ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு குறிஞ்சி/கபிலர்/28.குரக்குப் பத்து
1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து
11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து
21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து
31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து
41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து
ஐங்குறுநூறு
[தொகு]மூன்றாவது நூறு குறிஞ்சி
[தொகு]பாடியவர்: கபிலர்
[தொகு]28 குரக்குப் பத்து
[தொகு]271. அவரை அருந்த மந்தி பகர்வர்
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின்
பல்பசுப் பெண்டிரும் பெறுகுவன்
தொல்கேள் ஆகலின் நல்குமால் இவட்கே.
272. கருவிரல் மந்திக் கல்லா வன்பறழ்
அருவரைத் தீந்தேன் எடுப்பை அயலது
உருகெழு நெடுஞ்சினைப் பாயும் நாடன்
இரவின் வருதல் அறியான்
வரும் வரும் என்பள் தோழியாயே.
273. அத்தச் செயலைத் துப்புறழ் ஒள்தளிர்
புந்தலை மந்தி வன்பறழ் ஆரும்
நன்மலை நாட நீசெலின்
நின்நயத்து உறைவி என்னினும் கழில்மே.
274. மந்திக் கணவன் கல்லாக் கொடுவன்
ஒன்கேழ் வயப்புலி குழுமலின் வைரைந்துடன்
குன்றுயர் அடுக்கம் கொள்ளும் நாடன்
சென்றனன் வாழி தோழியென்
மெல்தோள் கவினும் பாயலும் கொண்டே.
275. குரங்கின் தலிஅவன் குருமயிர்க் கடுவன்
சூரலஞ்ச் சிறுகோல் கொண்டு வியலறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட
யாம்நின் நயத்தனம் எனினும்எம்
ஆய்நலம் வாடுமோ அருளுதி எனினே.
276. மந்திக் காதலன் முறிமேய் கடுவன்
தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப்
பொங்கல் இளமழை புடைக்கும் நாட
நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ
கன்முகை வேங்கை மலரும்
நன்மலை நாடன் பெண்டெனப் படுத்தே.
277. குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
குன்ற நாடநின் மொழிவல் என்றும்
பயப்ப நீத்தல் என்இவள்
கயத்துவளர் குவளையின் அமர்த்த கண்ணே.
278. சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்
குரங்கின் வன்பரழ் பாய்ந்தன இலஞ்சி
மீனெறி தூண்டிலின் நிவக்கும் நாடன்
உற்றோர் மறவா நோய்தந்து
கண்டோ ர் தண்டா நலங்கொண் டனனே.
279. கல் இவர் இற்றி புல்லுவன எறிக்
குளவி மேய்ந்த மந்தி துணையோடு
வரைமிசை உகளும் நாட நீவரின்
கல்லகத் ததுஎம் ஊரே
அம்பல் சேரி அலராம் கட்டே.
280. கருவிரல் மந்திக் கல்லா வன்பார்ப்பு
இருவெதிர் ஈர்ங்கழை ஏறிச் சிறுகோல்
மதிபுடைப் பதுபோல தோன்றும் நாட
வரைந்தனை நீஎனக் கேட்டுயான்
உரைத்தனென் அல்லனோ அஃதென் யாய்க்கே.