விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

25 விக்கிமூலப் பங்களிப்பாளர்கள் எனில், .. யார்? யார்?[தொகு]

* முன்மொழிவுகள் 2022 ஆம் ஆண்டு அக்டோபரிலே இதுகுறித்த எண்ணத்தை பாலாஜி, அருளரசன், பாலு,நேயக்கோ, இராபியத்துல், அருண் த. இ. க பிறரும் ஆலமரத்தடியில் தெரிவித்துள்ளனர். (காண்க: விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23) எனவே, 2023 ஆம் ஆண்டு மார்ச்சு 15 வரை இதற்குரிய கலந்தாய்வுகளை வைத்துக் கொள்ளலாம் என்றே எண்ணுகிறேன். --தகவலுழவன் (பேச்சு). 02:47, 24 பெப்ரவரி 2023 (UTC)

1) தகவலுழவன்[தொகு]

இருபத்தைந்து விக்கிமூலர்கள் எனில், யார்யாரை இப்பயிலரங்குக்கு அழைக்கலாம். உங்கள் எண்ணங்களைத் தருக. தொடர்ந்து பங்களிப்பு செய்பவர்களுக்கு முன்னுரிமைத் தர கேட்டுக் கொள்கிறேன். தகவலுழவன் (பேச்சு). 03:32, 22 பெப்ரவரி 2023 (UTC)

  1. விக்கிமூலத்தில் பங்களித்த 10 ஆண் பங்களிப்பாளர்கள், 10 பெண் பங்களிப்பாளர்கள், 2 பிற தமிழ் திட்டங்களில் முனைப்பாக செயற்பட்டாலும், விக்கிமூலம், விக்சனரி போன்ற தமிழ் திட்டங்களிலும் செயற்பட்டவர்கள்; 2 கட்டற்ற தொழினுட்பவியலாளர்கள், ஒரு உள்ளூர் நிகழ்வு ஏற்பாட்டு மேற்பார்வையாளர் விக்கியராக இருந்தால், அவருக்கு விக்கிமூலத்தில் ஆர்வம் இருப்பின் நாம் அனுமதிக்கலாம்.
  2. இதுவரை தமிழ் விக்கிமூலத்தில் 278 நூல்களை நாம் எழுத்தாவணமாக உருவாக்கியுள்ளோம். அவற்றில் பங்களித்தவர்களை கணக்கில் கொள்ளுதல் வேண்டும்.
  3. விக்கிமூலம் என்பது துப்புரவுக்கு முன்னுரிமை தரும் திட்டம் என்பதால், நிறங்களை மட்டும் மாற்றி குறிப்பாக பச்சையாக மாற்றுபவர்களுக்கு முன்னுரிமை தரமால் இருத்தல் இத்திட்ட வளர்ச்சிக்கு உதவும். இந்திய அளவிலும் நமது தனித்துவமும், சிறப்புகளும் நிலைக்கும்.
தகவலுழவன் (பேச்சு). 02:36, 24 பெப்ரவரி 2023 (UTC)

தகவலுழவன் பரிந்துரை[தொகு]

மேல்விக்கிக்கான பேச்சுப்பக்க இணைப்பில்,m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop#Active_User_(2015_-_31_jan_2023) தொடர் பங்களிப்பாளர்களை கருவி காட்டுகிறது.] (google online spreadsheet)அதிலிருந்து பின்வரும் பங்களிப்பாளர்களை, எனது எண்ணங்களையும் குறிப்பாக எழுதி இவர்களை கலந்து கொள்ள அழைக்கலாம். எந்த தேதி, நிகழ்விடமாக எந்த ஊர் என்பதனை அவர்கள் வாக்கெடுப்பு கருவிப்படி கூறுதலே நடுநிலையான அணுகுமுறையாக எண்ணுகிறேன்.

ஆங்கில விக்கி மூலத்தில் தமிழ்ப்பழமொழிகள் நூலினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களையும் கவனத்தில் கொள்ளவும். TVA ARUN (பேச்சு) 12:48, 7 மார்ச் 2023 (UTC)
ஆம். நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி. en:Index:Tamil proverbs.pdf என்ற தமிழ் எழுத்துருக்கள் இருக்கும் முடித்த நூலினை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டேன். அதில் பங்கு கொண்டவர்கள் மொத்தம் 40. எனவே, ஆய்ந்து பெயரினை இணைத்துக் கொள்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 03:17, 8 மார்ச் 2023 (UTC)

2) கு. அருளரசன்[தொகு]

முதலில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்ய ஆர்வமுள்ள திருச்சிராப்பள்ளி அல்லது அதை ஒட்டிய பகுதியைச் சேர்ந்த உள்ளூர் பயனர் யாராவது உள்ளார்களா என்பதைக் கண்டறிவது அவசியம். அதன் பிறகே மற்றவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.--அருளரசன் (பேச்சு) 10:53, 26 பெப்ரவரி 2023 (UTC)

