உள்ளடக்கத்துக்குச் செல்

ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு குறிஞ்சி/கபிலர்/26.குன்றக்குறவன் பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு

[தொகு]

மூன்றாவது நூறு குறிஞ்சி

[தொகு]

பாடியவர்: கபிலர்

[தொகு]

26.குன்றக் குறவன் பத்து

[தொகு]

251. குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி

நுன்பல் அழிதுளி பொழியும் நாட

நெடுவரைப் படப்பை நும்மூர்க்

கடுவரல் அருவி காணினும் அழுமே.

252. குன்றக் குறவன் புல்வேய்க் குரம்பை

மன்றாடு இளமழை மறைக்கும் நாடன்

புரையோன் வாழி தோழி விரைபெயல்

அரும்பனி அளைஇய கூதிர்ப்

பெருந்தண் வாடையின் முந்துவந் தனனே.

253. குன்றக் குறவன் சார்ந்த நறும்புகை

தேஙகமழ் சிலம்பின் வரையகம் கமழும்

கானக நாடன் வரையின்

மன்றலும் உடையள்கொல் தோழி யாயே.

254. குன்றக் குறவன் ஆரம் அறுத்தென

நறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும்

வண்ட்மிர் சுடர்நுதல் குறுமகள்

கொண்டனர் செல்வர்தம் குன்றுகெழு நாட்டே.

255. குன்றக் குறவன் காதல் மடமகள்

வரையர மகளிர்ப் புரையுஞ் சாயலள்

ஐயள் அரும்பிய முலையள்

செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே.

256. குன்றக் குறவன் காதல் மடமகள்

வண்படு கூந்தல் தந்தழைக் கொடிச்சி

வளையள் முளைவாள் எயிற்றள்

இளையள் ஆயினும் ஆரணங் கினனே.

257. குன்றக் குறவன் கடவுட் பேணி

இரந்தனன் பெற்ற வெள்வளைக் குறுமகள்

ஆயரி நெடுங்கள் கலிழச்

சேயதால் தெய்யநீ பிரியும் நாடே.

258. குன்றக் குறுவன் காதல் மடமகள்

அணிமயில் அன்ன அசைநடைக் கொடிச்சியைப்

பெருவரை நாடன் வரையும் ஆயின்

கொடுத்தனெம் ஆயினோம் நன்றே

இன்னும் ஆனாது நன்னுதல் துயிரே.

259. குன்றக் குறவன் காதல் மடமகள்

மன்ற வேங்கை மலர்சில கொண்டு

மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தித்

தேம்பலிச் செய்த ஈர்நறுங் கையள்

மலர்ந்த காந்தள் நாறிக்

கவிழ்ந்த கண்ணள்எம் அணங்கி யோளே.

260. குன்றக் குறவன் காதல் மடமகள்

மெந்தோள் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல

பைம்புறப் பைங்கிளி ஒப்பலர்

புன்புல மயக்கத்து விளைந்தன தினையே.