ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு மருதம்/ஓரம்போகியார்/1.வேட்கைப் பத்து
1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து
11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து
21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து
31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து
41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து
முதலாவது நூறு மருதம்
[தொகு]பாடியவர் ஓரம்போகியார்
[தொகு]1. வேட்கை பத்து
[தொகு]இதில் உள்ள பத்துப் பாடல்களும் 'வாழி ஆதன் வாழி அவினி' என்று பொல்லிவிட்டுத் தொடங்குகின்றன. இது தன் நாட்டு அரசனை வாழ்த்தும் பகுதி. அடுத்த இரண்டாவது அடியில் தலைவி தன் விருப்பத்தைத் (வேட்கையைத்) தெரிவிக்கிறாள்.
- நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!
- விளைக வயலை! வருக இரவலர்!
- பால் பல ஊறுக! பகடு பல சிறக்க!
- பகைவர் புல் ஆர்க! பார்ப்பார் ஓதுக!
- பசி இல்லாகுக! பிணி சேண் நீங்குக!
- வேந்து பகை தணிக! யாண்டு பல நந்துக!
- அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!
- அரசு முறை செய்க! களவு இல்லாகுக!
- நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக!
- மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!
தன்னல வேட்கை
- ஊரன் வாழ்க! பாணன் வாழ்க!
- ஊரன் கேணமை வழிவழி சிறக்க!
- ஊரன் என்மனை வாழ்க்கை பொலிக!
- ஊரன் மார்பு பழவயல் போல் எனக்குப் பயன்படட்டும்.
- ஊரன் தேர் வாயில் கடையில் நிற்கட்டும்.
- ஊரன் என்னைத் திருமணம் செய்துகொள்ளட்டும்! என் தந்தையும் என்னை அவனுக்குக் கொடுக்கட்டும்!
- ஊரன் அழைத்துக்கொண்டு தன் ஊருக்குச் செல்லட்டும்!
- ஊரன் செய்த செய்த சூளுரை(சத்தியம்) பலிக்கட்டும்!
- ஊரனோடு எனக்குள்ள நட்பை ஊரெல்லாம் பேசட்டும்!
- ஊரன் என்னைக் கொண்டுசெல்லட்டும்
பாடல்:01 (வாழிஆதன் வாழி அவினி/நெற்)
[தொகு]வாழி ஆதன் வாழி அவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
எனவேட் டோ ளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க எனவேட் டேமே.
பாடல்: 02 (வாழிஆதன்வாழிஅவினி/விளைக)
[தொகு]வாழி ஆதன் வாழி அவினி
விளைக வயலே வருக இரவலர்
எனவேட் டோ ளே யாயே யாமே
பல்லிதல் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண்துறை யூரன் கேண்மை
வழிவ்ழிச் சிறக்க எனவேட் டேமே.
பாடல்: 03 (வாழியாதன்வாழிஅவினி/பால்பல)
[தொகு]வாழி ஆதன் வாழி அவினி
பால்பல ஊறுக பகடுபல சிறக்க
எனவேட் டோ ளே யாயே யாமே
வித்திய உழவர் நெல்லோடு பெயரும்
பூக்கஞு லூரன் தன்மனை
வாழ்க்கை பொலிக என்வேட் டேமே.
பாடல்: 04 (வாழிஆதன்வாழிஅவினி/பகைவர்)
[தொகு]வாழி ஆதன் வாழி அவினி
பகைவர்புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
எனவேட் டோ ளே யாயே யாமே
பூத்த கரும்பிற்காய்த்த நெல்லிற்
கழனி யூரன் மார்பு
பழன் மாகற்க எனவேட் டேமே.
பாடல்: 05 (வாழிஆதன்வாழிஅவினி/பசியில்)
[தொகு]வாழி ஆதன் வாழி அவினி
பசியில் ஆகுக பிணீகேன் நீங்குக
எனவேட் டோ ளே யாயே யாமே
முதலை போத்து முழுமீன் ஆரும்
தண்துறை யூரன் தேரேம்
முன்கடை நிற்க எனவேட் டேமே.
பாடல்: 06 (வாழிஆதன்வாழிஅவினி/வேந்து)
[தொகு]வாழி ஆதன் வாழி அவினி
வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
எனவேட் டோ ளே யாயே யாமே
மல்ர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்துறை யூரண் வரைக
எந்தையும் கொடுக்க எனவேட் டேமே.
பாடல்: 07 (வாழிஆதன்வாழிஅவினி/அறநனி)
[தொகு]வாழி ஆதன் வாழி அவினி
அறநனி சிறக்க அல்லது கெடுக
என வேட்டோ ளே யாயே யாமே
உளை மருதத்துக்கி கிளைக்குரு
தண்துறை யூரன் தன்னூர்க்
கொண்டனன் செல்க எனவேட் டேமே.
பாடல்:08 (வாழிஆதன்வாழிஅவினி/அரசு)
[தொகு]வாழி ஆதன் வாழி அவினி
அரசுமுறை செய்க களவில் லாகுக
எனவேட் டோ ளே யாயே யாமே
அலங்குசினை மாஅத்து அணிமயில் இருக்கும்
புக்கஞல் ஊரன் சுளீவண்
வாய்ப்ப தாக எனவேட் டோமே.
பாடல்: 09 (வாழிஆதன்வாழிஅவினி/நன்று)
[தொகு]வாழி ஆதன்வாழி அவினி
நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக
என வேட் டோ ளே யாயே யாமே
கயலார் நாரை போர்வின் சேக்கும்
தண்துறை யூரன் கேண்மை
அம்பல் ஆகற்க எனவேட் டேமே.
பாடல்: 10 (வாழிஆதன்வாழிஅவினி/மாரி)
[தொகு]வாழி ஆதன் வாழி அவினி
மாரி வாய்க்க வளநனி சிறக்க
எனவேட் டோ ளே யாயே யாமே
பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன்
தண்துறை யூரன் தன்னோடு
கொண்டனன் செல்க எனவேட் டேமே.