குர்ஆன்/புறங்கூறல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
குர்ஆன்
104. புறங்கூறல்

ஆசிரியர்:


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

  1. குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
  2. (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
  3. நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
  4. அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
  5. ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
  6. அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
  7. அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
  8. நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
  9. நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).
"https://ta.wikisource.org/w/index.php?title=குர்ஆன்/புறங்கூறல்&oldid=19639" இருந்து மீள்விக்கப்பட்டது