உள்ளடக்கத்துக்குச் செல்

அசோகனுடைய சாஸனங்கள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக





அசோகனுடைய சாஸனங்கள்

குமபகோணம் கவர்ன்மெண்ட் காலெஜ்

சரித்திர ஆசிரியர்

R. ராமய்யர், M. A., L. T., அவர்களால்

மொழிபெயர்க்கப்பட்டு,

அவதாரிகை குறிப்புரை முதலியவற்றுடன்

பதிப்பிக்கப்பெற்றன.

சென்னை :

ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ்

1925

ரிஜிஸ்தர் செய்தது



PRINTED AT

THE CAXTON PRESS

MADRAS.

முகவுரை

அசோகனது சாஸனங்கள் உலக சரித்திரத்திலேயே ஒரு புதுமை எனலாம். ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களும் வேறு பலவித புராதன லிகிதங்களும் நமக்கு இப்புவியின் பல பாகங்களிலிருந்து கிடைத்திருக்கின்றன ; ஆயினும் தன் பிரஜைகளின் க்ஷேமத்தின் பொருட்டு, தர்மோபதேசங்களை எழுதிவைத்த அரசனை நாம் வேறெங்குங் கண்டிலேம். இந்த லிகிதங்கள் இந்திய சரித்திரத்தில் மிகவும் ஏற்றமுடைய தஸ்தாவேஜுகள், முதலாவது, இவற்றைவிடப் பழைமையான லிகிதங்கள் அநேகமாக இந்தியாவிற் கிடையா. இவற்றின் கருத்தை அறியும் பொருட்டுச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இந்தியாவிற் சிலாசாஸன ஆராய்ச்சிக்குத் தொடக்கமாகும். இரண்டாவது, இவற்றிற் காணப்படும் லிபி (எழுத்து) நம் நாட்டில் தற்காலம் உபயோகப் படுத்தப்படும் பல எழுத்துக்களின் ஆதியை விளக்குகிறது. மூன்றாவது, பௌத்த மத சரித்திரத்தை விளக்க இச்சாஸனங்கள் இன்றியமையாதன, நான்காவது, இந்த லிகிதங்களிலுள்ள பாஷை கி. மு. மூன்றாவது நூற்றாண்டில் வடஇந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழியானது வடமொழியோடும் பிராக்ருத நடைகளோடும் எவ்வித ஒற்றுமை வேற்றுமைகளை உடையனவாயிருந்தன என்பதை விளக்கும். இலக்கியமாகக் கருதுமிடத்தும் அசோக சாஸனங்கள் மிகச் சிரேஷ்டமானவைகளே. இவற்றிற் பெருந்தன்மையுடைய ஓர் அரசன் இதயத்தைக் காண்கிறோம் ; அவனுடைய உள்ளத்தின் உயர்வும் கனிவும் எவரையும் வியப்படையச் செய்யுமென்பதிற் சந்தேகமில்லை.

இச்சிறு புஸ்தகத்தை வாசிக்கும் அன்பர் யாவரும் இந்திய சரித்திரத்தைப்பற்றிய ஆராய்ச்சிகளிற் பிரியம் கொள்ளத் தூண்டப்படலாம். ஏனென்றால், சரித்திரத்தின் மூலாதாரமாயுள்ள தஸ்தாவேஜுகளைத் தாமே படித்து விஷயங்களை ஆய்வது மிகவும் இன்பமான காரியமாயிருக்கவேண்டும். எவ்வளவு விரிவாக எழுதப்பட்டிருக்கும் சரித்திரப் புஸ்தகங்களைப் படிப்பதும் இதற்கு நிகராகாது.

இப்புஸ்தகத்தில் அவதாரிகை சற்று விரிவாக அமைந்திருப்பது ஒரு குறையாகாதென்று கருதுகிறேன். அசோகன் சரிதை, ஆட்சிமுறை, அக்காலத்துப் பெருமையைத் தெரிவிக்கும் அறிகுறிகள் முதலியவற்றை விவரிப்பது இச்சாஸனங்களின் முக்கியத்தை உணருவதற்கு அவசியமானதால் அவதாரிகையில் இவ்விஷயங்கள் விளக்கப்பட்டிருக்கின்றன.

