அர்த்தமற்று இருக்கக் கூடாது. எனவே, தமிழ் மொழியின் வளர்ச்சியை எண்ணி, மிக மிக முக்கிய விதியாக பின்பற்ற வேண்டும்.
  3. க்+ஔ = கௌ என்ற வரிசையில் வரும் உயிர்மெய்யெழுத்துக்கள் மிக மிக சரியாக இருக்க வேண்டும்
  4. முற்றுப்புள்ளி, காற்புள்ளி, அரைப்புள்ளி போன்றவற்றிற்கு அடுத்து ஓர் எழுத்துக்கான இடைவெளி விட்டே, அடுத்து வரும் வாக்கியங்களை அமைக்க வேண்டும்.
  5. சொல்லிடை(hyphen) இணைப்புக்குறியை, ஒரு பக்கத்தின் இறுதியில் இடும் பொழுது, பிரிந்த சொல்லாக இறுதிச்சொல் இருந்தால் ஒட்டிப் போட வேண்டும். மற்றவற்றிக்கு ஓர் எழுத்து இடம் விட்டு போடணும். இல்லையெனில் இரண்டு முழுமையான சொல் இணைய வாய்ப்பு தோன்றும். hws/hwe, nop வார்ப்புருக்களை இட வற்புறுத்தக்கூடாது. ஏனெனில் அதற்கு மாற்று வழி உள்ளதை தெளிவு படுத்தினால், பணியடர்வு குறைந்து பலர் தொடர்ந்து பங்களிப்பர்.
  6. பிழைகளை சுட்டிக்காட்டியும் திருத்தாமல், தொடர்ந்து பங்களிப்பு செய்தால் அவருக்கு மதிப்பெண் தரக்கூடாது. ஏனெனில், விக்கிமூல தளத்தில் பங்களிக்கும் பொழுது பிழைகளை நீக்குவோருக்கே முதலிடம். இருக்கும் பிழைகளை நீக்காமல், புதிய பிழைகளை சேர்ப்போருக்கு இடமளிக்கக் கூடாது.--தகவலுழவன் (பேச்சு). 03:19, 14 ஆகத்து 2021 (UTC)Reply
@Info-farmer: கிட்டதட்ட அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே. {{nop}} பொறுத்தவரை அதன் மாற்று வழி என்பது அடுத்தப்பக்கதில் இரண்டு வெற்று வரி விடுவது. இதனால் ஒரு பக்கத்திற்கான மதிப்பெண் இரண்டாம் பக்கத்தைப் பார்த்து கொடுக்க வேண்டிவரும். அடுத்தப் பக்கத்தை அதே நபர்தான் மெய்ப்பு செய்வாரா என்பதும் நிச்சயமற்றது. அதனால் {{nop}} பயன்படுத்துவது சிறந்த முறையாகும். விருப்பத்தேர்வுகள்-->கருவிகள்-->தொகுப்புதவிக் கருவிகள்--> Nop கருவியை தேர்ந்தெடுந்துக்கொண்டால் nop இடுவது சுலபமானது. -- Balajijagadesh (பேச்சு) 09:07, 14 ஆகத்து 2021 (UTC)Reply
@Balajijagadesh:சரி மஞ்சளாக்குவதற்கான வழிகாட்டுதல் பக்கம் அமைக்கக் கோருகிறேன். பாடல், படம் குறித்து நாம் ஏற்கனவே உரையாடி உள்ளோம்.அதனையும் இணைத்துக் கொள்ளுங்கள். போட்டி காலம் மட்டும் அல்ல. பல கல்லூரியில் இருந்து ஈடுபட அரசுதரப்பில் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது. அப்பொழுது இந்த வழிகாட்டுதல் பக்கங்கள் தெளிவு படுத்தும். எந்த ஒரு திறன் பங்களிப்பாளர் வந்தாலும், அது உதவியாக இருக்குமென்றே எண்ணுகிறேன். உலக அளவில் முன்னிலை பெறுவதற்கான முயற்சிகளை இனி மேற்கோள்வோம். சில அறக்கட்டளையினரிடம் நல்கை கேட்டுள்ளேன். 5இலட்சம் வரை கிடைக்க வழியுண்டு. எனவே நமது அடித்தளம் உறுதியாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும். பச்சை பொத்தானை தற்காலிகமாக செயல் இழக்க செய்தால் கூட நன்றாக இருக்கும். ஓங்குக தமிழ் வளம்! வாழிய தமிழர் நலம்!!--தகவலுழவன் (பேச்சு). 10:06, 14 ஆகத்து 2021 (UTC)Reply

