ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு நெய்தல்/அம்மூவனார்/18.தொண்டிப் பத்து

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

இரண்டாவது நூறு நெய்தல்[தொகு]

பாடியவர்: அம்மூவனார்[தொகு]

18.தொண்டிப் பத்து[தொகு]

171. திரைஇமிழ் இன்னிசை அளைகி அயலது

முழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறு இசைக்கும்

தொண்டி அன்ன பணைத்தோள்

ஒள்தொடி அரிவைஎன் நெஞ்சுகொண் டோ ளே.

172. ஒள்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே

வண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்

உரவுக் கடல்ஒலித் திரையென

இரவி னானும் துயிலறி யேனே.

173. இரவி னானும் இந்துயில் அறியாது

அரவுறு துயரம் எய்துப தொண்டித்

தண்நறு நெய்தல் நாறும்

பின்இருங் கூந்தல் அணங்குற் றோரே.

174. அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன

மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கு இழை

பொங்கரி பரந்த உண்கண்

அம்கலில் மேனி அசைஇய எமக்கே.

175. எமக்குநயந் தருளினை யாயின் பணைத்தோள்

நல்நுதல் அரிவையொடு மென்மெல இயலி

வந்திசின் வாழியா மடந்தை

தொண்டி யன்னநின் பண்புல கொண்டே.

176. பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்

தண்கமழ் புதுமலர் நாறும் ஒண்டொடி

ஐதுஅமைந்து அகன்ற அல்குல்

கொய்தளிர் மேனி கூறுமதி தவறே.

177. தவறிலர் ஆயினும் பனிப்ப மன்ற

இவறுதிரை திளைக்கும் இடுமணல் நெடுங்கோட்டு

முண்டக நறுமலர் கமழும்

தொண்டி அன்னோள் தோள்உற் றோரே.

178. தோளும் கூந்தலும் பலபா ராட்டி

வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்

குட்டுவன் தொண்டி யன்ன

என்கண்டும் நயந்துநீ நல்காகக் காலே.

179. நல்குமதி வாழியோ நளிநீர்ச் சேர்ப்ப

அலவன் தாக்கத் துறையிறாப் பிறழும்

இன்னொலித் தொண்டி அற்றே

நின்னலது இல்லா இவள்சிறு நுதவே.

180. சிறுநனை வரைந்தனை கொண்மோ பெருநீர்

வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்

பறைதபு முதுகுருகு இருக்கும்

துரைகெழு தொண்டி அன்னஇவள் நலனே.