உள்ளடக்கத்துக்குச் செல்

ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு குறிஞ்சி/கபிலர்/22.அன்னாய்ப் பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு

[தொகு]

மூன்றாவது நூறு குறிஞ்சி

[தொகு]

பாடியவர்: கபிலர்

[தொகு]

22.அன்னாய்ப் பத்து

[தொகு]

211. நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன

வயலையஞ் சிலம்பின் தலையது

செயலையம் பகைத்தழி வாடும் அன்னாய்.

212. சாந்த மரத்ஹ்ட பூதிழ் எழுபுகை

கூட்டுவிரை கமழும் நாடன்

அறவற்கு எவனோ நாமக்ல்வு அன்னாய்

213. நறுவடி மாஅத்து மூக்கிறுபு உதிர்த்த

ஈர்ந்தண் பெருவடுப் பாலையிற் குறவர்

உறைவீழ் ஆலியல் தொகுக்கும் சாரல்

மீமிசை நன்னாட் டவர்வரின்

யானுயிர் வாழ்தல் கூடும் அன்னாய்.

214. சாரல் பலவின் கொழுந்துணர் நறும்பழம்

இருங்கள் விடரளை வீழ்ந்தென வெற்பில்

பெருந்தேன் இறாஅல் கீறும் நாடன்

பேரமர் மழைக்கண் கழிலத்தன்

சீருடை நன்னாட்டுச் செல்லும் அன்னாய்.

215. கட்டளை யன்ன மணிநிறத் தும்பி

இட்டிய குயின்ற துறைவயின் செலீஇயர்

தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்

தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும்

புதன்மலர் மாலையும் பிரிவோர்

இதனினும் கொடிய செய்குவர் அன்னாய்.

216. குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்ரை

நெடும்புதல் கானத்து மடப்பிடி ஈன்ற

நடுங்குநடைக் குழவி கொளீஇய பலவின்

பழந்தாங்கு கொழுநிழல் ஒளிக்கும் நாடற்குக்

கொய்திடு தளிரின் வாடிநின்

மெய்பிறி தாதல் எவன்கொல் அன்னாய்.

217. பெருவரை வேண்க்கைப் பொன்மருள் நறுவீ

மானினப் பெருங்கிளை மேயல் ஆரும்

கானக நாடன் வரவுமிவண்

மேனி பசப்பது எவன்கொல் அன்னாய்.

218. நுண்ணேர் புருவத்த கண்ணும் ஆடும்

மயிர்வார் முன்கை வளையும் சொறூஉம்

களிறுகோள் பிழைத்த கதஞ்சிறந்து எழுபுலி

எழுதரு மழையின் குழுமும்

பெருங்கள் நாடன் வருங்கொல் அன்னாய்.

219. கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள்வீ

இருங்கள் வியலறை வரிப்பத் தாஅம்

நன்மலை நாடன் பிரிந்தென

ஒண்ணுதல் பசப்பது எவன்கொல் அன்னாய்.

220. அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி

ஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன்

பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு

முயங்காது கழிந்த நாள்இவள்

மயங்கிதழ் மழைக்கண் கலிழும் அன்னாய்.