கம்பன் சுயசரிதம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

கம்பன் சுயசரிதம்
[கட்டுரைத் தொகுப்பு]

 

கலைமணி
தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்


 

புதிய இலக்கு புதிய தடம்


நிவேதிதா பதிப்பகம்
எண்.1, 3ஆவது மாடி,
புதூர் 13 ஆவது தெரு,
அசோக் நகர், சென்னை - 83.
✆ : 55688527First Edition : July 2005ΚΑΜΒΑΝ SUΥΑSΑRΙΤΗΑΜ

by
T. M. Bhaskara Thondaimaan

Сору Right :
Rajeswari Natarajan
Sarojini Subramaniam

Pages : 192

Price : Rs. 50.00


Published by
ΝΙVΕΤΗΙΤΗΑ ΡΑΤΗΙΡΡΑGΑΜ
No. 1, 3rd Floor,
Puthur 13" Street, Ashok Nagar,
Chennai- 600083.
Ph : 55688527

Laser by
Amma Systems
Chennai- 600 017.
☎:2436f518

Printed at :
S K B Printers, Chennai - 600 015.


முன்னுரை


“கல்வியில் பெரியவன் கம்பன்”
“கல்விச் சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு”

என்றெல்லாம் சின்னஞ்சிறு வயதிலேயே, பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இந்தக் கம்பன் யார் என்று தெரியாமலேயே, நாமும் கிளிப் பிள்ளை மாதிரி, பள்ளியில் படித்ததை சொல்லிக் கொண்டிருந்திருக்கிறோம். பின்னர், வளர்ந்து, பெரிய வகுப்புகளுக்கு வந்தபின்,

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர்போல், இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை”

என்ற பாரதியின் பாடலைப் படிக்க நேர்ந்தபோதுதான், ஆகா! இந்தக் கம்பன், பெரிய ஆள் போலிருக்கிறதே, அதனால்தான், கம்பனுக்குக் கவிச்சக்கரவர்த்தி என்று பட்டம் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள், கற்றறிந்த பெரியோர்கள் என்று உணர ஆரம்பித்திருக்கிறோம். அப்படி என்னதான் இந்தக் கம்பன் பாடியிருக்கிறான், இத்தனை பேரும் புகழும் எப்படி வந்தது என்று, அவன் ஆக்கித் தந்த கம்பராமாயணத்தைப் படிக்க முனைகிறோம். படிக்கப் படிக்க அதன் சுவை, நம் நாவில் மட்டுமல்ல, நம் உள்ளத்திலும் உணர்விலும் ஊறி நமக்கு உவகை ஊட்டுகிறது. கதையென்னமோ வால்மீகி முனிவர் தந்த கதைதான். ஆனால் அந்தக் கதையை அங்கங்கே, செதுக்கிச் சீராக்கி, தமிழ்ப் பண்பாட்டிற்கேற்ப, கம்பன் கொண்டு செல்கின்ற திறம், கம்பன் கவி நலம், கம்பன் பாத்திரப் படைப்புகள் இவையெல்லாம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. அவன் பாடிச் சென்றுள்ள பன்னீராயிரம் பாடல்களையும் நாம் படித்து அனுபவிக்க அவகாசம் இருக்கிறதோ இல்லையோ, அப்படியெல்லாம் சிரமப்பட வேண்டாம் என்றே பி.ஜி. ஆச்சார்யா, முதுபெரும் புலவர் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார், ரசிகமணி டிகேசி போன்றவர்கள், அந்தக் கம்பராமாயணத்திலிருந்து தெள்ளி எடுத்து, அவற்றைக் கம்ப சித்திரமாகவும், கம்பராமாயண சாரமாகவும், கம்பர் தரும் காட்சியாகவும் நமக்குத் தந்திருக்கிறார்கள். அவர்கள் தலைமையின் கீழ் ஒரு கம்பன் திருக் கூட்டமே தென் தமிழ்நாட்டில் உருவாகிவிட்டது. கம்பனுக்கு முதன்முதலாக ‘திருநாள்’ கொண்டாடிய பெருமை திருநெல்வேலிக்கே உரியது. பின்னர், கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்கள் காரைக்குடியில் கம்பன் கழகத்தை நிறுவி, ஆண்டுதோறும் நான்கு நாட்கள் திருவிழா கொண்டாடி வந்தார்கள். ‘கம்பன் அடிப்பொடி’ என்று பவ்யமாகப் பெயர் சூடிக் கொண்டாலும், கவிச் சக்கரவர்த்தி கம்பனுடைய தானைத் தளபதி அவர்கள்தான். கம்பன் அடியார்கள் அத்தனை பேரையும், கம்பன் பெயரைச் சொல்ல, கட்டி இழுத்து வந்து காரைக்குடி கம்பன் விழா மேடையில் ஏற்றிவிடுவார்கள். ரசிகமணி டிகேசி, குன்றக்குடி அடிகளார், பாஸ்கரத் தொண்டைமான், ஜஸ்டிஸ் மகாராஜன், பேராசிரியர் சீனிவாசராகவன், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., அ.ஞானசம்பந்தன், கம்பராமன், தோழர் ஜீவா, எஸ்.ராமகிருஷ்ணன் என்று கம்பன் அடியார் கூட்டமே வந்து குவிந்துவிடும். நானும் என் திருமணத்துக்குப் பின், ஏறத்தாழ இருபது ஆண்டுகள், அந்தக் கம்பன் விழா மேடை ஏறியிருக்கிறேன். என் கணவரும் ஏறி இருக்கிறார். கிடைத்தற்கரிய பேறு அது. இன்றும் காரைக்குடியில் கம்பன் விழா தொடர்ந்து நடைபெறுகிறது. காரைக்குடியில் மட்டுமல்ல, கோவையிலும், பாண்டிச்சேரியிலும், சென்னையிலும் அதன் கிளைகளாகக் கம்பன் விழாக்கள் நடக்கின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது, கம்பன் எப்படி தமிழ் அறிஞரைக் கவர்ந்திருக்கிறான், கவிச்சக்கரவர்த்தியாகத் தமிழ் நெஞ்சங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கிறான் என்று நாம் அறிய முடிகிறது.