இலகுவான பக்கங்களை மட்டும் மெய்ப்பு பார்க்கும் பயனர்கள்

[தொகு]

@Balajijagadesh: @Info-farmer: கனிவான கவனத்திற்கு: இப்போட்டியில் பங்கெடுக்கும் சிலர் புள்ளிகள் பெறும் நோக்கோடு இலகுவான பக்கங்களை மட்டும் தேர்ந்தெடுத்து மெய்ப்பு செய்து விட்டு, கடினமான பக்கங்களைக் கடந்து சென்று விடுகின்றனர். இப்படிக் கடந்து செல்பவர்க்கு புள்ளிகளைக் குறைக்க வேண்டும். மெய்ப்பு பார்ப்பவர் தொடர்ச்சியான பக்கங்களை மெய்ப்புப் பார்க்கா விடில் இதைச் செயல் படுத்தலாம்.

இதனை இந்த நூலில் காணலாம். இவர்கள் மெய்ப்புப் பார்க்காமல் விட்டுச் செல்லும் கடினமான பக்கங்களை, நூலை முழுமையாக்கும் நோக்கில். நான் மெய்ப்புப் பார்க்கிறேன். அல்லது இம்மாதிரியான கடினமான, மெய்ப்புப் பார்க்கப்படும் பக்கங்களுக்கு அதிகப் புள்ளிகள் வழங்கலாம். --

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 14:41, 15 ஆகத்து 2021 (UTC)Reply

வணக்கம் @TI Buhari: நீண்ட நாள் கழித்து தங்களுடன் உரையாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. போட்டியில் அனைத்து பக்கங்களையும் மெய்ப்பு பார்ப்பதற்கும் சீரான புள்ளிகள் தான் வழங்கப்படுகின்றன. இதில் கடினமான பக்கம் இலகுவான பக்கம் என்பதற்கு தனித் தனி புள்ளிகள் வழங்கப்படவில்லை. சென்ற முறையும் இது குறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டன ஆனால் புள்ளிகளில் வேறுபாடு வழங்கப்படவில்லை.

//சிலர் புள்ளிகள் பெறும் நோக்கோடு இலகுவான பக்கங்களை மட்டும் தேர்ந்தெடுத்து மெய்ப்பு செய்து விட்டு// ஆமாம் வெறுமனே வெற்றி என்பதனை மட்டும் கருத்தில் கொள்வதால் இவ்வாறு ஏற்படுகிறது. தொடர்சியாக 20 பக்கங்களை மெய்ப்பு பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதை விதிகள் பக்கத்தில் காணலாம். சுருக்கமாகச் சொல்லப்போனால் , போட்டி துவங்கி விட்டதால் இந்த போட்டியில் நீங்கள் கூறுவதனை செயல்படுத்த முடியாது.

//நூலை முழுமையாக்கும் நோக்கில். நான் மெய்ப்புப் பார்க்கிறேன்// நீங்கள் தமிழ் மொழியின் வெற்றிக்காக பங்களிப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பரிசுகளை நீங்கள் பொருட்டாக நினைக்கவில்லை என்பதனையே இது காட்டுகின்றது. உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பினால் தமிழ் வாழும்.. உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி Sridhar G (பேச்சு) 15:17, 15 ஆகத்து 2021 (UTC)Reply

