பேச்சு:முதற் பக்கம்
தலைப்பைச் சேர்-
படவிளக்கம்2}}
-
படவிளக்கம்2]]
</nowiki> </gallery> மெய்ப்பு பார்க்க விரும்பும் புத்தகத்தின் இணைப்பை பின்வருமாறு பதிவிட்டுள்ளேன். http://ta.wikisource.org/s/nlz
"Wikisource - The Free Library"
[தொகு]Hello. Please add Tamil (ta:) translations of "Wikisource - The Free Library" to the chart in many languages. Thanks! Dovi 08:55, 10 மே 2007 (UTC)
- Done. Thanks for the reminder--Ravidreams 11:24, 10 மே 2007 (UTC)
It good
கட்டற்ற உள்ளடக்கமா?
[தொகு]கோபி, இங்கு இடப்படுபவற்றை காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்ட உள்ளடக்கம் என்று மட்டுமே கருத இயலும். கட்டற்ற உள்ளடக்கம் என்று கருத இயலாது. திருக்குறள் போன்றவற்றை மாற்றி எழுத அனுமதிக்க இயலாது அல்லவா?--Ravidreams 14:25, 10 மே 2007 (UTC)
- ரவி, free content கட்டற்ற உள்ளடக்கம் தானே. திருக்குறள் போன்றவற்றை இங்கே தன்னிச்சையான மாற்றங்களுக்கு அனுமதிக்க முடியாதுதான். ஏனெனில் நாம் இங்கு தொகுப்பது மூலங்களை (source). ஆனால் திருக்குறளை எவரும் எப்படியும் பயன்படுத்தலாமல்லவா? கோபி 15:53, 10 மே 2007 (UTC)
ஆங்கில விக்கிபீடியா கட்டுரை free content is also free to be modified என்கிறது. அதனால் தான் கட்டற்ற உள்ளடக்கமா என்று கேட்டேன்? கட்டற்ற நூலகம் என்பது சரி. ஏனெனில் ஏற்கனவே உள்ள நூல்களை யாரும் மாற்ற முடியாது. free content என்பதை விட free use என்று சொன்னால் குழப்பம் குறையுமா? விக்கிபீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம். அதன் உள்ளடக்கத்தை யார் வேண்டுமானால் மாற்றலாம். அதே போல் கட்டற்ற நூலகப் பக்கங்களையும் யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்று நினைத்து விடக்கூடாது அல்லவா? இங்கு நூல்களை இட்ட பின் அவற்றைப் பூட்டி வைப்பது அவசியம். பக்கங்களில் ஏதும் பிழை இருந்தால் அது குறித்து ஆதாரப்பூர்வமாகப் பேச்சுப் பக்கங்களில் தெரிவித்தால் பிறகு தேவையான மாற்றங்களை நிர்வாகிகள் செய்யலாம். --Ravidreams 16:08, 10 மே 2007 (UTC)
- ஆம், நூல்களை இட்டுச் சரிபார்த்தபின்னர் பூட்டுவதே சரியானது. மேலும் கட்டற்ற நூலகப் பக்கங்களையும் யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்று நினைத்து விடக்கூடாதுதான்...... --கோபி 16:31, 10 மே 2007 (UTC)
ரவி, கட்டற்ற உள்ளடக்கம் என்ற பிரயோகம் சரியானதாகவே படுகிறது. இங்கே உள்ள உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. ஆங்கிலப் பக்கங்களைப் பார்க்கும்போதும் கட்டற்ற நூலகம், கட்டற்ற உள்ளடக்கம் ஆகிய பிரயோகங்கள் சரியானவையாகவே எனக்குப் படுகின்றன. --கோபி 22:48, 10 மே 2007 (UTC)
அதன் பங்களிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட - என்ற வாசகத்தை நீக்கிய பிறகு தெளிவாக உள்ளது. அப்படியே இருக்கட்டும்.--Ravidreams 05:14, 11 மே 2007 (UTC)
கோபி, கட்டற்ற என்பது பொருத்தமே. அதாவது திருக்குறளை நீங்கள் விரும்பியபடி மாற்றியெழுதலாம். இங்குருக்கும் மூலத்தை மாற்ற முடியாது. மாற்றியது நன்று என்றால் அதை விக்கி நூல்களில் தரலாம். --Natkeeran 03:23, 18 மே 2007 (UTC)
Tamil Pages missed on wikisource.org
[தொகு]Hi, the Tamil pages are missed on the wikisource.org. See oldwikisource:Category:Tamil. According to the bugzilla:9831 the Special:import page is enable to import these page to here. Is someone considering to request a temporary adminship on the m:Requests for permissions to do it and to edit some special pages, like the MediaWiki:Common.css? m:User:555 03:45, 11 மே 2007 (UTC)
Hi, since we have a very vibrant community here from other tamil wikimedia projects, we are on the process of electing sysops soon. And then, we will address the import issues. Thanks--Ravidreams 05:11, 11 மே 2007 (UTC)
முதற் பக்க வடிவமைப்பு
[தொகு]ரவி, முதற்பக்கம் வடிவமைக்கையில் [1] இனைக் கவனத்தில் கொள்ளலாம். தனியே நூல்களைப் பட்டியலிடாது சற்று விளக்கமாக இருப்பது நன்று. முதற்பக்கத்தை அழகாக வடிவமைக்க உங்களால் முடியும் என்பதால் இந்த வேண்டுகோள். நன்றி. --கோபி 11:26, 12 மே 2007 (UTC)
ஆங்கில விக்கிசோர்சில் உள்ளதுபோல அறிமுகம் ஒரு சதுரத்தினுள்ளும் பிரதான பகுப்புக்களுக்கான தொடுப்புக்கள் அதனருகிலும் உள்ளதாக அமைப்பது பொருத்தமாயிருக்குமா? புதிய உரைகள் போன்றவை இப்போதைக்கு அவசியமில்லை. முதற்பக்க உள்ளடக்கத்தை (Mainpagefeature) த.விக்கிபீடியா போன்று தனி வார்ப்புருவாக அமைப்பதும் நல்லது. கோபி 11:43, 12 மே 2007 (UTC)
ஆங்கில விக்கிசோர்ஸ் பின்பற்றி பட்டியல் இடலாம். அதற்கு முன் நூல்களில் பகுப்புகள் இட வேண்டும். காலவரிசை, ஆசிரியர் வரிசை, பொருள் வரிசை ஆகியவை தேவை.--ரவி 12:41, 12 மே 2007 (UTC)
விக்கி மேற்கோள் சின்னம்
[தொகு]விக்கி மேற்கோள்களில் இருப்பது இலங்கைக் கொடி அல்லவா?--Sivakumar 13:27, 16 மே 2007 (UTC)
- இப்போது சரியாகி விட்டது.--Sivakumar 21:06, 16 மே 2007 (UTC)
வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி
[தொகு]வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி வகைப்படுத்தலையும் முதற்படுத்தல் ஒழுங்கமைப்பையும் மாற்றியமைக்கலாம். --Natkeeran 03:34, 18 மே 2007 (UTC)
கல்கி
[தொகு]பார்க்க: பேச்சு:பொன்னியின் செல்வன்
Unicode Tamil OCR
[தொகு]Is there a Tamil OCR that can translate scanned Tamil images to unicode Tamil text? 59.92.80.42 09:01, 14 ஜூன் 2007 (UTC)
பொன்விழி மட்டுமே நான் அறிந்து தமிழிக்கு உள்ள ஒரே எழுத்துணரி மென்பொருள் - http://www.ildc.gov.in/GIST/htm/ocr_spell.htm --ரவி 10:34, 19 ஜூன் 2007 (UTC)
- பொன்விழியை, நண்பரின் துணைக்கொண்டு சோதனைச் செய்திருக்கிறேன். அச்சுக்காகிதம் மிகத்தரமானதாக இருந்தால், 80% சரியாக வருகிறது. அதுவும் கணினி அச்சாக இருக்க வேண்டும். மற்றவற்றில் சரியில்லை. இத்தளத்தில் க்னு தமிழ் ஒளிசார் எழுத்துரு காணல் கிடைக்கிறது. இதில் சோதனை முயற்சி எதுவும் செய்யவில்லை. -- தகவலுழவன் 17:39, 11 செப்டெம்பர் 2009 (UTC) {தொடர்புக்கு..}
திருக்குறள் பிற்காலத்து கவிதையா?
