ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு குறிஞ்சி/கபிலர்/24.தெய்யோப் பத்து

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

மூன்றாவது நூறு குறிஞ்சி[தொகு]

பாடியவர்: கபிலர்[தொகு]

24.தெய்யோப் பத்து[தொகு]

231. யாங்குவல் லுநையோ ஓங்கல் வெற்ப

இரும்பல் கூந்தல் திருந்திழை அரிவை

திதலை மாமை தேயப்

பசலை பாயப் பிரிவு தெய்யோ.

232. போதார் கூந்தல் இயலணி அழுங்க

ஏதி லாளனை நீபிரிந் ததற்கே

அழவிர் மணிப்பூண் அனையப்

பெயலா னாஎன் கண்ணே தெய்யோ.

233. வருவை யல்லை வாடைநனி கொடிதே

அருவரை மருங்கின் ஆய்மணி வரன்றி

ஒல்லென இழிதரும் அருவிநின்

கல்லுடை நாட்டுச் செல்லல் தெய்யோ.

234. மின்னவிர் வயங்கிழை ஞெகிழச் சாஅய்

நன்னுதல் பசத்த லாவது துன்னிக்

கனவிற் காணும் இவளே

நனவிற் காணாள்நின் மார்பே தெய்யோ.

235. கையுற வீழ்ந்த மையில் வன்மொடு

அரிது காதலர்ப் பொழுதே அதனால்

தெரியிழை தெளிர்ப்ப முயங்கிப்

பிரியலம் என்கமோ எழுகமோ தெய்யோ.

236. அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்று

நன்மனை நெடுநகர் புலம்புகொள உறுதரும்

இன்னா வாடையும் மலையும்

நும்மூர்ச் செல்கம் எழுகமோ தெய்யோ.

237. காமம் கடவ உள்ளம் இனைப்ப

யாம்வந்து காண்பதோர் பருவம் ஆயின்

ஓங்கித் தோன்றும் உயர்வரைக்கு

யாங்கெனப் படுவது நும்மூர் தெய்யோ.

238. வாய்க்கோட்டு வயத்தகர் வாராது மாறினும்

குரூஉமயிர்ப் புருவை ஆசையின் அல்கும்

ஆஅல் அருவித் தண்மெருஞ் சிலம்ப

நீஇவன் வரூஉம் காலை

மேவரும் மாதோஇவள் நலனே தெய்யோ.

239. சுரும்புணக் களித்த புகர்முக வேழம்

இரும்பிணர்த் துறுகல் பிடிசெத்துத் தழூநின்

குன்றுகெழு நன்னாட்டுச் சென்ற பின்றை

நேரிறைப் பணைத்தோள் ஞெகிழ

வாரா யாயின் வாழேம் தெய்யோ.

240. அறியோம் அல்லேம் அறிந்தனம் மாதோ

பொறிவரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச்

சாந்தம் நாறும் நறியோள்

கூந்தல் நாறும்நின் மார்பே தெய்யோ.