விக்கிமூலம்:நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள் என்னும் இப்பக்கம், உங்களையோ அல்லது வேறொரு பயனரையோ விக்கிப்பீடியா நிர்வாகியாக்கும்படி (sysop) வேண்டி நியமிக்கும் இடமாகும். நிருவாகிகளின் பொறுப்பு என்ன, அவர்கள் என்ன செய்வார்கள் என்று அறிய நிர்வாகிகள் பக்கம் சென்று பார்க்கவும். ஆங்கில விக்கியில் வாசிக்க வேண்டியவற்றின் பட்டியலையும் (ஆங்கிலம்) மற்றும் "எப்படி?" வழிகாட்டியையும் பார்க்கவும். தமிழ் விக்கிமூலத்தில் நடப்பிலுள்ள நிர்வாகிகளின் பட்டியலுக்கு இங்கு பார்க்கவும்.

விதிமுறைகள்[தொகு]

பண்புகள்[தொகு]

விக்கிமூலத்தின் கொள்கைகளை அறிந்த, அறிமுகமானவரும், நம்பிக்கைக்குரியவருமான விக்கிமூலச் சமுதாய உறுப்பினரொருவருக்கே பொதுவாக நிருவாகி தகுதி வழங்கப்படுகின்றது. நிருவாகிகளுக்கு விக்கிமூலம் மீது சிறப்பு அதிகாரமெதுவும் இல்லாவிட்டாலும், பல பயனர்களால், குறிப்பாகப் புதியவர்களால் விக்கிமூலத்தின் தொடர்பாளர்களாகப் பார்க்கப்படுவது காரணமாக, ஓரளவு உயர்ந்த தரத்தில் மதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் நற்பண்புகள் கொண்டவர்களாகவும், மற்றப் பயனர்களுடன் பழகும் போது நல்ல மதிப்பிடு திறன் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பவராயும் இருக்க வேண்டும். இத்தகைய பண்புகள் நியமனம் செய்யப்படுபவர்களிடம் உள்ளனவா என்று மற்றவர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக அவர்கள் போதிய அளவு காலம் விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்து இருந்திருக்க வேண்டும். பெரும்பாலான புதிய நிருவாகிகள் மூன்று மாதங்களுக்கு மேல் பங்களிப்பு செய்தவர்களாயும், 1000 தொகுப்புகளுக்கு மேல் செய்தவர்களாகவும் இருக்கிறார்கள். நீங்கள் உங்களையே நியமித்துக் கொள்ளலாம். ஆனாலும் மேற்சொன்ன எதிர்பார்ப்புகளை நீங்கள் நிறைவு செய்வதை உறுதிப்படுத்திக் கொள்வது நன்று.

நியமன முறை[தொகு]

நிருவாகி நியமனத்திற்கு நியமிக்கப்படவுள்ளவர்கள் குறித்து பிற பயனர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காகவும், வாக்களிப்பதற்காகவும், நியமனங்கள் ஏழு நாட்கள்வரை கால அவகாசம் கொடுக்கப்படும். பயனர் விருப்பு முடிவு எட்டப்படுமளவுக்குத் தெளிவில்லாதிருப்பின், இக்காலம் அதிகாரி (Bureaucrat) களினால் நீட்டிக்கப்படலாம் (பொதுவாக 80% ஆதரவு எதிர்பார்க்கப்படுகின்றது). போதிய அளவு ஆதரவைப் பெறாது எனத் தெளிவாகத் தெரியும் நியமனங்களை, தொடர்ந்து வரக்கூடிய விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றங்களைத் தவிர்ப்பதற்காக முன்னரே நீக்கி விடலாம். எனினும் பல பயனர்கள் ஒவ்வொரு நாளும் விக்கிப்பீடியாவுக்கு வருவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு போதிய அளவு கால அவகாசம் அளிப்பது விரும்பத்தக்கது. உங்கள் நியமனம் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், மீண்டும் நியமனம் கோருமுன் போதிய அளவு காலம் விடவும்.

உங்கள் வாக்கை அளிப்பதற்குக் குறிப்பிட்ட நியமிக்கப்பட்டவருடைய பகுதியைத் தொகுக்கவும். சிறிய கருத்தொன்றையும் நீங்கள் அங்கே கொடுக்கலாம், எனினும் கலந்துரையாடல்களும், பிற கருத்துக்கள் மீதான உங்கள் கருத்தும் ஒவ்வொரு நியமனத்தின் கீழும் காணப்படும் "கருத்துக்கள்" பகுதியிலேயே சேர்க்கப்பட வேண்டும்.

அடையாளம் தெரியாத பயனர்கள் நியமிக்கப்படவோ, மற்றவர்களை நியமிக்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது. தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதி உண்டு.