சாஸனங்களின் மொழிபெயர்ப்பு, இங்கிலீஷ் பெயர்ப்புக்களை மட்டும் அனுஸரித்திராமல் மூலத்தோடும் ஒப்பிட்டுச் சீர்திருத்தப்பட்டிருக்கிறது. பலவித இயற்கை வித்தியாசங்கள் நிறைந்திருந்தபோதும் இந்தியாவில் நுட்பமான ஒற்றுமை உள்ளூறப் பரவியிருப்பதுபோல, இந்திய மொழிகளுக்கும் நெருங்கிய உறவு. இருக்கின்றது. உதாரணமாக, ஸம்ஸ்கிருதம் பிராகிருதம் மூலமாக வந்த சொற்கள் பல பாஷைகளுக்கும் பொதுவாக உள்ளன; இஃதன்றி, வாசகரீதியிலும் அணியிலும் ஒற்றுமை காணப்படுகின்றது. ஆதியில் இந்நாட்டுப் பாஷையொன்றில் எழுதப்பட்ட இலக்கியத்திற்கு மற்றொரு இந்தியமொழியிற் செய்யப்படும் பெயர்ப்பு இங்கிலீஷ் மொழிபெயர்ப்பைவிட மேன்மையாயிருப்பது இயல்பன்றோ? ஆகையால் அசோக சாஸனங்களின் தமிழ் மொழி பெயர்ப்பு இங்கிலீஷ் மொழிபெயர்ப்பைவிட மூலத்தின் போக்கை விளக்க ஏற்றதாயிருக்கவேண்டும். அப்படியில்லாவிட்டால் அஃது ஆசிரியன் குற்றமேயன்றி வேறன்று; கருத்து விளங்குவதற்குச் சிறிதும் கஷ்டமின்றியும் சிலசமயம் தன்னை அறியாமலும் மூலத்திலுள்ள சொற்கள் இத் தமிழுரையில் வந்திருப்பது இவ்வபிப்பிராயத்துக்குச் சான்றாகும்.

இவ்வித பிரயத்தனங்களிற் கிடைத்த உதவிகளைக் கூறுவது மரபு; இஃது எனது பிரியமான கடமையாகவுமிருக்கின்றது. சென்னை சர்வகலாசாலையின் இந்திய சரித்திர ஆசிரியராகிய டாக்டர் எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரவர்கள் புத்தகத்தின் எழுத்துப் பிரதியைப் பரிசோதித்துச் சில குற்றங்குறைகளைத் தீர்த்துள்ளார்கள். திருவனந்தபுரம் கிரந்த பரிபாலனாலயத்தைச் சேர்ந்த ம-௱-௱-ஸ்ரீ ஹரிஹரசாஸ்திரிகள் எனக்கு முதலில் இம் முயற்சிக்கு ஊக்கத்தைக் கொடுத்தார். மற்றும் பல நண்பர்கள் இதன் எழுத்துப்பிரதியையோ அல்லது அச்சுப் பிரதியையோ வாசித்துப் பல குறைகளைத் தீர்த்திருக்கின்றனர். இங்கிலீஷில் அசோகனைப்பற்றிய வியாசங்களும், புஸ்தகங்களும், விசேஷமாக ஸ்ரீ. வின்ஸெண்ட் ஸ்மித்தின் "அசோகன்" என்ற புஸ்தகமும் ஸ்ரீ பூலரின் சாஸன மொழிபெயர்ப்பும் எனக்கு மிகுந்த உபயோகமாயிருந்தன. இந்தியன் ஆன்டிக்குவரி முதலிய ஆராய்ச்சிப் பத்திரிகைகளில் அசோக சாஸனங்களில் வரும் சொற்கள், சொற்றொடர்கள், வாக்கியங்கள் முதலியவற்றின் கருத்தைப் பற்றிப் பல வாதங்கள் வந்துள்ளன. இவற்றையும் நான் இயன்றவாறு உபயோகப்படுத்தி யிருக்கிறேன்.

