புது டயரி
புது டயரி
கி. வா. ஜகந்நாதன்
விற்பனை உரிமை:
அமுத நிலையம் லிமிடெட்
46, ராயப்பேட்டை, ஹைரோடு, சென்னை-600 014.
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
.
முதற் பதிப்பு: ஆகஸ்டு, 1979.
விலை. ரூ. 10-00
வெளியீட்டாளர் :
காந்தமலை வெளியீடு,
சென்னை.28.
கற்பகம் அச்சகம், சென்னை-600 002.
நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ விதமான அநுபவங்களை நாம் பெறுகிறோம். பல்வேறு குணங்களையுடைய மனிதர்களோடு பழகுகிறோம், பிறருடைய பேதைமையையும் சாமர்த்தியத்தையும் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் பல கிடைக்கின்றன. நம்முடைய பைத்தியக்காரத்தனத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
இவற்றையெல்லாம் நேரிலே பார்க்கும்போது நமக்கு அந்த நிகழ்ச்சியினால் விளையும் விளைவுக்கு ஏற்ற உணர்ச்சி உண்டாகிறது. ஆனால் அந்த நிகழ்ச்சிகள் நடந்து பல காலத்துக்குப் பிறகு அவற்றைச் சிந்தித்துப் பார்த்தால், அவற்றில் உள்ள விசித்திரத்தன்மை புலனாகிறது. முன்பு அந்த நிகழ்ச்சியில் ஈடுபட்ட பாத்திரமாக இருந்ததனால் அதன் நேரடி விளைவே தெரிந்தது. இப்போதோ ஏதோ ஒரு நாடகத்தைப் பார்ப்பதுபோல, வேறாக நின்று பார்க்கிறபோது நமக்கு உண்டாகும் உணர்ச்சி வேறானது; ஒரு வாழ்க்கை வரலாற்றைப் படித்துச் சுவைப்பது போலத் தோன்றுகிறது.
இப்படி நிகழும் உலகியலில்தான் எத்தனை விசித்திரங்கள்! ஒரு சிறிய நிகழ்ச்சியானாலும், அதனோடு தொடர்புடையவர்களின் மனநிலையை இப்போது நினைத்துப் பார்த்தால் நமக்கு ஒருவகையில் பற்றற்ற உணர்ச்சியே உண்டாகிறது. நடந்தவற்றை எண்ணி எண்ணிப் புன்னகை பூக்கும் வகையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கும்
வாழ்க்கை அநுபவங்களில் இப்படி, நினைத்து சிரிக்கும் பகுதிகள் இருப்பதனால் நாம் தளர்ச்சியடையாமல் வாழ்கிறோம். “இடுக்கண் வருங்கால் நகுக” என்று திருவள்ளுவர் சொல்வது எவ்வளவு உயர்ந்த கருத்து முதலில் இடுக்கண்ணாக முன்பு வந்ததை இப்போது நினைத்துச் சிரிக்க வேண்டும்;பிறகு இடுக்கண் வரும் போது சிரிக்கும் ஆற்றல் உண்டாகும்.
வாழ்க்கை அநுபவங்களில் மென்மையான நகைச்சுவையை உண்டாக்குபவற்றைப் பற்றி எழுதினால் நாம் புன்னகை பூப்பது போல மற்றவர்களும் நகைச்சுவையை நுகர்வார்கள். ஏனென்றால் அத்தகைய அநுபவங்கள் அவர்களுடைய வாழ்க்கையிலும் ஏற்பட்டிருக்கும்.
இத்தகைய அநுபவங்களை நிலைக்களமாக வைத்து மென்மையான நகைச்சுவை யமைய எழுதிய கட்டுரைகள் இவை. இவை பத்திரிகையில் வெளிவந்த போது, “என்னுடைய அநுபவங்கள் உமக்கு எப்படி ஐயா தெரிந்தன?” என்று கேட்ட அன்பர்களும் உண்டு.
இந்தக் கட்டுரைகளில் பல இடங்களில் என்னுடைய ஆசிரியப் பிரானைப் பற்றிய செய்திகள் வரும். அவர்களோடு பழகிய ஆண்டுகள் என் வாழ்க்கையில் அநுபவ முதிர்ச்சியைத் தந்த காலமாதலின், என் அநுபவத்தினிடையே அவர்களுடைய நினைவு இயல்பாகவே எழுகிறது.
இவற்றைப் புத்தக உருவில் தொகுத்து வெளியிடத் திருவருள் கூட்டுவித்தது. அந்தத் திருவருளை வாழ்த்துகிறேன்.
காந்தமலைகி. வா. ஜகந்நாதன்
6–8–79
பொருளடக்கம்
1. | புது டயரி | … | 1 |
2. | குடைப் புராணம் | … | 12 |
3. | சென்ற இடம் எல்லாம் | … | 23 |
4. | நோய்க்கு இடம் கொடு | … | 34 |
5. | ஞான தீர்த்தம் | … | 43 |
6. | பட்டி மண்டபம் | … | 52 |
7. | நாலாவது | … | 61 |
8. | உண்பதும் ஒரு கலை | … | 76 |
9. | எழுதுகோலின் அவதாரம் | … | 88 |
10. | கண்ணுக்கு அணிகலன் | … | 99 |
11. | என் புத்தகங்கள் | … | 109 |
12. | தலையசைத்தால் போதும்! | … | 118 |
13. | நடந்த கதை | … | 129 |
14. | கழுத்தில் விழுந்த மாலை | … | 138 |
15. | காது குத்தாதே! | … | 147 |
16. | பெயர் படுத்தும் பாடு | … | 155 |
17. | ஸார் பேப்பர்! | … | 164 |
18. | புரியாத சங்கிடம் | … | 173 |
19. | தூங்குகிற சுகம் | … | 185 |
20. | தலையும் தவலையும் | … | 193 |
21. | பேசத் தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் | … | 200 |
22. | டிரிங் டிரிங் | … | 208 |