வணக்கம் @Sridhar G:!
அமிர்தசரஸில் கலந்துரையாடிய பின் மீண்டும் கருத்துப் பரிமாற்றம் நேர்ந்தமை குறித்து மகிழ்சசி. பயனர்கள் சிலர் இவ்வாறு செய்வது மிகுந்த மனச் சோர்வை ஏற்படுத்துகிறது. மெய்ப்புப் பார்க்கும் போது தொடர்ச்சியாகச் செய்தால்தான், நூலின் அடிநாதம் குறித்த ஒரு புரிதல் ஏற்படும். இங்கொன்றும் அங்கொன்றுமாகச் செய்வதால் என்ன புரிதல் கிடைக்கும் எனப் புரியவில்லை. இதனாலேயே இது வரை நடந்த போட்டிகளில் நான் பங்கு பற்றவில்லை. மேலும், நான் இரு நூல்களைத் தெரிவு செய்து நேற்றே உரையாடல் பகுதியில் தெரிவித்திருந்தும், அதைக் கருத்தில் கொள்ளாமல் இவ்வாறு நான் தேர்ந்தெடுத்த நூலை ஆங்காங்கே மெய்ப்புப் பார்தது என் ஆர்வத்தையே குலைத்து விட்டனர்.

@Balajijagadesh: @Info-farmer: இந்த பக்கத்தைப் பார்க்கவும் ஏதும் செய்யாமல் மெய்ப்பு பார்த்தாகப் போடப் பட்டுள்ளது. இவர் போட்டியாளர் இல்லை என்றே நினைக்கிறேன்.
- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 15:37, 15 ஆகத்து 2021 (UTC)Reply

ஐயா வணக்கம்,

நான் பரிசினை நோக்கமாகக் கொள்ளாது,தமிழ் மொழி இலக்கிய வரலாறு மற்றும் தமிழர் வரலாறு இரண்டு புத்தகங்களில் விடுபட்டுள்ள மேய்ப்பு பார்க்காமல் உள்ள பக்கங்களை எல்லாம் மெய்ப்பு பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன் லதா மகேஸ்வரி .ஜெ (பேச்சு) 15:03, 20 ஆகத்து 2021 (UTC)Reply

அடுத்தடுத்த போட்டிகளில் பயனர் ஒருவர் தெரிவு செய்த நூலை அவரே முழுமையாகச் செய்து முடிக்க சில ஆலோசனைகள்

[தொகு]

அடுத்தடுத்த போட்டிகளில், தாம் தெரிவு செய்த நூலைப் பயனர் அவரே முழுமையாகச் செய்ய சில ஆலோசனைகள்:

  1. போட்டி ஆரம்பிக்கும் முன்பாக, போட்டியில் பங்கேற்க விழையும் பயனர்கள் தாங்கள் மெய்ப்புச் செய்யவிருக்கும் நூற்களில் குறைந்த பட்சம் இரண்டு நூல்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
  2. விமர்சகர் அல்லது நிர்வாகி மேலும் சில நூற்களைத் தெரிவு செய்து கொள்ளல் வேண்டும். மெய்ப்பு செய்ய வேண்டிய நூற்களைத் தெரிவு செய்யாத பயனர்களுக்கு, இந்த நூற்களை வழங்கலாம்.
  3. மெய்ப்பின் போது பயனர் ஒருவர் தெரிவு செய்த நூலை மற்ற பயனர்கள் மெய்ப்புப் பார்க்கக் கூடாது. அவ்வாறு செய்தால், மெய்ப்பு செய்த பயனரின் புள்ளிகள், நூலைத் தெரிவு செய்தவருக்கே வழங்கப் படும்.
  4. போட்டி முடிவில், நூலைத் தெரிவு செய்த பயனர் நூலை முழுமையாக மெய்ப்பு செய்யா விட்டால், மெய்ப்பு செய்யப் படாத பக்கங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு புள்ளி வீதம், அப்பயனரின் புள்ளிகள் குறைக்கப் படல் வேண்டும்.
  5. பயனர் ஒருவர் போட்டிக் காலத்தில் தாம் தெரிவு செய்த நூற்கள் அனைத்தையும் முழுமையாகச் செய்து முடித்து விட்டால், அவருக்குப் புதிய நூல் ஒன்றை வழங்க ஆவன செய்ய வேண்டும் இந்தப் புதிய நூல் முடிக்கப்படா விட்டாலும் விதி எண் (d) அவருக்குப் பொருந்தாது.
- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 16:20, 15 ஆகத்து 2021 (UTC)Reply
  • விக்கிக்குறியீடுகளை வைத்து மட்டுமே பங்களிப்பது நல்லது. ஏனெனில், புதியவர் பார்த்தால் செயற்பட தயங்குவர். எனவே, முடிந்தவரை குறியீடுகளற்று செயற்படுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். இந்திய அளவில் நடக்கும் இச்சூழலில் கலந்துரையாடி நுட்பங்களையும், வழிமுறைகளையும் அமைத்தல் இயலாது. பங்களிப்பாளர் அரக்கபரக்க செயற்படுவதால் பிறகு உரையாடுவதே சிறப்பாகும். கவனியுங்கள். இதற்குரிய உரையாடல்களை பிறகு அனைவரும் இணைந்து எப்பொழுதும் நமது தமிழ் அணி முன்னணியில் இருக்க திட்டமிடுவோம். பல திறன்பட்டவர் இத்தளத்தில் பங்களிப்பது இயல்பே. ஒருவரிடம் விதிகளைக் கூறுவதை விட, தொடர்ந்து ஒருவருக்கு உதவினால் நம்முடன் என்றும் இணைந்து செயற்படுவர். தொடர்ந்து இணைந்து இருங்கள். அதிக எண்ணிக்கையில் நம் மொழியினர் செய்வதற்கு மட்டும் இச்சூழலில் குறிப்புகளைத் தாருங்கள். மற்றவை பிறகு,--தகவலுழவன் (பேச்சு). 01:44, 21 ஆகத்து 2021 (UTC)Reply

