உள்ளடக்கத்துக்குச் செல்

அகநானூறு/151 முதல் 160 முடிய

விக்கிமூலம் இலிருந்து
(அகநானூறு 151 முதல் 160 முடிய இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அகநானூறு பக்கங்கள்


அகநானூறு

[தொகு]

பாடல் 151 (தம்நயந்து)

[தொகு]
'தம்நயந்து உறைவோர்த் தாங்கித் தாம்நயந்து
இன்னமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ,
நகுதல் ஆற்றார் நல்கூர்ந் தோர்!' என,
மிகுபொருள் நினையும் நெஞ்சமொடு அருள்பிறிது
ஆபமன் - வாழி, தோழி ! கால் விரிபு 5
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறிவரிக்
கலைமான் தலையின் முதன்முதற் கவர்த்த
கோடலம் கவட்ட குறுங்கால் உழுஞ்சில்
தாறுசினை விளைந்த நெற்றம், ஆடுமகள்
அரிக்கோற் பறையின், ஐயென ஒலிக்கும் 10
பதுக்கை ஆய செதுக்கை நீழற்,
கள்ளி முள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க்கு
உறுவது கூறுஞ், சிறுசெந் நாவின்
மணிஓர்த் தன்ன தெண்குரல்
கணிவாய்ப் பல்லிய காடிறந் தோரே! 15

பாடல் 152 (நெஞ்சுநடுங்கு)

[தொகு]
நெஞ்சுநடுங்கு அரும்படர் தீர வந்து,
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண்
செலீஇய பெயர்வோள் வணர்சுரி ஐம்பால்-
நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச்
சினங்கெழு தானைத் தித்தன் வெளியன் 5
இரங்குநீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறைத்,
தனம்தரு நன்கலம் சிதையத் தாக்கும்
சிறுவெள் இறவின் குப்பை அன்ன
உறுபகை தரூஉம் மொய்ம்மூசு பிண்டன்
முனைமுரண் உடையக் கடந்த வென்வேல், 10
இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்ப்
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்;
ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற்
களிமயிற் கலாவத் தன்ன தோளே-
வல்வில் இளையர் பெருமகன்; நள்ளி 15
சோலை அடுக்கத்துச் சுரும்புஉண விரிந்த
கடவுட் காந்தள் உள்ளும் பலவுடன்
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி-
வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்குச்
சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும், 20
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்
வேயமைக் கண்ணிடை புரைஇச்
சேய ஆயினும், நடுங்குதுயர் தருமே. 24

பாடல் 153 (நோகோயானே)

[தொகு]
நோகோ யானே; நோதகும் உள்ளம்;
அம்தீங் கிளவி ஆயமொடு கெழீஇப்,
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்துநனி
வெம்புமன், அளியள் தானே - இனியே,
வன்க ணாளன் மார்புஉற வளஇ, 5
இன்சொற் பிணிப்ப நம்பி, நம்கண்
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத்
தெறுகதிர் உலைஇய வேனில் வெங்காட்டு,
உறுவளி ஒலிகழைக் கண்ணுறுபு தீண்டலின்
பொறிபிதிர்பு எடுத்த பொங்கெழு கூர் எரிப் 10
பைதறு சிமையப் பயம்நீங்கு ஆர்இடை
நல் அடிக்கு அமைந்த அல்ல; மெல்லியல்
வல்லுநள் கொல்லோ தானே- எல்லி
ஓங்குவரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
மீனொடு பொலிந்த வானின் தோன்றித் 15
தேம்பாய்ந்து ஆர்க்குந் தெரியிணர்க் கோங்கின்
காலுறக் கழன்ற கள்கமழ் புதுமலர்
கைவிடு சுடரின் தோன்றும்
மைபடு மாமலை விலங்கிய சுரனே? 19

154 படுமழை பொழிந்த பயமிகு புறவின் நெடுநீர் அவல பகுவாய்த் தேரை சிறுபல் இயத்தின் நெடுநெறிக் கறங்கக் குறும்புதற் பிடவின் நெடுங்கால் அலரி செந்நில மருங்கின் நுண்அயிர் வரிப்ப, 5 வெஞ்சின அரவின் பைஅணந் தன்ன தண்கமழ் கோடல் தாதுபிணி அவிழத், திரிமருப்பு இரலை தெள்அறல் பருகிக் காமர் துணையொடு ஏமுற வதியக், காடுகவின் பெற்ற தண்பதப் பெருவழி 10 ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித் தாள்தாழ் தார்மணி தயங்குபு இயம்ப ஊர்மதி - வலவ! தேரே- சீர்மிகுபு நம்வயிற் புரிந்த கொள்கை அம்மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே. 15

155 'அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும் பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும் பொருளின் ஆகும், புனையிழை!' என்றுநம் இருளேர் ஐம்பால் நீவி யோரே- நோய்நாம் உழக்குவம் ஆயினும், தாந்தம் 5 செய்வினை முடிக்க தோழி ! பல்வயின் பயநிரை சேர்ந்த பாண்நாட்டு ஆங்கண் நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய கொடுவாய்ப் பத்தல் வார்ந்துகு சிறுகுழி, நீர்காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது 10 பெருங்களிறு மிதித்த அடியகத்து, இரும்புலி ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர்வழி, செயிர்தீர் நாவின் வயிரியர் பின்றை மண்ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த விரலூன்று வடுவில் தோன்றும் மரல்வாடு மருங்கின் மலைஇறந் தோரே. 16

156 முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் மூட்டுறு கவரி தூக்கி யன்ன செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர் மூதா தின்றல் அஞ்சிக், காவலர் பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇக் 5 காஞ்சியின் அகத்துக், கரும்பருத்தி, யாக்கும் தீம்புனல் ஊர! திறவதாகக் குவளை உண்கண் இவளும் யானும் கழனி ஆம்பல் முழுநெறிப் பைந்தழை காயா ஞாயிற் றாகத், தலைப்பெய, 10 'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து, நின்நகாப் பிழைத்த தவறே - பெரும! கள்ளுங் கண்ணியும் கையுறை யாக நிலைக்கோட்டு வெள்ளை நாள்செவிக் கிடாஅய் நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சித், 15 தணிமருங்கு அறியாள், யாய்அழ, மணிமருள் மேனி பொன்னிறம் கொளலே? 17

157 அரியற் பெண்டிர் அலகுற் கொண்ட பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த வரிநிறக் கலுழி ஆர மாந்திச் செருவேட்டுச், சிலைக்கும் செங்கண் ஆடவர், வில்லிட வீழ்ந்தோர் பதுக்கைக் கோங்கின் 5 எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல் பெரும்புலர் வைகறை அரும்பொடு வாங்கிக் கான யானை கவளங் கொள்ளும் அஞ்சுவரு நெறியிடைத் தமியர் சென்மார் நெஞ்சுண மொழிப மன்னே - தோழி 10 முனைபுலம் பெயர்த்த புல்லென் மன்றத்துப் பெயலுற நெகிழ்ந்து, வெயிலுறச் சாஅய் வினையழி பாவையின் உலறி, மனைஒழிந் திருத்தல் வல்லு வோர்க்கே! 15

158 'உருமுரறு கருவிய பெருமழை தலைஇப் பெயல்ஆன்று அவிந்த தூங்கிருள் நடுநாள், மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்பப், பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள், வரைஇழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, 5 மிடைஊர்பு இழியக்கண்டனென், இவள் என அலையல் - வாழிவேண்டு அன்னை!- நம் படப்பைச் சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து தாம்வேண்டு உருவின் அணங்குமார் வருமே; நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் 10 கனவாண்டு மருட்டலும் உண்டே: இவள்தான் சுடரின்று தமியளும் பனிக்கும்: வெருவர மன்ற மராஅத்த கூகை குழறினும் நெஞ்சழிந்து அரணஞ் சேரும்: அதன்தலைப் புலிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு, 15 முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல் எந்தையும் இல்லன் ஆக, அஞ்சுவள் அல்லளோ, இவளிது செயலே! 18

===159

159 தெண்கழி விளைந்த வெண்கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடுநுக ஒழுகை
உரறுடைச் சுவல பகடுபல பரப்பி
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்
வடியுறு பகழிக் கொடுவில் ஆடவர் 5
அணங்குடை நோன்சிலை வணங்க வாங்கிப்
பல்ஆன் நெடுநிரை தழீஇக் கல்லென
அருமுனை அலைத்த பெரும்புகல் வலத்தர்,
கனைகுரற் கடுந்துடிப் பாணி தூங்கி,
உவலைக் கண்ணியர் ஊன்புழுக்கு அயரும் 10
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி
அவலம் கொள்ளன்மா காதல் அம் தோழி!
விசும்பின் நல்லேறு சிலைக்குஞ் சேட்சிமை
நறும்பூஞ் சாரற் குறும்பொறைக் குணாஅது
வில்கெழு தடக்கை வெல்போர் வானவன் 15
மிஞிறுமூசு கவுள சிறுகண் யானைத்
தொடியுடைத் தடமறுப்பு ஒடிய நூறிக்
கொடுமுடி காக்குங் குரூஉக்கண் நெடுமதில்
சேண்விளங்கு சிறப்பின் - ஆமூர் எய்தினும்,
ஆண்டமைந்து உறையுநர் அல்லர், நின்
பூண்தாங்கு ஆகம் பொருந்துதன் மறந்தே. 21

பாடல் சொல்லும் செய்தி

[தொகு]

இது பாலைத்திணைப் பாடல்.
இந்தப் பாடலைப் பாடியவர் ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் என்னும் புலவர்.
அவன் பொருள் தேடிவரப் பிரிந்தான். அவனை நினைந்து அவள் உள்ளமும் வேறுபட்டது. அதனைக் கண்டு கவலைப்பட்ட தோழி அவளுக்கு ஆறுதல் மொழி கூறித் தேற்றுகிறாள்.

உப்பு வணிகர்

[தொகு]

தெளியும் தெண்கழியில் வெண்கல் உப்பு விளையும். உமணர் அதனை விற்பதற்காக வண்டிகளில் ஏற்றிக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாகச் செல்வர். அதற்கு ஒழுகை என்று பெயர். வழியில் வண்டிமாடுகளை அவிழ்த்து மேய விட்டுவிட்டு அடுப்புக் கூட்டிச் சமைத்து உண்பர்.

கொடுவில் ஆடவர்

[தொகு]

அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றபின் கொடுவில் ஆடவர் அந்த அடுப்பில் தம் அம்புகளைள் சூடேற்றி வடித்துக்கொள்வார்கள். பின்னர் அங்கு வரும் ஆனிரைகளைக் கவர்ந்துகொண்டு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வர். தம் துடிப்பறைகளை முழக்குவர். உவலை இலையில் சுருட்டி வாட்டிய ஊன்கறியை உண்பர்.

தலைவி கவலை

[தொகு]

இத்தகைய வழியில் காதலர் சென்றாரே என்று காதலி கவலைப்படுகிறாள்.

வானவனை வென்ற கொடுமுடி அரசனின் ஆமூர்

[தொகு]

விசும்பின் நல்லேறு எனப்படும் இடிமுழக்கம் கேட்டுக்கொண்டேயிருக்கும் மலைமுகடுகள் கொண்டது குறும்பொறை நாடு. அதன் கிழக்குப்பக்கம் இருந்த ஆமூர் என்னும் ஊரில் இருந்துகொண்டு கொடுமுடி என்பவன் ஆட்சிபுரிந்துவந்தான். பல வெற்றிகளைப் பெற்ற வானவன் என்னும் சேர வேந்தன் கொடுமுடி மன்னனைத் தன் யானைப்படை கொண்டு தாக்கினான். எனினும் கொடுமுடியின் ஆமூரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆமூர் எய்தினும் தங்கமாட்டார்

[தொகு]

அந்த ஆமூரில் அமைதியான வாழ்க்கை அவருக்கு அமைந்தாலும், உன் நெஞ்சை மறந்து அவர் அங்குத் தங்கமாட்டார் - என்கிறாள் தோழி.

160 ஒடுங்கீர் ஓதி நினக்கும் அற்றே? நடுங்கின்று, அளித்தென் நிறையில் நெஞ்சம் அடும்புகொடி சிதைய வாங்கிக் கொடுங்கழிக் குப்பை வெண்மணற் பக்கம் சேர்த்தி, நிறைச்சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த 5 கோட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டைப் பார்புஇடன் ஆகும் அளவை, பகுவாய்க் கணவன் ஓம்பும் கானலஞ் சேர்ப்பன் முள்ளுறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல வாவுஉடை மையின் வள்பிற் காட்டி, 10 ஏத்தொழில் நவின்ற எழில்நடைப் புரவி செழுநீர்த் தண்கழி நீந்தலின், ஆழி நுதிமுகங் குறைந்த பொதிமுகிழ் நெய்தல், பாம்புஉயர் தலையின் சாம்புவன நிவப்ப, இரவந் தன்றால் திண்தேர்; கரவாது 15 ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல்வாய் அரவச் சீறூர் காணப் பகல்வந் தன்றல், பாய்பரி சிறந்தே. 18

"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/151_முதல்_160_முடிய&oldid=480920" இலிருந்து மீள்விக்கப்பட்டது