[தொகு]வகைப்படுத்தல் பற்றி சற்று அலசவேண்டும்...--Natkeeran 15:09, 15 ஜூலை 2007 (UTC)
- திருக்குறள் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தது. ஆதலால் சங்ககாலத்துக்குப் பிற்காலத்தது என்பது பொருத்தமானது. முதற்பக்கத்தில் அனைத்துப் படைப்புக்களையும் பட்டியலிடுவது பொருத்தமோ சாத்தியமோ அற்றது. த.வி போல முதன்மைப் பகுப்புக்கள் வருவது பொருத்தம். ஆங்கில விக்கிமூலம் போல அமைக்க முயலலாம். நன்றி. --கோபி 20:40, 19 ஜூலை 2007 (UTC)
Best Wishes!
[தொகு]<it>
- Congratulazioni!
- Possa questa Wikisource divenire una ricca e autorevole biblioteca!
<en>
- Congratutions!
- May this Wikisource become a rich and authoritative library!
A warm welcome from it,wikisource community.
Bot flag request for பயனர்:கணினி
[தொகு]- Bot operator: User:White Cat (Commons:User:White Cat) - En-N, Tr-4, Ja-1
- List of botflags on other projects: Bot has a flag on wikimedia (meta,commons) wikipedia (ar, az, de, en, es, et, fr, is, ja, ku, nn, no, ru, sr, tr, uz, simple...) (See: m:User:White Cat#Bots)
- Purpose: Interwiki linking, double redirect fixing, commons delinking (for cases where commonsdelinker fails)
-- Cat chi? 18:13, 16 மார்ச் 2008 (UTC)
I am a new comer. is there any pages like reference - computer , reference- miscellaneous etc. to discuss any doughts and clarify something. thanks..
குறுந்தொகை
[தொகு]Page Administrator - குறுந்தொகை பக்கத்தை முதல் பக்க அட்டவணையில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். Digitalinputs 17:08, 27 அக்டோபர் 2008 (UTC)
பத்துப் பாட்டு என்ற தொகுப்பின் கீழ் (௧)திருமுருகாற்றுப் படை (௨) பொருநராற்றுப் படை (௩) பெரும்பாண் ஆற்றுப்படை (௪) சிறுபாண் ஆற்றுப்படை (௫)முல்லைப் பாட்டு (௬) மதுரைக் காஞ்சி (௭) நெடுநல் வாடை (௮)குறிஞ்சிப் பாட்டு (௯)பட்டினப் பாலை (௧௦) மலைபடுகடாம் என பத்து நூல்களும் இடம்பெறும் வகையில் முதற் பக்கப் பட்டியல் அமைவது சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது . இதே போல் எட்டுத் தொகை நூல்களும் வரிசைப் படுத்தப் படுவது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.--MUTTUVANCHERI NATARAJAN 14:50, 28 ஜனவரி 2011 (UTC)
சங்க காலம்
[தொகு]'சங்கக் காலம்' என ஒற்று (க்) மிகுத்து எழுதுவது பிழைவடிவம். 'சங்ககாலம்'
என்பதே சரியான வடிவமாகும். அடுத்துச் சங்ககாலத்தை, முதற்சங்க காலம், இடைச்சங்க காலம், கடைச்சங்க காலம் என்று பகுப்பதே மரபு வழியானது. அப்பகுப்புப்படித் தொல்காப்பியம் இடைச்சங்ககால நூல். இம்மரபுமுறையிலான பகுப்பினை ஏற்பதே நன்று. இப்பொழுது நாம் சங்கஇலக்கியம் என்று கூறுபவை கடைச்சங்க கால இலக்கியங்களாம். அவற்றை முற்சங்ககால நூல்கள் பிற்சங்க காலநூல்கள் எனப்பகுப்பது (முதற்சங்ககாலநூல்கள்,இடைச்சங்க காலநூல்கள் என்றவழக்கோடு)மயக்கம் ஏற்படுத்தும்; இதனை மயங்கவைத்தல் எனும் குற்றமாக இலக்கண ஆசிரியர்கள் சுட்டுவர். எனவே,அவ்வாறு பகுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மேலும் எந்தஅடிப்படையில் தொகைநூல்களில் இது முந்தையது என்று கூறுவது? ஏனெனில், இவை ஒருவரால் பாடப்பட்டவை அல்ல; பலபுலவர்கள் பல்வேறுகாலத்தில் பாடியவை. புறநானூற்றில் முதற்சங்கப்பாடலும், இடைச்சங்கப்பாடலும் தொகுக்கப்பட்டுள்ளன என்பது மரபுவழிச்செய்தி.
முதற்சங்கம் இடைச்சங்கம் என்பவை கற்பனை என்று வாதிடுவோரும் உண்டு; அவ்வளவு ஏன்? இப்பொழுது நாம் பெரிதும் போற்றும் சங்கஇலக்கியங்களையே அவை சங்க இலக்கியம் அல்ல, ஏனெனில் சங்கம் என்பதே தமிழ்ச்சொல் அன்று, மேலும் தொல்காப்பியர் சகரம் மொழிக்கு முதலில் வராது என்றுவேறு கூறியுள்ளார் என வாதிட்டகாலம் ஒன்று உண்டு. ஆனால் அவையெல்லாம் தவறானவை,தமிழரின் வரலாறே முழுமையும் வளராத காலத்தில் எழுந்த வாதங்கள் இவை எனக்காலம் உணர்த்தியது: இன்னும்கூட அதைப்பிடித்துத்தொங்கிக்கொண்டிருப்போரும் உண்டு.அது நிற்க.