காரைக்குடி கம்பன் விழாக்களின் போது ஆண்டுதோறும் மலர் வெளியீடும் நடந்தது. அந்த மலர்களில் எல்லாம் என் தந்தையார் பாஸ்கரத் தொண்டைமானின் கட்டுரைகளும் தவறாமல் இடம்பெற்றன. அவற்றையெல்லாம் தேடி எடுத்துப் பதிப்பிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய ஆசை. அவற்றைத் தேடிய போது, அத்தனை கட்டுரைகளும் கிடைக்கவில்லை. ‘கம்பன் ஒரு சோக சிகரம்’ என்று ஓர் அருமையான கட்டுரை. அது எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை. அது கிடைக்காமற் போனது பெரிய சோகம். கிடைத்தவற்றை மட்டும் தொகுத்துத் தந்திருக்கிறேன். அவற்றை நூலாக்கித் தர நிவேதிதா பதிப்பகம் முன் வந்திருக்கிறது.

இந்த ஆண்டு என் தந்தையாரின் நூறாவது ஆண்டு. இந்தச் சந்தர்ப்பத்தில், அச்சேறாத தந்தையாரின் நூல்களை எல்லாம் தமிழ் உலகத்துக்கு வழங்கிவிட வேண்டும் என்றும் ஒரு பெரிய ஆர்வம் என்னுள் எழுந்திருக்கிறது. ஆர்வம் என்பதைவிட வேகம், வெறி என்று கூடச் சொல்லலாம் தவறில்லை. நானும் வாழ்வின் ஓரத்துக்கு வந்துவிட்டேன். ஆகவே உடனடியாகச் செய்வதென்று முனைந்துவிட்டேன். நிவேதிதா பதிப்பக உரிமையாளர், வீடுதேடி வந்து என் வேகத்துக்கு மேலும் ஊக்கம் தருகிறார். அழகாக அச்சிட்டுத் தந்திருக்கிறார். அவருக்கு நெஞ்சு நிறைந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு ஆயிரமாயிரம் படையல்கள். இது மேலும் ஒரு படையல். இதனை என் தந்தையின் உடன்பிறவா சகோதரரும், எனக்கு வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொடுத்து அரவணைத்து வரும் என்றும் என் வணக்கத்துக்கு உரியவருமான கம்பன் அடிபொடி, கவிச்சக்கரவர்த்தியின் தானைத் தளபதி சா. கணேசன் அவர்களின் திருவடிகளில் சேர்ப்பதில் மகிழ்ச்சியும் நிறைவும் பெறுகிறேன்.

இராஜேஸ்வரி நடராஜன்

பாஸ்கர நிலையம்,

சாஸ்திரி நகர்,

சென்னை - 20.

பொருளடக்கம்இம்பர் நாட்டில் செல்வம் எலாம்
        எய்தி அரசாண்டிருந்தாலும்
உம்பர் நாட்டில் கற்பகக்கா
        ஓங்கும் நீழல் இருந்தாலும்
செம்பென் மேரு அனைய புயத்
        திறல் சேர் இராமன் திருக்கதையில்
கம்ப நாடன் கவிதையைப் போல்
        கற்போர்க்கு இதயம் களியாதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=கம்பன்_சுயசரிதம்&oldid=1490066" இருந்து மீள்விக்கப்பட்டது