உள்ளடக்கத்துக்குச் செல்

ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு மருதம்/ஓரம்போகியார்/4. தோழிக்குரைத்த பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு

[தொகு]

முதலாவது நூறு மருதம்

[தொகு]

பாடியவர் ஓரம்போகியார்

[தொகு]

4.தோழிக்குரைத்த பத்து (31-40)

[தொகு]

31. அம்ம வாழி தோழி மகிழ்நன்

கடனன்று என்னும் கொல்லோ

நம்மூர் முடமுதிர் மருதத்துப் பெருந்துறை

உடனாடு ஆயமோடு உற்ற சூளே.

32. அம்ம வாழி தோழி மகிழ்நன்

ஒருநாள் நம்மில் வந்ததற்கு எழுநாள்

அழுப என்பஅவன் பெண்டிர்

தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே.

33. அம்ம வாழி தோழி மகிழ்நன்

மருதுயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறைப்

பெண்டிரோடு ஆடும் என்பதன்

தண்தார் அகலம் தலைத்தலைக் கொளவே.

34. அம்ம வாழி தோழி நம்மூர்ப்

பொய்கைப் பூத்த புழற்கால் ஆம்பல்

தாதுஏர் வண்ணம் கொண்டன

ஏதி லாளற்குப் பசந்தஎன் கண்ணே.

35. அம்ம வாழி தோழி நம்மூர்ப்

பொய்கை ஆம்பல் நார்உரி மென்கால்

நிறத்தினும் நிழற்றுதல் மன்னே

இனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே.

36. அம்ம வாழி தோழி யூரன்

நம்மறந்து அமைகுவன் ஆயின் நாம்மறந்து

உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே

கயலெனக் கருதிய் உண்கண்

பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே.

37. அம்ம வாழி தோழி மகிழ்நன்

நயந்தோர் உண்கண் பசந்துபனி மல்க

வல்லன் வல்லன் பொய்த்தல்

தேற்றான் உற்ற சூள்வாய்த் தல்லெ

38. அம்ம வாழி தோழி மகிநன்

தன்சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும்

தந்தளிர் வெளவும் மேனி

ஒள்தோடி முன்கை யாம்அழப் பிரிந்தே.

39. அம்ம வாழி தோழி யூரன்

வெம்முலை யடைய முயங்கி நம்வயின்

திருந்திழைப் பணைத்தோள் ஞெகிழப்

பிரிந்தனன் ஆயினும் பிரியலன் மன்னே.

40. அம்ம வாழி தோழி மகிநன்

ஒள்தொடி முன்கை யாம் அழப் பிரிந்துதன்

பெண்டிர் ஊர் இறை கொண்டனன் என்ப

கெண்டை பாய்தர அவிழ்ந்த

வண்டுபிணி ஆம்பல் நாடுகிழ வோனே.