எனவே, இதுமுந்தையது இது பிந்தையது எனத்தயவுசெய்து பிரிக்கவேண்டாம் இன்னும் வலுவான சான்றுகள் கிடைக்கும்வரை. எனவே சங்க இலக்கியம் அல்லது சங்ககால இலக்கியம் என்று பொதுநிலையில் பகுப்பதே இன்றையநிலையில் சரியான ஒன்றாக இருக்கமுடியும்.- பயனர் மெய்கண்டான்--Meykandan 15:12, 6 பெப்ரவரி 2010 (UTC)
- மெய்கண்டான் அவர்களுக்கு, உங்கள் விரிவான விளக்கத்துக்கு நன்றி. இப்போது திருத்தியிருக்கிறேன். சரி பாருங்கள்.--Kanags 10:17, 8 பெப்ரவரி 2010 (UTC)
திருவாளர் கனகு அவர்களே! மிக்கநன்றி.வாழ்க நீங்கள்! இப்பொழுதுதான் என்மனம் அமைதிஅடைந்தது, வாழ்க உங்கள் அரும்பணி: நாம் எல்லோரும் இணைந்து பிழையில்லாத் தமிழ் விக்கிப்பீடியாவை உருவாக்குவோம்--Meykandan 11:08, 8 பெப்ரவரி 2010 (UTC) நன்றி.
விக்கி மூலம் என்று தமிழில் தலைப்பு கொடுக்கலாமா?
[தொகு]தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி ஆகிவற்றிற்குத் தமிழில் பெயர் இருக்க, விக்கி மூலம் மட்டும் ஏன் இன்னும் wikisource என்று ஆங்கிலத்தில் மட்டும் தோன்றுகிறது? அதற்கு மேலோ கீழோ தமிழில் விக்கி மூலம் என்று கொடுத்தால் நன்றாயிருக்குமே!--பவுல்-Paul 01:46, 4 செப்டெம்பர் 2010 (UTC)
- நன்றி பவுல், இதனை மாற்ற ஆவன செய்ய வேண்டும். முயற்சிக்கலாம்.--121.216.138.215 23:16, 4 செப்டெம்பர் 2010 (UTC)
விக்கி மூலம் தமிழ் படிமத்தை உருவாக்கியுள்ளேன். உபயோகப்படுத்தலாம். சிறீதரனால் முடியும் என நினைக்கின்றேன்.--அராபத்* عرفات 15:17, 17 அக்டோபர் 2010 (UTC)
- அராபத், விக்கி மூலம் படிமம் தமிழில் மிக அழகாக உள்ளது. பாராட்டுகள்!--பவுல்-Paul 03:00, 18 அக்டோபர் 2010 (UTC)
- நன்றி பவுல் --அராபத்* عرفات 09:46, 18 அக்டோபர் 2010 (UTC)
- நன்றாக உள்ளது. விக்கி மூலம் என்பதை ஒரு சொல்லாக விக்கிமூலம் எனத் தருவது நல்லது. விக்கிப்பீடியா போன்று. ஆங்கிலத்திலும் wikisource என்று தான் தருகிறார்கள். மாற்ற முடியுமா? logoவை இணைக்க https://bugzilla.wikimedia.org/ இல் வழுப்பதிய வேண்டும். முன்னர் விக்கிசெய்திக்காக சுந்தர் இதனைச்] செய்திருந்தார். முயலலாம்.--Kanags \உரையாடுக 07:16, 27 அக்டோபர் 2010 (UTC)
- விக்கிமூலம் என்று இணைத்துப் போடுவது நல்லது என்று நினைக்கிறேன்.--பவுல்-Paul 14:15, 27 அக்டோபர் 2010 (UTC)
- பவுல், சிறீதரன் படிமத்தை நீங்கள் கேட்டபடியே மாற்றியுள்ளேன். அதோடு பக்சில்லாவிலும் வழு பதிந்துள்ளேன். கொஞ்சம் கவனிக்கவும். நன்றி. --அராபத்* عرفات 15:25, 28 அக்டோபர் 2010 (UTC)
- அராபத், விக்கிமூலம் படிமத்தை நன்றாக வடிவமைத்ததற்குப் பாராட்டுகள்! --பவுல்-Paul 16:47, 28 அக்டோபர் 2010 (UTC)
- அராபத், இப்படிமத்தை svg அல்லது png இல் தரவேற்றும் படி கேட்டுள்ளார்கள்.--Kanags \உரையாடுக 04:03, 29 அக்டோபர் 2010 (UTC)
- இன்று இரவு வேண்டிய மாற்றங்கள் செய்து மீண்டும் தரவேற்றுகிறேன்.--அராபத்* عرفات 07:20, 29 அக்டோபர் 2010 (UTC)
- புதிய கோப்பை பதிவேற்றி உள்ளேன்.--அராபத்* عرفات 18:49, 29 அக்டோபர் 2010 (UTC)
தொல்காப்பியம்
[தொகு]பழந்தமிழ் இலக்கியங்கள் என்னும் தலைப்பின்கீழ் உள்ள தொல்காப்பியம் என்னும் நூலை இடம் மாற்றித் 'பழந்தமிழ் இலக்கணம்' என்னும் தனித் தலைப்பிட்டு முதல் இடத்திற்குக் கொண்டுவருதல் வேண்டும். --Sengai Podhuvan 21:59, 11 அக்டோபர் 2010 (UTC)
- மாற்றியுள்ளேன்.--Kanags \உரையாடுக 04:19, 29 அக்டோபர் 2010 (UTC)
- நிர்வாகப் பெருமக்களே! ஔவையார் தனிப்பாடல்கள் என்னும் தலைப்பு உரிய இடத்துக்குப் போய்ச் சேரவேண்டும். வார்ப்புருவைத் திறந்து உரிய இடத்தில் சேர்த்துவிடுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan 21:47, 10 ஆகஸ்ட் 2011 (UTC)
வரிவடிவச் சீரமைப்பு - பிற மொழியினர் செய்துள்ளனர் தமிழ் வரிவடிவச் சீரமைப்பு: பேரறிஞர்கள் ஏற்
[தொகு]வரிவடிவச் சீரமைப்பு - பிற மொழியினர் செய்துள்ளனர் தமிழ் வரிவடிவச் சீரமைப்பு: பேரறிஞர்கள் ஏற்றுள்ளனர்
டாக்டர் வா. செ. குழந்தைசாமி
