உள்ளடக்கத்துக்குச் செல்

புதியதோர் உலகு செய்வோம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

புதியதோர்
உலகு செய்வோம்




ராஜம் கிருஷ்ணன்


தாகம்

G3/8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார்

தி.நகர், சென்னை - 600 017 Fax & போன் 24345904

மின்அஞ்சல்  : tamilputhakalayam@yahoo.com

வலைப்பக்கம்: http://expage.com/tamilputhakalayam

http://akian.50megs.com

புதியதோர் உலகு செய்வோம் (கட்டுரைகள்)

முதற் பதிப்பு : டிசம்பர் 2004

விலை ரூ.80.00


PUDHIYATHOR ULAGU SEIVOM
Articles in Tamil
by RAJAM. KRISHNAN
(C) Rajam Krishnan
First Edition : December 2004
Cover design : K. Uma
Pages : 232
DHAGAM
G3/8, Masilamani Street
Pondybazaar, T. Nagar
Chennai - 600 017
Ph. & Fax : 24345904
E-mail : tamilputhakalayam(a)VSnl.com
Website : http://expage.com/tamilputhakalayam
http://akilan.50megs.com


Price : Rs.80.00


Copyright warning: No part of this book may be reproduced or transmitted in any form or by any meanselectronic or mechnical including photocopying or recording or by any information storage and retrieval system without prior permission in writing from Mrs. Rajam Krishnan, Chennai.


Laser Typeset at: Sri Srinivasa Designs, Chennai -34. Ph: 28210403 Printed at : Malar Printers 044-8224803


முன்னுரை

சுதந்தரப் பொன்விழா ஆண்டை ஒட்டியும், புத்தாயிரத் துவக்க விழாவை ஒட்டியும் மகளிர் சமுதாய நிலை குறித்து ஆயும் வகையில் பல்வேறு அரங்குகளில் நிகழ்ந்த கருத்தரங்குகளில் வாசிக்கப் பெற்ற கட்டுரைகளுடன் அணிமைக்காலங்களில் தினமணி, பாரதமணி, பெண்ணே நீ தினமலர் இதழ்களில் எழுதிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன.

அரசியல் சுதந்தரத்துக்காகப் போராட்டத்தில் குதித்த தலைவர்கள் பலரும், முதலில் மகளிரை ஒடுக்கிய சமுதாயத் தீமைகளை உணர்ந்து அவற்றை அகற்றத்தான் பாடு பட்டனர். இளம்பருவத் திருமணம், குழந்தைக் கைம்பெண்களை உருவாக்கி இருட்டில் தள்ளியது. பலதார மணம், மணம் புரிந்து கொண்டு அற்பக் காரணங்களுக்காக ஒதுக்கி வைத்து அபலைகளாக்குதல், தேவதாசி முறை என்ற பெயரில் விலைமகள் வாழ்வைக் கட்டாயமாக்குதல் என்றெல்லாம் பெண் எந்த உரிமையும் இல்லாதவளாக ஒடுக்கப்பட்டாள்.இந்த ஒடுக்குதலுக்குச் சமய சாத்திரங்கள் துணை நின்றன. நூற்றாண்டுகள் இக்கொடுமைகளால் குறுக்கப்பட்டு, ஆணாதிக்க மரபுகளாலும், சமயம் சார்ந்த நெறிகளாலும் பதப்படுத்தப்பட்ட பெண், அரசியல் சுதந்தரத்துக்குப்பின், சட்ட பூர்வமாகப் பல தீமைகளில் இருந்து விடுதலை பெற்றாள். ஆணும் பெண்ணும் சமம் என்ற அடித்தளத்தில் அவள் குடியாட்சி உரிமையையும் எந்தப் போராட்டமும் இல்லாமல் பெற்று விட்டாள். இத்துணை ஆண்டுகளில் பெண்களின் நிலை எல்லா அரங்குகளிலும் மாற்றம் பெற்றிருக்கிறது.

பெண்கல்வி பெற்று, எல்லாத்துறைகளிலும் ஆணுக்குச் சமமாகவும் மேன்மையாகவும், தன் ஆற்றலை நீரூபித்து வருகிறாள். விண்கலம் செலுத்தி ஒரு கல்பனா சாவ்லா இந்தியப் பெண்ணின் பேராற்றலை நிலை நிறுத்தியிருக்கிறாள். கலைகள், பண்பாடு, இலக்கியம், தொழில் நுட்பம், மருத்துவம், பொறியியல், என்று ஒரு துறைகூட அவள் பங்கு பெறாத இடமாக இல்லை. என்றாலும் ஆணாதிக்க மரபுகள் பெண்களின் ஆளுமையையே இன்னமும் மலரவிடாமல் செய்திருக்கின்றன. சமூகப் பொருளாதாரம், சமத்துவம் இல்லாத நிலைகளில் அவளுக்கு வறுமையையே வழங்கி அவள் முன்னேற்றத்தைக் கிடுக்கிப்பிடிக்குள் வைத்திருக்கிறது. அடித்தளத்திலும், அவள் பேராற்றலை விளக்கப் போராடிச் சமாளிக்கிறாள். ஆட்டோ, பேருந்து என்று ஓட்டுகிறாள். கட்டுமானத்தளங்களிலும், கடினமான உடலுழைப்பை நல்குகிறாள். குடும்பப் பொறுப்புடன் நவீனமான அழுத்தங்களுக்கும் அவள் ஈடுகொடுக்கிறாள்.

