முதற் பக்கம்

விக்கிமூலம் இல் இருந்து
(Main Page இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
விக்கிமூலம் - இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும்
இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு.
ஆக்கங்கள் 8,278 | மேம்படுத்த வேண்டியப் பக்கங்கள்: 3,80,634 தமிழ் விக்கிமூல டுவிட்டர் கணக்கு
விக்கிமூலத்தைப் பற்றிய காணொளி
  இன்றைய இலக்கியம்

இந்த புத்தகத்தை Mobi(kindle) fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை EPUB fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை RTF fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை PDFஆக பதிவிறக்குக. இவ்வடிவில் பதிவிறக்குக

மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf
"மகாபாரதம்-அறத்தின் குரல்" நா. பார்த்தசாரதி அவர்கள் எழுதியது.

மகாபாரதக் கதையைத் தமிழில் ஐந்து பெரும் கவிகள் பாடியுள்ளனர். சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக, தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்காக, அசுர சக்திகளோடு தங்கள் வாழ்வின் ஒவ்வொரு அணுவிலும் போராடும் ஐந்து சகோதரர்களை இந்த மகாகாவியத்தில் சந்திக்கிறோம். தமிழில் இந்தக் காவியத்தைப் பாடியவரும் ஐவர்; காவியத்துள் பாடப்பட்டவரும் ஐவர். எனவே, இரு வகையாலும் ‘ஐவர் காவியம்’ என்ற பெயருக்கு மிகமிக ஏற்றதாக விளங்குகிறது மகாபாரதம்.

இந்த நவீனத்தில் மாபெரும் அரசியல் நுட்பங்களும் கதை நுணுக்கமும் நிறைந்த மகாபாரதக் கதைகளை ஓர் அழகிய நாவலைப் போல் உரைநடையாக்கி அறத்தின் குரலாக ஒலிக்கச் செய்திருக்கிறேன். இந்த அறத்தின் குரலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் காலத்தை வென்று நிற்கப் போகிற தெய்வீகக் கதாபாத்திரங்கள். எனக்கு முன்பே வியாசர் முதல் வில்லிபுத்தூரார் வரை புனைந்து புகழ்ந்து கவிதையில் வனைந்து அழகு படுத்தப் பெற்ற பாத்திரங்களை நானும் தரையினாலாகிய இந்த நவீனத்தில் இயன்றவரை ஆக்கி அறிமுகப்படுத்துகிறேன்.

1. மூவர் தோற்றம்

அந்தி மகள் மேலை வாயிலில் வந்து செவ்வண்ணக் கோலங்களைப் பரப்பி உலகை அழகு மயமாகச் செய்து கொண்டிருந்த அந்த இன்பமிக்க மாலை நேரத்தில் வீட்டுமன் மாத்திரம் சோர்ந்த மனத்துடன் கங்கைக் கரையில் அமர்ந்திருத்தான். கங்கைப் பிரவாகத்தின் நீல நிற நீர்ப் பரப்பில் மேலை வானின் செந்நிற ஒளி மின்னி விளங்கும் அழகை அவன் கண்கள் காணவில்லை. சுற்றுப் புறத்தின் கவின்மிக்க எந்தக் காட்சியும் அவனைக் கவரவில்லை! தன்னை மறந்து தான் வீற்றிருக்கும் இடத்தை மறந்து உள்ளத்தோடு சிந்தனையில் ஒன்றிப் போயிருந்தான் அவன். அப்படி அவன் மனதை வாட்டிய அந்தச் சோகம் முற்றிய சிந்தனைதான் எதுவாக இருக்கும்? பிரம்மசரிய விரதத்தால் கவின் கொண்டு மின்னும் அவனது ஒளிமிக்க உடலில் நுழைந்து உடலை அணுக எந்தக் கவலைக்கும் துணிவு இருக்க முடியாதே? பின் ஏன் அவன் கமல வதனம் வாடியிருக்கிறது? கண்களில் அழகொளி இலகவில்லையே? ஏன்? கொடிய நோயால் தம்பி விசித்திர வீரியனின் மரணத்தைக் கண்ட அவன் அந்தத் துன்பத்தைக் கூடப் பொறுத்தான். ஆனால், இரண்டு பெண்களை மணந்து கொண்டு சந்திர வமிசத்திற்குச் சந்ததியைப் படைத் தளிக்காமலே இறந்து போன அவன் தீயூழை நினைக்கிற போது தான் வீட்டுமனுக்குத் துயரம் தாங்கவில்லை. நித்திய பிரம்மசாரியாகிய தான் சந்திரவமிசத்திற்காக இனி எதுவும் செய்ய முடியாதாகையினால், சந்திர வமிசம் தன்னோடு அழிந்து போகுமே - என்பதை நினைக்கவும் முடியாமல் தவித்தான் அவன். சிறிய தாயாகிய பரிமளகந்தியும் மகன் வீட்டுமனைப் போலவே இந்தத் தவிப்பில் ஆழ்ந்து போயிருந்தாள். தன்னைப் போலவே அரண்மனையில் சிற்றன்னையும் சந்திர வமிசத்திற்கு நேர்ந்த இந்தப் பெருந்தீவினையை எண்ணிக் குமைத்து கொண்டிருக்கிறாள்