தமிழ் நெடுங்கணக்கில் உயிர் மெய் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய வரிசைகளில் சீரமைப்புத் தேவை எனப¢ பெரியார் அவர்கள் பரிந்துரைத்ததைப் பல அறிஞர்கள் ஏற்றுள்ளனர். சீரமைப்பின் இன்றியமையாமையையும் பல அறிஞர் பெருமக்கள் எடுத்துரைத்துள்ளனர். கலைமகள் இதழின் ஆசிரியராக இருந்த மாபெரும் தமிழறிஞர் திரு. கி.வா.ஜ., அவர்கள் பாரம்பரியத்தைப் பெரிதும் போற்றுபவர். தேவையென்பது தெளிவாக இருந்தால் ஒழிய மாற்றத்தை எளிதில் ஏற்பவர் அல்லர். அவரும் ஜனவரி 1979 கலைமகள் இதழில், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற தலைப்பில் உயிர் மெய் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய வரிசைகட்குக் குறியீடுகளைப் பயன்படுத்தினால். நான்கு குறியீடுகள் போதும். 68 குறியீடுகள் குறையும் என எழுதியுள்ளார். சிலம்புச் செல்வர் மா.பொ.சி. அவர்கள் எழுத்துச் சீரமைப்பைத் தொடர்ந்து எதிர்த்து வந்தவரே ஆவர். இருப்பினும் அடிப்படையில் ‘எந்த மாற்றத்தையும் ஏற்கேன்’ என்ற குழுவில் இருந்தவர் அல்லர். இந்தப் பிரச்சினையைக் கவனத்தோடும், கவலையோடும் அணுகியவர். நீண்ட வாதங்கட்குப் பின் 19.03.1989 - இல் அவருடைய பத்திரிகையான செங்கோல் இதழில், நாம் முன்பு கூறிய நான்கு வரிசைகளில் குறியீடுகளைப் பயன்படுத்தலாம் என்று கூறிவிட்டு
“இதற்கு மேல் எத்தகைய சீர்திருத்தமும் தமிழ் எழுத்துகளுக்குத் தேவையில்லை” என்று தமது கட்டுரையை முடித்திருக்கிறார்.
பேராசிரியர் தெ.பொ.மீ., பேரா. மு.வ., ஐராவதம் மகாதேவன் போன்ற தலை சிறந்த மொழியியல் துறை, மொழித் துறை, கல்வெட்டுத் துறைப் பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் முழுமனத்தோடு ஆதரித்திருக்கின்றனர். தமிழகப் புலவர் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் தி. முத்து கண்ணப்பர், புலவர் குழந்தை, பேரா. அப்பாதுரை போன்றவர்களின் களங்கமற்ற தமிழ்ப் பற்றில், புலமையில் யாருக்கும் ஐயமிராது. இவர்களெல்லாம் தமிழுக்கு இன்றும் நாளையும் பெருமை சேர்க்கும் எதையும் புறக்கணிப்பவர்கள் அல்லர். ஐயத்திற்குரிய எதையும் ஆதரிப்பவர்கள் அல்லர். இவர்கள் அனைவரும் தயக்கங்காட்டாத தமிழ் எழுத்துச் சீர்திருத்தவாதிகளே யாவர்.
இரண்டாவதாக இத்தகைய மாற்றங்களை நாம் தான் செய்கிறோம் என்பது இல்லை. இந்திய மொழிக் குடும்பத்தினரும் செய்திருக்கின்றனர். அந்நிய மொழிக் குடும்பத்தினரும் செய்திருக்கின்றனர். பழமையான மொழிகள் அனைத்தினும் பழமையானது சீன மொழி. சீனாவில் பொதுவுடைமை அரசு செய்த முக்கியமான செயல்களில் ஒன்று, ஆட்சி ஏற்ற சில ஆண்டுகட்குள்-1954-இல்-ஒரு மொழிச் சீர்திருத்தக் குழுவை அமைத்து, பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்ட அந்த மொழியில் அடிப்படையாகக் கற்றுக் கொள்ளத் தேவையான எழுத்துகளை 2236 எனக் குறைத்தது ஆகும். ஐரோப்பிய மொழிகளில் ஜெர்மன் மொழி எல்லாத் துறைகளிலும் சிறப்புடையது. தத்துவத் துறையின் தாய் மொழி என்றே கூறலாம். அந்த மொழி காத்திக் [Gothic] வரிவடிவத்தில் தான் எழுதப்பட்டு வந்தது. 1930-களில் முழுமையாக ரோமன் வரிவடிவத்திற்குப் போய் விட்டார்கள். இந்தோனேசிய மொழிக் குடும்பத்தினரும் பழைய வரிவடிவத்தைக் கைவிட்டு விட்டு ரோமன் வரிவடிவத்தை ஏற்றுக் கொண்டனர். மலேசிய மொழியும் ரோமன் வரிவடிவத்திற்கு மாறிவிட்டது.
நாம் இந்தியாவுக்கு வருவோம். மலையாள மொழியில் குறியீடுகள் ஏராளம், கேரள அரசு திரு. குஞ்சன் பிள்ளை தலைமையில் மார்ச் 2, 1967-இல் ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரையைப் பெற்று, அதை மீள் ஆய்வு செய்து. அதன் அடிப்படையில் பயன்படுத்தி வந்த குறியீடுகளில் 75 சதவிகிதத்தைக் குறைத்து, மலையாள மொழியின் வரிவடிவத்தை மிகப் பெரிய அளவில் எளிமையாக்கிவிட்டனர். அதனால் மலையாள மொழியின் வளர்ச்சி தழைத்ததே அன்றித் தாழவில்லை, தளரவில்லை. இந்தி மொழியின் உயிர் எழுத்துகளில் எகரம், ஒகரம் இவற்றிற்குத் குறில் இல்லை. இவற்றில் நெடில்கள் மட்டுமே உள்ளன. மேலும் ள, ழ ஆகிய ஒலிகள் இல்லை. ஆட்சி மொழியாகப் பயன்படுத்தப்படும் இந்தி மொழியின் வரிவடிவத்தில் இந்த நான்கு ஒலிகட்கும் புதிய குறியீடுகளை உருவாக்கிப் பயன்படுத்துகிறார்கள்.
வரிவடிவ ஒற்றுமையை, வலிமைக்கு ஒரு உத்தியாக நாம் இந்தி மொழியில் பார்க்கலாம். இந்தியின் பிரிவுகளான கடிபோலி, போஜ்புரி, மைதிலி ஆகியன தம்முள் பெரிதும் மாறுபடுபவை. சாகித்ய அகாதமியில் இந்தி மொழி தவிர்த்து அதன் ஒரு பிரிவான மைதிலிக்கும் தனியாக ஒரு விருதுண்டு. இந்த மொழிப் பிரிவுகளைப் பேசினால் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வது கடினம். ஆனால் அவை ஒரே வரிவடிவத்தைக் கொண்டிருப்பதால் இந்தி என்பது ஒரு மொழி போன்ற தோற்றம் பெற்றிருப்பதையும் அதனால் அது பெரும்பான்மையர் மொழி என்று விளங்குவதையும் காண்கிறோம்.
