குர்ஆன்/யானை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

  1. (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
  2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
  3. மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
  4. சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
  5. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=குர்ஆன்/யானை&oldid=19641" இருந்து மீள்விக்கப்பட்டது