குர்ஆன்/முற்பகல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

  1. முற்பகல் மீது சத்தியமாக
  2. ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
  3. உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
  4. மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.\
  5. இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
  6. (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
  7. இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
  8. மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
  9. எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
  10. யாசிப்போரை விரட்டாதீர்.
  11. மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
"https://ta.wikisource.org/w/index.php?title=குர்ஆன்/முற்பகல்&oldid=19627" இருந்து மீள்விக்கப்பட்டது