பொதுவாக வரிவடிவத்தில் சில மாற்றங்கள் என்பது பாரதூரமான புரட்சிகரமான சிந்தனை அன்று. தமிழ் வரிவடிவம் கி.மு. மூன்றாவது நூற்றாண்டு முதல் கி.பி. 19 வரையிலும் அதற்குப் பின்னரும் தொடர்ந்து மாறியே வந்திருக்கிறது. உயிர் எழுத்துகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் படம்-1-இல் காணலாம். இன்றைய தமிழ் எழுத்துகளோடு ஒப்பிடும் பொழுது பண¢டைய தமிழ் வரிவடிவம் ம¤கவும¢ எளிதானதாகவே இருந்திருக்கிறது.
�படம்-1. கால வளர்ச்சியில் தமிழ் உயிர் எழுத்துகளில் ஏற்பட்ட மாற்றம்
தமிழ் மறையான திருக்குறளை எழுதுவதற்கு வள்ளுவர் பயன்படுத்தியிருக்கக் கூடிய தமிழ் உயிர் எழுத்துகளின் வடிவம் படம்-2-இல் கொடுக்கப்பட்டுள்ளது.
படம்-2 வள்ளுவர் பயன்படுத்திய வரிவடிவம்: உயிர் எழுத்துகள்
இந்த மாபெரும் வரிவடிவ மாற்றத்தால் வள்ளுவமும் மறைந்துவிடவில்லை, தமிழுக்கும் தீங்கு ஏற்பட்டுவிடவில்லை. நாம் முன்பே கூறியது போல ஒலி நிரந்தரமானது; வரிவடிவம் மாறி வருவது.
உயிர் மெய் எழுத்துகட்கு வரும் பொழுது நமது முன்னோர்கள் செப்பேடுகளில் குறியீட்டைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். நான்கு சான்றுகள் படம்-3-இல் கொடுக்கப்பட்டுள்ளன. படம்-3 a என்ற பிரிவில் உயிர் எழுத்துக்கே மிக எளிதாக வலது பக்கத்தில் வட்டெழுத்தில் குறியீட்டைப் பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கலாம். உகர நெடிலுக்கு, உகரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு இன்னொரு எழுத்து-ளகரம்-சவாரி செய்வதற்குப் பதிலாக உகரத்தின் வலது புறத்தில் ஒரு குறியீட்டைப் பயன்படுத்துவது எளிதானது, எழிலுடையதும் கூட என நமது முன்னோர்கள் பயன்படுத்தி இருப்பது நமக்குப் பாடம் புகட்டுவதாகும். மேலும் 3b, படத்தில் உயிர் மெய் து-கரத்திற்குக் குறியீட்டைப் பயன்படுத்தியிருப்பதையும், படம்-3c-இல் உயிர் மெய் பி-கரத்திற்குக் குறியீட்டைப் பயன்படுத்தியிருப்பதையும¢, உயிர்மெய் ஐ-காரத்திற்கு, பெரியார் நம் காலத்தில் பயன்படுத்திய சங்கிலிக் கொம்பை பள்ளன் கோவில் செப்பேட்டில் அன்றே பயன்படுத்தி இருப்பதையும் படம் 3-d-இல் காணலாம்.
1. நாம் கூறும் மாற்றம் நடைமுறையில் எட்டுச் செங்குத்து வரிசைகளில் 144 எழுத்துகட்கு நாம் இப்பொழுது பயன்படுத்தும் முறையாகும். இதே முறையை மீதமுள்ள நான்கு செங்குத்து வரிசைகட்கும் பயன்படுத்தலாம் என்பதுதான் நாம் முன்வைக்கும் சீர்திருத்தம். இதில் புரட்சியும் இல்லை. புதுமையும் இல்லை. நம்மையுமறியாது நாம் தலைமுறை தலைமுறையாகச் சுமந்து வரும் பாரத்தை மிகப் பெரிய அளவில் குறைக்கிறோம்
2. நாம் கூறும் மாற்றம் உயிர் மெய் எழுத்துகள் வரிசையில் முழுமையாக ஒரு சீர்மையை உருவாக்குகிறது. சீர்மை எளிமைக்கு அடிப்படை.
3. தமிழ் கற்க முயலும் அயலகத் தமிழ்க் குழுந்தைகள் ஒருபுறம், மற்றும் முக்கியமாகத் தமிழகத்தில் ஆண்டு தோறும் ஆரம்பத்தில் தமிழ் கற்கும் 15 இலட்சம் குழுந்தைகள் மறுபுறம் எனக் குழந்தைகள் தமிழ் கற்பதைப் பெரிதும் எளிதாக்குகிறது. கற்க வேண்டிய குறியீடுகளை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கிறது. இது மாபெரும் சமுதாய நன்மை என்பதில் எந்த விதமான கருத்து வேறுபாடும் இருப்பதற்கு இடமில்லை. இந்தச் சிறிய மாற்றத்தினால் இன்றோ அல்லது நாம் கற்பனை செய்யத்தக்க அளவில் எதிர்காலத்திலோ தமிழ் மொழிக்கு எவ்விதமான தீங்கும் நேர அணுஅளவும் வாய்ப்பில்லை.
விரைவே வெற்றியின் அடிப்படை என்பதைக் கொள்கையாகக் கொண்ட 21-ஆவது நூற்றாண்டில் இந்த மாற்றம் காலத்துக் கேற்றது என்பது மட்டுமின்றித் தவிர்க்க இயலாத, இன்று இல்லாவிட்டால் நாளை இடம் பெற வேண்டிய மாற்றமேயாகும்.
மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் நான் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய இந்தக் கருத்தை மேடையில் விளக்கிய பொழுது, எதிர்ப்புத் தெரிவித்தவர்களைக் கண்டதில்லை. மகத்தான சமுதாய நன்மையைத் தன்னுள் கொண்ட, இவ்வளவு எளிய சீர்த்திருத்தத்தை நாம் ஏன் இன்னும் செய்யவில்லை என்ற கேள்வியைத்தான் எழுப்பினார்கள். அவர்கள் கேள்விக்கு நான் சொன்ன பதில்:
இது எளிய மாற்றம் என்பதோடு இன்றியமையாத மாற்றம்; மேலும் தவிர்க்க இயலாத மாற்றமும் கூட. ஆனால் நடைமுறைப் படுத்துவதற்கு ஒரு நல்ல தலைவனுக்காகக் காத்திருக்கிறது
என்பதுதான். தலைவர்கள் தாமாக உருவாவதில்லை. நாம் தான் உருவாக்கவேண்டும்.