வார்ப்புருக்கள்

[தொகு]

அடுத்த முறை போட்டி நடக்கும்போது போட்டிக்கு தேர்த்தெடுக்கும் நூல்களின் மேலடி, தேவைப்பட்டால் கீழடி போன்றவற் வார்ப்புருக்களை இயன்ற அளவு தானியக்கமாக முன்கூட்டியே போட்டுவிடுவது நல்லது. சில பயனர்களுக்கு மேலடியை இட அறிவுருத்தினாலும் அவர்கள் இடாமல் தொடர்ந்து வழக்கம்போல செய்து வருகின்றனர். அவர்களுக்கு பேச்சுப் பக்கத்தை பார்க்கத் தெரியவில்லையா என்பது தெரியவில்லை. இயன்றால் இந்த ஆண்டு போட்டி நூல்களின் மேலடிகளைக் கூட தானியக்கமாக போட்டுவிடுவது நல்லது.--அருளரசன் (பேச்சு) 06:48, 22 ஆகத்து 2021 (UTC)Reply

ஆம். செய்வோம். இது குறித்து இதன் முதல் உட்பிரிவில் விரிவாக எழுதியுள்ளேன்.(பச்சை விளக்கு விட்டு விட்டு எரியும் உட்பிரிவு) தானியங்கியில் மேலடி தரவுகள் அனைத்தும் எழுதுவது சாத்தியமன்று. நூலின் உட்தலைப்புகள் மாறி மாறி வரும் இடங்களில் தானியங்கி முறையில் இயக்க இயலாது.--தகவலுழவன் (பேச்சு). 01:02, 24 ஆகத்து 2021 (UTC)Reply

போட்டி நூல்கள் குறித்து

[தொகு]

@Balajijagadesh: @Info-farmer: போட்டியில் ஓரிரு நாட்களுக்கு புதிய நூல்களை இணைக்காமல் இதுவரை சேர்த்த நூல்களை முழுவதுமாக மெய்ப்பு செய்துவிட்டு புதிதாக நூல்களை இணைக்கலாம் என்பது என் கருத்து. இணைக்கப்பட்ட சில நூல்கள் பாதியளவேனும் மெய்ப்பு செய்யப்படாமல் உள்ளன.