படிமுறைகள்[தொகு]

 1. நீங்கள் நியமிக்க விரும்புவர் மேல் குறிப்பிட்டதற்கு ஏற்ப பொறுப்பு உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.
 2. நீங்கள் நியமிக்க விரும்புபவரிடமிருந்து அனுமதி பெறவும்.
 3. இங்கு புதிய பகுதி ஒன்றில் அவரது பயனர் பெயரை பிரதியிடவும்.
 4. இதன் கீழ் நீங்கள் நியமிக்கும் பயனர் ஏன் ஒரு நல்ல நிர்வாகியாக இருப்பார் என்பதை விளக்கவும். அதன் கீழ் உங்கள் ஒப்பத்தை இடவும்.
 5. குறிப்பு: நியமனங்கள் சம்பந்தப்பட்ட பயனர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். நீங்கள் ஒரு பயனரை நியமித்தால் அவருடைய பேச்சுப் பக்கத்தில் ஒரு தகவலை எழுதி அவர் இந்நியமனத்தை ஏற்றுக் கொண்டால் இப்பக்கத்தில் பதிலளிக்கும்படி கேட்டுக் கொள்ளவும்.
 6. திகதியை (00:00:00) இடவும். குறைந்தது ஏழு நாட்களுக்கு வாக்கு நடக்கும்.
 7. விக்கிப் பயனர்கள் ஆதரவு/எதிர்ப்பு/கருத்து எனத் தமது நிலைப்பாடுகளை முன் வைக்க அழைக்கப்படுவார்கள்.
 8. குறிப்பிடத்தக்க ஆதரவு இருக்கும் பட்சத்தில் அந்தப் பயனர் நிர்வாகியாகத் தேர்தெடுக்கப்படுவார்.

நடப்பு வேண்டுகோள்கள்[தொகு]

info-farmer (மார்ச்சு 4, 2016- மார்ச்சு 11, 2016) (வாக்கு: 9|0|0)[தொகு]

தகவல் உழவன் உறைவிட விக்கிமீடியராகப் பணியாற்றி விக்கிமூலம் தளத்தில் முழுக் கவனம் செலுத்தி வருகிறார். நாட்டுடைமையான நூல்கள், அடுத்து நாம் பதிவேற்றுள்ள பல்வேறு நூல்களை முறையாக ஒழுங்குபடுத்தும் பணிக்குத் அவருக்கு நிருவாக அணுக்கம் உதவும். எனவே, அவருக்கு நிருவாக அணுக்கம் வழங்கப் பரிந்துரைக்கிறேன். --இரவி (பேச்சு) 16:03, 3 மார்ச் 2016 (UTC)

தகவலுழவனான நான் தற்போது நாட்டுடைமை நூல்களுக்கான திட்டத்தினை செயற்படுத்துவதால், இக்கட்டக அணுக்கர் (sysop=system operator) நிலைத் தேவைப்படுவதால், அச்சிறப்புரிமையைப் பெற, எனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--உழவன் (உரை) 16:19, 3 மார்ச் 2016 (UTC)


ஆதரவு[தொகு]

 1. 👍 விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 16:50, 3 மார்ச் 2016 (UTC)
 2. 👍 விருப்பம்--Selvasivagurunathan m (பேச்சு) 18:22, 3 மார்ச் 2016 (UTC)
 3. Symbol support vote.svg ஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 19:24, 3 மார்ச் 2016 (UTC)
 4. மதனாகரன் (பேச்சு) 04:00, 4 மார்ச் 2016 (UTC)
 5. 👍 விருப்பம் --Rsmn (பேச்சு) 04:35, 4 மார்ச் 2016 (UTC)
 6. 👍 விருப்பம் --அருளரசன்Arulghsr (பேச்சு) 05:34, 4 மார்ச் 2016 (UTC)
 7. 👍 விருப்பம் --Natkeeran (பேச்சு) 21:02, 4 மார்ச் 2016 (UTC)
 8. Symbol support vote.svg ஆதரவு--Maathavan (பேச்சு) 13:33, 8 மார்ச் 2016 (UTC)
 9. Symbol support vote.svg ஆதரவு--Neechalkaran (பேச்சு) 00:34, 9 மார்ச் 2016 (UTC)
 10. 👍 விருப்பம் --Hibayathullah (பேச்சு) 15:22, 26 சூன் 2016 (UTC)
 11. Symbol support vote.svg ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:16, 3 அக்டோபர் 2016 (UTC)
 12. Symbol support vote.svg ஆதரவு--மணி. கணேசன் (பேச்சு)

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

எண்ணங்கள்[தொகு]

முடிவு[தொகு]

