குர்ஆன்/விரிவாக்கல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
குர்ஆன்
94. விரிவாக்கல்

ஆசிரியர்:


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

  1. நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
  2. மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
  3. அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.
  4. மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
  5. ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
  6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
  7. எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
  8. மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
"https://ta.wikisource.org/w/index.php?title=குர்ஆன்/விரிவாக்கல்&oldid=19628" இருந்து மீள்விக்கப்பட்டது