எவ்வளவு நிதி அளிப்பார்கள் என வினவியுள்ளேன். அதற்கொப்ப கொடைக்கானலோ, குன்னூர் போன்ற வெயில் காலத்திற்கு ஏற்ற இடம் கூட நிதி கிடைத்தால் செய்யலாம். பார்ப்போம். தகவலுழவன் (பேச்சு). 10:22, 27 பெப்ரவரி 2023 (UTC)

3) முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ)[தொகு]

  • விக்கிமூலத்தில் தொடக்க காலக்கட்டத்திலிருந்து சிறப்பாகப் பங்களிப்புச் செய்துவிட்டுச் சென்ற பங்களிப்பாளர்களையும் அழைத்து அவர்களுக்கு நேர்ந்த நெருடல்களைக் கண்டறிந்து எதிர்காலத்தில் அதுபோன்று நிகழா வண்ணம் பார்த்துக் கொள்வதற்கும் இப் பயிலரங்கத்தில் நேரம் ஒதுக்கீடு செய்து உரையாட வேண்டும். அப்பொழுதுதான் இத்திட்டத்தை வலுவுடையதாய் மாற்ற இயலும் எனக் கருதுகின்றேன்.--நேயக்கோ (பேச்சு) 11:23, 28 பெப்ரவரி 2023 (UTC)
    முதற்கட்டமாக இருவரிடம் ([1], [2]), ஒரு வாரத்தில் எண்ணமிடுமாறு கேட்டுள்ளேன். பிறகு மற்றவரையும் வினவ துணை புரிக. தகவலுழவன் (பேச்சு). 16:52, 6 மார்ச் 2023 (UTC)

4) TVA ARUN[தொகு]

பயனர் பங்களிப்பினை [xtools.wmflabs.org] கருவி வழியாகத் தெரிவு செய்யலாம் என கருதுகிறேன். பக்க / திருத்த அளவினையும் கவனத்தில் கொள்ளலாம் என கருதுகிறேன்.--TVA ARUN (பேச்சு) 09:42, 6 மார்ச் 2023 (UTC)

அதில் பல கருவிகள் உள்ளன. எதைக் குறிப்பிடுகிறீர்கள்? ஒரு பங்களிப்பாளருக்குத் தருக. தகவலுழவன் (பேச்சு). 16:50, 6 மார்ச் 2023 (UTC)
ஒவ்வொரு {{பங்களிப்பாளர்புள்ளிகள்}} என்ற வார்ப்புருவினை உருவாக்கியுள்ளேன். அதன் வழி பயனர் பங்களிப்பு விவரங்களை எளிதில் காணலாம். மேலே பயனர்களுக்கும் இணைத்து விட்டேன். தகவலுழவன் (பேச்சு). 03:24, 8 மார்ச் 2023 (UTC)


5) சத்திரத்தான்[தொகு]

தொடர் பங்களிப்பாளர்களுக்கு முதன்மையாக வாய்ப்பினை வழங்கி, போட்டிக் காலங்களில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றவர்கள் விண்ணப்பம் செய்து இருந்தால் அவர்களுக்கும் உரிய வாய்ப்பினை வழங்கலாம். குழுவாக செயல்படும் பயனர்களை தேர்வு செய்வதில் கவனம் கொள்ளவும். இளம் பங்களிப்பாளருக்கு முன்னுரிமை வழங்கலாம். --சத்திரத்தான் (பேச்சு) 17:20, 14 மார்ச் 2023 (UTC)

6) Sridhar G[தொகு]

  • விக்கிமூலத்தில் தொடர்பங்களிப்பாளர்
  • பெண்களுக்கு முன்னுரிமை
  • புதுப் பயனர்கள்.
  • மாணவர்கள்.

Sridhar G (பேச்சு) 09:23, 16 மார்ச் 2023 (UTC)

//மாணவர்கள்// என்றால் கல்லூரி மாணவர்களா அல்லது பள்ளி மாணவர்களா? தகவலுழவன் (பேச்சு). 09:53, 16 மார்ச் 2023 (UTC)
விக்கிமூலத்தில் பங்களித்துவரும் பள்ளி,கல்லூரி மாணவர்கள். Sridhar G (பேச்சு) 11:37, 2 ஏப்ரல் 2023 (UTC)

வாக்கெடுப்பு - நிகழ்வு நாள், நிகழ்வு இடம்[தொகு]

  • தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே, கீழ்க்கண்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுதல் பொருத்தமாக இருக்கும். தேர்ந்தெடுக்கும் வரை பொறுக்கவும். வாக்கிடுவதற்கு முன்னுரிமை தர வேண்டாம் என்பது எண்ணம்.

