ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு நெய்தல்/அம்மூவனார்/15.ஞாழற் பத்து

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

இரண்டாவது நூறு நெய்தல்[தொகு]

பாடியவர்: அம்மூவனார்[தொகு]

15.ஞாழற் பத்து[தொகு]

141. எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்

துவலைத் தண்துளி வீசிப்

பயலை செய்தன பனிபடு துறையே.

142. எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படுசினைப்

புள்இறை கூரும் துறைவனை

உள்ளேன் தொழி படீஇயர்என் கண்ணே.

143. எக்கர் ஞாழல் புள்ளிமிழ் அகன்துறை

இனிய செய்த நின்றுபின்

முனிவு செய்தஇவள் தடமெல் தோளே.

144. எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்

தனிக்குரு உறங்கும் துறைவற்கு

இனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே.

145. எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை

ஓதம் வாங்கும் துறைவன்

மாயோள் பசலை நீக்கினன் இனியே.

146. எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழிணர்

நறிய கமழும் துறைவற்கு

இனிய மன்றஎன் மாமைக் கவினே.

147. எக்கர் ஞாழல் மலரின் மகளிர்

ஒள்தழை அயரும் துறைவன்

தண்தழை விலையென நல்கினன் நாடே.

148. எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை

வீஇனிது கமழும் துறைவனை

நீயினிது முயங்குதி காத லோயே.

149. எக்கர் ஞாழல் பூவின் அன்ன

சுணங்குவளர் இளமுலை மடந்தைக்கு

அணங்குவளர்த்து அகறல் வல்லா தீமோ.

150. எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்

புணரி திளைக்கும் துறைவன்

புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே.