பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
பாச் சோறு
(குழந்தைப் பாடல்கள்)
பாவலரேறு
பெருஞ்சித்திரனார்
நூல் : | பாச்சோறு |
வகை : | குழந்தைப் பாடல்கள் |
ஆசிரியர் : | பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
பதிப்பு : | தி.பி. 2037ஆடவை.18 (2.7.2006) |
வெளியீடு : | திருவள்ளுவர் கல்விப்பணி அறக்கட்டளை, |
419, மங்கலம் சாலை, பல்லடம் - 641 664. | |
அச்சாக்கம் : | திலகா மறுதோன்றி அச்சகம் |
6வது விதி தொடர்ச்சி, | |
காந்திபுரம், கோவை - 12. 2526005 | |
விலை : | ரூ.20/- |
இன்றைய பயனோ நேற்றைய உழைப்பு
இன்றைய சிறுவர் நாளைய உலகம்
நன்று செய்வதே நமக்குநல் வாழ்க்கை
என்றும் அழியா திருப்பது புகழே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
குழந்தைகளுக்குத் தொடக்கத்தில் வேண்டியவை பாலும் சோறும்; பாட்டும் கதையும்; ஆட்டமும் பயிற்சியும்; ஓய்வும் உறக்கமும்!
வளர வளரத்தான் அவர்களுக்கு கல்வியும் கருத்தும் ஒழுக்கமும் உலகமும் வேண்டும்!
கல்வியைக் கற்கத் தொடங்கு முன் ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் தாய்மடியே பள்ளிக்கூடம்!
அவள் தாலாட்டே முதல் பாடம்! நிலாப்பாட்டே அதற்குக் குழந்தைப் பாவியம்!
அதன் பின்னர்தான் அதன் ஆசிரியப் பணியேற்று வேறுசில கருத்துப் பாடல்களையும் உருவகக் கதைகளையும் கற்பித்து, அதன் கற்பனை வளத்தைப் பொங்கச் செய்கின்றார், தந்தை!
மூன்றாம் படியாகத்தான் ஆசிரியர் பங்கேற்று படிப்படியாக ஒழுங்கையும் உலகத்தையும் உணர்த்துகின்றார். இந்த மூன்று படிநிலைகளிலும் செப்பமாகப் பேணி வளர்க்கப் பெற்ற நல்ல குழந்தைகளே உலகைத் தன்வயப்படுத்தி உலகுக்குத் தானுதவிப் புகழ் பெறுகின்றன! அவ்வாறல்லாத பிறவோ உலகைப் புண்படுத்தி-உலகைத் தனக்காக்கி-இகழைப் பெறுகின்றன.
குழந்தை இலக்கியம் கழகக் காலத்திலும் உண்டு.
ஊழி ஊழியாய் வளரும் மாந்தக் குமுகாயத்தின் அடியூற்றாகக் கிளர்ந்தெழும் குழந்தை உணர்வுகள் என்றும் அழிந்து போகாமல் ஒவ்வொரு மாந்த உள்ளத்தின் அடித்தளத்திலும் படர்ந்து கிடக்கின்றன. அவை அவனைச் செழுசெழுப்பாக்கி வளரச் செய்கின்றன; வாழச் செய்கின்றன; மகிழச் செய்கின்றன; மங்காமல் என்றென்றும் நிலைநிற்கச் செய்கின்றன.
குழந்தை மனந்தான் கொழுமை மனம்! மாந்தத்திற்கு வேண்டிய கரு மனம்!
ஆனால் உலக வினைவெப்பத்தில் அம்மனம் காய்ந்து, கருகி, உலர்ந்து, உதிர்ந்து விடுகின்றது!
அதை அப்பொழுதைக்கப்பொழுது உணர்வு நீருற்றி உலராமல் வைத்துக்கொள்ள இலக்கியங்கள் உதவுகின்றன. குழந்தை இலக்கியங்களோ, முளையையும் சாம்பிவிடாமல் இலையையும் கருகிவிடாமல் காத்து நிற்கப் பயன்படுபவை.
பள்ளிக்குப் பறக்காத குஞ்சுகளுக்கும், பள்ளிக்குப் பறந்து செல்லும் பறவைகளுக்கும் அவ்வப் பொழுது வடித்த பாடல்கள் இவை.
இக்கால், இவை, ‘பள்ளிப்பறவைகள்’ என்னும் பெயரால் முதல் தொகுப்பாக வெளியிடப் பெறுகின்றன.
இப்பெயர் வரிசையில் இரண்டாம் தொகுப்பும் பின்னர் வெளியிடப்பெறும்.
இவற்றுள் ஒரு சில தவிர, மற்றவை முன்னரே தென்மொழியிலும் தமிழ்ச்சிட்டிலும்(குரல் 4 இசை 2-3 முடிய) வெளிவந்தவை.
இப்பாடல்களை முன்னமேயே மனப்பாடம் செய்து பாடிய குழந்தைகள் பல. பல நிலைகளிலும் அவை அவற்றை என் முன்னர் பாடி மகிழ்வித்திருக்கின்றன. இத்தொகுப்பு அவற்றிற்கு மேலும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்குமாறு பக்கத்திற்குப் பக்கம் வண்ணப் படங்களுடன் வெளியிடப்பெறுகின்றது. தமிழ்ச்சிட்டைத் தொடக்கத்திலிருந்து படித்தறியாத குழந்தைகளுக்கோ இத்தொகுப்பு ஓர் அரிய பெட்டகமாகும்.
சிறுவர்களின் பாடப் பொத்தகங்களில் இடம்பெற வேண்டிய பாடல்கள் இவை.
பள்ளிகளில் பரிசளிக்கக் கூடிய நூல் இது.
பயன்படுத்திக் கொள்பவர்களின் திறனையும் அறிவையும் பொறுத்தது இதன் பயன்!
எதிர்காலத் தமிழகத்திற்கு என் படையல் இது!
இதனைப் பொத்தகமாக வெளியிட்டு உதவிய இராசிபுரம் வள்ளுவர் நூலகத்தார்க்கும் இதற்கு வேண்டிய ஓவியங்கள் வரைந்துதவிய ஓவியர் திரு. சின்னையன் அவர்களுக்கும் என் நெஞ்சு நிறைந்த நன்றி.
அன்பன்
கடலூர்-1.
கதுலை.தி.பி.உயயசு (17-10-72) பெருஞ்சித்திரன்.
பதிப்புரை
பிறந்ததிலிருந்து நாம் பேசுகின்ற தாய்மொழிதான் நம் பழக்கவழக்கங்களை உருவாக்குகின்றது. பழக்க வழக்கங்கள்தாம் பண்பாடாக மிளிர்கிறது. ஒரு சில நொடிப்பொழுது எண்ணினால் இவ்வுண்மை விளங்கும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழக வெகுமக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டமையால் மொழி எவ்வாறு சிதைக்கப் பட்டது என்பதைக்கூட அறியாமல் வாழ்ந்த நிலை ஓர் அவலமாகும். கடந்த ஆயிரமாண்டாகத் தொடர்ச்சியாகத் தமிழ் மன்னர்கள் அரசாட்சியை இழந்தது தமிழின வரலாற்றின் இருண்ட பகுதியாகும். இக்கால கட்டத்தில்தான் தமிழன் தன் வயிற்றுப் பிழைப்புக்காக அடிமைச்சேற்றில் புதைந்து ஆதனை இழந்தான்.
கோயில்களிலும் கல்வி நிலையங்களிலும் அரசு அலுவலகங்களிலும் தமிழ் வழக்கிழந்தமையால் நேர்ந்துள்ள நலிவுகள் இருந்து வர, அண்மைக் காலமாகச் செய்தி இதழ்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி முதலான ஊடகங்களின் தமிழ்க்கொலை, சிற்றூர்ப்புற வெகுமக்களின் வழக்காறுகளைக் கூட விட்டு வைக்கவில்லை. வீடுகளில் ‘சாறு’ இல்லை ரசந்தான், ‘சோறி’ல்லை 'சாதம்',"ரைஸ் தான்.
தமிழ் என்பது இப்பொழுது வெறும் மேடைகளில், பட்டிமன்ற, பாட்டரங்குகளில் கொச்சைப் பொழுதுபோக்கு மொழியாக மட்டுமே உள்ளது. வளரிளங் குழந்தைகளுக்குக் கூட இனிய எளிய தமிழ்ப்பாடல்கள் கற்பிக்க வாய்ப்பில்லை. இன்னும் ஐம்பதாண்டுகளில் ‘டமிளர்’கள் இருப்பார்கள், வாயில் 'டமிங்கலம்' வாழும். இந்நிலை மாற வேண்டும் எனும் வேட்கையே இச்சிறுநூல். இது வீட்டிலுள்ள தாய்மார்களுக்குதவும் கையேடாகும். இப்பாடல்கள் சிலவற்றை இசைப் பேழையாக்கும் திட்டம் உள்ளது.
‘பள்ளிப் பறவைகள்’ நூலின் முன்னுரையில் பாட்டும் கதையும் குழந்தைகளுக்குப் பாலும் சோறும் எனப் பாவலரேறு குறித்துள்ளமையால் இப்பாடல் தொகுப்பு பாச்சோறு எனப் பெயர்பெறலாயிற்று. அந்நூல் முன்னுரையின் அருமையும் பயனும் கருதி அம்முன்னுரையே இந்நூலுக்கும் முன்னுரையாகக் கொடுக்கப் பெற்றுள்ளது.
தங்கள் திருமணத்தின் போது பாவலரேறு அவர்களின் ‘தமிழா எழுச்சிகொள்’ நூலினை வெளியிட்டு மகிழ்ந்த வெள்ளிங்கிரி - பத்மாவதி இணையர், தம் மகள் மலர்விழி - இரமேசுகுமார் திருமணத்தையொட்டி இந்நூலை வெளியிட முன்வந்தமைக்கு நமது பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரியன. இதனைத் தொகுக்க உதவிய திருப்பூர் ப. துரையரசன், பல்லடம் செ. திருமேனி, சீனி. செந்தேவன் ஆகிய தமிழ் நெஞ்சங்களுக்கும் வெளியிட இசைவு தந்த பாவலரேறு குடும்பத்தார்க்கும் விரைந்து அச்சிட்டு வழங்கிய திலகா மறுதோன்றி அச்சகத்தார்க்கும் நன்றி.
திருப்பூர் வெளியீடு : திருவள்ளுவர்
2.7.2006 கல்விப்பணி அறக்கட்டளை
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தனித் தமிழுணர்வை எல்லாத் திசைகளும் ஏந்தச் செய்தவர் பெருஞ்சித்திரனார்.
- தமிழின் மொழிநடை வடிவங்களிலும் யாப்பு வடிவங்களிலும் தனிமுத்திரை பதித்த பேராற்றல் இவர் எழுத்திற்கு உண்டு.
- சேலத்தில் இரா. துரைசாமி - குஞ்சம்மாள் இருவரின் மகனாக 10-03-1933 இல் பிறந்து 11-06-1995 இல் - 62ஆம் அகவையில் மறைந்த இவரின் வாழ்வு, தமிழ்க்காப்புப் போராட்ட வாழ்வாகத் திகழ்ந்த பெருமையுடையது.
- இந்தித்திணிப்பை எதிர்க்கும் கனல் தெறிக்கும் பாடல்களால்
துரை. மாணிக்கம் என்பது இவரின் இயற்பெயர். பாவாணரைத் தலைவராகக் கொண்டு செயல்பட்ட உலகத் தமிழ்க்கழகத்தின் முதல் பொதுச் செயலாளராகத் திகழ்ந்தவர். பாவாணாரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி உருவாகவும், தமிழக அரசுத்திட்டமாக அது ஏற்கப்படவும் வழிவகுத்தவர். ஐயை, பாவியக் கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு (மூன்று தொகுதி), எண் சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் முதலிய இவரின் பாடல் நூல்கள் தனிச்சிறப்பு மிக்கவை.
தமிழுக்கு அரிய கருவூலமாய் அமைந்தது இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை.
தமிழ்மொழி மேம்பாட்டைச் சிந்திக்கும் எவரும் பெருஞ்சித்திரனாரின் எழுத்தையும் வாழ்வையும் சிந்தித்தே தீரவேண்டும்.
- செந்தலை ந. கவுதமன்
பொருளடக்கம்
1. | 13 |
2. | தாய் |
14 |
3. | 15 |
4. | 16 |
5. | 17 |
6. | 19 |
7. | 20 |
8. | 21 |
9. | 22 |
10. | 23 |
11. | 24 |
12. | 25 |
13. | 26 |
14. | 27 |
15. | 28 |
16. | 29 |
17. | பூனை |
30 |
18. | 31 |
19. | ஆசை |
32 |
20. | 33 |