70-ம் பக்கத்திலுள்ள சித்திரமும் 150-ம் பக்கத்திலுள்ள கல்வெட்டும் "எப்பிக்ராபியா இந்திக்கா" VIII, V ம் வால்யுங்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

சாஸனங்களின் மூலத்தையும் தேவநாகர எழுத்திலோ கிரந்த எழுத்திலோ எழுதி இத்துடன் பிரசுரஞ் செய்யவேண்டுமென்ற என் விருப்பம் விரைவில் கைகூடுமென்று நினைக்கிறேன். மொழி பெயர்ப்பை மூலத்தோடு ஒப்பிடச் சௌகரியப்படுமாறு ஒவ்வொரு சாஸனமும் மூலத்தில் இத்தனை வாக்கியங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனவென்று அதன் கீழுள்ள குறிப்புக்களிற் காட்டப் பட்டிருக்கின்றன, அசோக லிகிதங்கள் 'எப்பிக்ராபியா இந்திக்கா' I, II, III, V, VIII வால்யுங்களிலும் இந்தியன் ஆன்டிக்குவரி. XIX, XX, XXII வால்யுங்களிலும் ஆங்கில எழுத்திற் பிரசுரமாயிருக்கின்றன. கல்கத்தா யூனிவர்விட்டியின் பதிப்பு இச்சாஸனங்களை கைக்கு அடக்கமாக ஒரு சிறு புத்தகமாக்கியிருக்கிறது. இவற்றில் ஆங்கில எழுத்தில் எழுதிப் பிரசுரஞ் செய்யப்பட்டிருக்கும் மூலத்தை இத்தமிழ் மொழிபெயர்ப்புடனும் அச்சிட உத்தேசிக்கின்றேன்.

பொருளடக்கம்


அவதாரிகை

I இந்தியாவின் பூர்வசரித்திர ஆராய்ச்சி
சரித்திர அறிவின் வளர்ச்சி. பூர்வ இந்திய சரித்திரத்தின் ஆதாரங்கள். அசோகனது சாஸனங்களின் கருத்தை விளக்கிய ஆராய்ச்சிகள். ... 1—8
II. அசோகன் சரிதை:-
மகததேசத்தின் பெருமை. பிந்துசாரன். அசோகனைப் பற்றி ஐதிஹ்யங்களிலிருந்து கிடைக்கும் விவரங்கள். அரசன் பட்டாபிஷேகம், கலிங்கயுத்தம். பௌத்தமதத்தின் ஸ்பர்சம். தீர்த்த யாத்திரைகள். துறவி அரசு நடத்திய விந்தை. தர்மப்பிரசாரம் செய்தல். வெகு தூரத்துள்ள ஐந்து அரசருடன் உறவு. இதிலிருந்து கிடைக்கும் "ஸம காலத்துவம்." குணதிசை உலகம் குடதிசை உலகத்தைச் சந்தித்தது. ஆஜீவகர்களுக்குக் குகைகள் செய்தல். ஸ்தம்பசாஸனங்களைப் பிரசுரஞ் செய்தல். பௌத்த மகாஸபை. அசோகன் குணம். அசோகனுக்குப்பின் வந்த மோரிய அரசர். ... 8—30
III. அசோகன் தர்மம்:—
அசோகன் காலத்தில் பௌத்த மதத்தில் ஏற்பட்ட மாறுதல்கள். பௌத்த சங்க சபைகள். மூன்றாவது சங்க சபை. ஸன்மார்க்க போதனையே பௌத்த மதத்தின் ஸாரம் என்க. மூட நம்பிக்கைகளைக் கண்டித்தல். ஜீவ இம்ஸை நிவாரணம். சுவர்க்கத்தில் நம்பிக்கை. அசோகனுக்குப் பின் பௌத்த மதத்தில் ஏற்பட்ட மாறுதல்கள். ... 31-43
IV. அசோகன் அரசாட்சி:—
அசோகன் துரைத்தனம் முன்னிருந்ததன் தொடர்ச்சியே. அரசனது புது நோக்கங்கள். சமரஸபாவம். க்ஷேமாபிவிர்த்திக்கான புதுஏற்பாடுகள். விவசாயம், கட்டிடங்கள், சாஸனங்களிற் கூறப்படும் அதிகாரிகள். அனுஸம்யானம். அசோக ஏகாதிபத்தியத்தின் விரிவு. ...... 43-58
V. அக்காலத்துப் பழம்பொருள்கள்:—
இவற்றிலும் பழமையானவை இந்தியாவில் கிடையா. அசோகனுடைய வேலைகள். இவற்றின் தற்கால அறிகுறிகள். ஸ்தூபங்கள். ஸாஞ்சிஸ்தூபம். பர்க்ஹூத் ஸ்தூபம், கயை ஸ்தூபம், ஸ்தூபங்களில் உண்டான மாறுதல்கள். குகைகள். ஸ்தம்பங்கள். இவற்றின் சிற்பத்திறமை. இந்தச் சிற்பத்தைப் பற்றிய மதிப்பு. .... 58-69
VI. அசோக எழுத்து:—
இருவித புராதன லிபிகள். பிராம்மி லிபி இந்திய எழுத்துக்களுக்கு மூலாதாரம். இந்திய பாஷைகளுக்கு லிபி ஏற்பட்ட விதம். கரோஷ்டி லிபி. ... 69-73
VII. பிரியதர்சி அரசன் கல்வெட்டுக்கள்:—
இவற்றின் பாகுபாடு. இவற்றின் தன்மை. வாசகரீதி. சாசனங்கள் அல்லாத லிகிதங்கள். லிகிதங்களின் பிரிவு. அசோக லிகிதங்களின் பாஷை. இலக்கணக் குறிப்பு. .... 73-80

