நற்றிணை-2/அறியப்படும் ஊர்கள்
அறியப்படும் ஊர்கள்
இந்நூற் செய்யுட்களால்
அறியப்படும் தமிழகப் பேரூர்கள்
ஆர்க்காடு 227 அழிசிக்கு உரியதான இவ்வூர் சோழர்க்கு உரியதாகப் பூதன் தேவனாரால் காட்டப்படுகின்றது.
ஆரேறு 265 செங்கோற் சென்னிக்கு உரியதாகப் பரணர் காட்டுவர்.
ஆலங்கானம் 387 செழியனின் போர் வெற்றியைப் பொதும்பில்கிழார் கூறுவர்.
இருப்பை 260, 350 வென்வேல் வயவன் மலிபுனல் வாயில் இருப்பை என்பவர் பரணர்—தேர்வண் விரான் இருப்பை என்பர் மீண்டும் பரணர்.
ஊணூர் 300 தழும்பனுக்கு உரியது என்பர் பரணர்.
ஏழிற்குன்றம் 391 கொண்கான நாட்டு நன்னனுக்கு உரியது என்பர் பாலைபாடிய பெருங் கடுங்கோ.
கழாஅர் 281 வெல்போர்ச் சோழர் கழாஅர் என்பர் கழார்க்கீரன் எயிற்றியார்.
குடந்தை வாயில் 379 தேர்வண் சோழர் குடந்தை வாயில் என்பர் குடவாயிற் கீரத்தனார்.
குன்றூர் 280 தொன்றுமுதிர் வேளிரது ஊர் என்பர் பரணர்.
கொல்லி 265, 346 மாரிவண் மகிழ் ஓரியின் ஊர் என்பர் பரணர். பொறையன் கொல்லி என்பார் எயினந்தை மகனார் இளங்கீரனார்.
சிறுகுடி 340 வாணன் சிறுகுடி என்பர் நக்கீரர்.
சிறுகுடி 367 மூதில் அருமண் பேரிசைச் சிறுகுடி என்பர் நக்கீரர்.
மருங்கூர்ப் பட்டினம் 258 நக்கீரர் கடற்கரையூராகக் காட்டுவர்.
மருங்கை 358 பசும்பூண் வழுதிக்கு உரியது என்பர் நக்கீரனார்.
வெண்ணி 390 கிள்ளிக்கு உரியது என்பர் ஔவையார்.