 • தற்போதுள்ள சூழ்நிலைகளின் படி, ஒருவர் தொடர்ந்த 3மாதங்களே இருக்க இயலும். அதன் படி நான் 16 மார்ச்சு 2016 - 16 சூன் 2016) வரை இருந்தேன் அவர் விரும்பினால்தொடரலாம் என்பதால், நான் அடுத்த 3 மாதங்களுக்கு பாலாஜி இருக்க விரும்புவதால், சுழற்சி முறையை அறிமுகம் செய்ய விரும்பி விலகுகிறேன்.-- உழவன் (உரை) 15:50, 20 சூன் 2016 (UTC)
 • கட்டக அணுக்கம் என்பது ஒரு பதவி அன்று என்பதால் இதற்கு சுழற்சி முறை தேவையில்லை. தாங்கள் நிறை பணி செய்வதால் தாங்கள் மீண்டும் கட்டக உரிமைக்கு முயற்சி செய்யலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:13, 24 சூன் 2016 (UTC)
மிகச் சிறிய விக்கிச் சமூகங்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நிருவாக அணுக்கத்தைப் புதுப்பித்து வர வேண்டும் என்பது தான் மேல் விக்கி நடைமுறை. எனவே, முனைப்பாகப் பங்களிக்கும் நீங்கள் மீண்டும் நிருவாக அணுக்கம் பெற விண்ணப்பியுங்கள். ஆதரவு அளிக்கிறோம். --இரவி (பேச்சு) 10:53, 26 சூன் 2016 (UTC)

Balajijagadesh (சூன், 2016- சூன், 2016) (வாக்கு: 8|0|0)[தொகு]

தமிழ் விக்கிமூலம் பல ஆண்டுகளாக இருந்துவந்தாலும், வார்புரு, இடைமுகம், மற்றும் பல வித்ததில் இன்னும் முழுமை அடையவில்லை. தற்பொழுது அத்ததைய பணிகள் செய்வதற்கு கட்டக அணுக்கம்(sysop) தேவைப்படுகிறது. அதற்காக ஆதரவு மற்றும் கருத்துக்களை கோருகிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:13, 24 சூன் 2016 (UTC)

ஆதரவு[தொகு]

 1. -- உழவன் (உரை) 05:15, 24 சூன் 2016 (UTC)
 2. --Maathavan (பேச்சு) 14:33, 24 சூன் 2016 (UTC)
 3. --Kanags \உரையாடுக 06:01, 26 சூன் 2016 (UTC)
 4. --இரவி (பேச்சு) 10:52, 26 சூன் 2016 (UTC)
 5. --சிவகோசரன் (பேச்சு) 14:20, 26 சூன் 2016 (UTC)
 6. --Selvasivagurunathan m (பேச்சு) 09:12, 27 சூன் 2016 (UTC)
 7. --Natkeeran (பேச்சு) 18:09, 27 சூன் 2016 (UTC)
 8. --மணியன் (பேச்சு) 18:20, 27 சூன் 2016 (UTC)

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

எண்ணங்கள்[தொகு]

முடிவு[தொகு]

Balajijagadesh (அக்டோபர், 2016) (வாக்கு: 11|0|0)[தொகு]

கடந்த முறை அணுக்கத்திற்கு வாக்களத்தற்கு நன்றி. சென்ற முறை அளித்த நிருவாக அணுக்கம் 02-10-2016 அன்று முடிவடைந்தது. இந்த மூன்று மாத காலங்களில் நிறைய மாற்றங்களை செய்துள்ளேன். முக்கியமானதாக ws-export கருவியை ஒன்றினைத்தேன். இக்கருவி மூலம் தமிழ் விக்கிமூலத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்னூல்களில் எண்ணிக்கை பின்வருமாறு:[1]

மாதம் Lang epub htmlz mobi odt pdf rtf txt
ஜூன்-16 ta 25 1 33 0 95 14 0
ஜூலை-16 ta 175 1 130 0 402 84 4
ஆகஸ்டு-16 ta 176 0 145 0 547 51 0
செப்டம்பர்-16 ta 407 0 368 0 1404 172 1
அக்டோபர்-16

(02-10-16 வரை)

ta 54 0 76 0 120 3 0
250
500
750
1,000
1,250
1,500
ஜூன்
-16
ஜூலை
-16
ஆகஸ்டு
-16
செப்
-16
அக்-16
(02-10-16 வரை)
 •   epub
 •   htmlz
 •   mobi
 •   pdf
 •   rtf
 •   txt

முதற்பக்கம் மாற்றியமைத்தல், பல கருவிகளை செயல்படுத்தியதல், பரமாரிப்பு பணிகள் முதலியன செய்துள்ளேன். இப்பணிகள் மேலும் தொடர மீண்டும் நிருவாக அணுக்கம் வேண்டுகிறேன்.