மாறாத பொருள் எதுவும் வளர்வதில்லை வையத்தின் விதிஇதற்கு மாற்றமில்லை - இது டார்வினின் [Darwin] தத்துவம்
எழுத்துச் சீரமைப்பு வேண்டுமா? ஒரு கருத்து
[தொகு]எழுத்துச் சீரமைப்பு வேண்டும் என்று டாக்டர் வா.செ. குழந்தைசாமி வாதாடுவதற்கு அவர் தருகின்ற ஒரே காரணம், இச்சீர்திருத்தத்தால் தமிழ் கற்பது எளிதாகும்; குறிப்பாக, வெளி நாடுகளில் வாழ்கின்ற தமிழரும் அவர்கள்தம் குழந்தைகளும் தமிழ் கற்க ஆர்வம் கொள்வர் என்பதாகும். வரிச்சுவடியை எளிதாக்கும் முறை ஒரே முறையாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. எத்தனையோ முறைகளில் நாம் வரிச்சுவடியை எளிதாக்க முடியும். ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களில் பல நாடுகள் இலத்தீன் வரிச்சுவடியை ஏற்றன. ஏனென்றால் அவற்றிற்குத் தனி வரிச்சுவடி இருக்கவில்லை. ஆனால் சீனம், கிரேக்கம் போன்ற மொழிகள் இலத்தீன் வரிச்சுவடிக்கு மாறவில்லை.
எழுத்துச் சீரமைப்பு என்பது படிப்படியாக நிகழும் ஒன்று. அதை யாரும் யார்மீதும் திணிப்பது முறையன்று. இதனால் இது பற்றிய விவாதமே வேண்டாமென்று நான் கூறவில்லை. ஆனால் அதற்கு விரிந்த, ஆழ்ந்த கருத்துப் பரிமாற்றம் தேவை. சீரமைப்பு முறைகள் பலவற்றைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதன்பிறகு, பொது மக்களிடையே ஒரு விழிப்புணர்வு கொணர வேண்டும். சீர்திருத்தம் வேண்டும் என்று பொதுக்கருத்து உருவாகும்போது, எம்முறையில் சீர்திருத்தலாம் என்பதை முடிவுசெய்து அதை நடைமுறைப்படுத்தலாம்.
இது ஒரு நீண்ட காலத் திட்டம் என்றே எனக்குத் தோன்றுகிறது. மாற்றுக் கருத்து இருப்பின் அறிய அவா. நன்றி!--பவுல்-Paul 21:41, 23 நவம்பர் 2010 (UTC)
Lack of categories
[தொகு]Using the Random page feature several times in a row, I see that (apparently) almost none of the pages here are categorized. Please use [[Category:]] tags on pages that don't have them to place the pages into categories. Thanks. - dcljr 02:29, 2 சூன் 2011 (UTC)
- Whoops, I mean [[பகுப்பு:]] tags. [g] - dcljr 02:30, 2 சூன் 2011 (UTC)
- Thanks for the reminder dcljr; the maintenance oriented tamil wikimedians havent been around wiksource much, will start the catagorising work soon--Sodabottle 18:52, 6 ஜூன் 2011 (UTC)
Invite to WikiConference India 2011
[தொகு]Hi முதற் பக்கம்,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
As you are part of WikiMedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions. We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
Please forward to relevant folks in the community. If you want the bot to do the job please sign up at [2] --Naveenpf 05:37, 6 ஆகஸ்ட் 2011 (UTC)
இலக்கியப் பாகுபாடு
[தொகு]- ஔவையார் தனிப்பாடல்கள் - நூலைத் தக்க இடம் தந்து நிறுத்தினேன். பதிவு நிற்கவில்லை. அருள்கூர்ந்து நிறுத்துங்கள். --Sengai Podhuvan 18:42, 25 ஆகஸ்ட் 2011 (UTC)
ஔவையார் தனிப்பாடல்கள் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
சங்க இலக்கியம் என உள்ளதை மாற்றவேண்டும்.
பிற்கால இலக்கியங்களை இவ்வாறு பாகுபடுத்திக்கொள்வது உகந்ததாக இருக்கும்.
- சமய இலக்கியம் - தேவாரம் போன்றவை (சைவ, வைணவ, சித்த சமயம் சார்ந்தவை)
- பேரிலக்கியம் - பெருங்கதை, கம்பராமாயணம் போன்றவை
- சிற்றிலக்கியம் - உலா, கலம்பகம் போன்றவை
- தனிப்பாடல்கள் - ஔவையார், கம்பர், ஒட்டக்கூத்தர்,புகழேந்தி முதலானோர் பாடியவை
- தற்கால இலக்கியங்கள் - 19ஆம் நூற்றாண்டு முதல் தோன்றியவை
ஆவன செய்ய வேண்டுகிறேன். --Sengai Podhuvan 20:56, 30 நவம்பர் 2011 (UTC)
சிற்றிலக்கியங்கள் இடைக்காலம், தற்காலம்
[தொகு]சிற்றிலக்கியங்கள் இடைக்காலம், தற்காலம் போன்றவை சரியாக முறைப்படுத்தப்படவில்லை , தாய்ப் பகுப்பு, தமிழ்ப் பகுப்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்கலாம். --~~பயனர்_பேச்சு:Dineshkumar_Ponnusamy~~
I would like to merge the first page contents, since some of them are repeating, kindly do it. Please take some steps to merge tamil and the home categories also.
--~~பயனர்_பேச்சு:Dineshkumar_Ponnusamy~~
திருப்பள்ளியெழுச்சி - சிற்றிலக்கியங்கள்
[தொகு]திருப்பள்ளியெழுச்சி திருவாசகத்தின் உள் தலைப்பு. அதைத் தனியான சிற்றிலக்கியமாகப் பகுப்பது முறை ஆகாது. எனவே திருவாசகத்தின் கீழ் உப தலைப்பாக (sub title) சேர்க்கப்பட்டுள்ளது.
றகர ஒற்று -(ற்)-வரும்போது
[தொகு]`ற்` வரும்போது, புணர்ச்சியில், அதன்பின் மற்றொரு புள்ளிவைத்த எழுத்து (ஒற்று) வரக்கூடாது. இது பொது விதி. படைப்பாளர்கள் மனதில் கொள்ளவும்.
எடுத்துக்காட்டு:
நற்ச்செயல்- பிழை; நற்செயல்- சரி. மற்ப்போர் பிழை; மற்போர்- சரி. வெட்க்கம்- பிழை; வெட்கம் - சரி. கற்ப்பனை- பிழை; கற்பனை- சரி. விற்க்கும்- பிழை; விற்கும்- சரியான வடிவம். தெற்க்கு- பிழை; தெற்கு- சரி.
