உள்ளடக்கத்துக்குச் செல்

குர்ஆன்/இரவு

விக்கிமூலம் இலிருந்து

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

  1. (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக
  2. பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
  3. ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
  4. நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
  5. எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
  6. நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
  7. அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
  8. ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
  9. இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
  10. அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
  11. ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
  12. நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
  13. அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
  14. ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
  15. மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.
  16. எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.
  17. ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.
  18. (அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
  19. மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.
  20. மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).
  21. வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=குர்ஆன்/இரவு&oldid=19626" இலிருந்து மீள்விக்கப்பட்டது