(மேலும் படிக்க...)
 
  இலக்கியங்கள்
சங்க இலக்கியம் பழந்தமிழ் இலக்கியங்கள்

இலக்கணம்

அகரமுதலியியல்

விக்கிமூலத்தில் மின்வருடப்பட்ட நூல் பக்கங்களின் நிலைகள் பின்வருமாறு. மெய்ப்பு பார்ப்பதில் தாங்களும் பங்கு பெறலாம். Emblem-question.svg

பக்க விவரங்கள்

3,80,634 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்படாமல் உள்ளவை
11,212 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டவை
11,707 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டவை
93 பக்கங்கள் வெற்றுப் பக்கங்கள்
68 பக்கங்கள் மெய்ப்பு பார்க்க சிக்கலானவை

நூல் விவரங்கள்

மெய்ப்பு பார்க்கப்படாத மின்னூல்கள்: 2,074
மெய்ப்பு முடிந்தது. சரிபார்க்க வேண்டிய மின்னூல்கள்: 53
மெய்ப்பும் சரிபார்ப்பும் முடிந்த மின்னூல்கள்: 43

நூல்களின் நிலை

எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்: 937 (இம்மின்னூல்களை மெய்ப்பு செய்யலாம்)
சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்: 325 (இம்மின்னூல்களை தற்போதைக்கு மெய்ப்பு செய்ய வேண்டாம்)


  கூட்டு முயற்சி
Featured article star - check.svg

இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்
மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்  (2000)
ஆசிரியர் விந்தன்.

சென்ற மாதம் நிறைவடைந்தது: கலிங்கம் கண்ட காவலர்
அடுத்த கூட்டு முயற்சி மே மாதம் தொடங்கவிருக்கிறது.


மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf
  புதிய உரைகள்
  இலக்கியங்கள்
காப்பியங்கள்

திரட்டு நூல்கள்

தற்கால எழுத்தாளர் படைப்புகள்

 
Wikimedia-logo.svg
விக்கிப்பீடியா விக்கிப்பீடியா
கலைக்களஞ்சியம்
விக்கி செய்திகள் விக்கி செய்திகள்
செய்திச் சேவை
விக்சனரி விக்சனரி
அகரமுதலி
விக்கி நூல்கள் விக்கி நூல்கள்
நூல்கள் மற்றும் கையேடுகள்
விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள்
மேற்கோள்களின் தொகுப்பு
விக்கியினங்கள் விக்கியினங்கள்
உயிரினங்களின் கோவை
விக்கிபொது விக்கிபொது
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு
மேல்-விக்கி மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு
"https://ta.wikisource.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=953025" இருந்து மீள்விக்கப்பட்டது