--தகவலுழவன் (பேச்சு). 02:45, 24 பெப்ரவரி 2023 (UTC)

மேல்விக்கியில் மேலுள்ள கருத்துக்கணிப்பு குறித்து எனது எண்ணங்களைத் தெரிவித்துள்ளேன் அதனால் அக்கருவியை இடைநிறுத்தம்/நீக்கம் செய்வர் என நம்புகிறேன். தகவலுழவன் (பேச்சு). 02:56, 25 பெப்ரவரி 2023 (UTC)

I turned off the pole link. In terms of the selection process, I completely agree with you.

  • Discuss with the community and choose the 25 people who will attend the workshop.
  • The dates and location should be decided by a vote of 25 participants.

I will ask the community to have the entire process completed by April 15. Jayanta (CIS-A2K) (பேச்சு) 08:39, 26 பெப்ரவரி 2023 (UTC)

I started to convey and examine the 25 persons and hope that the entire process will completed by April 15.(Updating in this sheet continuously - google online spreadsheet) தகவலுழவன் (பேச்சு). 17:01, 6 மார்ச் 2023 (UTC)

இந்நிகழ்வில் கலந்து கொள்ள இயலாது என தெரிவித்தவர்[தொகு]

  1. Kumarkaliannan Kumarkaliannan (பேச்சு) 09:43, 15 மார்ச் 2023 (UTC)
  2. இங்கர்சால் INGERSOL 19:43, 16 மார்ச் 2023 (UTC)
  3. திவ்யாகுணசேகரன் - திவ்யாகுணசேகரன் (பேச்சு) 09:19, 17 மார்ச் 2023 (UTC)
  4. --ஆராவமுதன்.இரா (பேச்சு) 14:52, 17 மார்ச் 2023 (UTC)
  5. கலந்து கொள்ள இயலாமை சுந்தரதமிழரசு (பேச்சு) 14:56, 18 மார்ச் 2023 (UTC)
  6. --பிரபாகரன் ம வி (பேச்சு) 15:04, 20 மார்ச் 2023 (UTC)
  7. Iswaryalenin (பேச்சு) 10:21, 27 மார்ச் 2023 (UTC)
  8. --Rathai palanivelan (பேச்சு) 12:25, 27 மார்ச் 2023 (UTC)
  9. பயனர்:Neechalkaran புதியவர்கள் கலந்து கொள்ள வழிவிடுகிறேன். Neechalkaran (பேச்சு) 09:56, 2 ஏப்ரல் 2023 (UTC)
  10. Sriveenkat (பேச்சு) 04:35, 3 ஏப்ரல் 2023 (UTC)
  11. கலந்து கொள்ள இயலாத சூழல்--கி.மூர்த்தி (பேச்சு) 06:57, 6 ஏப்ரல் 2023 (UTC)

ஐயங்கள்[தொகு]

  1. எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற விவரம் தெரிந்தால் தான் அதற்கேற்ப பயனர்களின் எண்ணிக்கையினை திட்டமிட இயலும். அதிக நிதி கிடைக்கும்பட்சத்தில் நம்மால் பங்கேற்பாளர்களை அதிகரிக்க இயலும் தானே.
  2. எங்கு நடைபெறும், எப்போது நடைபெறும் என்ற எந்த விவரமும் தெரியாமல் நிகழ்விற்கு எவ்வாறு சம்மதமோ அல்லது மறுப்போ தெரிவிக்க இயலும்.
  3. முதலில் பயிற்சி நடைபெறும் ஊரினைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அங்குள்ள விக்கிப் பயனர்கள் குழுவாக சேர்ந்து தங்குமிடம், போக்குவரத்து வசதி பயிற்சிக்கான வசதி ஆகியன உள்ளதா என பார்க்க வேண்டும்.
  4. தற்போது பெறப்பட்டுள்ள விண்ணப்பப் படிவம் எது மாதிரியான பயிற்சி வழங்க வேண்டும் என்பது குறித்து தான் உள்ளது. பங்கேற்பாளர்களை இறுதிசெய்த பின்னர் இதைக் கேட்கலாம்.
  5. விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க அனுமதி வழங்குவதே நல்ல முன்மாதிரியாக இருக்கும். அதன்பின்னர், சமூக ஒப்புதலோடு தேர்வாளர்கள் குழு எந்த அடிப்படையின் கீழ் பங்கேற்பாளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
  6. வெறும் எண்ணிக்கை அடிப்படையில் பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம் ஒரு தானியங்கி மூலமாக ஆயிரக்கணக்கான தொகுப்புகளை ஒரே நாளில் செய்துவிடலாம் தானே.
  7. நாம் ஒரு சமூகமாக இணைந்து செயலாற்றினால் தான் நிகழ்வினை சிறப்பாக நடத்த இயலும்.

Sridhar G (பேச்சு) 12:21, 2 ஏப்ரல் 2023 (UTC)