ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு பாலை/ஓதலாந்தையார்/37.முன்னிலைப் பத்து

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

நான்காவது நூறு பாலை[தொகு]

பாடியவர்: ஓதலாந்தையார்[தொகு]

37. முன்னிலைப் பத்து[தொகு]

361. உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகந்துறை

வேனிற் பாதிரி விரிமலர் குவைஇத்

தொடலை தை இய மடவரல் மகளே

கண்ணினும் கதவநின் முலையே

முலையினும் கதவநின் தடமென் தோளே.

362. பதுக்கைத் தாய ஒதுக்கருங் கவலைச்

சிறுகண் யானை உறுபகை நினையாது

யாக்குவந் தனையோ பூந்தார் மார்ப

அருள்புரி நெஞ்சம் உய்த்தர

இருள்பொர நின்ற இரவி னானே.

363. சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக்

கொலைவல் எயினர் தங்கைநின் முலைய

சுணங்கென நினைதி நீயே

அணங்கென நினையும்என் அணங்குறு நெஞ்சே.

364. முளமா வல்சி எயினர் தங்கை

இளமா எயிற்றிக்கும் இந்நிலை அறியச்

சொல்லினேன் இரக்கும் அளவை

வெள்வேல் விடலை விரையா தீமே.

365. கணமா தொலைச்சித் தன்னையர் தந்த

நிணவூன் வல்சிப் படுபுள் ஒப்பும்

நலமாண் எயிற்றி போலப் பலமிகு

நல்நலம் நயவர உடையை

என்நோற் றனையோ மாஇன் தளிரே.

366. அன்னாய் வாழிவேண் டன்னை தோழி

பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை

கொன்னே கடவுதி யாயின் என்னதூஉம்

அறிய ஆகுமோ மற்றே

முறியிணர்க் கோங்கM பயந்த மாறே.

367. பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ

விரியிணர் வேங்கையொடு வேறுபட மிலைச்சி

விரிவுமலர் அணிந்த வேனில் கான்யாற்றுத்

தேரொடு குறுக வந்தோன்

பேரொடு புணர்ந்தன்று அன்னைஇவள் உயிரே.

368. எரிப்பூ இலவத்து ஊழ்கழி பன்பலர்

பொரிப்பூம் புன்கின் புகர்நிழல் வரிக்கும்

தண்பத வேனில் இன்ப நுகர்ச்சி

எம்மொடு கொண்மோ பெருமநின்

எம்மெல் ஓதி அழிவிலள் எனினே.

369. வளமலர் ததிந்த வண்டுபடு நறும்பொழில்

முளைநிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்

குறிநீ செய்தனை என்ப அலரே

குரவ நீள்சினை உறையும்

பருவ மாக்குயில் கௌவையில் பெரிதே.

370. வண்சினைக் கோங்கின் தண்கமழ் படலை

இருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப

நீநயந்து உறையப் பட்டோ ள்

யாவ ளோஎம் மறையா தீமே.