எ-கா:

  1. அட்டவணை:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf
  2. அட்டவணை:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf
  3. அட்டவணை:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf
  4. அட்டவணை:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf
  5. அட்டவணை:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf

Fathima (பேச்சு) 18:20, 22 ஆகத்து 2021 (UTC)Reply

  • விக்கிமூலம் பேச்சு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 3/நூல்கள் என்ற இடத்தில் போட்டி நூல்கள் குறித்து பலர் ஏற்கனவே உரையாடல்கள் நடத்துவதால், இனி அப்பக்கத்திலேயே தொடர்க. நீங்கள் கூறியபடி செய்தல் சாத்தியமன்று. ஏனெனில், பல்வேறு மனநிலையில், பயிற்சித் திறன்களோடு இத்தளத்தில் பங்களிக்க வருகின்றனர். மற்றவர்களுக்கு முழுமையாக முடிப்போம் என்பதை, நாம் கட்டுப்படுத்துவதாக நினைத்துக் கொள்வர். என் நூலினை இணைக்கவில்லை எனில், நான் பங்களிக்க விரும்பவில்லை என்ற சூழ்நிலை உருவாவதைத் தவிர்ப்போம். நீங்கள் எளிமையான நூல்களை இணைக்க விரும்பினால் அப்பேச்சுத் தத்தலில் கூறுங்கள். அட்டவணை:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf என்பது கடினமான நூலே. தொடர்ந்து மேம்படுத்துகின்றமைக்கு நன்றி. ஓரிரு பக்கப் புலவர்குறிப்பு அதில் உள்ளது. நான் அதன் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கிறேன். மேலும், தமிழ் எண்களை எளிமையாக புரிந்து கொள்ள அட்டவணை ஒன்றை உருவாக்கித் தருகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 00:43, 24 ஆகத்து 2021 (UTC)Reply
@Info-farmer: தங்களின் மேலே குறிப்பிட்ட கருத்துக்கு 👍 ஆதரவு -- Balajijagadesh (பேச்சு) 16:35, 27 ஆகத்து 2021 (UTC)Reply

குமண வள்ளல் முனைவர் சு.சத்தியா (பேச்சு) 03:41, 28 ஆகத்து 2021 (UTC)Reply

வழிகாட்டுக

[தொகு]

இது போன்று பக்கத்தை வடிவமைப்பது எப்படி? --Fathima (பேச்சு) 12:59, 23 ஆகத்து 2021 (UTC)Reply

உட்தலைப்பாக மாற்றி, வழமை போல நிறம் மாற்றுக. நாம் பச்சையாக்கவில்லை என்பதால் முழுமையான வடிவம் கட்டாயமன்று. பொதுவாக அந்நூல் முழுவதும் 'னே' என்பது 'னை', என மாற்றவேண்டியுள்ளது. முடிந்தால் நூல் முழுவதும் மாற்ற முயற்சிக்கிறேன். --தகவலுழவன் (பேச்சு). 01:00, 24 ஆகத்து 2021 (UTC)Reply

@Fathima Shaila: இங்கு செய்யப்பட்டுள்ள மாற்றத்தைப் பார்க்கவும். {{float left}} என்னும் வார்ப்புரு பயன்படுத்த வேண்டும். -- Balajijagadesh (பேச்சு) 05:09, 28 ஆகத்து 2021 (UTC)Reply

சரி செய்ய வேண்டுகோள்

[தொகு]

அட்டவணை:தமிழக வரலாறு.pdf என்ற நூலில் மெய்ப்பு பார்க்கப்படாமல் இருக்கும் நிறைய பக்கங்களில் மூலப்பக்கம் தெரிவதில்லை. இதனைச் சரிசெய்ய வேண்டுகிறேன். --சத்திரத்தான் (பேச்சு) 17:05, 24 ஆகத்து 2021 (UTC) பக்கம்:தமிழக வரலாறு.pdf/207 நீங்கள் மெய்ப்புப்பார்த்த இப்பக்கமும் எனக்குத் தெரியவில்லை. எனவே இது உடனடியாக செய்யக்கூடியதன்று என்றே எண்ணுகிறேன். ஓரிரு நாட்களுக்குப் பிறகு தொடர்ந்து இந்த வழு இருப்பின், இந்த திட்டப்பக்கத்தில் தெரிவிக்க வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 02:23, 25 ஆகத்து 2021 (UTC)Reply