உள்ளடக்கத்துக்குச் செல்

ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு நெய்தல்/அம்மூவனார்/11.தாய்க்குரைத்த பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு

[தொகு]

இரண்டாவது நூறு நெய்தல்

[தொகு]

பாடியவர்: அம்மூவனார்

[தொகு]

11.தாய்க்கு உரைத்த பத்து

[தொகு]

11. அன்னை வாழிவேண் டன்னை உதுக்காண்

ஏர்கொடிப் பாசடும்பு பரியஊர்பு இழிபு

நெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள்

பூப்போல் உண்கண் மரீஇய

நோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே.

102. அன்னை வாழிவேண் டன்னை நம்மூர்

நீல்நிறப் பெருங்கடல் புள்ளின் ஆனாது

துன்புறு துயரம் நீங்க

இன்புற இசைக்கும் அவர் தேர்மணிக் குரலே.

103. அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு

ஞாழல் பூக்கும் தண்ணந் துறைவன்

இவட்குஅமைந் தனெனால் தானே

தனக்கு அமைந்த தன்றுஇவள் மாமைக் கவினே.

104. அன்னை வழிவேண் டன்னை நம்மூர்ப்

பலர்மடி பொழுதின் நலம்மிகச் சாஅய்

நள்ளென வந்த இயல்தேர்ச்

செல்வக் கொண்கன் செல்வனஃ தூரே.

105. அன்னை வாழிவேண் டன்னை முழங்குகடல்

திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்

தணம் த்ஹுறவன் வந்தெனப்

பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நூதலே.

106. அன்னை வாழிவேண் டன்னை அவர்நாட்டுத்

துதிக்கால் அன்னம் துணைசெத்து மிதிக்கும்

தன்கடல் வளையினும் இலங்கும்இவள்

அம்கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே.

107. அன்னை வாழிவேண் டன்னைஎன் தோழி

சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து

தண்கடல் படுதிரை கேட்டொறும்

துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே.

108. அன்னை வாழிவேண் டன்னை கழிய

முண்டக மலரும் தண்கடற் சேர்ப்பன்

எந்தோள் துறந்தனன் ஆயின்

எவன்கொல் மற்றவன் நயந்த தோளே.

109. அன்னை வாழிவேண் டன்னை நெய்தல்

நீர்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்

எந்தோள் துறந்த காலை எவன்கொல்

பன்னாள் வரும்அவன் அளித்த போழ்தே.

110. அன்னை வாழிவேண் டன்னை புன்னை

பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை

என்னை என்றும் யாமே இவ்வூர்

பிறதொன் றாகக் கூறும்

ஆங்கும் ஆக்குமோ வழிய பாலே.