குர்ஆன்/தோற்றுவாய்
தோற்றம்
< குர்ஆன்
தோற்றுவாய்- வசனங்கள்: 7- மக்காவில் அருளப்பட்டது

1. | بسم الله الرحمن الرحيم | bi-smi llāhi r-raḥmāni r-raḥīm | அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன். |
2. | الحمد لله رب العلمين | al-ḥamdu li-llāhi rabbi l-ʿālamīn | அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும், |
3. | الرحمن الرحيم | ar-raḥmāni r-raḥīm | (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் |
4. | ملك يوم الدين | māliki yaumi d-dīn | (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).! |
5. | إياك نعبد وإياك نستعين | iyyāka naʿbudu wa-iyyāka nastaʿīn | (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். |
6. | اهدنا الصرط المستقيم | ihdinā ṣ-ṣirāṭa l-mustaqīm | நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, |
7. | صرط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضآلين | ṣirāṭa llaḏīna anʿamta ʿalaihim ġairi l-maġḍūbi ʿalaihim wa-lā ḍ-ḍāllīn | (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. |