இவ்வாறு பிழை ஏற்படக்காரணம் தனியாகவரும் றகரம், ரகரம் போல் ஒலிப்பதுதான். றகரம் மலையாளம், யாழ்ப்பாணத்தமிழில் சரியாக ஒலிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் அவ்வாறு இல்லை. ஆனால், ஒற்று இரட்டிக்கும்போது இது சரியாக ஒலிக்கப்படும்.
எடுத்துக்காட்டு: ஆற்றுக்குப்போனான். நேற்று என்ன கிழமை? வேற்றுமொழி, தூற்றுகிறான், நாற்றுநட்டான்.
பேச்சுத்தமிழில், றகரம் இரட்டிக்கும்போது ற்ற்>த்த் என மாறும். நேற்று>நேத்து; ஆற்றுக்கு>ஆத்துக்கு;சோற்றுப்பானை>சோத்துப்பானை. வற்றல்குழம்பு>வத்தக்குழம்பு.
எனவே, றகரம் வரும்போது அதனைச் சற்றுக்கவனமாக மனதில் கொண்டு எழுதினால் இப்பிழை வரவே வராது. றகரம் அடங்கிய சொல்வரும்போது அது இடையின ரகரமா? வல்லின றகரமா என்று சற்று எண்ணிப் படித்தால்/எழுதினால் பிழையே வராது.முதலில் சற்றுக்கடினமாகத் தென்பட்டாலும் பயிற்சியில் இது மிகமிக எளிதாக வந்துவிடும். பிழையில்லாத நல்லதமிழ் எழுதுவோம்.வாழ்த்துகள்!--Meykandan 04:33, 18 பெப்ரவரி 2012 (UTC)
வல்லின ஒற்று
[தொகு]றகரம் வரும்போது என்று குறிப்பதைவிட வல்லினம் மிகும் போது வல்லின ஒற்று வரக்கூடாது எனலாமா?--Yokishivam (பேச்சு) 02:54, 4 நவம்பர் 2013 (UTC)
திருத்துங்கள்
[தொகு]- ஔவையார் தனிப்பாடல்கள் இடைக்காலத்தவை. சங்ககாலத்தவை அல்ல. இணைப்பில் உள்ள நாலடியார் போன்ற நூல்கள் முகப்பில் தரப்படவில்லை. சரியாக ஒழுங்குபடுத்துங்கள். அல்லது ஒழுங்குபடுத்த வகை செய்யுங்கள். அன்புள்ள --117.193.202.240 18:00, 26 ஏப்ரல் 2012 (UTC)--117.193.202.240 18:00, 26 ஏப்ரல் 2012 (UTC)
- பூட்டாவிட்டால் அழிக்க நேரும் என்பது சரிதான். செய்து காட்டியதைப் பின்பற்றலாமே. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 21:56, 12 மே 2012 (UTC)
முதற்பக்கத்தை சரியாக இற்றைப்படுத்தவும்.
[தொகு]முதற்பக்கம் முறையாக இற்றைப்படுத்தாமல் உள்ளது. ஒரு சில இணைப்புகள் இரண்டு முறை கூட வந்துள்ளது. வெளிவந்த ஆண்டு அடிப்படையிலோ அல்லது அகர வரிசையிலோ, அல்லது துறை வரிசையிலோ, இற்றைப்படுத்தலாம். விரைந்து இற்றைப்படுத்தவும். -- Dineshkumar Ponnusamy (பேச்சு) 05:56, 29 மே 2012 (UTC)
முதற்பக்கம் இணைப்பு - தொடுப்பு
[தொகு]விக்கி மூலத்தின் பங்களிப்பாளர் உழைப்பின் பலன் விக்கி மூல நூல்கள் வேண்டுவோர்க்கு எளிதில் கிடைத்திட வழிவகை செய்திட முதற்பக்கத்தினை முழுமையாக இணைப்புகள் கொண்ட பக்கமாக வடிவமையுங்கள்.
- விக்கி மூலம் அறிமுகம்
- அறிமுகக் காட்சி இணைப்பு
- இன்றைய இலக்கியம்
- கூட்டு முயற்சி (இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்)
- புதிய உரைகள்
- இலக்கியங்கள்
- முக்கிய பகுப்புகள்
- இலக்கியங்கள்
- மின்வருடிய நாட்டுடைமை நூல்களின் மெய்ப்பு விவரங்கள்
- சமய இலக்கியங்கள்
- விக்கியின் பிற திட்டங்கள்
என்னும் விதமாக அமைந்துள்ளது. இதனை இன்னும் எளிமைப் படுத்துதல் பயனர் பயன்பாட்டை அதிகரிக்கும் எனக் கருதுகிறேன். இதில் வழங்கப்பட்டுள்ள இடமளிப்பைக் கவனத்தில் கொள்ளவும். மிக நீண்ட பக்கமாக உள்ளது. குறுகிய வடிவமைப்பைக் கொண்டிருத்தல் நலம்.
