ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு நெய்தல்/அம்மூவனார்/13.கிழவற்குரைத்த பத்து

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

இரண்டாவது நூறு நெய்தல்[தொகு]

பாடியவர்: அம்மூவனார்[தொகு]

13. கிழவற்கு உரைத்த பத்து[தொகு]

121. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே

முண்டகக் கோதை நனையத்

தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் றோளே.

122. கண்டகும் அல்லமோ கொண்கநின் கேளே

ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென

வெள்ளாங் குருகை வினைவு வோளே.

123. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே

ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத்

தண்ணென் பெருங்கடல் திரைபாய் வோளே.

124. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே

வண்டற் பாவை வெளவலின்

நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே.

125. கண்டிகும் அல்லமோ கொண்கநின்

தெண்டிரை பாவை வெளவ

ஊண்கண் சிவப்ப அழுதுநின் றோளே.

126. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே

யுண்கண் வண்டினம் மொய்ப்பத்

தெண்கடற் பெருந்திரை மூழ்கு வோளே.

127. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே

தும்பை மாலை இளமுலை

நுண்பூண் ஆகம் விலங்கு வோளே.

128. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே

உறாஅ வறுமுலை மடாஅ

உண்ணாப் பாவையை ஊட்டு வோளே.

129. கிடைக்காத பாடல்

130. கிடைக்காத பாடல்