குர்ஆன்/இரத்தக்கட்டி
Appearance
< குர்ஆன்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
- (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
- 'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
- ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
- அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
- மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
- எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
- அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
- நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
- தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
- ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
- நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
- அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
- அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
- நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
- அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
- தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
- ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
- நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
- (அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.