சாஸனங்கள்

i. உப சாஸனங்கள் .. .. .. .. 83-87
ii. பாப்ரு சாஸனம். . . 88-90
iii. பதினான்கு சாஸனங்கள். . 91-119
iv. கலிங்க சாஸனங்கள். . . 120-127
v. ஸ்தம்ப சாஸனங்கள். . 128-145
vi. ஸார்நாத் சாஸனங்கள். . . 146-148
vii. ஸ்மாரக லிகிதங்கள். . . 149-151
viii. இராணி காருவாகியின் லிகிதம். . 152
ix. தானப் பிரமாண லிகிதங்கள். . . 153-154

அனுபந்தம்

i. கால அட்டவணை. ...157-158
ii. பௌத்தமறை நூல்கள் ...159-173
iii. இதர பாஷைகளில் அசோக சாஸனங்களின் பதிப்புகள். ...174-175
அட்டவணை. ...177-191


சித்திரங்கள்

I. லௌரியா நந்தன்கர் ஸ்தம்பம் ... 66
2. ஸார்நாத் ஸ்தம்பத்தின் சிகரம் ... 70
3. அசோக சாஸனங்களுள்ள ஸ்தலங்களைக்காட்டும் இந்தியா படம் (எதிரே) ... 80
4. பிராம்மி எழுத்து, கரோஷ்டி எழுத்து ... 81
5. ரும்மின்தேயீ லிகிதம் ...150

பிழை(sic) திருத்தம்

பக்கம் வரி பிழை திருத்தம்
2 11 ளுக்குக் கிடையில் ளுக்கிடையில்
9 12 முனிவருன் முனிவரின்
18 18, 19 ரும்மின்தேயின் ரும்மின்தேயியின்
20 20 ஏகாதிபத்தியத்துக் குப்பட்ட ஏகாதிபத்தியத்துக் குட்பட்ட
22 8 விருஷத்தின் விருக்ஷத்தின்
33 11 ஐந்தாம் நான்காம்
37 25 பிராசாரர் - பிரசாரர்
38 ‘மார்ஜின்' திபௌத்த பெளத்த
40 3 எட்டாம் ஒன்பதாம்
48 12 இரண்டாராயிரம் இரண்டாயிரம்
83 9 காணப்படுகிறது காணப்படுகின்றன
95 7 கி.பி. கி.மு.
104 II பற்றலாம். பற்றலாம்;
106 3 இச்சாஸனங்கள் இச்சாஸனங்களில்
122 15 சோம்பறுற்றோர் சோம்பலுற்றோர்
128 11 நிராவண்ச் நிவாரணச்
130 17 அந்த மகாமாத்திரர் அந்தமகாமாத்திரர்
131 15 தேன்; தேன்,
137 22 பக்ஷங்களில் பக்ஷங்களிலும்
148 19 ஊர்களுக்கும் ஊர்களிலும்
20 பிரதேசங்களுக்கும் பிரதேசங்களிலும்
152 3 களில் களின்
153 24 உள்ளத்தில் உள்ளவற்றில்
174 12 ஸூரேந்திரநாத் ஸுரேந்திரநாத்
18 விஸ்மித் ஸ்மித்
"https://ta.wikisource.org/w/index.php?title=அசோகனுடைய_சாஸனங்கள்&oldid=1398957" இலிருந்து மீள்விக்கப்பட்டது