ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு முல்லை/பேயனார்/42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

ஐந்தாவது நூறு முல்லை[தொகு]

பாடியவர்: பேயனார்[தொகு]

42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து[தொகு]

411. ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறிக்

கார்தொடங் கின்றால் காமர் புறவே

வீழ்தரு புதுப்புனல் ஆடுகம்

தாழிருங் கூந்தல் வம்மடி விரைந்தே.

412. காயா கொன்றை நெய்தல் முல்லை

போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப்

பூவணி கொண்டன்றால் புறவே

பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே.

413. நின்னுதல் நாறும் நறுந்தண் புறவின்

நின்னே போல மஞ்ஞை யாலக்

கார்தொடங் கின்றால் பொழுதே

பேரியல் அரிவை நாநயத்தகவே.

414. புள்ளும் மாவும் புணர்ந்தினது உகளக்

கோட்டவும் கொடியவும் பூப்பல பழுனி

மெல்லியல் அரிவை கண்டிகு

மல்லல் ஆகிய மணங் கமழ் புறவே.

415. இதுவே மடந்தைநாம் மேவிய பொழுதே

உதுவே மடந்தைநாம் உள்ளிய புறவே

இனிதுடன் கழிக்கின் இளமை

இனிதால் அம்ம இனிஅவர்ப் புணர்வே.

416. போதார் நறுந்துகள் கவினிப் புறவில் தாதார்ந்து

களிச்சுரும்பு அரற்றும் காமர் புதலின்

மடப்பிடி தழீஇய மாவே

சுடர்த்தொடி மடவரல் புணர்ந்தனம் யாமே.

417. கார்கலந் தன்றால் புறவே பலவுடன்

நேர்பரந் தனவால் புனமே ஏர்கலந்து

தாதார் பிரசம் மொய்ப்பப்

போதார் கூந்தல் முயங்கினள் எம்மே.

418. வானம் பாடி வறங்களைந்து ஆனாது

அழிதுளி தலைஇய புறவின் காண்வர

வானர மகளா நீயே

மாண்முலை அடைய முயங்கி யோயே.

419. உயிர்கலந்து ஒன்றிய செயிர்தீர் கேண்மைப்

பிரிந்துறல் அறியா விருந்து கவவி

நம்போல் நயவரப் புணர்ந்தன

கண்டிகு மடவரல் புறவின் மாவே.

420. பொன்னெனமலர்ந்த கொன்றை மணியெனத்

தேம்படு காயா மலர்ந்த தொன்றியொடு

நன்னலம் எய்தினை புறவே நின்னைக்

காணிய வருதும் யாமே

வாள்நுதல் அரிவையொடு ஆய்நலம் படர்ந்தே.