ஆதரவு[தொகு]

 1. -- உழவன் (உரை) 06:30, 3 அக்டோபர் 2016 (UTC)
 2. --Kanags \உரையாடுக 06:47, 3 அக்டோபர் 2016 (UTC)
 3. --Tshrinivasan (பேச்சு) 06:48, 3 அக்டோபர் 2016 (UTC)
 4. --நந்தகுமார் (பேச்சு) 07:14, 3 அக்டோபர் 2016 (UTC)
 5. Symbol support vote.svg ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:17, 3 அக்டோபர் 2016 (UTC)
 6. Symbol support vote.svg ஆதரவு--மணியன் (பேச்சு) 10:57, 3 அக்டோபர் 2016 (UTC)
 7. Symbol support vote.svg ஆதரவு சிறப்பாக பங்களிப்பமைக்கு நன்றி. --இரவி (பேச்சு) 11:21, 3 அக்டோபர் 2016 (UTC)
 8. Symbol support vote.svg ஆதரவு --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 22:02, 3 அக்டோபர் 2016 (UTC)
 9. Symbol support vote.svg ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 02:30, 4 அக்டோபர் 2016 (UTC)
 10. 👍 விருப்பம் -- உங்கள் வழிகாட்டுதல் உதவுகிறது, மிக்க நன்றி. --தேமொழி (பேச்சு) 02:09, 5 அக்டோபர் 2016 (UTC)
 11. Symbol support vote.svg ஆதரவு--Kalaiarasy (பேச்சு) 22:07, 5 அக்டோபர் 2016 (UTC)
 12. --Natkeeran (பேச்சு) 16:06, 19 அக்டோபர் 2016 (UTC)

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

எண்ணங்கள்[தொகு]

 1. நிரந்தரமாக இரவி மட்டுமே அணுக்கம் பெற்றவராக உள்ளார். அதுபோல, பாலாஜிக்கும் அணுக்கம் கிடைக்க ஆதரவு அளிக்கிறேன். இதற்குரிய நடைமுறை என்ன? இத்திட்டம் வளர்ந்தோங்க ஒவ்வொரு 3 மாதத்திற்கும், ஒருமுறை அணுக்கம் வேண்டுவது என்பது அவருக்கு பணியடர்வு ஆகும்.-- உழவன் (உரை) 06:33, 3 அக்டோபர் 2016 (UTC)
நிரந்தர அணுக்கம் தொடர்பான பேச்சை இங்கு காணவும். ஒரு வருடம் வரை நிருவாக அணுக்கம் தர முடியும் என கூறியுள்ளனர். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:11, 3 அக்டோபர் 2016 (UTC)
மகிழ்ச்சி. தொடர்ந்து சீரிய முறையில் பங்களிக்க வாழ்த்துக்கள். வணக்கம்-- உழவன் (உரை) 02:20, 4 அக்டோபர் 2016 (UTC)

அதரவு அளித்தவர்கள் அனைவருக்கும் நன்றி!!. @Info-farmer:: நீங்கள் கூறுயது போல் நிரந்தர அணுக்கத்திற்கு விண்ணப்பம் செய்கிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:48, 12 அக்டோபர் 2016 (UTC)

நிருவாக அணுக்கம் வழங்கப்பட்டுவிட்டது. அனைவருக்கும் நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:43, 14 அக்டோபர் 2016 (UTC)

Balajijagadesh (ஜீலை, 2017) (வாக்கு: 0|0|0)[தொகு]

"விக்கியிடை இறக்குமதியாளர்" (interwiki importer) மற்றும் "இறக்குமதியாளர்" (importer) உரிமைக்கான வேண்டுகோள். ஆங்கில விக்கிமூலத்திலிருந்து நிறைய வார்ப்புருக்கள் மெய்ப்பு செய்வதற்காக தமிழ் விக்கிமூலத்திற்கு கொண்டு வர வேண்டியுள்ளது. ஒவ்வொரு பக்கமாக ஒட்டெடுத்து செய்வது மிகவும் நேரம் மிகுந்த செயலாக உள்ளது. இதனால் "விக்கியிடை இறக்குமதியாளர்" மற்றும் "இறக்குமதியாளர்" உரிமை இருந்தால் எளிமையாக செய்துவிடலாம். அதனால் இதற்கான அணுக்கத்தை கோருகிறேன். (எனது தற்போதைய அணுக்கங்கள்). நன்றி -- Balajijagadesh (பேச்சு) 05:59, 23 சூலை 2017 (UTC)

ஆதரவு[தொகு]

 1. -- உழவன் (உரை) 07:50, 23 சூலை 2017 (UTC)
 2. -- Sgvijayakumar (பேச்சு) 15:00, 23 சூலை 2017 (UTC)

நடுநிலை[தொகு]

எதிர்ப்பு[தொகு]

எண்ணங்கள்[தொகு]

முடிவு[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. https://tools.wmflabs.org/wsexport/tool/stat.php?month=10&year=2016