அண்மைய மாற்றங்கள் என்பது ஒற்றைத்தன்மையுள்ள அடையாளங்களை மட்டுமே குறிக்கிறது. இது வரையில் விக்கிமூல பங்களிப்பில்
- முழுமையாக்கம் செய்யப்பட்ட நூல்கள் (அனைத்து வடிவம் / இணைப்பு)
- இந்த மாதத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்றுவரும் பணிகள் (கணியம் பங்களிப்பு உள்பட)
- பட்டியல் இணைப்பு
என்னும் அடையாளங்களைக் கொண்டிருந்தால் விக்கிமூலத்தின் பயன்பாடு அதிகரிக்கும். --Arun kaniyam 06:38, 26 சூலை 2019 (UTC)
முதற்பக்க அமைப்பில் உள்ளடக்கத்தில் உள்ள 11 வகைப்பாடுகளில் இலக்கியம் என்பது மூன்று/ நான்கு முறை உள்ளது. வகைப்பாட்டு வடிவம் வேறு எனினும் இதற்கு வழங்கப்பட்டுள்ள இட அளவு அதிகமாக உள்ளது. இதனை முறைப்படுத்தலாம்.--Arun 06:44, 26 சூலை 2019 (UTC)
- மாற்றம் தேவையென்பதை நானும் உணருகிறேன். ஒரு திட்டப்பக்கம் தொடங்குங்கள். கலந்துரையாடி மாற்றுவோம். இறுதியில் இருக்கும் விக்கித்திட்டங்களில் விக்கித்தரவு என்ற திட்டமும், காட்சிய சரியாக அமைய மற்றொருரு திட்டத்தினையும் இணைக்க வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 10:12, 28 ஆகத்து 2020 (UTC)
- மாற்றங்கள் தேவை--அருளரசன் (பேச்சு) 01:07, 31 ஆகத்து 2020 (UTC)
- ஆதரவு Fathima rinosa (பேச்சு) 05:59, 20 செப்டம்பர் 2020 (UTC)
- மெய்ப்புப் பார்த்த நூல்களையும்; பார்க்கப்படாத நூல்களையும் வகைமை அடிப்படையில் பிரித்தல் வேண்டும். சான்று:- கவிதை (மரபுக் கவிதை, புதுக்கவிதை), சிறுகதை, புதினம், நாட்டுப்புறப் பாடல்கள், கட்டுரை, ஆய்வு, அகராதி, கலைக்களஞ்சியம், மொழிபெயர்ப்பு (கவிதை, சிறுகதை, புதினம், நாட்டுப்புறப் பாடல்கள், கட்டுரை, ஆய்வு, அகராதி, கலைக்களஞ்சியம்) போன்று அமைத்தல் சிறப்புடைத்து. இது மெய்ப்புப் பார்ப்பதற்கும் வாசிப்பிற்கும் எளிமையாகும்.--Neyakkoo (பேச்சு) 03:47, 22 நவம்பர் 2020 (UTC)
- மெய்ப்பும் சரிபார்ப்பும் செய்து முடித்த நூல்களை அதாவது இறுதிநிலை எட்டிய நூல்களை புதிய உரைகள் என்னும் பக்கத்தில் தொகுத்து வைக்கிறோம். இவற்றைத்தான் நாம் மின்னூல் என அழைக்கிறோம் அல்லவா, மூத்த பங்களிப்பாளர்கள் இதை உறுதி செய்து இனி எவரும் இறுதி நிலை எட்டிய நூல்களை தொகுக்காதவாறு செய்ய வேண்டும். இவற்றை முதற்பக்கத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
- இம்மாத மெய்ப்புப் பார்க்கும் திட்டத்தில் ஒரு நூலுக்கு பதிலாக மூன்று அல்லது ஐந்து நூல்களை இணைக்க வழிவகை செய்ய வேண்டும். தொடர்ந்து விக்கிமூலத்தில் மெய்ப்புபு பணி செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் செய்ய விரும்பும் நூல்களை முதல் பக்கத்திலேயே இம்மாதம் மெய்ப்புப் பார்க்கும் திட்டத்தில் இணைத்து எல்லோரும் ஒருங்கிணைந்து பணி செய்ய ஊக்குவிக்க வழிவகை அமைக்க வேண்டும்.--வெற்றியரசன் (பேச்சு) 06:51, 22 நவம்பர் 2020 (UTC)
- பின்வரும் முக்கிய பகுப்புகளை புதியவர் காண்பதற்கு ஏதுவாக முதற்பக்கத்தில் இணைத்தல் நலம். எனது பரிந்துரை வருமாறு;-
மேலும் அதே போல, தனிநபர் நிரல் தொகுப்புகளை ஒரு பக்கத்திலும், கருவிகளுக்கான குறிப்புகளையும், நிகழ்படங்கள் இணைப்புகளையும் தருதல் வேண்டும். அதற்கு தற்போதுள்ள இலக்கியங்களை அனைத்தும் சுருக்கி , கிடைக்கும் இடத்தில் மேற்கூறிய இத்தளத்தில் உள்ள முக்கிய பக்கங்களுக்கு முதற்பக்கத்தில் இணைப்பு தருதல் பரப்புரைக்கும், புதிய பயனருக்கும் நல்லது. --தகவலுழவன் (பேச்சு). 04:24, 29 திசம்பர் 2022 (UTC)
மெய்ப்புப் பார்த்த நூல் - கவனிக்கவேண்டியது
[தொகு]- https://ta.wikisource.org/s/8upe (கல்லாடம்/26-30) இந்த உரலியில் மெய்ப்புப் பார்த்து இறுதி செய்த வடிவமாக உள்ளது. இருப்பினும் நூற்பா வடிவமாக இல்லாமல் உரை வடிவமாக உள்ளது. கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். அணுக்கர்கள் இதனைச் சரிசெய்து அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இந்த உரலிப் பக்கம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது--Neyakkoo (பேச்சு) 12:20, 23 நவம்பர் 2020 (UTC)
உதவி
[தொகு]வணக்கம், அரும்புகள் மொட்டுகள் பக்கம் 172 ல் தொகுத்தலுக்கான உதவி தேவை நன்றி செண்பகவடிவு செ (பேச்சு) 05:56, 29 திசம்பர் 2020 (UTC)
- ஆலமரத்தடியிலும் கேட்டுள்ளீர்கள். அங்கே பதிலிட்டுள்ளேன். --தகவலுழவன் (பேச்சு). 06:51, 29 திசம்பர் 2020 (UTC)
தரவு மாற்றிய வார்ப்புரு நீக்க
[தொகு]{{வார்ப்புரு:முதற்பக்க உள்ளடக்கம்}} என்பதிலுள்ள தரவுகளை தற்பொழுது முதற்பக்கத்தில் உள்ளது. எனவே, இவற்றினை சரிபார்த்து, வரலாற்று பக்கங்களை ஒன்றிணைத்து, இதற்கு பிறகு உருவான பக்கத்தினை நீக்க வேண்டும். தற்போது முதற்பக்கத்தில் பங்களித்தவர்களின் பல பெயர்கள் விடுபட்டுள்ளன. உங்களின் எண்ணமென்ன? --தகவலுழவன் (பேச்சு). 08:14, 10 மார்ச் 2021 (UTC)
படம் உள்ள பக்கம்
[தொகு]படம் உள்ள பக்கங்கள் தனியாகத் தொகுக்கப்பட்டுள்ளதா?--Thamizhini Sathiyaraj (பேச்சு) 13:58, 19 சூன் 2022 (UTC)
இனி இதுபோன்ற வினாக்களை ஆலமரத்தடி என்ற அனைவருக்குமான அறிவிப்புப் பலகையில் வினவவும். முதற்பக்க வடிவமைப்பு குறித்து இங்கு குறிப்பிடலாம். நீங்கள் கேட்டபடி, தொகுக்கப்பட்ட பகுப்பு இல்லை. இனி செய்ய முனைவோம். அதற்குரிய அடித்தளப் பணிகளை செய்த பின்பு உங்கள் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கிறேன். இணைந்து உருவாக்குவோம்.--தகவலுழவன் (பேச்சு). 14:54, 19 சூன் 2022 (UTC)
மூல நூல்கள் - அதிலிருந்து உருவாக்கப்படும் கட்டுரைகள்
[தொகு]மேற்காணும் குறிப்புகளின் அடிப்படையில் மூல நூல்கள், மூல நூல்களிலிருந்து உருவாக்கப்படும் கட்டுரைகள், ஆகியவற்றின் முழுபட்டியல் இணையாக உருவாக்கப்படல் வேண்டும்.--TVA ARUN (பேச்சு) 09:12, 25 சூலை 2022 (UTC)