குர்ஆன்/அதிர்ச்சி
Appearance
< குர்ஆன்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
- பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது
- இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
- "அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது-
- அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
- (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.
- அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
- எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
- அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.