இத்தனை ஆற்றல்களும் அவள் இருத்தலுக்குப் போராடும் அவலத்தில் விடிவதை யாரே ஏற்றுக்கொள்வர்?

இயல்பான வாழ்வளிக்கும் திருமணமும் தாய்மையும் கூட வரதட்சணை பூதத்தை வென்று, குடும்பக்கட்டுப்பாட்டு நிர்ப்பந்தங்களை ஏற்கும் அழுத்தங்களைச் சுமந்து தான் அமைகிறது. அவள் அறிவு சார் முன்னேற்றப் பாதையில் அடிவைக்கிறாள், பாரம் சுமந்துமே. இந்நிலையில் பெண்களுக்கு ஆட்சி மன்ற ஒதுக்கீடு, சமத்துவ உரிமை என்றெல்லாம் ‘ஆதிக்க மரபுகள்’ விட்டுக் கொடுக்கவேண்டி இருக்கிறது. கிடைத்த இடத்தைப் பற்றிக் கொள்வோம் என்று, எழுத்தறிவு அற்ற பெண்ணும் பஞ்சாயத்துத் தேர்தல்களில் வெற்றி பெற்று, மூச்சுக்கு முக்குளிக்கிறாள். சுயநிதிக் குழுக்கள் புதிய வரலாற்றை எழுதுகின்றன. கிராமப் பெண்கள், விவசாயம் அது சார்ந்த நீரூபித்து வருகிறாள். விண்கலம் செலுத்தி ஒரு கல்பனா சாவ்லா இந்தியப் பெண்ணின் பேராற்றலை நிலை நிறுத்தியிருக்கிறாள். கலைகள், பண்பாடு, இலக்கியம், தொழில் நுட்பம், மருத்துவம், பொறியியல், என்று ஒரு துறைகூட அவள் பங்கு பெறாத இடமாக இல்லை. என்றாலும் ஆணாதிக்க மரபுகள் பெண்களின் ஆளுமையையே இன்னமும் மலரவிடாமல் செய்திருக்கின்றன. சமூகப் பொருளாதாரம், சமத்துவம் இல்லாத நிலைகளில் அவளுக்கு வறுமையையே வழங்கி அவள் முன்னேற்றத்தைக் கிடுக்கிப்பிடிக்குள் வைத்திருக்கிறது. அடித்தளத்திலும், அவள் பேராற்றலை விளக்கப் போராடிச் சமாளிக்கிறாள். ஆட்டோ, பேருந்து என்று ஓட்டுகிறாள். கட்டுமானத்தளங்களிலும், கடினமான உடலுழைப்பை நல்குகிறாள். குடும்பப் பொறுப்புடன் நவீனமான அழுத்தங்களுக்கும் அவள் ஈடுகொடுக்கிறாள்.

இத்தனை ஆற்றல்களும் அவள் இருத்தலுக்குப் போராடும் அவலத்தில் விடிவதை யாரே ஏற்றுக்கொள்வர்?

இயல்பான வாழ்வளிக்கும் திருமணமும் தாய்மையும் கூட வரதட்சணை பூதத்தை வென்று, குடும்பக்கட்டுப்பாட்டு நிர்ப்பந்தங்களை ஏற்கும் அழுத்தங்களைச் சுமந்து தான் அமைகிறது. அவள் அறிவு சார் முன்னேற்றப் பாதையில் அடிவைக்கிறாள், பாரம் சுமந்துமே. இந்நிலையில் பெண்களுக்கு ஆட்சி மன்ற ஒதுக்கீடு, சமத்துவ உரிமை என்றெல்லாம் ‘ஆதிக்க மரபுகள்’ விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கிறது. கிடைத்த இடத்தைப் பற்றிக் கொள்வோம் என்று, எழுத்தறிவு அற்ற பெண்ணும் பஞ்சாயத்துத் தேர்தல்களில் வெற்றி பெற்று, மூச்சுக்கு முக்குளிக்கிறாள். சுயநிதிக் குழுக்கள் புதிய வரலாற்றை எழுதுகின்றன. கிராமப் பெண்கள், விவசாயம் அது சார்ந்த

உள்ளே ...
1. 7
2. 30
3. 43
4. 50
5. 58
6. 67
7. 74
8. 78
9. 85
10. 90
11. 96
12. 104
13. 108
14. 112
15. 119
16. 126
17. 130
18. 134
19. 140
20. 144
21. 149
22. 154
23. 159
24. 173
25. 181
26. 187
27. 200

"https://ta.wikisource.org/w/index.php?title=புதியதோர்_உலகு_செய்வோம்&oldid=1548018" இலிருந்து மீள்விக்கப்பட்டது